சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் பேட்ட படத்தின் இரண்டாவது போஸ்டர் நேற்று வெளியாகி இந்திய அளவில் ட்ரெண்டிங்கானது.
ரஜினிகாந்த் நடிக்கும் 165-வது படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வருகிறார். ‘பேட்ட’ என்று பெயரிட்டு வடமாநிலங்களில் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி வருகின்றனர்.
பேட்ட படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். பேட்ட படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன், த்ரிஷா ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கிறார்.
ரஜினியுடன் இணைந்து பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இந்த படத்தின் இரண்டாவது போஸ்டர் இன்று மாலை 7 மணியளவில் வெளியானது. அதில் நடிகர் ரஜினிகாந்த், இதுவரை இல்லாத வகையில் பெரிய மீசையுடன் வேட்டி சட்டையோடு பக்கா மாஸ் கிராமத்து ஆணழகன் போல உள்ளார்.
இந்தப் போஸ்டரைப் பார்த்ததிலிருந்து ரசிகர்கள் உற்சாகத்தில் மிதக்கின்றனர். இதுவரை பார்த்திராத தோற்றம் என்றும், நீண்ட நாட்களுக்குப் பிறகு தாடி இல்லாத இளமையான கம்பீரமான தோற்றத்தில் தலைவர் ஜொலிப்பதாகவும் சமூக வலைத் தளங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
– என்வழி
Chancailla what getup Thilivar Thalivtha, Thilava your my god.