BREAKING NEWS
Search

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட வினோதினிக்கு நிதியுதவி செய்த பிரதமர்!

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட வினோதினிக்கு நிதியுதவி செய்த பிரதமர்!

vinothini-3சென்னை: ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் காரைக்கால் பெண் வினோதினிக்கு பிரதமர் மன்மோகன் சிங் ரூ.3 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார்.

காரைக்காலைச் சேர்ந்த வினோதினி சென்னை சைதாப்பேட்டையில் தங்கி சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலைப் பார்த்து வந்தார்.

அவரை ஒருதலையாக காதலித்த கட்டிடத் தொழிலாளி சுரேஷ் தனது காதலை ஏற்க மறுத்த வினோதினி மீது கடந்த நவம்பர் மாதம் ஆசிட் வீசிவிட்டான்.

இதில் வினோதினியின் முகம் மற்றும் உடலில் பல பகுதிகள் கருகிப்போயின. முதல்கட்ட சிகிச்சைக்குப் பிறகு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் வினோதினி.

காயங்கள் ஆற நாளாகும் என்று தெரிவித்துள்ள மருத்துவர்கள், கண்களைப் பொருத்தி பார்வை வரவழைக்க முடியுமா என்று தீவிரமாக யோசித்து வருகின்றனர்.

இதற்கு ரூ 10 லட்சம் வரை செலவாகும் என்று இப்போதைக்கு கூறியுள்ளார்களாம்.

கண்கள் இழந்து, எதிர்காலம் கேள்விக்குறியான நிலையில் வாழப்போராடிக் கொண்டிருக்கும் இந்த இளம்பெண்ணுக்கு உதவி கரம் நீட்டும்படி வினோதினியின் பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர். ஏராளமான தனி நபர்கள் தங்களால் இயன்ற உதவிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், வினோதினியின் மருத்து சிகிச்சைச் செலவுக்காக பிரதமர் நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் வழங்க பிரதமர் மன்மோகன்சிங் உத்தரவிட்டுள்ளார். நிதி உதவிக்கான காசோலையை மத்திய அமைச்சர் நாராயணசாமி நாளை வழங்குகிறார். ஏற்கனவே வினோதினியின் சிகிச்சைக்காக புதுவை முதல்வர் ரங்கசாமி, முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் வழங்கியுள்ளார்.

-என்வழி செய்திகள்




2 thoughts on “ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட வினோதினிக்கு நிதியுதவி செய்த பிரதமர்!

  1. bahrainbaba

    “MEDIA IS SO POWERFUL “. This is thalaivar statement about media. This is taken to Primeministers notice only by the media… Hats off to all Medias..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *