BREAKING NEWS
Search

மக்களை நேசிக்கும் தலைவனின் பேச்சு இப்படித்தான் இருக்கும்!

மக்கள் தலைவனின் பேச்சு!

Rajini-meet
ன்றைய ரசிகர்கள் சந்திப்பின்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேச்சு பக்குவத்தின் உச்சம். மிக நிதர்சனமான உண்மைகளை, வெகு இயல்பாகச் சொல்லிச் சென்றார். சினிமா, அரசியலையெல்லாம் தாண்டி, மக்களை கொஞ்சமாவது நல்லவர்களாக மாற்றுவதற்கான நோக்கம் அதில் இருந்தது.

எதிர்மறைக் கருத்துகளைப் பரப்புவதில் மட்டுமே குறியாக உள்ள சமூகக் கொலைதள, மீம்ஸ் இளைஞர்கள், எதிர்மறையாக மட்டுமே பேசுவது என்ற கொள்கையுடன் திரிபவர்கள், கன்டென்ட் பற்றாக்குறைக்காக கன்றுக்குட்டியையே தின்னும் அளவுக்கு அகோரப் பசி கொண்ட நியூஸ் சேனல் வியாபாரிகள் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

மக்களுக்கு செய்திகள் மட்டும் போதும். அப்படி இருந்த வரை இந்த சமூகத்தில் வக்கிரம் குறைவாக இருந்தது. அதைத் தாண்டி, விவாதம், வாக்குவாதம், கருத்துத் திணிப்பு, நிபுணர் கருத்தெல்லாம் இந்தத் தலைமுறையை கொலைகாரர்களாகத்தான் மாற்றும். இதை மிக எளிமையாக அழகாகச் சொல்லிவிட்டார் ரஜினி.

தான் இப்படிப் பேசுவது ஊடகங்களை எந்த அளவுக்கு கடுப்பேற்றும் என்பது புரிந்தும், மக்களுக்காகப் பேசியிருக்கிறார். இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

மீடியாவை தேவைக்கு மட்டும் பாருங்கள், பயன்படுத்துங்கள். எப்போதும் நேர்மறைச் சிந்தனைகள்தான் மனசுக்கும் உடம்புக்கும் நல்லது என்ற ரஜினியின் வழிதான் இன்றைக்கு அவசியம்!

-வினோ

 




One thought on “மக்களை நேசிக்கும் தலைவனின் பேச்சு இப்படித்தான் இருக்கும்!

  1. Rajagopalan

    I saw thalaivar speech. It was excellent.
    In news 7 (yesterday night), they are having this discussion & they had invited Snehan.
    What he knows about Thalaivar or politics.
    He is pouring full negative comments about thalaivar.
    In polimer, it was jaguar thangam.
    what these childrai pasanga know?
    Even PMK guys were subtle in their comments but the above are very harsh against thalaivar.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *