BREAKING NEWS
Search

‘ரஜினி சாரை தெரியுமா?’ – நிருபர்; ‘கடவுளைத் தெரியுமா என்று கேட்பதைப் போல இருக்கிறது!’ – மும்பை நடிகை

‘3 படத்தில் ரஜினி நடிக்கல நடிக்கல நடிக்கல!’

னுஷ் நடிப்பில் அடுத்து வெளிவரும் படத்து வைக்கப்பட்டு ‘3’ என்ற தலைப்புக்கு அர்த்தம் என்ன என்ற ‘ஆராய்ச்சி’ ஆரம்பமாகிவிட்டது.

கொலைவெறி என்ற பாடல் மூலம் உலகம் முழுக்க பேசப்படும் படமாகிவிட்ட, 3-ல் தனுஷ் – ஸ்ருதி ஜோடியாக நடித்துள்ளனர்.

படத்தில் முக்கியமான ஒரு பாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி தோன்றுவார் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் பின்னர் படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யாவே அதை மறுத்திருந்தார்.

இப்போது மீண்டும் ரஜினியைத் தொடர்புபடுத்தி செய்திகள் கிளம்பிவிட்டன.

இதுகுறித்து கஸ்தூரி ராஜாவிடம் கேட்டபோது, மழுப்பலாகக் கூறிவிட்டார்.

ஆனால், படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யா மறுப்பு தெரிவித்துள்ளார். அப்பா இந்தப் படத்தில் நடிக்கவில்லை என்றும், ஆனால் படம் எப்படி வந்திருக்கிறது எனத் தெரிந்து கொள்ள ஆவலாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அப்பாவுக்கு மட்டுமல்ல… அப்பாவின் ரசிகர்களும் ஆவலாத்தான் இருக்காங்க!

எனக்கும் ரஜினிதான் தலைவர்! – தீபிகா

குமுதம் இதழுக்கு தீபிகா படுகோன் அளித்திருந்த பேட்டியைப் படித்த போது, அவர் வடக்கு தெற்கு என்ற பேதமின்றி அனைத்து மீடியாவிலும் தலைவரைப் பற்றி மனசாரப் பேசி வருவதைப் புரிந்து கொள்ள முடிந்தது.

முதல் சந்திப்பில் ரஜினியிடம் என்ன பேசினீங்க? என்ற ஒரு கேள்விக்கு தீபிகா அளித்துள்ள பதில் இது:

“அது ரொம்பவும் முக்கியமான நாள் தான். ரஜினிக்கு யார்தான் ரசிகரா இல்லாம இருப்பாங்க. நானும் அப்படித்தான் அவரோட தீவிரமான ரசிகை. அவரைப் பார்க்கப் போன அந்த நிமிஷம் வரைக்கும் ரொம்பவே படபடப்பா இருந்தேன்.

‘ஹலோ சார்’ன்னு சொல்லக் கூட வார்த்தை வரலை. அவர் இயல்பாக சிரித்துக்கொண்டே பேசினார். ஷூட்டிங் ஸ்பாட் என்பதால அதிகம் பேச முடியலே. இனி அடுத்த கட்ட காட்சிகள் எடுக்கும்போதுய் மனம் விட்டு பேசணும். ரசிகர்களுக்கு மட்டுமல்ல எனக்கும் ரஜினிதான் தலைவர்!”

– அழகான தொண்டர்கள் எண்ணிக்கை கூடிக்கிட்டே போகுது தலைவரே!

ரஜினி சாரை தெரியுமா? – நிருபர்; கடவுளைத் தெரியுமா என்று கேட்பதைப் போல இருக்கிறது! – மும்பை நடிகை

 

ஸ்லம்டாக் மில்லியனேர் படத்தை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அந்தப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த தன்விலோன்கர் என்ற சிறுமி இப்போது வளர்ந்து காதல் தீவு என்ற தமிழ் சினிமாவில் ஹீரோயினாகிவிட்டார்.

சனிக்கிழமை இந்தப் படத்தின் பாடல் வெளியீடு சென்னை ஃபேம் திரையரங்கில் நடந்தது. தன்விலாங்கரும் விழாவுக்கு வந்திருந்தார்.

அனைவரும் அந்தப் பெண்ணிடம் பேட்டி எடுக்கத்தான் முயன்றனர்.

பல கேள்விகளுக்கும் பதில் சொன்ன அந்தப் பெண்ணிடம், சரி, உங்களுக்கு எந்த நடிகர் பிடிக்கும்…? என்று கேட்டார் ஆங்கிலப் பத்திரிகையின் பெண் நிருபர்.

அரை நொடி கூட தாமதிக்காமல் அந்தப் பெண் சொன்னது, “ரஜினி சார்…”. ரஜினி சாரை தெரியுமா?

“ரஜினியை தெரியுமா என்று கேட்பது கடவுளைத் தெரியுமா என்று கேட்பதைப் போல. அவரைத் தெரியாமல் எப்படி சினிமாவிலிருக்க முடியும். நார்த் – சவுத் என்ற எல்லைகளைத் தாண்டிய சூப்பர் ஸ்டார் அவர். எந்திரன் எனது ஆல்டைம் பேவரைட்” என்றார்.

ரஜினி சாரை தெரியாதவர் இருக்க முடியாது  என்பதை ஒப்புக் கொள்கிறேன். அவருக்கு உங்களைத் தெரியுமா? என்றார் நிருபர் விடாமல்!

‘தெரியும் என்றுதான் நினைக்கிறேன். அவரைப் போய் ஒருமுறை பார்த்துப் பேச ஆசையாக உள்ளது. நானும் சென்னையில்தான் இருக்கப் போகிறேன். வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன்,” என்றார்.

கவலைப்படாத பாப்பா… விசுவாசிகளை ‘கடவுள்’ கைவிடுவதில்லை!

-என்வழி செய்திகள்
5 thoughts on “‘ரஜினி சாரை தெரியுமா?’ – நிருபர்; ‘கடவுளைத் தெரியுமா என்று கேட்பதைப் போல இருக்கிறது!’ – மும்பை நடிகை

 1. kumaran

  கடவுளைக்கூட சொத்தைராஜ் போன்றவர்கள் இல்லை தெரியாது என்பார்கள்

 2. muthu.T

  கடவுளைக்கூட சொத்தைராஜ் போன்றவர்கள் இல்லை தெரியாது என்பார்கள் சூப்பர் குமரன், நிறை குடம் தழும்பாது என்பதற்கு தலைவரும் , குறை குடம் கூத்தாடும் என்பதற்கு சொத்தைராஜும் சிறந்த உதாரணம்.

 3. endhiraa

  “கவலைப்படாத பாப்பா… விசுவாசிகளை ‘கடவுள்’ கைவிடுவதில்லை!”

  – அது எப்படி வினோ ஜி உங்களால் மட்டும் இப்படி ஒரு கடைசி பஞ்ச் கொடுக்க முடிகிறது ??

 4. Simple Fan of Superstar!

  தலைப்பு வைக்கிறதுல உங்க ஸ்டைலே தனி பாஸ்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *