BREAKING NEWS
Search

கூடங்குளம் – உதயகுமார் தலைமையில் கடல்வழி முற்றுகைப் போராட்டம்!

கூடங்குளம் – உதயகுமார் தலைமையில் இன்று முற்றுகைப் போராட்டம்!

Kudankulam_1

கூடங்குளம்: தென் இந்தியாவின் மிகப் பெரிய ஆபத்தாக உருவெடுத்து நிற்கும் கூடங்குளம் அணுமின் நிலையத்தை முற்றாக மூடக் கோரி மீண்டும் முற்றுகைப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது உதயகுமார் தலைமையிலான போராட்டக்குழு.

இன்று காலையிலேயே கடல் வழியாக படகுகளில் சென்று கூடங்குளத்தை முற்றுகையிட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் முதல் அணு உலையில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு எரிபொருள் நிரப்பப்பட்டுவிட்டதாக கூறி வருகின்றனர்.

பதினைந்து நாளில் மின் உற்பத்தி என்று கடந்த ஒரு ஆண்டுக்கும் மேல் கூறிவருகிறார் மத்திய அமைச்சர் நாராயணசாமி.

இந்த முறை 30 நாட்களுக்குள் மின் உற்பத்தி தொடங்கும் என்று புதிய கெடு விதித்துள்ளார். ஆனால் இந்த அணு உலைக்குள் அடிக்கடி கதிர்வீச்சு கசிவு, மின் கசிவு ஏற்பட்டு உயிர்களைப் பலி வாங்கி வருகிறது. சமீபத்தில் கூட மின் கசிவால் முதல் அணு உலையில் ஒருவர் உயிரிழந்தார்.

கூடங்குளம் கதிர்வீச்சுப் பாதிப்பு தங்கள் நாட்டுக்கு வருவதாக இலங்கை அமைப்பு அச்சம் தெரிவித்தது. இதன் கழிவுகளைப் புதைக்க இந்தியாவின் எந்த மாநிலமும் ஒப்புக் கொள்ளவில்லை.

எனவே இந்த அணுஉலை மனித இனத்துக்கே ஆபத்து, தேவையற்றது என்பதை வலியுறுத்தி 4வது முற்றுகைப் போரை ஆரம்பித்துள்ளது டாக்டர் உதயகுமார் தலைமையிலான போராட்டக்குழு.

இந்தப் போராட்ட அறிவிப்பை அடுத்து, கூடங்குளத்தைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. 2000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றி 7 கி.மீ. தொலைவுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனினும் போராட்டக்காரர்கள் தாங்கள் அறிவித்தப்படி இன்று கடல் வழியாக படகுகளில் சென்று முற்றுகையிட்டனர்.

கடல் பகுதியிலும் போலீசார் பாதுகாப்பு அரண் அமைத்து உள்ளதால் போராட்டக்காரர்கள் அணு உலையை நெருங்க முடியவில்லை.  உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் இடிந்தகரை, கூடங்குளம், பெருமணல், கூட்டப்புளி, கூத்தங்குழி உள்பட நெல்லை மாவட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர்.

படகுகளில் கறுப்புக்கொடி கட்டி வந்தவர்கள் அணு உலையை மூட வலியுறுத்தி கோஷமிட்டனர்.

தூத்துக்குடியில்…

இதற்கிடையே கூடங்குளம் போராட்டத்திற்கு ஆதரவாக தூத்துக்குடி முத்துநகர் அனைத்து மீனவ இயக்கங்களின் கூட்டமைப்பினர் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தம் செய்தனர். அவர்கள் பனிமய மாதா ஆலயம் எதிரே உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

குமரி மாவட்ட மீனவர்களும் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். குமரி, சின்ன முட்டம், ஆரோக்கியபுரம், கோவளம், வாவதுறை, சிலுவை நகர், புதுகிராமம் மீனவர்கள் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.

-என்வழி செய்திகள்
2 thoughts on “கூடங்குளம் – உதயகுமார் தலைமையில் கடல்வழி முற்றுகைப் போராட்டம்!

 1. malar

  எந்த மாநிலங்களும் கூட கூடங்குள கழிவுகளை புதைத்தால் ஆபத்து என்று நினைத்து இடம் கூட கொடுக்க யாரும் முன் வரவில்லை……அப்போ எங்க மாவட்டத்தில் இருந்து கிடைக்கும் மின்சாரம் எல்லருக்கும் தேவை…….எங்க மக்கள் இறந்தால் கூட பரவா இல்லை என்று நினைக்கும் உங்களின் மிக பெரிய மனதை என்னவென்று சொல்வது!!!

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

 2. kamal

  மலர் ,இங்கு அடுத்தவன் உயிரை விட பணமும் ,
  பணம் கொட்டும் தொழிற்சாலை இல் இன்பம் காண்பவன் ,
  அடுத்தவன் மூச்சுகாற்றில் தன வீட்டு மின்விசிறி காற்றில் நிம்மதியாக
  மூச்சு விடுபவன்,
  பொய்யான வதந்திகளை நம்புபவன் ,கருத்துகளை ஆராயாமல் எவனோ எழுதுபவனின் பொய்யான எழுத்துக்களை ,மூளைசலவை செய்யும் ஊடகங்களை நம்பும் மனிதன் ,
  உண்மையான போராட்டத்தை இழிவு படுத்தும் கேலி மனிதர்கள் ,
  தெற்கின் அருமையும் பாரம்பரியமும் அறியாத மனிதர்கள் ,
  தெற்கு பகுதி மக்களின் உண்மையான மனம் புரியாத மனிதர்கள் ,
  இருக்கும் வரை கூடங்குளம் போராட்டத்தின் களம்மாகவே இருக்கும்
  விடிவு என்றும் பிறக்காது ……..
  குமரி இல் இருந்து வருந்தும் ஒரு குரல் …………..
  இறுதியாக அனைவரூக்கும் ஒன்றை கவிஞர் இன் வரிகளை நினைவு கூறுகிறேன்
  “அணு விதைக்கும் பூமியிலே அறுவடைக்கும் அனுகதிர்தான் “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *