BREAKING NEWS
Search

ஒரு குழந்தை மற்றும் மீனவர் உயிர்குடித்த ஜெ போலீசின் மோசமான அடக்குமுறை!

ஒரு குழந்தை மற்றும் மீனவர் உயிர்குடித்த ஜெ போலீசின் மோசமான அடக்குமுறை!


இடிந்தகரை & தூத்துக்குடி: தமிழக போலீசாரின் மக்கள் விரோத அடக்குமுறை மீண்டும் தன் கோரமுகத்தைக் காட்டி இரு உயிர்களைப் பலிவாங்கியிருக்கிறது.

இடிந்தகரையில் போராட்டக் குழுவினரை தடியாலடித்தும், கற்களை வீசியும், கண்ணீர் புகை குண்டுகளை வெடித்தும் போலீசார் விரட்டியதில் ஒரு பச்சிளம் குழந்தை பலியானது.

போலீசாரின் அடக்குமுறையைக் கண்டித்து தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கிராமத்தில் போராட்டம் நடத்திய மீனவர்கள் மீது போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அந்தோணிசாமி என்ற மீனவர் பலியானார்.

ஒரே நாளில் நடந்த இந்த இரு மக்கள் விரோத செயல்களும் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளன.

போலீஸ் விரட்டியதில் குழந்தை பலி

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக இடிந்தகரை லூர்துமாதா ஆலயத்தில் ஒன்று திரண்டிருந்த பொதுமக்களை போலீசார் விரட்டியடித்ததில் குழந்தை ஒன்று கீழே விழுந்து பரிதாபமாக பலியானது.

கூடங்குளம் சுனாமி காலனி கடற்கரையில் குவிந்திருந்த பல்லாயிரம் மக்களை கண்ணீர்புகை குண்டு வீசி, தடியடி நடத்தி போலீசார் விரட்டியடித்தனர். இதில் கடலுக்குள் குதித்த ஒருவர் கதி என்ன என்பது தெரியவில்லை.

இடிந்தகரை லூர்துமாதா ஆலயத்திலிருந்த மேரிமாதா சிலையையும் போலீசார் உடைத்து நொறுக்கியுள்ளனர்.

மணப்பாட்டில் துப்பாக்கி சூடுமீனவர் பலி

இடிந்தகரையில் அணுஉலையை முற்றுகையிட்ட மக்கள் மீது போலீஸ் வன்முறையை கட்டவிழ்த்துவிட்ட போலீசைக் கண்டித்து  மணப்பாடு கிராம மீனவர்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு தரப்பினர் குலசேகரப்பட்டனம் காவல் நிலையத்தை முற்றுகையிட சென்றனர்.

இதையடுத்து அவர்களைக் கலைக்க போலீசார் துப்பாக்கிச் சூட்டில் இறங்கினர். இதில் அந்தோணி சாமி என்ற மீனவர் பரிதாபமாக உயிரிழந்தார். துப்பாக்கிச் சூட்டில் குடல் சரிந்து கோரமாக பலியானார்.

ஆனால் சாலை மறியலின் போது போலீஸ் சோதனைச் சாவடிக்கு அந்தோணிசாமி தீ வைக்க முயன்றதாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார் என்று போலீஸ் தரப்பு பொய்யான காரணங்களை ஜோடித்துள்ளது.

இந்த நிலையில் பலியான அந்தோணிசாமி குடும்பத்துக்கு ரூ 5 லட்சம் நிதியுதவி அளிப்பதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

-என்வழி செய்திகள்
5 thoughts on “ஒரு குழந்தை மற்றும் மீனவர் உயிர்குடித்த ஜெ போலீசின் மோசமான அடக்குமுறை!

 1. தினகர்

  சமீபத்தில் தான் கர்ணன் திரைப்படத்தில் போர் காட்சியை பார்த்து, எப்படி இத்தனை பேரை வைத்து இந்த காட்சியை எடுத்தார்கள் என்று வியந்தேன். இந்த புகைப்படத்தை பார்த்தால், அது ஒன்றுமே இல்லை. இங்கே நிஜமான போர்க்களமாக தெரிகிறது.

 2. தினகர்

  “தற்காலிக சோதனைச்சாவடிக்கு ஒரு கும்பல் தீவைத்து அங்கு வந்த காவலர்களை தாக்கியது. இதில் தற்காப்புக்காக காவலர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்” – முதல்வர் அறிக்கை.

  அதாவது தீ வைத்த கும்பலில் ஒருத்தர் சுட்டுக் கொல்ல்ப்பட்டார். தீ வைத்தல், காவலரை தாக்கியது போன்ற குற்றங்களுக்காக சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டார். அப்புறம் எதுக்கு அனுதாபம், இரங்கல் எல்லாம். கூடவே 5 லட்சம் ரூபாய். உயிரோடு இருக்கும் வரை வன்முறைக் கும்பலில் ஒருத்தர், சுட்டுக்கொல்லப்பட்டதால் தியாகி ஆகிவிட்டாரோ? என்ன ஒரு பச்சோந்தித்தனம்.

  குடல் சரிந்து இறந்தார் என்று செய்திகள் சொல்கிறது, ஆனால், இப்படிப்பட்ட சூழலில் கூடமுழங்காலுக்கு கீழே தான் சுட வேண்டும் என்று விதி இருப்பதாக சொல்கிறார்கள். பணத்தை கொடுத்தால் போலீஸாரின் செயல் சரியாகிவிடுமா?.

  இறந்தவர் குடும்பத்திற்கு நமது அனுதாபங்கள்.

 3. மிஸ்டர் பாவலன்

  டாக்டர் சுப்பிரமணியம் சுவாமி இந்த கூடங்குளம் போராட்டத்தை
  நடத்தி வரும் உதயகுமாரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் (NSA)
  கீழ் கைது செய்யப்பட வேண்டும் என்று அறிவுரை செய்து வருகிறார்.
  TimesNow Channel-ன் News hour show-விலும் சுவாமி இதே கருத்தை
  சொன்னார். வெளிநாட்டு உதவியுடன் இந்த போராட்டம் நடந்து
  வருவாதான பிரதமர் கருத்தையும் டாக்டர் சுவாமி சுட்டிக் காட்டினார்.
  நேற்று போராட்டம் நடந்த போது, உதயகுமார் ஓட்டம் எடுத்ததாக
  தினமலர் நாளேடு தகவல் வெளியிட்டிருந்தது.

  -== மிஸ்டர் பாவலன் ==-
  __________________

  திரு பாவலன்
  ஒரு பேச்சுக்காகக் கூட சுப்பிரமணிய சாமி, தினமலம் போன்ற கேடு கெட்ட ஜென்மங்களுக்கு ஆதரவாக கருத்து எழுதாதீர்கள். இவர்களை ஆதரிப்பது ஒரு சக மனிதனாக நமக்குத்தான் அவமானம். நச்சுகளின் பிறப்பிடம், பிளாக்மெயிலின் உச்சம், தமிழகத்தின் சாபக்கேடுகளில் முதன்மையானவை இந்த இரண்டும்!

  -வினோ

 4. கிரி

  இது போன்ற போராட்டங்களுக்கு / கூட்டமான இடங்களுக்கு இவ்வளவு பச்சைக்குழந்தையை கொண்டு வரலாமா! முட்டாள்தனமாக உள்ளது. படத்தைப் பார்த்தால் பிறந்தே சில மாதங்கள் தான் ஆகி இருக்கும் போல உள்ளது.

  இனி என்ன கூறி / பேசி என்ன பயன்.. போன குழந்தை திரும்ப வருமா!

  குழந்தையை பார்க்கவே கொடுமையாக உள்ளது.

 5. saleem

  தின மலம் ஒடுக்கபட்ட மக்களுக்கு எதிரான நாளிதழ் நாம் அந்த மலம் நாளிதழை புறகணிக்க வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *