முதல் பக்கம்    வணக்கம்!    ரசிகர் பக்கம்   தேர்தல்    புனைவுகள்    வணிகம்    நட்புடன்    சும்மா தமாசு    வீடியோ    இன்றைய கார்ட்டூன்    கேள்வி பதில்
  உலகம் சுத்தலாம் வாங்க!    நினைவுகளை மீட்டும் இசை!    இது எப்படி இருக்கு...!    அசத்தல் படங்கள்    ஃபிளாஷ்பேக்    எனது பக்கங்கள்    ஸ்போர்ட்ஸ்

‘என்றைக்கு ரஜினி மகளை மணந்தேனோ அன்றே என் அடையாளம் போய்விட்டது!’

Wednesday, February 15, 2012 at 1:26 am | 2,347 views

ரஜினி மகளை மணந்ததும் என் அடையாளம் போய்விட்டது!- சொல்கிறார் தனுஷ்


ப்போது ரஜினியின் மகளை மணந்தேனோ அன்றைக்கே என் சுய அடையாளம் போய்விட்டது (Once I married his daughter Aishwarya in 2004, I lost my identity!) என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார் நடிகர் தனுஷ்.

சமீபத்தில் மும்பையில் நடந்த ஒரு விருது விழாவில், தனது ‘கொலவெறிடி’ பாடலை நடிகர் அமிதாப் பச்சனுக்கு சமர்ப்பிப்பதாகவும் ரஜினிக்கு தன்னால் இப்படி செய்ய முடியாது என்றும் அறிவித்தார் தனுஷ். அவரது இந்தப் பேச்சு, லேசாக முணுமுணுப்பை கிளப்பியது.

நிகழ்ச்சி முடிந்த பின்னர், இந்தியாவின் மிகப் பெரிய சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தில் ரஜினி இருக்க, பிரபலமான ஒரு பாடலை அமிதாப்பச்சனுக்கு சமர்ப்பித்தது ஏன்? என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த தனுஷ், “குடும்பத்துக்குள் இப்படியெல்லாம் செய்துகொள்ளக் கூடாது. என் மாமனார் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவரது தனிமைக்கு மிகுந்த மரியாதை தருபவன் நான்,” என்றார்.

எங்கே போனாலும் அவரிடம் கேட்கப்படும் முக்கிய கேள்வி, ரஜினி பற்றியதுதானாம்.

இதை எப்படி எடுத்துக் கொள்கிறார் அவர் என்று கேட்டபோது, “ரஜினியின் மருமகன் என்பது எனக்கு மிகப்பெரிய சுமையாகத் தெரிகிறது. 2004-ல் அவரது மகள் ஐஸ்வர்யாவை நான் மணந்தபோதே என் சுய அடையாளத்தை இழந்துவிட்டேன்.  அதற்கு முன் நான் சம்பாதித்த பேர் புகழ் அனைத்தையும் அது அடித்துச் சென்றுவிட்டது. எங்கே போனாலும் என்னை அவரது மருமகனாகத்தான் பார்க்கிறார்கள். இதைக் கடந்து செல்வது எனக்கு மிகக் கடினமான விஷயம். என்னுடைய அடையாளத்தை திரும்பப் பெற முன்னிலும் இருமடங்கு உழைத்தாக வேண்டும்.

எப்போது நான் பேட்டி கொடுத்தாலும், என்னிடம் கேட்கப்படும் முதல் கேள்வி, ‘ரஜினியின் மருமகன் என்பதை எப்படி உணர்கிறீர்கள்’ என்பதுதான். முன்பெல்லாம் இந்தக் கேள்வியைத்தான் எடுத்த எடுப்பில் கேட்பார்கள். கொலவெறி பாட்டுக்குப் பிறகு, இந்தக் கேள்வியை இடையில் கேட்கிறார்கள். இனி வரும் நாட்களில் இந்தக் கேள்வியே கேட்கப்படாது என நம்புகிறேன்!” என்றார் (“It’s a huge burden to be known as Mr Rajinikanth’s son-in-law,” he says. “Once I married his daughter Aishwarya in 2004, I lost my identity. Whatever name I had earned before that on my own was wiped away. Wherever I went, I became a son-in-law. It was a terrible phase for me. I had to work double hard to get back my identity. Whenever I gave an interview, the first question would invariably be, ‘What is it like to be his son-in-law?’ Now that question comes somewhere in the middle of the interview. Hopefully, soon, it won’t be asked at all.” – Dhanush. Courtesy: Rediff).

தனுஷ்.. மீடியாவில் என்ன வேண்டுமானாலும் பேசிவிடலாம். ஆனால் பேசும் முன் நிதானம் அவசியம். சூப்பர் ஸ்டாரின் படிக்காதவன், பொல்லாதவன் தலைப்புகள், மாப்பிள்ளை ரீமேக், என்னம்மா கண்ணு…, என்னோட ராசி நல்ல ராசி பாடல்கள் ரீமிக்ஸ்… போன்றவையெல்லாம் நீங்கள் ரஜினிக்கு மருமகனான பிறகு நடந்தவைதான். இவற்றை நீங்களாக விரும்பித்தானே செய்தீர்கள்!  சீக்கிரம் புகழ் பெற வேண்டும்… படங்கள் நல்ல பிஸினஸ் ஆக வேண்டும் என்பதற்காகத்தானே இந்த ரீமேக் & ரீமிக்ஸ்கள்… அன்றைக்கு இந்த சுய அடையாளம் உங்கள் நினைவுக்கு வரலியே மாப்ளே!

-என்வழி செய்திகள்

Related Posts with Thumbnails
© The content is copyrighted to Envazhi and may not be reproduced on other websites.

Comments

27 Responses to “‘என்றைக்கு ரஜினி மகளை மணந்தேனோ அன்றே என் அடையாளம் போய்விட்டது!’”
  1. shah says:

    கலி காலம்டா சாமி..

  2. Karthik says:

    I know dhanush didn’t speak like this…
    the media will add some stuffs…

  3. Karthik says:

    I hope dhanush didn’t speak like this…
    the media will add some stuffs…
    அந்த லிங்க் கொடுங்க வினோ அண்ணா

  4. தனுஷ் இதெல்லாம் தெரிஞ்சு தானே ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கிட்டாரு.. இதெல்லாம் திருமணம் செய்யும் முன்பு யோசித்து இருக்கணும். அப்ப மண்டைய மண்டைய ஆட்டிட்டு இப்ப வந்து இப்படி புலம்புனா?

    தனுஷ் சொல்வது போல எல்லோரும் ஒரே கேள்வியை கேட்பது நிச்சயம் கடுக்காகத்தான் இருக்கும்.. ஆனா இதெல்லாம் நடக்கும் என்று தெரிந்து தானே வந்தார்..அப்ப இதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அப்ப டம்மி பீசா இருந்தாரு.. இப்ப கொலவெறி புகழ் இதெல்லாம் யோசிக்க வைக்குது ரொம்ப..அது தான் விஷயம்.

    வினோ நீங்க சொன்ன மாதிரி இவ்வளோ பேசுற தனுஷ் எதுக்கு ரஜினி பட பெயர்களை பயன்படுத்தணும் ரீமேக் ல நடிக்கணும்.. ரஜினியா வந்து கைய பிடிச்சு இழுத்து என்னோட படத் தலைப்பை வையி, படத்தை ரீமேக் பண்ணு என்று சொன்னாரு..

    பண்ணுறதெல்லாம் பண்ணிட்டு பேச்சைப் பாரு! லொள்ளைப்பாரு!!

  5. மிஸ்டர் பாவலன் says:

    // தனுஷ்.. மீடியாவில் .. பேசும் முன் நிதானம் அவசியம். //

    நல்ல அறிவுரை. இதை நான் வரவேற்கிறேன்.

    -=== மிஸ்டர் பாவலன் ===-

  6. குமரன் says:

    தனுஷின் அடையாளமே அவரது திருமணத்துக்குப் பின்னர்தானே வந்தது?

    அதற்கு முன்னால் இருந்த எந்த உயரிய அடையாளம், போய் விட்டது என்று வருந்துகிறார்? திருமணத்துக்கு முன்னால் அவர் என்ன “வீரபாண்டிய கட்டபொம்மன்”, “கர்ணன்” போன்ற சிறந்த அடியாலங்கலையா பெற்றிருந்தார்?

    ‘மன்மத ராசா’ (!?) அடையாளம், தற்காலிகமானது, அத்தனை classical ஆனதல்ல என்பதை யாராவது புரிய வைத்தால் சரி.

    தலைவர் படப்பாடல் வரிகள் “உனக்கு என்ன வரலாறு?….” அளவோடு நிறுத்திக் கொள்கிறேன்.

  7. kumaran says:

    vijay is better than danush

  8. vasanth says:

    mappilai thanus,neenka namma thalaivar makala thirumanam seiyaddi innaikku evarukkume unkala theriyama poiyirukkum .

  9. Prasanna Kumar says:

    Dhanush pesradhuku munal konjam yosithu pesa vendum……!!!!

    சூப்பர் ஸ்டாரின் படிக்காதவன், பொல்லாதவன் தலைப்புகள், மாப்பிள்ளை ரீமேக், என்னம்மா கண்ணு…, என்னோட ராசி நல்ல ராசி பாடல்கள் ரீமிக்ஸ்… போன்றவையெல்லாம் நீங்கள் ரஜினிக்கு மருமகனான பிறகு நடந்தவைதான். இவற்றை நீங்களாக விரும்பித்தானே செய்தீர்கள்! சீக்கிரம் புகழ் பெற வேண்டும்… படங்கள் நல்ல பிஸினஸ் ஆக வேண்டும் என்பதற்காகத்தானே இந்த ரீமேக் & ரீமிக்ஸ்கள்… அன்றைக்கு இந்த சுய அடையாளம் உங்கள் நினைவுக்கு வரலியே மாப்ளே!
    I Second the above mentioned Lines Vino Sir……..!!!!!!!

  10. RC says:

    Actually if you read his statements again, he said nothing wrong. All I interpret is ..infront of Rajini’s popularity he is nothing. He will always be associated as Rajini’s family member.

  11. jawahar.t says:

    கல்யாணத்துக்கு முன்னால இவரு என்ன பெரிய பேரு சம்பாதிச்சாரு… எல்லாம் தலை எழுத்துடா சாமி.. இதையும் தலைவர் பெருந்தன்மைய ஏத்துக்கலாம் … ஆனா நம்மனால முடியலையே …… தலைவருக்காக எதையெல்லாம் பொறுத்துக்க வேண்டி இருக்கு பாருங்க ……

  12. Rajmohan.K says:

    Man who is dreaming abt his place is always good, but the steps well designed by others will always matters.

    Eventhough, he has not commented anything personally, all to know is his problems.

  13. naren says:

    ரஜினி மருமகன் என்ற ஒரே காரனத்தினால தான் சினிமா life பெருசா இல்லைனாலும் சுமாரா போய்ட்டு இருக்கு …… இல்லேன்னா சான்ஸ் கேட்டு தம்பி ஊரு எல்லாம் அலைஞ்சு கிட்டு இருக்கும்…. :) என்ன கொடுமை ரஜினி சார் இது..

  14. Kannan says:

    தமிழ்நாட்டின் கடைசி மூளைக்கு தெரியாத இந்த தனுஷ், கல்யாணத்துக்கு பின்தான் அனைவருக்கும் தெரிந்தது……இப்பவும் நம் தலைவரின் ரசிகர்கள் சப்போர்ட் இல்லாவிடில் இவரின் “அடையலாம்” தெரியாமல் போய்விடும்….

  15. kumaran says:

    விஜய், தனுஷ் நடவடிக்கை பார்க்கும் போது அவர்களது இந்த நிலை தான் அதிக பட்ச வளர்ச்சி என்று தோன்றுகிறது

  16. vasanth says:

    i think what dhanush spoke was his real feelings.. its pretty common when u have a famous father or father in law !! he has a point by saying he has to work hard twice to come out of the identity..

  17. M Senthil says:

    ரஜினி மருமகன் என்ற ஒரே காரனத்தினால தான் சினிமா life

    பெருசா இல்லைனாலும் சுமாரா போய்ட்டு இருக்கு ……

    இல்லேன்னா சான்ஸ் கேட்டு தம்பி ஊரு எல்லாம் அலைஞ்சு கிட்டு இருக்கும்….

    என்ன கொடுமை சார் இது..

  18. Manoharan says:

    இது குடும்ப விஷயம் இதை வெளியில் பேசி இருக்க வேண்டியது இல்லை. ஒவ்வொரு மனிதனுக்கும் தன் சுய அடையாளம் என்பது விருப்பம்தான். ஆனால் கட்டுரையாளர் சொல்வது போல் ரஜினியின் படப் பெயர்களை தலைப்பாக்கி கொண்டு இதை சொல்வது வேடிக்கை. இது மட்டும் அல்ல செல்வராகவன் படத்தில் தனுஷ் நடிக்கும்போதெல்லாம் அது செல்வராகவனின் படம் என்றுதான் சொல்லப் படுகிறதே தவிர. தனுஷ் படம் என்று சொல்லப் படுவது இல்லை. வேண்டாம் தனுஷ் …..வெறுப்பை சம்பாதிக்க வேண்டாம்.

  19. Manoharan says:

    தனுஷ் உங்களுக்கு சினிமாவில் அடையாளம் தந்தது உங்கள் அண்ணன் செல்வராகவன். திருமணத்துக்கு முன் நீங்கள் சம்பாதித்தது என்று எதுவும் இல்லை. சமூகத்தில் உங்களுக்கு அந்தஸ்து தருவது ரஜினியின் மருமகன் என்பதால். அதனால்தான் அமிதாப்பும், அபிஷேக்கும் உங்கள் கொலைவெறி பாட்டுக்கு twitter ல் எழுதினார்கள். திருமணத்துக்கு முன் நீங்கள் செல்வராகவனின் தம்பி, இப்போது ரஜினியின் மருமகன். இதுதான் நிதர்சனம்.

  20. r.v.saravanan says:

    எல்லாம் தலை எழுத்துடா சாமி.. இதையும் தலைவர் பெருந்தன்மைய ஏத்துக்கலாம் … ஆனா நம்மனால முடியலையே …… தலைவருக்காக எதையெல்லாம் பொறுத்துக்க வேண்டி இருக்கு பாருங்க ……

    கரெக்ட் ஜவஹர்

  21. simple fan of superstar! says:

    தனுஷ், ஷ் இப்போ கொலைவெறி கொஞ்சம் மண்டையில கனத்தை ஏத்தியிருக்கு போல தெரியுது ! கஷ்டம் தான் என்னதான் தலைவரோட இருந்தாலும் அவரை மாதிரி அடக்கமா இருக்க முடியுமா? தலைவர் தன்னோட தரத்தை அமைதியா தான் ஒசத்தினார் அது போல நீங்க ஒங்க திறமையால ஒங்க அடையாளத்தை நிறுத்த முயற்சிக்கணும் ஏன் ஒங்க அப்பாவும் குடும்பமும் பாபாவுக்கு அப்புறம் “..அண்ணன் ஆடிட்டாரு; அடங்கிட்டருன்னு ….” கணக்கு போட்டீங்களாக்கும்! வர வர கொஞ்சம் ரொம்ப ஓவரா தான் இருக்கு ஏன் ரஜினி மருமகன்ன்னு தான கேக்குறாங்க என்னமோ பின்லேடன், வீரப்பன் சொந்தமான்னு கேக்குற மாதிரி பீல் பண்ற இதெல்லாம் ரொம்ப ஓவரு பாத்து !

  22. Ravi, Dallas, USA says:

    தனுஷை மாப்பிள்ளையாக ஏற்றுக்கொண்டதற்கு ரஜினியை இவர் காலம் முழுவதும் கொண்டாடவேண்டும்! அதை விட்டுவிட்டு இன்னிக்கி நேத்திக்கி ஒரு “கொலே வெறி” பாட்டு ஹிட் ஆகிவிட்டதால் இப்படி உளறக்கூடாது!

  23. devaraj says:

    Dhanush might have a point, but one needs to be humble, atleast learn from Rajini.
    These are family issues he need not have told media. But he should be very careful about what he talks to media. A PM invite, a kolaveri hit, a sachin anthem , a few movie hits (that too due to the credits of directors) should not make Dhanush think that he is the top guy.
    Be humble or else you will fall.
    cheers
    Dev.

  24. Ananth says:

    Dhanush (with out Rajini) = Jayam Ravi . LOL!!

  25. Anbudan Ravi says:

    இதற்க்கு தனுஷ் ஒரு விளக்கம் அளிக்க வேண்டும். உண்மையிலயே இப்படி கூறினாரா அல்லது வழக்கம்போல மீடியா கொஞ்சம் மிகைப்படுத்திவிட்டதா என்று. நாவடக்கம் மிகவும் முக்கியம்….தலைவரையும் அவரை சுற்றி இருப்பவர்களையும் ஊடகங்கள் எப்பொழுதுமே கவனித்துக்கொண்டிருக்கிறது. தலைவர் கூறுவது போல வெற்றியை நெஞ்சில் ஏற்றுக்கொள்ளவேண்டும் தலையில் அல்ல. தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் நீங்கள் ரஜினியின் மருமகன்தான்…இதை உங்களால் என்றைக்குமே மாற்றவே முடியாது…..நன்றாக நடிக்கிறாரே யார் இவர் என்று கேட்டால் இவர்தான் ரஜினியின் மருமகன் என்றே சொல்வார்கள். இது உங்களுக்கு மட்டுமல்ல தலைவருக்கும் பெருமை சேர்க்கும்.

    அன்புடன் ரவி.

  26. karthik says:

    தனுஷ் – Why this கொலைவெறி ?

  27. Karthik says:

    அவர் தலைவர புகழ்ந்து பேசுனா
    மாமனார் பேர சொல்லியே எல்லாம் பண்றான்னு சொல்லுவாங்க…
    தலைவர் பேர சொல்லலேன்னா ரெண்டு பேருக்குள்ளேயும்
    பிரச்சினைன்னு சொல்லுவாங்க….

    இந்த மீடியாஸ் எல்லாம் இப்டி தான்…

    நல்லா இருக்குற குடும்பத்துக்குள்ள பிரச்சினைய கிளப்பிவிட்டுருவாங்க…

Speak Your Mind

  Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)