BREAKING NEWS
Search

செல்வராகவன் வைத்த விருந்தில் அனுஷ்காவை நாய் கடிச்சிடிச்சி!

செல்வராகவன் வைத்த விருந்தில் அனுஷ்காவை நாய்  கடிச்சிடிச்சி!

சென்னை: இயக்குநர் செல்வராகவன் வைத்த விருந்தில் கலந்து கொண்டபோது நடிகை அனுஷ்காவை அவரது செல்ல நாய் கடித்து வைக்க, தொடர்ந்து 3ஊசிகள் போட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழில் முன்னணி நடிகையாகத் திகழும் அனுஷ்கா இப்போது செல்வராகவன் இயக்கும் ‘இரண்டாம் உலகம்’ மற்றும் ‘தாண்டவம்’ படங்களில் நடித்து வருகிறார்.

‘இரண்டாம் உலகம்’ படப்பிடிப்பு சமீபத்தில்தான் முடிவடைந்தது. இந்தப் படத்துக்காக கொட்டும் பனியில் ரஷ்யக் காடுகளில் தங்கி நடித்துக் கொடுத்தாராம் அனுஷ்கா.

அவரது அந்த சினிசியாரிட்டிக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், படப்பிடிப்பு முடிந்ததும் அனுஷ்காவுக்கு சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் செல்வராகவன் விசேஷ விருந்து கொடுத்தார். இதில் ‘இரண்டாம் உலகம்’ படத்தில் நடித்த ஆர்யா உள்ளிட்ட இதர நடிகர், நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்களும் பங்கேற்றார்கள்.

அப்போது விருந்தில் சாப்பிட்ட ஒருவர் கையை துடைத்து டிஷ்யூ பேப்பரை வீசி எறிய, அதை ஒரு நாய் கவ்வி எடுத்துத் தின்றதாம். பேப்பரை தின்றால் நாய்க்கு ஏதாவது ஆகிவிடுமே என பதைப்பில், அனுஷ்கா விரைந்து போய் நாய் வாயில் கையை விட்டு பேப்பரை வெளியே எடுக்க முயன்றுள்ளார்.

அனுஷ்காவின் நல்ல மனசைப் புரிந்து கொள்ளாத அந்த செல்ல நாய், அவர் கையை ரத்தம் வரும் அளவுக்கு பலமாகக் கடித்து வைத்தது.

வலி தாங்காமல் அழுத அனுஷ்காவை உடனடியாக  பக்கத்திலிருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துப் போய் சிகிச்சை அளித்தனர். அடுத்தடுத்து 3 ஊசிகள் போட்டனர். இன்னும் சிகிச்சை தொடர்கிறதாம்…

கொஞ்ச நாளைக்கு பார்ட்டிக்கே போகாதீங்க.. அதுவும் நாயோடு போகவே போகாதீங்க என்பது டாக்டர்கள் அட்வைஸாம்!

-என்வழி சினிமா செய்திகள்




4 thoughts on “செல்வராகவன் வைத்த விருந்தில் அனுஷ்காவை நாய் கடிச்சிடிச்சி!

  1. Rasa

    டாக்டருக்கு நல்ல ராசியான நாள், இதுவரை படத்தில் மட்டும் பார்த்த அனுவின் இடுப்பை பக்கத்தில் பர்த்த்ருப்பார்

  2. anbudan ravi

    அந்த நாயா நான் பொறந்திருக்க கூடாதாபா ….என்று மதுரை வீரன் நினைக்கிறார் நான் இல்லை 🙂

    அன்புடன் ரவி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *