BREAKING NEWS
Search

சபாஷ்..சரியான போட்டி… டைமுக்கு அவுட்லுக்கின் பதிலடி!

சபாஷ்..சரியான போட்டி… டைமுக்கு அவுட்லுக்கின் பதிலடி!


ன்மோகன் சிங் – தி அன்டர்அச்சீவர் என்ற தலைப்பில்,  இந்தியப் பிரதமரின் செயல்பாடுகள், ஆளும் கட்சியின் செயல்களை விமர்சித்து இரு வாரங்களுக்கு முன் கட்டுரை வெளியிட்டிருந்தது அமெரிக்காவின் புகழ்பெற்ற டைம் இதழ்.

இந்தக் கட்டுரையை பாஜக ஆதரவாளர்கள் கெட்டியாகப் பிடித்துக் கொண்டதோடு, காங்கிரஸ் கூட்டணி அரசு பதவி விலக வேண்டும் எனும் அளவுக்குப் போய்விட்டனர்!

‘இந்தியா மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. பிரதமர் மன்மோகன்சிங் எதையும் சாதிக்கவில்லை’ என்று அட்டையிலேயே கொட்டை எழுத்தில் அச்சிட்டு உலகம் முழுக்க வெளியிட்டது டைம்.

இப்போது, டைம் இதழுக்கு, இந்தியாவின் அவுட்லுக் வார இதழ் பதிலடி தரும் வகையில் கட்டுரை வெளியிட்டுள்ளது.

இந்தக் கட்டுரை அப்படியே டைம் வெளியிட்ட கட்டுரையையொட்டியே தயாரிக்கப்பட்டுள்ளது. அட்டையில் வெள்ளை மாளிகைப் பின்னணியில் ஒபாமா. தலைப்பு: பாரக் ஒபாமா – தி அன்டர்அச்சீவர்!

அதற்குக் கீழ், ‘அமெரிக்கா மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. நம்பிக்கை, மாற்றம் குறித்து ஒபாமா அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை,” என குறிப்பிடப்பட்டுள்ளது.

டைம் இதழின் கட்டுரைக்குப் பின்னணி, அமெரிக்காவின் சாட்டைக்கேற்ப இந்தியா ஆடவில்லை என்பதுதான். அதை உறுதிப்படுத்துவது போல, அதிபர் ஒபாமா கடந்த வாரம் பேசுகையில், “இந்தியா இன்னும் பல சீர்திருத்தங்களை மேற்கொள்ளவில்லை. சந்தைகளை இன்னும் தாராளமாக்கவில்லை” என்று குறிப்பிட்டிருந்தார். வால் ஸ்ட்ரீட் நிறுவனங்களின் கூடுதல் முதலீட்டுக்கு வழியில்லாததால் எழுந்த புலம்பல் இது என்று இந்தியத் தரப்பில் கூறப்பட்டது.

ஒபாமாவுக்கும் டைமுக்கும் ஒருசேர பதிலளிக்கும் வகையில் அவுட்லுக் இந்த அட்டைப் படக் கட்டுரையை வெளியிடுகிறது.

என்வழி ஸ்பெஷல்
25 thoughts on “சபாஷ்..சரியான போட்டி… டைமுக்கு அவுட்லுக்கின் பதிலடி!

 1. enkaruthu

  ஒபாமா அண்ணே முதலில் அடுத்த நாட்டை பற்றியும் அங்கே இருக்கும் வளங்களை எப்படி கொள்ளை அடிக்கலாம் என்ற நினைப்பை ஒதிக்கிவிட்டு தன் நாட்டை மேம்படுத்த என்ன செய்யலாம் என்று யோசியுங்கள்.

  இந்த இந்திய நாடு ஆரம்பத்திலிருந்தே உங்களை போல கோட் சூட் போட்டு அடுத்தவர் உழைப்பில் வாழ்ந்த நாடு அல்ல.ஏழை நாடு அதனால்தான் இந்த நாட்டிற்கு பிடித்த சாபக்கேடான இன்றைய அரசியல்வாதிகளின் ஊழலளால் நாடு பின்னோக்கி சென்றாலும் இந்த நாடு உங்களை போல தொப்புன்னு கீழே விழுந்ததும் இல்லை டக்குன்னு மேலே போனதும் இல்லை.எங்கள் நாட்டு மக்களும் அதுவும் தமிழ்நாட்டு மக்கள் வாழ்வின் நெளிவு சுளுவுகளை கற்றவர்கள்.காசு இருந்தால் சரவணபவன் காசு இல்லையென்றால் கையேந்தி பவன் என்று வாழ் கற்றுகொண்டவர்கள்.அதனால் உங்கள் மக்களை முழுநேர உழைப்பாளிகளா மாற்றுங்கள்.இது செய்யாவிடின் நீங்கள் என்னதான் புலம்பினாலும் அந்த புலம்பல் உங்களின் அரசியலுக்கு உதவுமே தவிர நாட்டை மேம்படுத்த உதவாது.

 2. anbudan ravi

  இரண்டுமே உண்மைதான்….ஒருத்தர் வாய் திறக்க முடியாமலே ஆட்சி செய்கிறார்….செயலிலும் ஒன்றும் இல்லை…..இன்னொருத்தர் வாய் பேசியே கொன்று செயலில் பூஜ்யமாக இருக்கிறார்….இதில் பதில் அடிக்கு ஒன்றும் இல்லை…தெரிந்ததுதான்.

  அன்புடன் ரவி.

 3. venkatesan

  பாஸ் நீங்க என்ன maximum காங்கிரஸ் பார்ட்டி கு favour ஆ articles போடறிங்க……u டோன்ட் லைக் பிஜேபி?

 4. தேவராஜன்

  அரசியல் புரிந்தவர்கள், தெரிந்தவர்கள் பாஜகவை ஆதரிக்க மாட்டார்கள். அந்த பயம் பாஜகவுக்கு வந்து 8 ஆண்டுகள் ஆகிவிட்டன.

 5. chozan

  கருத்து வேறுபாடுகள் ஆட்சியின் மீதும் பிரதமர் மீதும் கோபம் இருக்கலாம் அதற்காக நமது பிரதமரை மாற்றான் அவதூறுகளை ஏற்கமுடியாது.

 6. மிஸ்டர் பாவலன்

  துக்ளக் சோ அவர்கள் Time பத்திரிக்கையின் தலையங்கத்தைப்
  பாராட்டி எழுதி இருக்கிறார். அது பற்றி நண்பர்கள் கருத்து என்ன?

  -=== மிஸ்டர் பாவலன் ===-

 7. Manoharan

  முதலில் மன்மோகன் அமெரிக்காவிடம் பிச்சை எடுப்பதை நிறுத்தட்டும். இந்த கட்டுரை வடிவேல் காமெடி போல்தான்.

  நீ அண்டர் அக்சீவரா …
  என்ன அண்டர் அக்சீவரா…?
  நீ முதலில் இருந்து ஆரம்பி…
  என்ன முதலில் இருந்து ஆரம்பி…?
  நீ எதையும் சாதிக்கவில்லை..
  என்ன எதையும் சாதிக்கவில்லை…?
  நீ இன்னும் சந்தையை தாராளமாக்கவில்லை…
  என்ன இன்னும் தாராளமாக்கவில்லை…?

  அவுட்லுக் ஒரு வடிவேல் காமெடி…

 8. குமரன்

  மனோகரன்

  தூள்.
  எப்படியெல்லாம் யோசிக்கிறீர்கள்!
  ஆழ்ந்து யோசித்தால் இது காமெடிதான்.

  முதல் எடுப்பில், எனக்குத் தோன்றியது இந்தியப் பிரதமரை அமெரிக்க பத்திரிக்கை இப்படி குறைத்து எழுதினால் இந்தியப்பத்திரிகை அமெரிக்க அதிபரை அதே மாதிரிக் குறைத்து எழுத முடியும் என்று சோனியா காங்கிரஸ் அமெரிக்க அரசுக்கு விடுக்கும் எச்சரிக்கையாகவே பட்டது. அந்தவிதத்தில் இது சரியே என்றும் பட்டது.

  ஆனால், சொன்னதையே திருப்பிச் சொன்னால், நமது வெற்றி நிச்சயமாகி விடுமா? ஒரு பத்திரிகையின் அலசலை, அல்லது விமரிசனத்தை எடுத்து அதில் உள்ள கருத்துக்களை ஆய்ந்து குறைகளைக் களைய முயல்வதே ஆக்க பூர்வமான நடவடிக்கை ஆகும்

  பா.ஜ. க. என்னதான் இதை எடுத்து பேசினாலும், அரசு ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை எடுத்தால் பா.ஜ.கவின் பிரசாரம் முறிந்து போய் விடுமே?

  ஆனால் அப்படிச் செய்ய சோனியா காங்கிரசின் வரட்டு ஜம்பம் இடம் கொடுக்க வில்லை. சோனியா காங்கிரசுக்கு அரசியல் செய்வதில் இருக்கும் நாட்டம் மக்கள் நலனிலோ தேச நலனிலோ இல்லவே இல்லை என்பது தெளிவு.

 9. மிஸ்டர் பாவலன்

  நண்பர் அமானுல்லாவின் (Dubai,ஐக்கிய அரபு நாடுகள்) பாராட்டு:

  “மன்மோகன் நல்ல டீம் பிளேயர் மட்டுமல்ல. இயக்குனர் ஷங்கர் இயக்கிய
  சமீபத்தில் வெளியான ஒரு சூப்பர் ஹிட் படத்தின் (Robot) கதை கருவிற்கு மன்மோகன் தான் ரோல் மாடலும் கூட. அந்த விதத்தில் சினிமா துறைக்கும்
  அவர் நன்றாக பயன்படுகிறார்…”

  -=== மிஸ்டர் பாவலன் ===-

 10. Krishna

  //துக்ளக் சோ அவர்கள் Time பத்திரிக்கையின் தலையங்கத்தைப்
  பாராட்டி எழுதி இருக்கிறார். அது பற்றி நண்பர்கள் கருத்து என்ன? – பாவலன்//

  பாவலன் அவர்களே, துக்ளக் சோ டைம் பத்திரிகையின் தலையங்கத்தை பாராட்டி எழுதவில்லை. நான் அந்த தலையங்கத்தை பார்த்த வரையிலும் டைம் பத்திரிகையின் கருத்தை எந்த இடத்திலும் நியாயப்படுத்தவில்லை. அவர்களுக்கு அப்படி எழுத உரிமை இருக்கிறது என்று தான் சொல்லியிருக்கிறார். நம் நாட்டிலேயே ஆங்கில மற்றும் பிராந்திய ஏடுகள் ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன், ஒபாமா பற்றி நிறைய கட்டுரைகள் எழுதியிருக்கின்றன. அது போல் டைம் பத்திரிகைக்கும் உரிமை இருக்கிறது என்று தான் எழுதியிருக்கிறார். இது நிச்சயம் டைம் பத்திரிகையை பாராட்டுவது ஆகாது.

 11. Krishna

  //டைம் இதழின் கட்டுரைக்குப் பின்னணி, அமெரிக்காவின் சாட்டைக்கேற்ப இந்தியா ஆடவில்லை என்பதுதான். அதை உறுதிப்படுத்துவது போல, அதிபர் ஒபாமா கடந்த வாரம் பேசுகையில், “இந்தியா இன்னும் பல சீர்திருத்தங்களை மேற்கொள்ளவில்லை. சந்தைகளை இன்னும் தாராளமாக்கவில்லை” என்று குறிப்பிட்டிருந்தார்.//

  உண்மை தான். இன்று அமெரிக்க பொருளாதாரம் மோசமாக இருக்கும் சூழ்நிலையில் வால்மார்ட் போன்ற வணிக நிறுவனங்களை இந்தியாவில் புகுத்த அமெரிககா desperate ஆக இருக்கிறது. வால்மார்ட் ஏற்கனவே அமெரிக்காவில் மற்ற நிறுவனங்களை கபளீகரம் செய்து விட்டது. அவற்றை எக்காரணம் கொண்டும் இந்தியாவில் அனுமதிக்க கூடாது. அப்படி அனுமதித்தால் தள்ளு வண்டியில் காய்கறி விற்பவர்களிளிருந்து பல சரக்கு கடை வைத்திருக்கும் நடுத்தர வியாபாரிகள் வரையிலும் தலையில் துண்டு போட்டு கொள்ள வேண்டியது தான். மொத்தத்தில் டைம் பத்திரிகையின் விமரிசனத்தில் எந்த விவகாரங்களில் மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டதோ, அதை பற்றி ஒரு வார்த்தையும் இல்லை. அதை பற்றி அவர்களுக்கு அக்கறை இருக்க நியாயமும் இல்லை. ஒரு வேளை மன்மோகன் சிங் அவர்களுக்கு தலை ஆட்டி பொம்மையாக இருந்திருந்தால், அவர் இதை விட மோசமாக ஆட்சி நடத்தியிருந்தால் கூட பாராட்டி இருப்பார்கள்.

  எனவே டைம் பத்திரிகையின் கருத்தை புறம் தள்ளுவது தான் சரியாக இருக்கும்.

 12. enkaruthu

  //கருத்து வேறுபாடுகள் ஆட்சியின் மீதும் பிரதமர் மீதும் கோபம் இருக்கலாம் அதற்காக நமது பிரதமரை மாற்றான் அவதூறுகளை ஏற்கமுடியாது.//
  நல்ல பதில் .வெள்ளையர் காலத்திலையே நாட்டு சுதந்திதற்காக உழைத்த அண்ணல் காந்தி அவர்களை , வெள்ளைக்காரன் ஆட்சியில் அவன் சொல்படி கேட்டு விட்டு சுதந்திரம் என்று வந்தவுடன் அவரை கொன்று பதவிக்காக அலைந்தவர்காள்தான் இந்த rss காரர்கள் என்பது நாடு அறியும்.

  நான் கேட்கிறேன் நண்பர்களே இவர்கள் சொல்வது போல ராமன் சாமி அவர்கள் இந்த உலகத்தை படைத்தவர் என்றால் அப்படிப்பட்ட உலகத்தை படைத்த ராமர் அவர்கள் அயோத்தியில் எனக்கு கட்டாயம் கோவில் கட்டவேண்டும் என்று சில்றைதனமாக சொல்வாரா.இந்த ராமர் அயோத்தி கோவிலில் நடந்த விஷயம் அனைத்தும் பித்தலாட்டம் .இந்த உலகத்துக்கே சொந்தகாரர் ராமர் எனும்பொழுது இந்த அயோத்திக்கு மட்டும் அவர் சொந்தம் கொண்டாடுவாரா.இதிலிருந்தே தெரிகிறதே இந்த கடவுளை வைத்து இவர்கள் பண்ணும் பித்தலாட்டம்.

 13. மிஸ்டர் பாவலன்

  //பாவலன் அவர்களே, துக்ளக் சோ டைம் பத்திரிகையின் தலையங்கத்தை பாராட்டி எழுதவில்லை. நான் அந்த தலையங்கத்தை பார்த்த வரையிலும் டைம் பத்திரிகையின் கருத்தை எந்த இடத்திலும் நியாயப்படுத்தவில்லை. // (கிருஷ்ணன்)

  நாம் இருவரும் ஒரே தலையங்கத்தை தான் படித்தாமா என ஒரு சந்தேகமே வந்து விட்டது!

  நான் சோவின் முழு தலையங்கத்தையும் தட்டச்சு செய்யாமல் அதில் உள்ள சில பகுதிகளைத் தருகிறேன்.

  “ஒபாமா பற்றி விமர்சிக்க நமக்குள்ள உரிமை, நமது பிரதமரைப் பற்றி விமர்சிக்க அமெரிக்கப் பத்திரிகைக்குக்
  கிடையாது என்பது சரியா பிதற்றல்” (சோ)

  “நமது பிரதமரைப் பற்றி ‘டைம்’ சொல்லித் தானா நாம் தெரிந்து கொள்ள வேண்டும்? ” (சோ)

  “‘அட, என்ன தான் சொன்னாலும், நமது சரக்கை வெளிநாட்டவர் புகழ்கிற பொது நமக்கு ஒரு குஷி வரத்தானே செய்கிறது?’ என்று கேட்கலாம். பாரதியார் கூட ‘மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதில் ஓர் மகிமை இல்லை; திறமான புலமை எனில் வெளிநாட்டவர் அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்’ என்று கூறி இருக்கிறாரே!” (சோ)

  “அப்படிப் பார்த்தால் இத்தனை நாள் நமக்குள்ளே பிரதமரைப் பற்றிப் பழங்கதைகள் சொல்லி நாம் மகிழ்ந்ததை விட, இப்போது செயலின்மையில் அவருடைய திறமையான புலமையை வெளிநாட்டவர் அட்டைப் படத்தில் போட்டு வணக்கம் செய்வது கண்டு நாம் மகிழ்வோமாக!” (சோ)

  -=== மிஸ்டர் பாவலன் ===-

 14. Ganesh Shankar

  //வெள்ளைக்காரன் ஆட்சியில் அவன் சொல்படி கேட்டு விட்டு சுதந்திரம் என்று வந்தவுடன் அவரை கொன்று பதவிக்காக அலைந்தவர்காள்தான் இந்த rss காரர்கள் என்பது நாடு அறியும்.//(என்கருத்து)

  இது ஏதோ அவதூறாக பரப்பிவிடபட்டது.
  முதலில் நானும் அவ்வாறு தான் நினைத்தேன்.
  ஆனால்,அது அவ்வாறு இல்லை.
  இது வரை,இது அவதூறு தானே ஒழியே,இதில் உண்மை இல்லை.

 15. குமரன்

  ///இவர்கள் சொல்வது போல ராமன் சாமி அவர்கள் இந்த உலகத்தை படைத்தவர் என்றால் அப்படிப்பட்ட உலகத்தை படைத்த ராமர் அவர்கள் அயோத்தியில் எனக்கு கட்டாயம் கோவில் கட்டவேண்டும் என்று சில்றைதனமாக சொல்வாரா.///

  என்கருத்து அவர்களே!

  இறை அவதாரமாகிய ஸ்ரீ ராமர் உலகைப் படைத்ததாக இந்து மதம் சொல்லவில்லை.
  தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்து உலகைப் படைத்ததாக கிறிஸ்தவ மதம் சொல்லவில்லை.
  இறைதூதராகிய முகமது நபி உலகைப் படைத்ததாக இஸ்லாமிய மதம் சொல்லவில்லை.

  விவரம் அறியாமல் எதையாவது சொல்லித் திட்ட வேண்டும் என்ற எண்ணத்துடனேயே இருக்கிறீர்களே! கொஞ்சம் வெளியே வாருங்கள். திறந்த/ பரந்த மனத்துடன் அனைவரையும் அணுகுங்கள், இது எனது பணிவான அன்புக் கோரிக்கை, வேண்டுகோள்.

 16. enkaruthu

  குமரன் அவர்களே நான் rss பற்றி பேசியதால்தான் ராமரை இழுத்தேன்.நான் சொல்லவருவது என்னவென்று சின்ன பிள்ளைகளுக்கு கூட புரியும்.உங்களை போன்ற அறிவாளிகளுக்கும் இது புரியும் . சரி நீங்கள்தான் எப்பொழுதுமே நான் சொல்ல வரும் விஷயத்தை விட்டு விட்டு வேறு ஒரு விஷயத்தை பேசுவதுதான் உங்களை போன்றோர்களின் வழக்கம் ஆயிற்றே.நான் ராமர் பெயரில் இந்த rss அமைப்பில் உள்ளவர்கள் அடிக்கும் கூற்றைத்தான் சொன்னேன்.இங்கே ராமர் உலகத்தை படைத்தாரா அல்லது வேறு ஒருவர் படைத்தாரா என்பதல்ல என் வாதம்.

  குமரன் அவர்களே என் கேள்வி இதுதான் சரி அவதார புருஷர்,நேசம் மிக்கவர் என்று சொல்லப்படும் ராமர் பாபர் கோவிலை இடிக்கும்பொழுதும் அந்த செயலால் நடந்த கலவரத்தில் மக்கள் சாவதை பார்த்தும் அவர் கைகொட்டி சிரிதிருப்பாரா.வெட்க பட்டிருப்பார்.இந்த பாபர் மசூதி இடிப்பிற்கு பின்புதான் அக்கம் பக்கத்தில் முன்பு பாசமாக பேசிகொண்டிருந்த முஸ்லிம் மற்றும் ஹிந்து மக்களும் கொஞ்சம் விலகி சென்றாகள்.

  //விவரம் அறியாமல் எதையாவது சொல்லித் திட்ட வேண்டும் என்ற எண்ணத்துடனேயே இருக்கிறீர்களே! கொஞ்சம் வெளியே வாருங்கள். திறந்த/ பரந்த மனத்துடன் அனைவரையும் அணுகுங்கள், இது எனது பணிவான அன்புக் கோரிக்கை, வேண்டுகோள்//

  நாங்கள் விவரமாக இருப்பதுதான் உங்களுக்கு பிரச்சினை என்பது எங்களுக்கு தெரியும்.
  //எதையாவது சொல்லித் திட்ட வேண்டும் என்ற எண்ணத்துடனேயே இருக்கிறீர்களே! கொஞ்சம் வெளியே வாருங்கள். திறந்த/ பரந்த மனத்துடன் அனைவரையும் அணுகுங்கள், இது எனது பணிவான அன்புக் கோரிக்கை, வேண்டுகோள்////

  இந்த வரிகளை இங்கே ஜெயலலிதா என்றவுடனே கருணாநிதியை திட்டும் ஜெயலலிதா என்று புகழ் பாடுபவர்களுக்கு இந்த வரிகளை dedicate செய்கிறேன்.

 17. Krishna

  //“அப்படிப் பார்த்தால் இத்தனை நாள் நமக்குள்ளே பிரதமரைப் பற்றிப் பழங்கதைகள் சொல்லி நாம் மகிழ்ந்ததை விட, இப்போது செயலின்மையில் அவருடைய திறமையான புலமையை வெளிநாட்டவர் அட்டைப் படத்தில் போட்டு வணக்கம் செய்வது கண்டு நாம் மகிழ்வோமாக!” (சோ)//

  பாவலன் அவர்களே, இந்த வார்த்தைகள் நக்கலால் சொல்லப்பட்டது என்பது என் தாழ்மையான கருத்து. இதை வஞ்ச புகழ்ச்சி என்றும் சொல்லலாம்.

 18. Krishna

  //இது ஏதோ அவதூறாக பரப்பிவிடபட்டது.
  முதலில் நானும் அவ்வாறு தான் நினைத்தேன்.
  ஆனால்,அது அவ்வாறு இல்லை.
  இது வரை,இது அவதூறு தானே ஒழியே,இதில் உண்மை இல்லை.//

  கணேஷ் ஷங்கர் அவர்களே, நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.

  RSS என்பது 1925-களில் இந்து மகா சபா என்ற அமைப்பிலிருந்து பிரிந்தது. இந்து மகா சபா அமைப்புடன் கருத்து வேறுபாடுகள் இருந்ததால், சில தலைவர்கள் அங்கிருந்து வெளியே வந்து RSS அமைப்பை உருவாக்கினார்கள். நாதுராம் கோட்சே இந்து மகா சபாவிலேயே தொடர்ந்தார். அவர் RSS-ல் சேரவே இல்லை. அதுவும் நம் நாட்டுக்கு சுதந்திரம் கிடைப்பதற்கு இரு ஆண்டுகளுக்கு முன்னரே அவர் அதிலிருந்து விலகி விட்டார். அவரது செய்கைகள் சிலவற்றை சகிக்க முடியாததால் இந்து மகா சபா அவரை விலகுமாறு பணித்தது. அவர் மகாத்மா காந்தியை சுட்ட போது எந்த அமைப்பிலும் உறுப்பினராக இல்லை. இது எப்படி தெரிந்தது எனில், அவர் கைது செய்யப்பட்டபோது அவருக்கு வேறு தனி நபரோ அல்லது ஏதேனும் அமைப்போ உடந்தையாக இருந்ததா என்ற கோணத்தில் இந்திய அரசு விசாரணையை முடுக்கி விட்டது. இந்த விசாரணையில் குறிப்பிட்ட சில நபர்கள் (கோட்சேயின் நண்பர்கள்) மீது சந்தேகம் விழுந்தது. ஆனால் விசாரணையில் காந்தி சுடப்பட்ட சமயத்தில் கோட்சே எந்த ஒரு அமைப்பிலும் உறுப்பினராக இல்லை என்று தெரிய வந்தது. காந்தி சுடப்பட்டவுடன் சந்தேகத்தின் பெயரில் தடை செய்யப்பட்ட RSS, விசாரணையின் முடிவில் அவர்களுக்கு இதில் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிய வந்ததால் ஜவஹர்லால் நேரு அரசால் தடை நீக்கப்பட்டது.

 19. enkaruthu

  கிருஷ்ணா அவர்களே
  இங்கு நான் எழுப்பும் கேள்வியே பாபர் மசூதியை rss காரர்கள் இடித்தது சரியா அல்லது தவறா என்பதும் தனக்காக கலவரம் பண்ணி தனக்கு கோவில் கட்டுபவரை ராமர் ஆதரிப்பது போல் இந்த rss கூட்டம் அவரை ஒரு அரசியல்வாதி (இவர்தான் தனக்காக கலவரம் நடப்பதை பார்த்து சந்தோசபடுவார்) போல சித்தரிப்பது சரியா என்பதுதான்.

 20. மிஸ்டர் பாவலன்

  இனிய நண்பர்கள் கிருஷ்ணன், கணேஷ் ஷங்கர், குமரன் அவர்களே:

  நான் உங்கள் அளவிற்கு ஆங்கில நாளேடுகள் படிப்பதில்லை என்றாலும்
  கல்லூரி நாள்களில் நூல்கள் நிறைய படித்திருக்கிறேன். அதில் ஒரு
  முக்கியமான நூல் “Freedom at Midnight” என்ற non-fiction நூல் ஐரோப்பிய
  நூலாசிரியர்கள் Larry Collins, Dominique Lapierre எழுதியது. இதை நீங்கள்
  படித்தால் பல புதிய தகவல்கள் கிடைக்கும். நன்றி.

  -=== மிஸ்டர் பாவலன் ===-

 21. Krishna

  //கிருஷ்ணா அவர்களே
  இங்கு நான் எழுப்பும் கேள்வியே பாபர் மசூதியை rss காரர்கள் இடித்தது சரியா அல்லது தவறா என்பதும் தனக்காக கலவரம் பண்ணி தனக்கு கோவில் கட்டுபவரை ராமர் ஆதரிப்பது போல் இந்த rss கூட்டம் அவரை ஒரு அரசியல்வாதி (இவர்தான் தனக்காக கலவரம் நடப்பதை பார்த்து சந்தோசபடுவார்) போல சித்தரிப்பது சரியா என்பதுதான்.//

  நீங்கள் மகாத்மா காந்தி கொலையில் RSS சம்பந்தப்பட்டிருப்பது பற்றி சொன்னதற்கு ஆதரங்களுடன் மறுப்பு தெரிவித்தேன். காந்தி கொலை வழக்கிற்கும் பாபர் மசூதி இடிப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பாபர் மசூதி இடிக்கப்பட்டவுடன் நரசிம்ம ராவ் அரசு RSS இயக்கத்தை மீண்டும் தடை செய்தது. ஆனால் ஒன்றரை ஆண்டுகளில் உச்ச நீதி மன்றம் தடை உத்தரவை தள்ளுபடி செய்துவிட்டது. RSS இயக்கத்துக்கும் பாபர் மசூதி இடிப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தீர்ப்பு சொல்லிவிட்டது. மார்ச் 1994 ஆண்டில் இந்த தீர்ப்பு வெளியானது என்று நினைக்கிறேன். (மாதம் செரியாக நினைவு இல்லை, ஆனால் ஆண்டு 1994 தான்)

  இப்போதெல்லாம் பாஜகவுக்கு ராமர் தேவைப்படவில்லை. அவர்களுக்கு ரெட்டியும் எட்டியும்(எடியூரப்பா) போதும். அவர்கள் ராமர் கோவில் விவகாரத்தை எப்பொழுதோ தூக்கி எறிந்து விட்டார்கள். சில மாதங்களுக்கு முன் நடந்த உபி சட்டசபை தேர்தலில் கூட ராமர் கோவில் கட்டுவோம் என்றெல்லாம் பிரச்சாரம் செய்யவே இல்லை. அவர்கள் தூக்கி போட்ட ராமர் கோவில் விவகாரத்தை இப்பொழுது எல்லோரும் மறந்து விட்டார்கள் அவர்கள் உட்பட.

 22. மிஸ்டர் பாவலன்

  குமரனும், கிருஷ்ணனும் கோர்ட்டில் வக்கீல்களாக
  மோதிக் கொண்டால் கனல் பறக்கும். அறிவார்ந்த
  வாதமாகவும் இருக்கும். ஜட்ஜாக துக்ளக் சோ
  அமர்ந்தால் இன்னும் சூப்பராக இருக்கும்!

  -=== மிஸ்டர் பாவலன் ===-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *