BREAKING NEWS
Search

சிங்காரவேலனுக்கு நிரந்தரத் தடை – தமிழ் திரைப்பட கூட்டமைப்பு அதிரடி நடவடிக்கை

சிங்காரவேலனுக்கு நிரந்தரத் தடை – தமிழ் திரைப்பட கூட்டமைப்பு அதிரடி நடவடிக்கை

Thaanu-and-Singaravelan1

சிங்காரவேலன் என்ற நபருக்கு முகவரியோ, தனித்த அடையாளமோ கிடையாது, தலைவரின் லிங்கா வெளியாகும் வரை. அதுவரை அந்த நபர் ஒரு பூஜ்யம். ஏன், மைனஸ் என்று கூட வைத்துக் கொள்ளலாம். திருமாவளவனைக் கேட்டால் வண்டி வண்டியாக இந்த நபரின் வண்டவாளங்களை அவிழ்த்துவிடுவார்.

ஆனால் லிங்கா படத்தை திருச்சி தஞ்சைப் பகுதியில் இரு நண்பர்களுடன் இணைந்து வெளியிட்ட அந்த நபர், அதையே ஒரு காரணமாக வைத்து தன்னை முன்னிலைப் படுத்திக் கொண்டார்.

லிங்காவை ரூ 100 கோடி செலவில் தயாரித்தவர் ராக்லைன் வெங்கடேஷ் என்றாலும், தன் பெயரை லிங்கா சிங்காரவேலன் என மீடியா (வெட்கமற்று) எழுதும்படி பார்த்துக் கொண்டார் இந்த நபர்.

குறுகிய காலத்தில், ரஜினி மற்றும் லிங்கா பெயரைச் சொல்லிச் சொல்லியே தன்னை ஒரு ஆளாகக் காட்டிக் கொண்டார் இந்த நபர்.

தமிழ் சினிமாவையே ஆட்டிப் படைத்த சன் பிக்சர்ஸ் சக்சேனாவையும் அவரது அல்லக்கையாக இருந்த அய்யப்பனையுமே பார்த்தவர்களாயிற்றே நாம். இந்த இருவருக்கும் இறுதியில் நேர்ந்தது என்ன என்பதை தொலைக்காட்சி பார்க்கும் அத்தனைப் பேரும் அறிவார்கள் (அய்யோ… காப்பாத்துங்க, அடிச்சே கொல்றாங்க!).

இதோ.. சிங்காரவேலன் தான் செய்த அத்தனை தில்லு முல்லு மோசடிகளுக்குமான பலனை அனுபவிக்கும் காலம் ஆரம்பமாகிறது.

அவரது மோசடி முகம் தமிழ் சினிமாவின் அத்தனை துறைகளுக்கும், அமைப்புகளுக்கும் அம்பலமாகிவிட்டது.

லிங்கா விவகாரத்தை வைத்து முதல் கட்டமாக ரூ 35 லட்சம் மற்றும் ஒரு காரை வாங்கிக் கொண்ட இந்த நபர், மேலும் சில கோடிகளைச் சுருட்ட முயல, ஒரேயடியாக அவருக்கு நிரந்தரத் தடை விதித்திருக்கின்றன தயாரிப்பாளர் சங்கமும், தமிழ் திரைப்பட கூட்டமைப்பும். இந்த இரு அமைப்புகளும்தான் தமிழ் சினிமாவின் நல்லது கெட்டதுகளை முடிவு செய்யும் அமைப்புகள். ஆரம்பத்தில் இதே சிங்காரவேலனை ஆதரித்த அமைப்புகளும்தான். ஆனால்.. எத்தனைக் காலம்தான் சிங்காரவேலன் கோஷ்டிகளால் ஏமாற்றிப் பிழைக்க முடியும்?

இனி இந்த சிங்காரவேலன் எந்தப் படத்தையும் வாங்கி வெளியிட முடியாது. பொய்யாகக் கணக்குகள் காட்டி பெரும் பணத்தைச் சுருட்டவும் முடியாது.

அரசன் அமைதியாக இருந்தாலும், தெய்வம் 365 நாட்களுக்குள் கொன்றுவிடுமடா சிங்காரவேலா!

-என்வழி ஸ்பெஷல்
14 thoughts on “சிங்காரவேலனுக்கு நிரந்தரத் தடை – தமிழ் திரைப்பட கூட்டமைப்பு அதிரடி நடவடிக்கை

 1. மிஸ்டர் பாவலன்

  இதை… இதை… இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்

  உதயம் ஆனதும் உவப்பரிய செய்தி கண்டேன்.. உவகை கொண்டேன்..
  கொடியவன் வீழ்ந்தான்.. மாட்சி கண்டேன்.. பெருமை கொண்டேன்..

  சிங்கத் தமிழனை மாசு படுத்திய அசிங்கப் பதரின் மோசடிகள் விரைவில்
  அம்பலம் ஆனால் இன்னும் பேருவகை கொள்வேன்.. நன்றி சொல்வேன்..

  -=== மிஸ்டர் பாவலன் ==-

 2. raaj

  சன் பிக்சர்ஸ் ஐயப்பன் ஒரு மாதம் முன்பு
  மறைந்து விட்டார்.இனி அவர் பற்றி எழுத வேண்டாமே.

 3. சூர்யா

  தெய்வம் மனுஷ ரூபானாம் !!! சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் என்னை பொருத்தவரை கடவுளை போன்றவர். அரசன் அன்றே கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும். அதன் மனித தெய்வம் ரஜினி அந்த அசிங்கம் பிடித்த சிங்காரவேலனு அழித்து வித்தது. கலியுக தெய்வம் ரஜினி வாழ்க.

 4. anbudan ravi

  மிகவும் சந்தோஷமான செய்தி…..கடவுள் முன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்கட்டும் இந்த தறுதலை.

  அன்புடன் ரவி.

 5. srikanth1974

  //அரசன் அமைதியாக இருந்தாலும், தெய்வம் 365 நாட்களுக்குள் கொன்றுவிடுமடா சிங்காரவேலா//

  திருவோடு ஏந்தியவன் வாழ்கை இனி -நடுத்
  தெருவோடு நாறிப்போகட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *