BREAKING NEWS
Search

கடல் கடந்து நம் மக்களுக்காக  கால் பதிக்கும் ரஜினி மக்கள் மன்றம்!

ங்கே தமிழர், கன்னடர், மலையாளி என்று பிரிந்தே வாழ்கிறோம். இங்கே இந்தியனாக வாழ்கிறோம் என்பதை விட இந்தியாவில் வாழ்கிறோம் என்ற நிலைக்கு பிரிவினை பேசி பேசி நம்மை பிரித்துக் கொண்டு இருக்கிறனர்

இந்தியன் என்ற அடையாளம் முதல் அடையாளம் என்பதை சுதந்திர தினம் குடியரசு தினம் தவிர மற்ற தினங்களில் மறந்து, மதவாதியாக, இனவாதியாக, மொழிவாதியாக, சாதியவாதியாக மாறிவிடுகிறோம். அல்லது நம்மை தங்கள் ஆதாயங்களுக்காக அரசியல்வாதிகள் மாற்றி விடுகின்றனர். அப்படி மாறாமல் இருப்போருக்கு மேல் சொன்ன வார்த்தைகள் பொருந்தாது. அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்,

வெளிநாடுகளில் நம் அடையாளம் இந்தியன் என்ற அடையாளம் மட்டுமே.. அமெரிக்காவில் வசித்தாலும் ஆப்ரிக்காவில் வசித்தாலும் தமிழன் மலையாளி கன்னடன் அடையாளம் காணமல் போய் இந்தியன் என்ற உண்மையான அடையாளம் நம்முடையதாகிறது. தற்போது வரை பத்துக்கும் மேற்பட்ட நாடுகளில் ரஜினி மக்கள் மன்றம் முதல் கட்டமாக நிர்வாகிகள் நியமனம் செய்ய பட்டுள்ளனர். நாடுகளில் எண்ணிக்கை இன்னும் தொடரும்.

சமீபத்தில் திருநெல்வேலி சுரண்டையைச் சேர்ந்த ஆதம்பாவா ( த/பெ கிருத்து ஒலி) மற்றும் தஞ்சாவூர் அதிராம்பட்டினம் புதுப்பட்டியை சேர்ந்த மாரிமுத்து (த/பெ காத்தமுத்து) ஆகிய இருவருக்கும் நாட்டிற்கு செல்வதற்கான விண்ணப்ப படிவத்திற்கான கட்டணமும், விமான டிக்கட்டிற்கான கட்டணமும் ஐக்கிய அரபு அமீரகம் ரஜினி மக்கள் மன்றம் மூலமாக எடுக்கப்பட்டு , நாட்டிற்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஷார்ஜாவில் வசிக்கும் திருச்சியை சேர்ந்த வெங்கடேசனின் 7 வயது மகள் மூளைபாதிப்பு நோயால் கோமா நிலைக்கு சென்றுவிட்டார். உயர் சிகிச்சைக்கு போதிய வசதி இன்றி தவித்து வந்த சிறுமியின் பெற்றோரிடம் ஷார்ஜாவில் உள்ள ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் காசோலையை வழங்கினர்.

உதவுவதில் இன்னொரு இந்திய தூதரகம்போல் ரஜினி மக்கள் மன்றம் அங்குள்ள நம் மக்களுக்காக மாறிவருகிறது என்பது நம் எல்லோருக்கும் மிகப் பெருமையே..

ஜெய்ஹிந்த்

– வெங்கட் முனிவேல்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *