BREAKING NEWS
Search

த ஆர்டிஸ்ட், ஹ்யூகோ படங்களுக்கு தலா 5 ஆஸ்கர் – சிறந்த நடிகர் டுஜார்டின்; நடிகை மெரில் ஸ்ட்ரீப்!

த ஆர்டிஸ்ட், ஹ்யூகோ படங்களுக்கு தலா 5 ஆஸ்கர் – சிறந்த நடிகர் டுஜார்டின்; நடிகை மெரில் ஸ்ட்ரீப்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. சிறந்த நடிகருக்கான விருது டுஜார்டினுக்கும், நடிகைக்கான விருது மெரில் ஸ்ட்ரீப்புக்கும் கிடைத்தன.

த ஆர்டிஸ்ட், ஹ்யூகோ படங்கள் அதிகபட்சமாக தலா 5 விருதுகளை வென்றன.

84 வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்சலில் நடைபெற்றது.

‘அயர்ன் லேடி’ படத்தில் முன்னாள் பிரிட்டன் பிரதமராக நடித்த மெரில் ஸ்ட்ரீப் சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. இது இவர் பெறும் 3வது ஆஸ்கர் விருதாகும்.

இதற்கு முன் க்ராமர் Vs கிராமர் (1979), சோபிஸ் சாய்ஸ் (1982) ஆகிய படங்களுக்கும் இவர் ஆஸ்கர் விருது பெற்றுள்ளார். இதுவரை 17 முறை ஆஸ்கர் விருதுக்கு இவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊமைப் படமான ‘த ஆர்டிஸ்ட்’ படம் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் இயக்குனர் மைக்கல் ஹசானாவிகஸ் சிறந்த டைரக்டருக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளார். கருப்பு வெள்ளைப் படமான இந்தப் படம் ஏற்கனவே பல உலக விருதுகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

‘த ஆர்டிஸ்ட்’ படத்தில் நடித்த ஜீன் டுஜார்டின்னுக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது. இந்தப் படத்தின் இசை அமைப்பாளர் லுடோவிக் பெளர்சும் ஆஸ்கர் வென்றுள்ளார். மொத்தத்தில் இந்தப் படம் 5 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது.

சிறந்த டாகுமெண்டரி படத்துக்கான விருது டேனியன் ஜுங்கே மற்றும் ஷர்மீன் ஒபைத் சினோய் ஆகியோரின் ‘சேவிங் பேஸ்’ படத்துக்குக் கிடைத்துள்ளது. பாகிஸ்தானில் பெண்கள் மீது ஆசிட் வீசி நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களை இந்தப் படம் விவரிக்கிறது.

ஜார்ஜ் க்ளூனி நடித்த ‘த டெசன்டன்ஸ்’ படத்துக்கு சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த வெளிநாட்டு படத்துக்கான விருது ஈரானின் ‘ஏ செப்பரேஷன்’ திரைப்படத்துக்கு வழங்கப்பட்டது.

மார்ட்டின் ஸ்கோர்செசயின் 3டி படமான ஹூகோவுக்கு சிறந்த சவுண்ட் எடிட்டிங், சவுண்ட் மிக்சிங், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஆர்ட் டைரக்ஷன், சிறந்த விஷூவல் எபெக்ட்ஸ் ஆகிய பிரிவுகளின் கீழ் 5 ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

ஆஸ்கர் விருது – முழுபட்டியல்:

– Best picture: The Artist.
– Best director: Michel Hazanavicius for The Artist.
– Best leading actor: Jean Dujardin in The Artist.
– Best leading actress: Meryl Streep in The Iron Lady

– Best supporting actor: Christopher Plummer in Beginners.

– Best supporting actress: Octavia Spencer in The Help.

– Best foreign language film: A Separation (Iran).

– Best animated feature: Rango.

– Best original screenplay: Midnight in Paris.

– Best adapted screenplay: The Descendants.

– Best original score: The Artist.

– Best original song: Man or Muppet from The Muppets.

– Best art direction: Hugo.

– Best cinematography: Hugo.

– Best costume design: The Artist.

– Best documentary feature: Undefeated.

– Best documentary short: Saving Face.

– Best film editing: The Girl with the Dragon Tattoo.

– Best makeup: The Iron Lady.

– Best short animated film: The Fantastic Flying Books of Mr Morris Lessmore.

– Best short live action film: The Shore.

– Best sound editing: Hugo.

– Best sound mixing: Hugo.

– Best visual effects: Hugo.

Hugo won five awards at the 84th Oscars.

Most Oscars won

The Artist – 5
Hugo – 5

The Iron Lady – 2

Beginners – 1

The Help – 1

Midnight in Paris – 1

The Descendants – 1

A Separation – 1

The Girl with the Dragon Tattoo – 1

Undefeated – 1

The following nominated films failed to win any awards:

Albert Nobbs

Harry Potter and the Deathly Hallows Part 2

Tinker Tailor Soldier Spy

Transformers: Dark of the Moon

The Tree of Life

Bridesmaids

Extremely Loud and Incredibly Close

My Week with Marilyn

-என்வழி செய்திகள்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *