BREAKING NEWS
Search

பெட்ரோல் விலை இன்று மேலும் ரூ 1.26 காசுகள் குறைந்தது!

பெட்ரோல் விலை இன்று மேலும் ரூ 1.26 காசுகள் குறைந்தது!

petrol price

சென்னை: பெட்ரோல் விலை மேலும் ரூ 1.26 குறைக்கப்பட்டுள்ளது. இதுவரை லிட்டர் ரூ 70.34 விற்ற பெட்ரோல், இன்று நள்ளிரவு முதல் ரூ 69.08-க்கு விற்கப்படும்.

பெட்ரோல், டீசல் விலைகள், சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப இரு வாரத்துக்கு ஒரு முறை நிர்ணயம் செய்யப்படுகின்றன. பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்யும் உரிமையை எண்ணை நிறுவனங்களிடமே மத்திய அரசு ஒப்படைத்துள்ளது.

டீசல் விலை மாதம் ஒரு முறை ரூ 1 உயர்த்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை மிகவும் குறைந்துள்ளது.

இதனை தொடர்ந்து பெட்ரோலுக்கான புதிய விலை குறைப்பு பட்டியலை எண்ணெய் நிறுவனம் வெளியிட்டுள்ளது.  இந்த விலைக் குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

அதன்படி சென்னையில் ரூ. 70.34 காசாக விற்கப்படுகிற ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ 1.26 காசுகள் குறைந்து ரூ. 69.08 காசுகளுக்கு இனி விற்கப்படும்.

டெல்லி, கொல்கத்தா, மும்பை ஆகிய பகுதிகளில் முறையே ரூ.1.20, 1.24, 1.26 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாதத்தில் மூன்றாவது முறையாக பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

டீசல் விலை இப்போது லிட்டருக்கு ரூ 51.78 ஆக உள்ளது. மே 1-ம் தேதி மேலும் ஒரு ரூபாய் உயர்த்தப்பட உள்ளது.

-என்வழி செய்திகள்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *