BREAKING NEWS
Search

டீசல் விலை – உரிய நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கை..! – மன்மோகன் சிங்

டீசல் விலை – உரிய நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கை..! – மன்மோகன் சிங்

டெல்லி: டீசல் விலை உயர்வு என்பது நாட்டின் பொருளாதாரத்தைக் காக்க சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு என்று  பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

திட்டக் குழு ஆணையத்தின் 12வது ஐந்தாண்டு திட்டப் பணிகளுக்கு ஒப்புதல் அளித்து பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது:

11-வது ஐந்தாண்டு திட்ட முடிவில் நாம் குறிப்பிடத்தக்க சில இலக்குகளை அடைந்திருக்கிறோம். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஆண்டு சராசரி என்பது 7.9 விழுக்காடாக இருகிறது. 11வது ஐந்தாண்டு திட்டத்தில் 2008 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் சர்வதேச பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. 10-வது ஐந்தாண்டு திட்டத்தில் 2.4 விழுக்காடு வளர்ச்சியாக இருந்த வேளாண் துறையானது 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் 3.3 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது.

8.2 விழுக்காடு இலக்கு

இது 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தின் நல்ல அம்சமாக இருந்தாலும் 12-வது ஐந்தாண்டுத் திட்டமானது கடுமையான சர்வதேச பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில்தான் தொடங்குகிறது.

இன்றைக்கு வலுவான வளர்ச்சி, செயலின்மை மற்றும் கொள்கை முட்டுக்கட்டைகள் என சிக்கலான மூன்று விஷயங்களில் நாட்டின் பொருளாதாரம் சிக்கிக் கொண்டுள்ளது. இந்த சவாலிலிருந்து நாம் வெளியில் வந்தாக வேண்டும்.

12-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் நாட்டின் வளர்ச்சி விகிதமானது 9 விழுக்காட்டுக்குப் பதிலாக 8.2 ஆக குறைத்திருக்கிறோம்.

உள்கட்டமைப்புக்கு முன்னுரிமை

நாட்டின் உள்கட்டமைப்பு திட்டங்களை விரைவுபடுத்த வேண்டியது உடனடிப் பணிகளாகும்.  உள்கட்டமைப்புத் துறைகளின் முடக்கம்தான் இதர துறைகளின் வளர்ச்சியைப் பாதிக்கக் கூடியதாக இருக்கிறது. உள்கட்டமைப்புத் திட்டங்களை செயல்படுத்தும் போது முதலீட்டுக்கான சூழலும் அதிகரிக்கும். இந்தத் துறையில் டிரில்லியன் டாலர்களை முதலீடு செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

12-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் முதலாவது 6வது மாத முடிவில் உள்கட்டமைப்பு அமைச்சகங்களின் செயல்திட்டங்களை நான் தனிப்பட்ட முறையில் ஆராய உள்ளேன். நாம் நிர்ணயித்திருக்கும் 8.2 விழுக்காடு இலக்கை எட்ட முதலீட்டுக்கான சூழலை உருவாக்க வேண்டும். வேளாண் துறை வளர்ச்சியை 4 விழுக்காடு அளவுக்கு உயர்த்த வேண்டும்.

டீசல் விலை உயர்வு சரிதான்

நமது நாட்டின் எரிபொருட்கள் விலையானது சர்வதேச விலைகளுக்கு அப்பால் இருக்கிறது. இதையடுத்து அண்மைய்ல் டீசல் விலை உயர்த்தப்பட்டது என்பது ஒரு சரியான நடவடிக்கைதான்.  பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ளாமல் முடக்கி வைத்தால் நாட்டின் வளர்ச்சி விகிதமானது 6 முதல் 6.5 விழுக்காடு என்பதைவிட மிகக் குறைவான விழுகாட்டை சந்திக்க நேரிடும்.

அன்னிய முதலீடு சரிதான்

12-வது ஐந்தாண்டுத் திட்டமானது 2.9 விழுக்காடு பற்றாக்குறையுடன் இருக்கிறது. இத்தகைய பற்றாக்குறை நிலைமையை சமாளிக்க நாம் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதித்தாக வேண்டிய நிலை இருக்கிறது. வெளிநாட்டு முதலீடுகளை நாம் ஈர்ப்பதன் மூலம் நிச்சயமாக நமது பற்றாக்குறை அளவு என்பது கட்டுப்பாட்டுக்குள் வௌவதுடன் கணிசமான பொருளாதார முன்னேற்றத்தையும் எட்ட முடியும்

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவே இந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இதனைப் புரிந்து கொண்டு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இல்லாவிட்டால், பொருளாதார வளர்ச்சி  சதவீதத்துக்கு கீழே குறைந்துவிடும் வாய்ப்புள்ளது.

-என்வழி செய்திகள்




One thought on “டீசல் விலை – உரிய நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கை..! – மன்மோகன் சிங்

  1. palPalani

    நேத்து கலைஞர் செய்திகள் சானலில் ஒரு பொருளாதார மேதை பேசுனாரு, அவர் சொன்ன சில விஷயங்கள்:
    * Share Trading மற்றும் சில இது மாதிரி, ஓரளவுக்கு வசதி படைத்தவர்கள் செய்யும் தொழில்ல .5% வரி விதிச்சலே நமக்கு 4 லட்சம் கோடி கிடைக்குமாம். ஏன்னா இதுல மாதம் கை மாறுற பணத்தின் மதிப்பு 8 கோடி கோடியாம். மேலும் இந்த வரி விதிப்பு ஏற்க்கனவே நடைமுறையில் இருந்ததாம்.
    * டீசல் கார்களுக்கு மானியம் தேவையில்லை [இது ஏற்க்கனவே என்வழி சொன்ன விஷயம்], இப்போதைய புள்ளி விவரப்படி luxury டீசல் கார்கள்தான் அதிகமா விற்பனை ஆகுதாம்.
    * அதே மாதிரி சிளிண்டருக்கும் வருமான அடிப்படையில் கொடுக்கலாம்னு சொன்னாரு.
    ______________
    இதெல்லாம் தலையைச் சுற்றி மூக்கைச் தொடும் மேட்டர் பழனி. அடிப்படை வசதிகள் வர்த்தகமல்ல. மக்களுக்கான சேவை. அதில் லாபம் பார்க்கக் கூடாது. நஷ்டம் வந்தால் ஏற்கவே வேண்டும். இதுதான் இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை. இந்த அடிப்படை சரியாக இருக்கும் வரை இந்தியப் பொருளாதாரம் எந்த சரிவைக் கண்டும் அச்சப்பட்டதில்லை. ஆனால் இனி பாருங்கள்.. அமெரிக்கா மூச்சுவிட்டாலும், ஐரோப்பா கண் செருகினாலும் இந்தியா ஆட்டங்காணும்… அது சாதாரண ஆட்டமாக இருக்காது!
    -வினோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *