BREAKING NEWS
Search

காவியக் கவிஞர் வாலி மரணம் – திரையுலகம் கண்ணீர்

காவியக் கவிஞர் வாலி மரணம் – திரையுலகம் கண்ணீர்

Vaali_1000_in_Vasanth_TV_Event-6bf7abe1cfe6cc3d29a28e800f9e1735

சென்னை: தமிழ் சினிமாவின் இணையற்ற கவிஞர்களில் ஒருவரும், சாகை வரம் பெற்ற பல தேமதுர தமிழ்ப் பாடல்களைப் படைத்தவருமான கவிஞர் வாலி இன்று மாலை 5 மணிக்கு மரணமடைந்தார்.

அவருக்கு வயது 82.

வாலியின் இயற்பெயர் ரங்கராஜன். ஸ்ரீரங்கத்தில் 1931-ம் ஆண்டு பிறந்தவர். ஆரம்பத்தில் அகில இந்திய வானொலியில் நிலையக் கலைஞராக பணி்யாற்றிய வாலி, பின்னர் சினிமாவில் பாடலாசிரியராக 1958-ல் வாழ்க்கையைத் தொடங்கினார்.

எம்ஜிஆருக்காக நல்லவன் வாழ்வான் படத்தில் முதல் முதலாக பாடல் எழுதினார் வாலி. பின்னர் எம்ஜிஆரின் தர்பாரில் ஆஸ்தான கவிஞராக கடைசி வரை இருந்தார்.

திரையுலகில் அதிக பாடல்களை எழுதிய சாதனையாளர் வாலி. இதுவரை 10000 பாடல்களுக்கும் மேல் அவர் எழுதியுள்ளார்.

ஏற்கெனவே இதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட வாலிக்கு, நுரையீரல் தொற்று மற்றும் அதிகமான சளியின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

40 நாட்களாக அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் 2 நாட்களாக செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மாலை 5 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. 1958-ம் ஆண்டு படங்களுக்கு பாடல்கள் எழுதத் துவங்கிய கவிஞர் வாலி இதுவரை ஆயிரம் படங்களுக்கு மேல் பாடல்கள் எழுதியுள்ளார். பத்மஸ்ரீ மற்றும் தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார். சில படங்களுக்கு கதை வசனமும் எழுதியுள்ள வாலி, தமிழ் இலக்கியத்துக்கு தன் பங்களிப்பாக அவதார புருஷன் உள்ளிட்ட பல அரிய நூல்களை எழுதியுள்ளார்.

பொய்க்கால் குதிரை, சத்யா, ஹே ராம், பார்த்தாலே பரவசம் உள்ளிட்ட படங்களில் நடிகராகவும் பாராட்டுப் பெற்றுள்ளார்.

வாலியின் மனைவி சில ஆண்டுகளுக்கு முன் மறைந்துவிட்டார்.

வயது வித்தியாசம், ஈகோ மோதல் எதுவுமின்றி அனைவருடனும் இனிமையாகவும் உரிமையாகவும் பழகிய கவிஞரின் மறைவு தமிழ் திரையுலகை அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.

-என்வழி

 




7 thoughts on “காவியக் கவிஞர் வாலி மரணம் – திரையுலகம் கண்ணீர்

  1. நாஞ்சில் மகன்

    ஆழ்ந்த அனுதாபங்கள். அம்மா என்றழைக்காத உயிரில்லையே என்ற பாடல் திருச்சியில் ோவில் கல்வெட்டில் இருக்கிறது. இதை விட பெருமை என்ன வேண்டும்.

    —- வாலி. இதுவரை 10000 பாடல்களுக்கும் மேல் அவர் எழுதியுள்ளார்——
    ——-கவிஞர் வாலி இதுவரை ஆயிரம் படங்களுக்கு மேல் பாடல்கள் எழுதியுள்ளார்.—–

    எது உண்மையான தகவல்

  2. நாஞ்சில் மகன்

    இன்றைய முதல்வர் அம்மாவின் சாதனைகளை அன்றே தெரிந்து கவிஞர் வாலி எழுதி கல்வெட்டில் பொறித்த பாடல்கள்.

    அன்னமிட்ட கை நம்மை ஆக்கிவிட்ட கை
    உன்னை என்னை உயர வைத்து உலகமெல்லாம் வாழவைத்து
    அன்னமிட்ட கை நம்மை ஆக்கிவிட்ட கை
    உன்னை என்னை உயர வைத்து உலகமெல்லாம் வாழவைத்து
    அன்னமிட்ட கை நம்மை ஆக்கிவிட்ட கை

    இல்லாமை நீக்க வேண்டும் தொழில் ஆக்கம் வேண்டும் இங்கு
    எல்லோரும் வாழ வேண்டும்
    முன்னேற என்ன வேண்டும் நல் எண்ணம் வேண்டும் தன்
    உழைப்பாலே உண்ண வேண்டும்

    இல்லாமை நீக்க வேண்டும் தொழில் ஆக்கம் வேண்டும் இங்கு
    எல்லோரும் வாழ வேண்டும்
    முன்னேற என்ன வேண்டும் நல் எண்ணம் வேண்டும் தன்
    உழைப்பாலே உண்ண வேண்டும்

    பாடுபட்ட கை அது பாட்டாளி கை
    பாடுபட்ட கை அது பாட்டாளி கை
    செய்யும் தொழிலை தெய்வமாக
    நிலைநிறுத்தி உடல் வருத்தி

    அன்னமிட்ட கை நம்மை ஆக்கிவிட்ட கை

    பஞ்சுக்குள் நூலை எடுத்து பட்டாடை தொடுத்து
    தன் மானத்தைக் காத்திருக்க
    மண்ணுக்குள் வெட்டி முடித்து பொன் கட்டி எடுத்து
    நம் தேவைக்குச் சேர்த்திருக்க

    பஞ்சுக்குள் நூலை எடுத்து பட்டாடை தொடுத்து
    தன் மானத்தைக் காத்திருக்க
    மண்ணுக்குள் வெட்டி முடித்து பொன் கட்டி எடுத்து
    நம் தேவைக்குச் சேர்த்திருக்க

    வாழ வைக்கும் கை அது ஏழை மக்கள் கை
    வாழ வைக்கும் கை அது ஏழை மக்கள் கை
    காட்டை மேட்டைத் தோட்டமாக்கி
    நாட்டு மக்கள் வாட்டம் போக்கி

    அன்னமிட்ட கை நம்மை ஆக்கிவிட்ட கை
    உன்னை என்னை உயர வைத்து உலகமெல்லாம் வாழவைத்து
    அன்னமிட்ட கை நம்மை ஆக்கிவிட்ட கை.

    அம்மாவின் பெருமையை உலகுக்கு உணர்த்திய இந்த பாடலை ரஜினியின் ரசிகர்களுக்கு கவிஞர் சமர்பித்தது. திருச்சியில் கோவில் கல்வெட்டில் இருக்கிறது.

    படம் : மன்னன்
    இசை : இளையராஜா
    பாடியவர் : கே.ஜே.ஜேசுதாஸ் பாடல் வரிகள் கவிஞர் வாலி

    அம்மா என்றழைக்காத உயிரில்லையே
    அம்மாவை வணங்காது உயர்வில்லையே

    அம்மா என்றழைக்காத உயிரில்லையே
    அம்மாவை வணங்காது உயர்வில்லையே
    நேரில்நின்று பேசும்தெய்வம்
    பெற்றதாயன்றி வேறொன்று ஏது

    அபிராமி சிவகாமி கருமாரி மகமாயி
    திருக்கோவில் தெய்வங்கள் நீதானமா
    அன்னைக்கு அன்றாடம் அபிஷேகம் அலங்காரம்
    புரிகின்ற சிறு தொண்டன் நாந்தானம்மா
    பொருளோடு புகழ் வேண்டும் மகனல்ல தாயே உன்
    அருள்வேண்டும் எனக்கென்றும் அது போதுமே
    அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நான் உந்தன்
    மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே
    அதை நீயே தருவாயே

    பசும்தங்கம் புதுவெள்ளி மாணிக்கம் மணிவைரம்
    அவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா
    விலை மீது விலை வைத்துக் கேட்டாலும் கொடுத்தாலும்
    கடைதன்னில் தாயன்பு கிடைக்காதம்மா
    ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி
    நீ பட்ட பெரும் பாடு அறிவேனம்மா
    ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும்
    உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா
    உன்னாலே பிறந்தேனே

  3. ananth

    ஈடு செய்ய முடியாத இழப்பு. ஆழ்ந்த அனுதாபங்கள்.

  4. Ravi

    திரையுலகம் கண்ணீர் என்ற தலைப்பை மாற்றுங்கள் தமிழுலகம் கண்ணீர் என்று ஆக்குங்கள்

  5. கணேசன் நா.

    அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.

  6. JB

    //
    —- வாலி. இதுவரை 10000 பாடல்களுக்கும் மேல் அவர் எழுதியுள்ளார்——
    ——-கவிஞர் வாலி இதுவரை ஆயிரம் படங்களுக்கு மேல் பாடல்கள் எழுதியுள்ளார்.—–

    எது உண்மையான தகவல்
    //

    இரண்டும் உண்மையாக இருக்கலாம் நாஞ்சில் மகன் அவர்களே. 10,000 என்பது பாடல் கணக்கு. ஆயிரம் படங்களுக்கு மேல் பாடல்கள் என்பது படங்கள் கணக்கு.

  7. தமிழன்

    எங்க வந்து என்ன பேசுறுதுன்னு தெரியாம ஒரு நாதாறி புலம்பிக்கிட்டு இருக்கு. எழவு வீட்டிலே போயும் அம்மா ஆத்தான்னு கூச்சல் போடும் இந்த பொறம்போக்க வெரட்டுங்கப்பா. பலபெயர்களில் எழுதிவரும் மோசடி மன்னன் தான் இந்த மாதிரி பண்ணுதோன்னு நெனக்கிறேன்.

    அய்யா கவிஞர் வாலியின் ஆன்மா சாந்தியடைட்டும். தமிழ் உள்ளவரை வாலியின் காவியங்களும், பாடல்களும் வையத்துள் வாழ்ந்து கொண்டே இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *