BREAKING NEWS
Search

ரஜினி பற்றி சுப்பிரமணிய சாமியின் விமர்சனம் குறித்து? – கேள்வி பதில் -27

ரஜினி பற்றி சுப்பிரமணிய சாமியின் விமர்சனம் குறித்து? – கேள்வி பதில் -27

கேள்வி: வினோ,

இந்த வார ஆனந்த விகடன் இதழில் விகடன் மேடை பகுதியில் சுப்பிரமணிய சாமி ஒரு வாசகரின் கேள்விக்கு பதிலளிக்கும் போது ரஜினி, ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி என்று சொல்வதெல்லாம் சினிமாவில் மட்டும்தான் நிஜத்தில் அப்படியில்லை என்பதாக சொல்லியிருக்கிறார்.

இதற்கு தங்கள் பதில் என்ன ?

ஆர்வி சரவணன்

பதில்: அந்தப் பகுதியைப் படிக்கும்போதே நினைத்தேன், இப்படியொரு கேள்வி வரும் என்று. சுப்பிரமணியன் சுவாமியை நிறையபேர் காமெடி பீஸாகத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்… அதுவல்ல உண்மை. ‘அவர் மிகப் பெரிய அறிவாளி என்ற போர்வையில் நடமாடும் மோசடிப் பேர்வழி…’ என்பது அரசியல் மட்டத்தில் கிட்டத்தட்ட உறுதிப்படுத்தப்பட்ட ஒன்று.

இந்தியாவில் ‘இவாளைத்’ தவிர, ஒரு வாலுக்கும் ஒன்றும் தெரியாது என்பது அவர் நினைப்பு. அவரைத் தவிர ‘மத்தவா’ எல்லாம் மக்குகள்!

இந்தப் பேர்வழி குறிப்பிடுகிற, காலகட்டத்தில் அரசியல் நிருபராக பணியாற்றியிருக்கிறேன். அதுவும் நான் பார்த்தது, ரஜினி, திமுக மற்றும் தாமக ‘பீட்’. இவர் சொல்வதைப் போல, இவரை மையமாக வைத்து எதுவும் அன்று நடக்கவில்லை. இவர்தான் கோமாளி மாதிரி திமுக அலுவலகத்துக்கும் மூப்பனார் வீட்டுக்கும் நடையாய் நடப்பார்.

இவர் செய்ததெல்லாம், தான் ‘இருப்பதை’ உறுதி செய்ய தினமும் ஒரு பிரஸ் மீட் கூட்டுவார். ‘நேத்து கூட பிஎம் கிட்ட பேசினேன்… இதோ அவாதான் லைன்ல இருக்கா… இப்ப நான் உடனே டெல்லி போயாகணும்… இல்லன்னா ஆட்சியே அம்போன்னு கவுந்துடுமாம்,’ என்று, சூரியன் பட கவுண்டமணி ரேஞ்சுக்கு இவர் அவிழ்த்துவிட, பக்கத்திலேயே ‘செட் ப்ராபர்ட்டி’ மாதிரி அமர்ந்திருக்கும் சந்திரலேகா, ‘போன் ஒயர் பிஞ்சி ஒரு வாரமாச்சு’ என்று வெளியில் சொல்லாத குறையாக மையமாக சிரித்து வைப்பார்.

அன்று ரஜினி போய் யாரிடமும் ‘ஜெயலலிதாவை எப்படியாவது ஆட்சியிலிருந்து இறக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டிருக்கவில்லை. ஜெயலலிதாவை வீழ்த்த ரஜினி ஒருவரால்தான் முடியும்… அப்படி வீழ்த்தினால் ரஜினிதான் அடுத்த முதல்வர் என்று மூப்பனார் போன்ற பெருந்தலைவர்களே பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்த காலகட்டத்தில், ரஜினி தன்னிடம் ஆலோசனை நடத்தியதாக ‘இது புளுகுகிறது’!

தமிழகத்தில் மட்டுமல்ல, டெல்லி அரசியலிலும் கூட ‘சுப்பிரமணிய சாமி = நம்பகத்தன்மையற்றவர்’ என்ற அக்மார்க் முத்திரை விழுந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. 2 ஜி வழக்கைப் போட்டுவிட்டு, அதை வாபஸ் பெற அவர் வைத்த நிபந்தனைகளும், ஒரு கட்டத்தில் அவரே நினைத்தாலும் அது முடியாமல் போக, புலிவால் பிடித்த நாயர் கதையாகிவிட்டதும் தனி கட்டுரைக்கான சமாச்சாரம். அவருக்குத் தேவை ஒரே ஒரு எம்பி பதவி. அதற்கான வாய்ப்பை நாளை காங்கிரஸே கொடுத்தாலும், பல்டியடித்து விழுந்து கும்பிட்டு ஏற்றுக் கொள்வார். உடனே, ‘இதெல்லாம் சும்மா… சிபிஐ ஜட்ஜ் சரியில்லே. சுப்ரீம் கோர்ட்ல இருக்கறவா சோனியா மூலம் சில சலுகைகள் கேட்டா… அது கிடைக்காததால 2 ஜி கேஸை அவாளே ஸ்ட்ராங் பண்ணிண்டுட்டா…’ என்று தோசையைத் திருப்பிப் போடவும் தயங்கமாட்டார்!

இவர் சொல்வதையெல்லாம் சீரியஸாக கேட்கிறீர்களே…

குறிப்பு: செய்தியாளர் சந்திப்புகளில் சு சாமி பேசும் முறையைக் குறிப்பிடவே இங்கு சில வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது!

-வினோ
12 thoughts on “ரஜினி பற்றி சுப்பிரமணிய சாமியின் விமர்சனம் குறித்து? – கேள்வி பதில் -27

 1. மு. செந்தில் குமார்

  ஆஹா சூப்பர் பதில்.

 2. r.v.saravanan

  எனது கேள்விக்கு பதில் தந்தமைக்கு நன்றி வினோ

  நான் எனது கேள்வியில் தங்கள் பதிலடி என்ன என்று குறிப்பிட்டிருக்க வேண்டும் ஆனால் கொஞ்சம் அவசரத்தில் தங்கள் பதில் என்ன என்று கேட்டு விட்டேன்

  இருந்தாலும் அதிரடியாய் பதிலடி தந்தமைக்கு நன்றி

 3. vasagan

  ரஜினியை பற்றி ஒருவர் விமர்சனம் செய்தால் அவர் கேட்டவர் ஆனால் புகழ்ந்தால் அவர் நல்லவரா?. வாழ்க ஜனநாயகம்.
  _____
  ரஜினியைப் பற்றி சுப்பிரமணிய சாமி நாளெல்லாம் புகழ்ந்தாலும் அதை ஒரு பொருட்டாக நாம் எடுத்துக் கொண்டதே இல்லை. சாமியின் சாயம் வெளுத்து ரொம்ப வருஷங்களாச்சு.. வாழ்க ஜனநாயகம்!

  -வினோ

 4. kabilan

  இதே சு சாமி இரண்டு மதங்களுக்கு முன்னர் ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில்.நிருபர்: நீங்கள் கடிசியாக பார்த்த படம் என்ன ?
  சு சாமி:எனது நண்பர் ரஜினிகாந்தின் பாபாவின் preview showku கூபிட்டு இருந்தார் ,அது தான் நான் கடைசியாய் பார்த்த படம் என்று கூறி இருந்தார் .இவனெல்லாம் என்ன வென்று சொல்வது .திருநெல்வேலி படத்துல கிண்டல் பண்ணியும் திருந்தாத ஜென்மம் இது

 5. shamalan pillai

  im a thalaivar fan. and i really very very upset with thalaivar. reason is he cheat his fans in 2008 that he will decide about political carrier after endhiran. the reason behind swami critics thalaivar is, his silent over political carrier over long time.. look his statement in right way!!! dont try to found out wrong in him!!!!

 6. Manoharan

  சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இந்த ஆள் ஒரு காமெடியன்தான். காமெடி வில்லன்.

 7. Dinesh Murugesan

  // ரஜினி தன்னிடம் ஆலோசனை நடத்தியதாக ‘இது புளுகுகிறது’!//
  //இது புளுகுகிறது //
  //இது புளுகுகிறது //
  //இது புளுகுகிறது//
  ஹி ஹி ஹி ………… சூப்பர் அப்பு ….

 8. V. Narendra Kumar

  சுவாமி சொல்வதில் உண்மை இருக்கலாம். அதனால் தான் இன்று வரை கருணாநிதியையோ, அழகிரியயோ, குடும்ப அரசியலையோ, சினிமா துறையை குத்தகை எடுத்ததையோ, ரஜினி விமர்சிக்கவில்லை. தனி ஒருவராக இருந்து கருணாநிதியின் ஊழல், குடும்ப அரசியலை, எதிர்ப்பதில் சுவாமிக்கு இருக்கும் தைரியம் கூட ஆயிரக்கணக்கான ரசிகர்களை கொண்டதாக சொல்லும் ரஜினிக்கு இல்லை என்பதே நிஜம்.

 9. suresh

  ரஜினி அவர்கள் மிக மிக நல்ல மனிதர் நல்ல மனிதராகவே இருக்க விடுங்க ப்ளீஸ் … அரசியலில் இறங்கி நாட்டுக்கு சேவை செய்வது என்பது முடியாத ஒன்று இன்றைய காலகட்டத்தில் ….. ரஜினி அவர்கள் இந்திய நாட்டின் சிறப்பு மிக்க மனிதர்களில் ஒருவராகவும் மற்றும் மனித நேய மிக்க மனிதராகவும் எல்லாராலும் ஏற்று கொள்ளபட்டவராக வாழ்ந்து கொண்டு இருக்கிறார் …

 10. suresh

  சுப்ரமணிய சுவாமி மற்றும் பல அல்லக்கைகல் கேட்டு தலைவர் அரசியலுக்கு வர மாட்டார் எதனால் என்றல் தலைவர் அவர்கள் சுய புத்தி உள்ளவர் ….

 11. siva

  கேட்ட கேள்விக்கு உங்களிடமிருந்து பதில் இல்லையே.
  ஒரு தடவை சொன்னா நூறு தடவை மாதிரி என்பது நிஜத்திலும் உண்டா? ஆம் இல்லை என்று பதில் சொல்லாமல் சாமியை இழிவு படுத்துவதில் இறங்கியிருக்கிறீர்களே, இதுத்தான் ரஜினி ஸ்டைலா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *