BREAKING NEWS
Search

பெட்ரோல் விலை அடுத்த வாரம் ரூ 4 குறைகிறது!!

பெட்ரோல் விலை அடுத்த வாரம் ரூ 4 குறைகிறது!!

டெல்லி: பெட்ரோல் வாகனங்களை வைத்திருப்போருக்கு சின்ன நிம்மதியைத் தரும் வகையில் ஒரு செய்தியை மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.

வரும் வாரத்தில் பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ 4 வரை குறைக்கப் போவதாக அறிவித்துள்ளன.

திரவத் தங்கம் எனப்படும் பெட்ரோல் விலை உண்மையிலேயே தங்கத்துக்கு நிகராக உயர்ந்து வருகிறது. ஒரு காலத்தில லிட்டர் விலை ரூ 9 ஆக இருந்த பெட்ரோல், இன்று ரூ75.50 ஆக உள்ளது (சென்னையில்).

மன்மோகன் சிங் அரசு இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற பிறகு 18 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களுக்கு அளித்ததன் விளைவுதான் இது. இன்றைய தேதிக்கு பெட்ரோலுக்கு அரசு மானியம் இல்லை.

கடந்த மே 23-ம் தேதி கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலர் நிகரான ரூபாய் மதிப்பைக் காரணம் காட்டி பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ 7.80 வரை உயர்த்த, நாடே கொந்தளித்துப் போனது. அடுத்த சில தினங்களில் இந்த விலை உயர்வில் ரூ 2 ஐ மட்டும் குறைத்துக் கொண்டன எண்ணெய் நிறுவனங்கள்.

இப்போது கச்சா எண்ணெய் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. பேரலுக்கு 99 டாலர் என குறைந்துள்ளதால், பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ 4 வரை குறைக்க முடிவு செய்துள்ளன. இத்தகவலை ஓஎன்ஜிசி தலைவர் வாசுதேவா தெரிவித்துள்ளார்.

ஆனால் இதுவும் தற்காலிகம்தான். அடுத்த வாரங்களில் டாலர் மதிப்பும் கச்சா எண்ணெய் விலையும் உயராமல் இருக்க வேண்டும் என வேண்டிக் கொள்வோம்.

-என்வழி செய்திகள்




3 thoughts on “பெட்ரோல் விலை அடுத்த வாரம் ரூ 4 குறைகிறது!!

  1. palPalani

    விலையேறும் போதும் மட்டும் இன்று நல்லிரவு முதல்ன்னு சொன்றாங்க, குறைக்கும்போது வரும் வாரங்களிலா?

  2. arulselvan

    வினோ,

    ஏற்றும் போது உடனடியாக ஏற்றுகிறார்கள். இறக்கும் போது ஒரு வாரம் கழித்து இறக்குகிறார்கள். என்ன கொடுமை இது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *