BREAKING NEWS
Search

தனியார் பள்ளி-கல்லூரிகளை அரசுடமையாக்கக் கோரி மறியலில் ஈடுபட்ட பெண்கள் மீது போலீஸ் கொடும் தாக்குதல்!

தனியார் பள்ளி-கல்லூரிகளை அரசுடமையாக்கக் கோரி மறியலில் ஈடுபட்ட பெண்கள் மீது போலீஸ் கொடும் தாக்குதல்!

சென்னை: தனியார் பள்ளி-கல்லூரிகளை அரசுடமையாக்க கோரி சென்னையில் கைக்குழந்தைகளுடன் சாலைமறியலில் ஈடுப்பட்ட புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணியினர் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

அனைத்து தனியார் பள்ளி-கல்லூரிகளை அரசுடமையாக்க கோரியும், அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி வழங்ககோரியும் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளி கல்வி இயக்குனரகம் முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


ஆர்ப்பாட்டத்திற்கு புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணியின் மாநில அமைப்பாளர் கணேசன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கைக்குழந்தைகளுடன் பெண்கள் உள்பட 100-க்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். அவர்கள் பள்ளி கல்வி இயக்குனரகம் அமைந்துள்ள கல்லூரி சாலையில் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த போலீசார் சாலைமறியல் ஈடுப்பட்டவர்களை கலைந்து போகுமாறு கூறினர். ஆனால் போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல மறுத்ததால், போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக தூக்கி போலீஸ் வேனில் ஏற்றினார்கள்.

இதனால் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டதால் கடும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. சாலை எங்கும் கோரிக்கை வாசகங்கள் அடங்கிய அட்டைகள், செருப்புகள் சிதறி கிடந்தன.


போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவிகள் மற்றும் பெண்களை மிகக் கடுமையாகத் தாக்கினர் போலீசார். நடுசாலையில் அவர்களை தரதரவென இழுத்தும், கை கால்களைப் பிடித்து தூக்கியும் வேனுக்குள் தள்ளினர்.

ஏதோ மோசமான கிரிமினல்களை நடத்துவது போல மிகக் கேவலமான வார்த்தைகளால் திட்டியபடி மாணவர்களைத் தாக்கினர் போலீசார். இந்த போராட்டக் குழுவில் பள்ளி மாணவ மாணவிகள் பலர் யூனிபார்முடன் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் நடந்தபோது துணை போலீஸ் கமிஷனர் பாஸ்கரன் அங்கு இருந்தார். இந்த சம்பவம் குறித்து நிருபர்கள் அவரிடம் கேட்டபோது, ‘இந்த போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட கூடாது என்பதால் சாலைமறியலில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது’ என்றார்.

பெண்கள் காயம்…

போராட்டக்காரர்களுக்கும், போலீஸ்காரர்களுக்கும் நடைபெற்ற கைகலப்பில் புரட்சிக்கர மாணவர்-இளைஞர் முன்னணியை சேர்ந்த பல பெண்கள் காயமடைந்தனர். இவர்களில் திவாகர்(20), ராஜேஸ்வரி(23), எஸ்தர் ராணி(45), வர்மன்(21) ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

சில பெண் போலீசாரும் காயமடைந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

போராட்டத்தில் பங்கேற்றவர்களில் 100 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

-என்வழி செய்திகள்
3 thoughts on “தனியார் பள்ளி-கல்லூரிகளை அரசுடமையாக்கக் கோரி மறியலில் ஈடுபட்ட பெண்கள் மீது போலீஸ் கொடும் தாக்குதல்!

  1. மு. செந்தில் குமார்

    கல்வியும் மருத்துவமும் குறைந்த செலவில் தரமானதாக அளிக்கப்படவேண்டும் என்பது எப்பொழுதுமே என் கருத்து.

    ஆனால் நடை முறையில் ஓர் அரசால் அது சத்தியமா என்பது தெரியவில்லை.

    பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் வலியுறுத்தி இருந்தால் / எதிர்ப்பு காட்டியிருந்தால் இன்னும் நன்றாகவும் பாராட்டும் படியும் இருந்திருக்கும்.

  2. chenthil uk

    புரட்சி தலைவியின் சாதனை மகுடங்களில் ஒன்று இது.. அம்மாவுக்கு எப்போதும் சுதந்திரத்திற்கு முன்பு இருந்த ஆட்சியரின் அதே அடக்குமுறை மனோபாவம் தான் உள்ளது … எதிர்பார்க்க பட்டது தான்… அனால் இன்னும் எத்தனை நாள் தான் மாறாமலே இருபர்களோ? வெள்ளையனை வெழிஎற்றிவிட்டோம் .. ஆனால் இந்த கொள்ளையர்களை மறுபடியும் மறுபடியும் உக்காரவைத்து நாமே கஷ்டபடுகிறோம்… அடக்கபடுகின்ற சமூகம் என்று பொங்கி எழுமோ… மனிதன் மனிதனுக்க உழைக்க தேர்ந்தெடுக்க படுவதே ஜனநாயக அரசு… இப்படி என்னனோவோ சொல்ல தோன்றுது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *