BREAKING NEWS
Search

தில்லு முல்லு ரீமேக் – ஒரிஜினல் தயாரிப்பாளர் எதிர்ப்பு – பாலச்சந்தர் மகளுக்கு வக்கீல் நோட்டீஸ்

தில்லு முல்லு ரீமேக் – ஒரிஜினல் தயாரிப்பாளர் எதிர்ப்பு – பாலச்சந்தர் மகளுக்கு வக்கீல் நோட்டீஸ்

சென்னை: தில்லு முல்லு படத்தை ரீமேக் செய்ய, அந்தப் படத்தின் ஒரிஜினல் தயாரிப்பாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினி- மாதவி, தேங்காய் சீனிவாசன் நடித்து பெரும் வெற்றி பெற்ற படம் தில்லு முல்லு. இந்தப் படத்தை கே பாலச்சந்தர் இயக்கினார்.

1981-ல் வெளியான இந்தப் படத்தை ரீமேக் செய்யப் போவதாகவும், அதனை பாலச்சந்தரின் மகள் நிர்வகிக்கும் கவிதாலயா தயாரிக்கும் என்றும் சமீபத்தில் அறிவித்தனர். அந்தப் படத்தில் ரஜினி நடித்த இந்திரன்- சந்திரன் வேடங்களில், சென்னை 28-ல்  நடித்த சிவா நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, படத்தின் ஒரிஜினல் உரிமையாளரான கலாகேந்திரா மூவிஸ் உரிமையாளர் விஜயலட்சுமி, கவிதாலயாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

‘தில்லு முல்லு’ படத்தின் உரிமை எங்களிடம் உள்ளது. எங்கள் அனுமதியின்றி படத்தை ரீமேக் செய்யக்கூடாது, என்று தனது வக்கீல் ஆனந்தன் மூலம் இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளார் விஜயலட்சுமி.

ஒவ்வொரு முறை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும்போதும் பார்வயாளர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் படம் இது. டிவிடி விற்பனையிலும் இன்னும் முன்னணியில் உள்ள ரஜினி படங்களில் தில்லுமுல்லுவும் ஒன்று!

இந்தப் படம் இப்போதும் ப்ரெஷ்ஷாக இருப்பதால், அதை ரீமேக் செய்வதை ரஜினி ரசிகர்களே விரும்பவில்லை என்பதுதான் உண்மையும் கூட. வேண்டுமானால் டிஜிட்டலில் வெளியிடுங்கள் என்றே கோரி வருகின்றனர்!

ஆனால், ஏதாவது ஒரு வகையில் தன் குருநாதருக்கு உதவ முடியுமா என்பதே சூப்பர் ஸ்டாரின் மனசு என்பது ரசிகர்களுக்குப் புரியாததா!

-என்வழி செய்திகள்




3 thoughts on “தில்லு முல்லு ரீமேக் – ஒரிஜினல் தயாரிப்பாளர் எதிர்ப்பு – பாலச்சந்தர் மகளுக்கு வக்கீல் நோட்டீஸ்

  1. தேவராஜன்

    இதான் சரி.

    //ஏதாவது ஒரு வகையில் தன் குருநாதருக்கு உதவ முடியுமா என்பதே சூப்பர் ஸ்டாரின் மனசு என்பது ரசிகர்களுக்குப் புரியாததா!//

    -தலைவர் மனசப் படிச்சவர் வினோ நீங்க!

  2. மிஸ்டர் பாவலன்

    உண்மையாகவே ரஜினி-கமல் மீது கே.பி. நல்ல அபிமானம்
    வைத்திருந்தால் இந்த ரீமேக் அறிவிப்பை வெளியிட்டிருக்கவே
    கூடாது என்பது தான் என் கருத்து.

    -== மிஸ்டர் பாவலன் ===-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *