BREAKING NEWS
Search

பஞ்சு அருணாச்சலம்… தமிழ் சினிமாவின் உண்மையான சாதனையாளர்!

பஞ்சு அருணாச்சலம் எனும் ஆல்ரவுண்டர்!

b9eaee04-78ff-4814-aff9-a13aa4b04509

மிழ் சினிமாவில் உண்மையான சாதனையாளர் என்றால் அவர் பஞ்சு அருணாச்சலம் அவர்கள்தான். இளையராஜா என்ற இசை அவதாரத்தையே அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர், ரஜினி என்ற சூப்பர் ஸ்டாரை உருவாக்கியவர், கமல் ஹாஸன் என்ற நடிகரை அந்த சூப்பர் ஸ்டாருக்கு இணையாகக் கொண்டுவந்தவர்…

எத்தனை வெள்ளி விழாப் படங்கள், எத்தனை நூறு நாள் படங்களின் எழுத்தாளர்.. எத்தனை அற்புதமான பாடல்களைப் புனைந்தவர்… அன்னக்கிளியின் அனைத்துப் பாடல்களும் அவருடையதே. அதற்கும் முன்பே புரட்சித் தலைவருக்கே பாடல் எழுதிய கரங்கள் அவருடையவை!

ஒரு இயக்குநராகவும் அவர் ஜெயித்துக் காட்டினார்.

சில மாதங்களுக்கு முன் அவரைச் சந்தித்து ஒரு மணி நேரம் பேசியிருப்பேன். ஒரு புத்தகம் எழுதும் அளவுக்கு – எம்ஜிஆர், கண்ணதாசன், இளையராஜா, ரஜினி, கமல், ஏவிஎம் – அவரது நினைவலைகள் பறந்து விரிந்தபோது, அங்கே தமிழ் சினிமாவின் முக்கால் நூற்றாண்டு சரித்திரம் கண்டேன்.

5cce1055-6183-4da1-8958-5a8bbf715ca3

இவ்வளவு சாதித்திருக்கிறார். ஆனால் இப்போதும் ஒரு எளிய கிராமத்து விவசாயியின் எளிமையோடு, தன்னால் மிகப் பெரிய உயரத்துக்குப் போன கலைஞர்களை வியந்து போற்றும் அரிய பண்பாளராகத் திகழ்கிறார்.

இளையராஜா என்ற ஒப்பற்ற சாதனையாளரை அறிமுகப்படுத்தியவர் என்ற நினைப்போ, ரஜினி என்ற சூப்பர் ஸ்டாரை உருவாக்கியவர் என்ற கர்வமோ இல்லாமல், இன்றும் இருவரையும் போற்றிப் புகழும் உன்னத மனசு அவருக்கு மட்டும்தான் வாய்க்கும்!

10-rajini-ilayaraja-panchu-arunachalam11-600

இன்று அவரது பிறந்த நாள். நூற்றாண்டு விழா காண வேண்டும் இந்த உண்மையான சாதனையாளர்!

-வினோ

படங்கள்: சுரேஷ் சுகு




5 thoughts on “பஞ்சு அருணாச்சலம்… தமிழ் சினிமாவின் உண்மையான சாதனையாளர்!

  1. anbudan ravi

    திரு பஞ்சு அருணாசலம் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்…இவ்வளவு எளிமையாக இருக்க முடியுமா என்று வியக்க தோன்றுகிறது.

    அன்புடன் ரவி.

  2. srikanth1974

    திரு.பஞ்சு அருணாச்சலம் அவர்களின் திரைக்கதை அமைப்பில்
    மீண்டும் இன்றைய காலத்திற்கேற்ப திரைப்படங்கள் வெளிவர
    வேண்டும் என்பதே எனது ஆசை .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *