BREAKING NEWS
Search

தீபாவளிப் படங்கள் – முதலிடத்தில் விஷாலின் பாண்டிய நாடு!

தீபாவளிப் படங்கள் – சத்தமின்றி முதலிடத்துக்கு வந்த பாண்டிய நாடு!

tamil-diwali-releases3

ந்த தீபாவளிக்கு வெளியான மூன்று படங்களில் வசூலில் முதலிடத்தை அஜீத்தின் ஆரம்பம் படமும், தரத்தில் முதலிடத்தை விஷாலின் பாண்டிய நாடும் பிடித்துள்ளன.

பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகுராஜா, கடைசி இடத்துக்குப் போய்விட்டது. அதுமட்டுமல்ல, கார்த்தி மற்றும் சந்தானத்துக்கு பெரிய நெருக்கடியை இந்தப் படம் ஏற்படுத்தியுள்ளது.

ஏகப்பட்ட பொத்தல்கள் இருந்தாலும் அஜீத்துக்காகவும், அதன் ஸ்டைலான உருவாக்கத்துக்காகவும் ரசிக்கப்படும் படமாக மாறியுள்ளது ஆரம்பம்.  இன்னொன்று இந்தப் படம் தீபாவளிக்கு மூன்று தினங்கள் முன்பாகவே வெளியாகி, மொத்தமாக 5 நாள் அரங்கு நிறைந்த காட்சிகளாக வசூலை அள்ளிவிட்டது. எனவே வசூல் ரீதியில் ஆரம்பத்துக்கே முதலிடம்!

arrambam

விஷாலின் பாண்டிய நாடு, ஒரு நல்ல கமர்ஷியல் படத்துக்குரிய அத்தனை அம்சங்களோடும் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது. வசூலில் முதலிடம் ஆரம்பத்துக்கு என்றால், தரத்தில் முதலிடம் விஷாலின் பாண்டிய நாட்டுக்குதான். சொல்லப் போனால், ஆரம்பம் படத்தை இன்னொரு முறை பார்ப்பது கஷ்டம். ஆனால் பாண்டிய நாட்டை இரண்டாவது முறை கூட தயக்கமின்றிப் பார்க்கலாம்!

All-In-All-Azhagu-Raja

ஆனால் கார்த்தியின் அழகுராஜாதான் யாரும் எதிர்ப்பார்க்காத அளவுக்கு வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இது ராஜேஷின் வழக்கமான படம். அவரது முந்தைய மூன்று படங்களில் பார்த்த அதே பாணி, நடிகர்களைத்தான் இந்தப் படத்திலும் பார்க்கிறோம். ஆனால், பார்வையாளர்கள்… குறிப்பாக விமர்சகர்கள் மனதில் ராஜேஷ் – சந்தானம் இந்த முறை ‘அடி வாங்க வேண்டும்’ என்ற நினைப்பு வந்துவிட்டது போலிருக்கிறது. எனவே நிஜத்தில் சிரிப்பே வந்தாலும் கூட, இதெல்லாம் ஒரு காமெடியா என்று கேட்டு அந்தப் படத்தை காலி செய்து வருகிறார்கள்!

-என்வழி சினிமா செய்திகள்




7 thoughts on “தீபாவளிப் படங்கள் – முதலிடத்தில் விஷாலின் பாண்டிய நாடு!

  1. raja

    தமிழ் சினிமாவை உச்சகட்ட நிலைக்கு கொண்டு செல்லும் நபர்களில் அஜித்தும் ஒருவர்..

  2. guna...

    பாண்டியநாடு எதார்த்தமான படமாக இருந்தாலும் பெண்களுக்கு ஏற்ற படம் அல்ல.. வசூலிலும் சரி தரத்திலும் சரி என்றும் ஆரம்பம்தான் முதல் இடம்..

  3. shranya

    விஷாலின் பாண்டிய நாடு படம் இந்த தீபாவளியின் பெஸ்ட் படம். எதார்த்தம் இருக்கு இந்த படத்தில். ஆரம்பம் படம் அஜீத்துக்காக மட்டுமே பார்க்கலாம். மற்றபடி கதை பாண்டியநாடு நல்லா இருக்கு. வசூலில் பெச்ட்ங்க்ரதுகக ஆரம்பம் நல்ல படம்னு சொல்ல முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *