BREAKING NEWS
Search

துப்பாக்கி முனையில் உற்பத்தியைத் தொடங்கிய கூடங்குளம்… மக்கள் சாலையில் படுத்து போராட்டம்!

துப்பாக்கி முனையில் உற்பத்தியைத் தொடங்கிய கூடங்குளம்… சாலையில் படுத்துப் போராடும் மக்கள்!

protest
இடிந்தகரை: குறைந்தபட்சம் மனிதர்களாகக் கூட தமிழர்களை மதிக்கக் கூடாது என முடிவு செய்துவிட்டார்கள் மத்திய ஆட்சியாளர்கள்.

மக்களின் 700 நாள் தொடர் போராட்டங்களை ஒரு பொருட்டாகக் கூடக் கருதாமல் கிட்டத்தட்ட துப்பாக்கி முனையில் அணுமின் உற்பத்தியை கூடங்குளம் உலையில் தொடங்கிவிட்டார்கள்.

ஆனால் மின்சாரம் இப்போது கிடைக்கப் போவதில்லை. கொஞ்ச நாளாகும். நாராயணசாமி ஸ்டைலில், பதினைந்து பதினைந்து நாட்களாக பல மாதங்களைப் பிரித்து தவணை வைத்துக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது.

koodankulam-3
கண்களைக் குருடாக்கி, ரத்தத்தில் புற்று வளர வைத்துக் கொண்டே இனி பளிச்சென்ற மின்சார வெளிச்சத்தை அனுபவிக்கத் தயாராகிறார்கள் மேட்டுக் குடிகள். அவர்களின் நலனுக்கும் சேர்த்துப் போராடும் அடித்தட்டு மக்களோ, பிணங்களைப் போல தெருவில் படுத்து தங்கள் எதிர்ப்பைக் காட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.

கண்ணெதிரே இயற்கைக்கு முன்னால் தாக்குப் பிடிக்காமல் புகுஷிமா அணு உலை வெடித்துச் சிதறியிருக்கிறது… அதன் தாக்கம் கடலின் ஆழம் வரை பரவி, அந்த மண்டலத்தையே நச்சாக்கிவிட்டதை நன்கறிந்திருக்கிறோம். பலரும் அணுக்கதிர் வீச்சில் நாளும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இனி அணு உலைகளே எங்கள் நாட்டில் செயல்படாது என அரசே அறிவித்துள்ளது. அட, அணு உலையின் தலைமை இயக்குநரே கதிர்வீச்சு பாதிப்பில் புற்றுநோய்க்கு பலியாகிவிட்டார். அதில் பணிபுரிந்தவர்களில் 43 சதவீதம் பேர் புற்று நோய்க்கு ஆளாகியுள்ளனர். பால், தண்ணீர், காற்று எங்கிலும் உச்சபட்ச கதிர்வீச்சு… இத்தனைக் கொடுமைகளையும் கண்டும் கேட்டும்… தமிழகத்தில் அணுஉலைகள் திறப்பதில் தீவிரம் காட்டுகிறது இந்தியா.

koodankulam-2

தங்களுக்கான சாவு கொஞ்சம் தள்ளித்தானே போகும் என்ற தைரியம்!

-என்வழி செய்திகள்

 




One thought on “துப்பாக்கி முனையில் உற்பத்தியைத் தொடங்கிய கூடங்குளம்… மக்கள் சாலையில் படுத்து போராட்டம்!

  1. மு. செந்தில் குமார்

    வல்லமை தாராயோ சிவசக்தி இந்த மா நிலம் பயனுற வாழ்வதற்கே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *