BREAKING NEWS
Search

ரஜினி தமிழக மக்களுக்குப் பொதுவானவர் – வாசன்; மோடி – ரஜினி சந்திப்பு யதார்த்தமானது! – ப சிதம்பரம்

ரஜினி தமிழக மக்களுக்குப் பொதுவானவர் – வாசன்; மோடி – ரஜினி சந்திப்பு யதார்த்தமானது! – ப சிதம்பரம்

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி – பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி சந்திப்பு பெரும் அதிர்வை அரசியலில் ஏற்படுத்திவிட்டது.

மோடியைச் சந்தித்து விட்டாரே என்று ரஜினி மீது மனக்குறை இருந்தாலும், அதை காட்டிக் கொள்ளாத காங்கிரஸ், ரஜினி அனைவருக்கும் பொதுவானவர் என்று கருத்து தெரிவித்துள்ளது.

காங்கிரஸின் மூத்த தலைவர்களான ப சிதம்பரம், ஜிகே வாசன் ஆகியோர், ரஜினி – மோடி சந்திப்பு குறித்து தெரிவித்துள்ள கருத்துகள்:

ஜிகே வாசன்:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழகத்தைச் சேர்ந்த அனைவருக்கும் பொதுவானவர்.  அவர் அனைவரின் நலனையும் விரும்புவார்.

எனவே தமிழக மக்களும் அவரின் நலனை விரும்புகிறார்கள். இந்த சூழலில் நரேந்திர மோடி ரஜினியை சந்தித்திருப்பது அரசியல் ரீதியாக இருக்க வாய்ப்பில்லை. இது நட்பு ரீதியான சந்திப்புதான்.

ப சிதம்பரம்:
rajini-modi-chidambaram
ரஜினிகாந்த், மோடி சந்திப்பு எதார்த்தமானதே. இதை விசேஷமாக பார்க்கத் தேவையில்லை. ரஜினியே சொன்ன மாதிரி இது நட்பு ரீதியிலான சந்திப்பு. அதற்கு ஏன் அரசியல் சாயம் பூசுகிறீர்கள்?

ரஜினி – மோடி சந்திப்பு குறித்து திமுக தலைவர் கருணாநிதியிடம் கேட்டபோது, அவர் நோ கமெண்ட்ஸ் என்று கூறியது நினைவிருக்கலாம்.
 
-என்வழி ஸ்பெஷல்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *