BREAKING NEWS
Search

உன்கிட்டயும் கேக்கல… என்கிட்டயும் கேக்கல.. அப்படி யார்கிட்டதான் கருத்துக் கணிச்சிருப்பாங்க?

அப்படி யார்கிட்டதான் கருத்துக் கணிச்சிருப்பாங்க?

maxresdefaultடந்த இரு வாரங்களாக இரண்டு நாட்களுக்கு ஒரு கருத்துக் கணிப்பு வீதம் நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அதுவும் இன்று மட்டுமே மூன்று!

இந்தக் கருத்துக் கணிப்பு எப்படியெல்லாம் எடுக்கப்பட்டது? யார் யாரிடம் கேட்கப்பட்டது? எந்த மாதிரி முறைகளைப் (Research Methodology) பயன்படுத்தினார்கள் என்பது குறித்து மிகச் சில கணிப்பாளர்கள் தகவலும் தந்திருந்தனர். பெரும்பாலானோர், அந்த விவரங்களெல்லாம் வாசகர்களுக்கு எதுக்கு என ‘அடித்து விட்டிருந்தனர்’.

ஆனால் இந்தக் கணிப்புகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் பெரும்பாலான மக்களுக்கு ஒரு விஷயம் விளங்கவே இல்லை.

இந்தக் கணிப்பை யாரிடம்தான் நடத்தினார்கள்? தமிழ்நாட்டு வாக்காளர்களிடம்தானா? அல்லது வேறு ஏதாவது தேசத்திலா?

ஒரு செய்தியாளனாக இல்லை… சாதாரண வாக்காளனாக நானே பல நண்பர்கள், உறவினர்கள், ஊரில் இருப்பவர்கள், தொகுதியின் மையப் பகுதியில் வசிப்பவர்கள் என பலரையும் கேட்டுவிட்டேன். உதாரணத்துக்கு ஜோலார்பேட்டை. எனது சொந்தத் தொகுதி. ஆனால் ஒருவர் கூட இப்படி ஒரு கருத்துக் கணிப்பு நடந்ததாகவோ, அப்படி யாராவது ஊருக்குள் வந்ததாகவோ சொல்லவே இல்லை!

ஆனால் பத்துக்கும் மேற்பட்ட பிரபல ஊடகங்கள், தங்கள் பிரதிநிதிகள் இந்த தொகுதிக்குள் வந்து ஒரு ஏரியாவுக்கு இத்தனைப் பேர் என்ற வீதத்தில் கருத்துக் கேட்டதாகக் கூறுகிறார்கள்.

‘உன்கிட்டயும் கேக்கல… என்கிட்டயும் கேக்கல.. அப்படி யார்கிட்டதான் கருத்துக் கணிச்சாங்க?’ – இப்படி ஒரு கேள்வி பலர் மனதிலும் தொக்கி நிற்கிறது. வெளியாகியுள்ள கருத்துக் கணிப்பு எண்ணிக்கையை வைத்துப் பார்த்தால் நிச்சயம் ஒரு தொகுதிக்கு பத்துப் பேரையாவது பொதுவாகக் கடந்திருக்க வேண்டும் ஒவ்வொரு ‘சர்வே’யாளனும். அப்படி எதுவும் நடக்கவே இல்லை என்கிறார்கள் தொகுதிவாசிகள்.

தத்தமது சார்பு நிலைக்கேற்ப, குறித்த கட்சியின் வேட்பாளர் மற்றும் அவருடன் இருக்கும் அல்லக்கைகளை மட்டும் கருத்துக் கேட்டுவிட்டுச் சென்றுவிட்டார்களோ?

சர்வே எடுக்கும்போது ‘மாதிரி’ அதாவது Sampling என்பதை பரவலாக ஆனால் சீரான இடைவெளி விட்டு நபர்களைத் தேர்வு செய்து எடுக்க வேண்டும். இப்போதைய கணிப்புகளில் அப்படியெல்லாம் எந்த வரைமுறையும் பின்பற்றப்பட்டதாகத் தெரியவில்லை. கொளுத்தும் வெயிலில், எங்கெல்லாம் தலை தெரிகிறதோ அங்கே கருத்துக் கேட்டு ‘கணக்கு’ முடித்திருப்பார்கள் போல. அல்லது ‘மேசை வேலை’யும் கைகொடுத்திருக்கலாம்!

ஒரு சின்ன டீமை வைத்துக்கொண்டு 60 தொகுதிகளில், சரியான சர்வே முறைப்படி கருத்துக் கணிப்பு நடத்தலாம் என முடிவு செய்து ஒரு கணக்குப் போட்டுப் பார்த்தோம், நான்கைந்து வாரங்களுக்கு முன்பு. குறைந்தபட்சம் ரூ 10 லட்சம் என்று வந்தது. சரி, பேசாமல் வேடிக்கைப் பார்ப்போம் என விட்டுவிட்டோம்!

-என்வழி




2 thoughts on “உன்கிட்டயும் கேக்கல… என்கிட்டயும் கேக்கல.. அப்படி யார்கிட்டதான் கருத்துக் கணிச்சிருப்பாங்க?

  1. jegan N

    The topic itself is the answer…..”opinion poll”…ie, the opinion of the press editor or owner…and not the opinion of the public

  2. Rajagopalan

    BOSS KASU KODUTHAL SADHAGAMAGA PODU GIRARGAL…
    MATHA PADI EDHU AVARGALIN OPINIOOON POLLL…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *