BREAKING NEWS
Search

அட பொறாமை பிடிச்ச ‘தமிழனுங்களா’… இதையும் கடந்து போவார் ‘கபாலி’ ரஜினி!

இதையும் கடந்து போவார் ‘கபாலி’ ரஜினி!

-இர தினகர்

Kabali - The King2
லகெங்கும் உள்ள தமிழர்கள் ரஜினியின் கபாலியைக் கொண்டாடுவதற்காக காத்துக் கொண்டு இருக்கின்றனர். சக தமிழன் மகிழ்ச்சியாக திருவிழாக் கொண்டாட்டத்தில் இருப்பதை பிடிக்காதவர்கள், எதிர்மறையாக ஏதேதோ சமூக தளங்களில் எழுதி.. இல்லை இல்லை அழுது வடிகின்றனர்.

சாதியைக் காட்டிலும் கொடிய பொறாமை.. வக்கிரம்

சங்கத் தமிழன் காலத்தில் சாதிகள் இல்லை, ஏற்றத் தாழ்வுகள் இல்லாமல் சமமாக வாழ்ந்து வந்தார்கள் என்று இலக்கியங்கள் கூறுகின்றன. இடையில் வந்த சாதியால் தான் தமிழினம் தரம் தாழ்ந்து கிடக்கிறது இல்லையென்றால் தமிழன் எங்கோ சென்றிருப்பான் என்ற குரல்கள் இலக்கியவாதிகளிடமும், தமிழ் ஆர்வலர்களிடமும் பரவலாக கேட்கிறது.

சாதிய வேறுபாடுகள் தமிழ் இனத்திற்கு பெருங்கேடு என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை.

ஆனால் அதைக் காட்டிலும் ஒரு கொடிய நோயான ‘பொறாமை’, ‘வக்கிரம்’ பரவலாக தமிழர்களைத் தாக்கி உள்ளது.

சக மனிதன் மகிழ்ச்சியாக இருக்கும் போது அதைப் பொறுத்துக் கொள்ளாமல், அந்த மகிழ்ச்சியை எப்படியெல்லாம் கெடுத்து அவனை மன நெருக்கடிக்குள்ளாக்கலாம் என்று நினைக்கும் பொறாமை எண்ணம் பெரும்பாலோன தமிழர்களுக்கு ஓட்டிக்கொண்டு விட்டது. பொறாமை என்பதை விட வக்கிரம் என்ற சொல் இவர்களுக்கு சாலப் பொருந்தும்.

இந்த கொடிய நோய் தமிழர்களிடம் சங்க காலத்திலேயே இருந்ததா அல்லது இடையில் வந்ததா? என்பதை தமிழ் அறிஞர்கள் தான் கூற வேண்டும்.

விளம்பரம் செய்தால்தான் உதவியா?

ஊரில் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, யார் வீட்டிலாவது துக்கம் நடந்து விட்டால், விழாவை தற்காலிகமாக நிறுத்தி வைத்து விட்டு, இறந்துவருடைய இறுதிச் சடங்குகளை முடித்து விட்டுத்தான், விழாவை தொடர்வது இன்றும் கிராமப்புற வழக்கம்.

அதாவது ஒருவன் துன்பப்படும் போது , நாம் மகிழ்ச்சியாக கொண்டாடக் கூடாது என்பதை வலியுறுத்தும் கருத்தில் அவ்வாறு நடத்தப்படுகிறது. அதே சமயத்தில் திருவிழாவை ஒட்டு மொத்தமாக நிறுத்துவதும் இல்லை.

ரஜினி ரசிகர்கள் வேலூரில் பெரும் மாநாட்டை ஏற்பாடு செய்திருந்த நேரத்தில், சென்னையில் பெரு வெள்ளம். கடலூர், தூத்துக்குடியிலும் கடும் பாதிப்பு. இந்த நேரத்தில் மாநாட்டை நடத்த வேண்டாம், என்று ரஜினி அறிவித்துவிட்டார். பல லட்சம் செலவில் ஏற்பாடுகள் செய்திருந்தும் தலைவர் சொல்லிவிட்டதற்கிணங்க உடனடியாக, மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து விட்டனர்.

padmabhushan

ரஜினியின் மண்டபத்திலிருந்து லாரிகளில் நிவாரணப் பொருட்கள் சென்றதை ஊடகங்களில் காண முடிந்தது. பத்து கோடி நிவாரண உதவி என்றெல்லாம் செய்திகள் வந்தாலும், ரஜினி அமைதி காத்தார். விளம்பரப்படுத்தவில்லை என்றால் உதவி செய்யவில்லை என்ற மனோபாவத்திற்கு வந்துவிடுவது தமிழனின் இன்னொரு வியாதி!

உண்மையிலேயே இந்த பெருமழை வெள்ளத்தின் போது, ரஜினி அளவுக்கு வேறு யாரும் செய்யவில்லை என்பதே உண்மை.

ரஜினி  செய்த வெள்ள நிவாரணம் குறித்த செய்திகள்.. 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகத் திறக்கப்பட்ட ராகவேந்திரா மண்டபம்

துப்புரவுப் பணியாளர்களுக்கு சகல வசதிகளும் செய்து தந்த ரஜினி

சத்தமின்றி தொடரும் ரஜினியின் வெள்ள நிவாரணப் பணிகள்

ரஜினி செய்த வெள்ள நிவாரணப் பணிகள் குறித்த  இன்னும் நிறைய செய்திகள் இதே தளத்தில் இருக்கு. தேடிப் பாத்துக்குங்க.

இவர்களுடைய பிரச்சனை என்ன?

உண்மையான ரஜினி ரசிகன் யாராவது வேலைக்குச் செல்லாமல் வெட்டியாக இருப்பதைப் பார்க்க முடியுமா? கொள்ளைக்காரன், பாலியல் குற்றவாளி, ஆணவக் கொலைகாரன் என்று ரஜினி ரசிகனை எங்காவது சமூகக் குற்றவாளியாக பார்த்திருக்க முடியமா? அவர்கள் எல்லோரும் ரஜினியை ஆன்மீகக் குருவாக ஏற்றுக்கொண்டு வாழும் ஏகலவைன்கள். தங்கள் வாழ்க்கையை செம்மைப்படுத்திக் கொண்டு குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். வெளிநாடுகளில் போய்ப் பாருங்கள்… ஒரு ரஜினி ரசிகனை விட உயர்ந்த அந்தஸ்தில் உள்ள ஒரு தமிழனைப் பார்க்க முடியாது.

ரஜினி பட வெளியீடு என்பது தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் போல், ரஜினி ரசிகர் சமூகத்திற்கு திருநாள். ஜூலை 22ம் தேதி கபாலி படம் வெளியாகிறது.. உலகெங்கும் திருவிழா போல் கொண்டாட கூட்டம் கூட்டமாக திரள்கிறார்கள். அலுவகங்கள் விடுமுறை விடுத்து தங்கள் ஊழியர்களுக்கு கபாலி டிக்கெட்டும் கொடுக்கிறார்கள்.

ரஜினியின் இந்தப் பெருமையை, அவரது ரசிகர்களின் இந்த மகிழ்ச்சியைப் பொறுத்துக் கொள்ளமுடியாதவர்கள், அவதூறு பரப்பி, கொண்டாட்டத்தை நிறுத்த முடியுமா அல்லது ஏதாவது வகையில் இடையூறு செய்யமுடியுமா என்று ரூம் போட்டு யோசித்துக் கொண்டிருப்பார்கள் போலும்.

new-1

நிமிடத்திற்கொரு அவதூறு பரப்பி வருகிறார்கள். உச்சக் கட்டமாக திருட்டு டிவிடியில் பார்க்கப் போவதாக பப்ளிக்காக சொல்லித் திரிகிறார்கள். இவர்களை ஊக்குவிக்கும் விதமாக ’நடுநிலை போர்வையாளர்களும்’ இஷ்டம் போல் அப்படிப்பட்ட தகவல்களை பகிர்ந்து வருகிறார்கள். காவல்துறை இவர்களை கணக்கெடுத்தால் நல்லது.

அடுத்தவர்கள் மகிழ்ச்சியைக் கண்டு மனம் வெதும்பும் பிற்போக்குவாதிகள், தான் எப்படி மகிழ்ச்சியாக இருப்பது என்ற வழியைக் காண முயலாமல், அடுத்தவன் சந்தோஷமாக இருக்கிறானே என்று புலம்பும் ஒரு வித மன நோயாளிகள்.

தமிழினத்தின் தலையாய பிரச்சனை!

இது கபாலிக்கும், ரஜினிக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் மட்டுமான பிரச்சனை அல்ல, உலகெங்கும் தமிழ் சமூகத்தில் புரையோடிருக்கும் நோயாகத் தான் பார்க்க வேண்டியுள்ளது. ரஜினி பட வெளியீடு சமயத்தில் ஒட்டு மொத்தமாக இவர்கள் வெளியே வந்து விடுகிறார்கள். மற்ற நேரங்களில் சக மனிதனின் முன்னேற்றத்தைக் கண்டு பொறாமையுடன் புலம்பித் திரிகிறார்கள். பக்கத்தில் வசிக்கும் சக தமிழினின் சாதனையை எத்தனை பேர் மனப்பூர்வமாக வாழ்த்தும் உள்ளம் கொண்டிருக்கிறார்கள்?

எங்கோ இருக்கும் யாரோ ஒருவருடைய சாதனையை தன்னுடையது போல் கொண்டாடும் இவர்கள், தன்னுடைய உறவுக்காரர்களின் சாதனையைக் கூட கண்டு கொள்வதில்லை. யாரோ ஒருவர் கஷ்டபட்டு சமூகப் பணி ஆற்றிக்கொண்டிருக்கும் போது, உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை. உபத்திரம் செய்யாமல் இருக்கலாம் அல்லவா?

எதை எதையோ தேவை இல்லாமல் நோண்டி நோண்டி நோகடிக்கச் செய்து விடுகிறார்கள். இப்படியே போனால் ஹார்ட் அட்டாக் தான் வரும்..

ஒரு மனிதன் மகிழ்ச்சியாக இருக்கும் போது அவனது உடலில் அனைத்து உறுப்புகளும் நன்றாக வேலை செய்யும். பொறாமை, கோபம் போன்றவைகளுக்கு மனதில் இடம் கொடுக்கும் போது, ரத்த ஓட்டம் முதற் கொண்டு அனைத்தும் சீர் கெடும். வேண்டுமென்றால் சோதித்துப் பார்க்கலாம்.

ஒருவரை மனதார வாழ்த்திப் பாருங்களேன். உங்களுக்குள்ளேயே புத்துணர்ச்சி வரும். வாழ்த்த மனம் இல்லையென்றால், இருக்கும் வேலையைப் பார்த்துக் கொண்டு போங்கள்…தான் வாழாவிட்டாலும் பரவாயில்லை அடுத்தவன் வாழக்கூடாது என்று நினைத்தால்.. மீண்டும் சொல்கிறேன் ஹார்ட் அட்டாக் தான் வரும்.. இது மருத்துவ உண்மை.

ரஜினி பட வெளியீடு என்பது, ஒரு சமூத்தின் திருவிழாவாக ஆகிவிட்டது, முடிந்தால் அந்த திருவிழாவில் இணைந்து கொண்டாடுங்கள். அல்லது உங்களுக்கு சம்பந்தம் இல்லாத திருவிழா என்று ஒதுங்கி இருங்கள். உங்களுடைய உடலுக்கும் உள்ளத்திற்கும் நல்லது.

இது கபாலி பிரச்சனை அல்ல. ஒட்டு மொத்த தமிழனத்தின் எதிர்காலப் பிரச்சனை. பொறாமை, வக்கிரம் ஒழியட்டும் உலகெங்கும் தமிழினம் தழைக்கட்டும்!

குறிப்பு: ஒட்டுமொத்த தமிழர்களையும் நாம் சாடவில்லை. அவர்களுக்குள் ஊடுருவி நஞ்சைத் துப்பும் நச்சுத் தமிழர்களுக்காகவே இந்தக் கட்டுரை!

என்வழி ஸ்பெஷல்
8 thoughts on “அட பொறாமை பிடிச்ச ‘தமிழனுங்களா’… இதையும் கடந்து போவார் ‘கபாலி’ ரஜினி!

 1. Raj

  Well said Vino. This kind of disease affected Mr. Kamal also. Though he calls Thalaivar as his good friend. By seeing KABALI world wide trending his belly also burning.

 2. Senthil

  அவர்கள் எல்லோரும் ரஜினியை ஆன்மீகக் குருவாக ஏற்றுக்கொண்டு வாழும் ஏகலவைன்கள். தங்கள் வாழ்க்கையை செம்மைப்படுத்திக் கொண்டு குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்… semaaaaa.. semaaa… super sir..

 3. anbudan ravi

  அருமையான பதிவு ஷங்கர் சார் & நண்பர் தினகர், செருப்பால் அடித்தது போல் இருக்கும், இருந்தாலும் துடைத்துக்கொண்டு தனது கேவலமான வேலையை செய்துகொண்டுதான் இருப்பார்கள் இந்த மூளையற்ற மடையர்கள். தலைவர் சென்னை வெள்ளத்தில் செய்த உதவிகளுக்கு எந்த விளம்பரமும் இல்லை, அது தேவையும் இல்லை. 50 கோடி கொடுத்தாலும், கோடி கோடியாய் சம்பாதிக்கும் ரஜினி 50 கோடியை கிள்ளி கொடுத்திருக்கிறார் என்றுதான் சொல்வார்கள் இந்த நாதாரிகள். கல் எறிய எறிய தலைவர் மேலே சென்று கொண்டுதான் இருப்பார், எந்த கொம்பனாலும் ஒன்றும் செய்ய முடியாது.

  அன்புடன் ரவி.

 4. Nanda

  Very good Veno. nice article…. thaliavar tamil perumaya adutha leveluku kondu poraru.. peruma pada vendiya visyam…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *