BREAKING NEWS
Search

இனப்படுகொலையாளன் ராஜபக்சேவுக்கு சாமரம் வீசும் சினிமாக்காரர்களை எதனால் அடித்து விரட்டுவது?

எதனால் அடித்தால் விழுவான் தமிழன்? பணத்தால் அடித்தால் மூச்சுவிடக் கூட மறந்து விழுந்து கிடப்பான்!!

kathi-protest

த்தனை நாட்கள் இனப்படுகொலை கொடுமை அரங்கேறிய இலங்கையையும், அதனை அரங்கேற்றிய கொடியவன் ராஜபக்சேவையும் கண்டித்து தமிழ்த் திரையுலகினர் ஆர்ப்பாட்டங்கள் – போராட்டங்கள் நடத்திய போதெல்லாம், உள்ளுக்குள் ‘அட பரவாயில்லையே.. ஏதோ இந்த மட்டிலாவது உணர்வோடு இருக்கிறார்களே..’ என்று எண்ணிக் கொள்வேன்.

ஆனால் இந்த நான்கு மாதங்களாகத்தான் இவர்களின் தமிழ் உணர்வு பீறிட்டுக் கிளம்புவதெல்லாம் எத்தனை பெரிய நாடகம், நடிப்பு, பணத்துக்காக எந்த அளவுக்கு நீர்த்துப் போகக் கூடியது என்பதை உணர முடிந்தது.

பணம் கோடிகளில் கொட்டுகிறதென்றால், ராஜபக்சேவுடன் பந்தியிலும் அமர்வார்கள், பாதத்தையும் கழுவத் தயாராக நிற்பார்கள் என்பதை கண்ணெதிரில் பார்க்க முடிகிறது!

அதுவும், தங்களின் மோசடியை கமுக்கமாக வைத்துக் கொண்டு ஈழத் தமிழர்களுக்காகப் போராடுவதில் இவர்களை அடித்துக் கொள்ள ஆளே இல்லை.

உதாரணம் லைகா நிறுவனத்துக்காக கிட்டத்தட்ட இன்று தமிழ் திரையுலகமே விழுந்தடித்துக் கொண்டு வக்காலத்து வாங்குகிறது. ஈழப் பிரச்சினையை ஒட்டு மொத்தமாக குத்தகைக்கு எடுத்துக் கொண்டதாக முன் நிற்கும் நாம் தமிழர் சீமானே அந்த நிறுவனத்துக்காக பரிந்து பேசுகிறார், படம் பண்ணித் தருவதாக அறிவிக்கிறார் என்றால்.. பணம் பத்தென்ன… அதற்கு மேலும் செய்யும் என்பது உண்மைதானே!

சரி, யார் இந்த லைகா நிறுவனம்? அதற்கும் ராஜபக்சேவுக்கும் என்ன தொடர்பு? திரையுலகினர் ஏன் இந்த நிறுவனத்துக்காக மல்லுக் கட்டுகிறார்கள்?

இதோ கொஞ்சம் சுருக்கமாகவே சொல்கிறேன்:

சுபாஷ்கரண் அல்லிராஜா என்ற யாழ்ப்பாணத் தமிழருக்கு சொந்தமான நிறுவனம்தான் இந்த லைகா. முதலில் லைகா மொபைல் என்று ஆரம்பித்தவர்கள், லைகாஃப்ளை, லைகா டெலிகாம் என 33 நிறுவனங்களை வைத்திருக்கிறார்கள். இவை அனைத்துக்கும் தாய் நிறுவனமாகத் திகழ்வது ஹோஸ்டிங்ஸ் ட்ரேடிங் இ சர்வீஸஸ் எனும் நிறுவனம். இந்த நிறுவனத்தின் கீழ் இயங்கும் ஸ்கைடெல் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருப்பவர் ஹிமல் லலீந்திர ஹிட்டிராச்சி. லைகா நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குதாரர்களில் ஒருவர், இயக்குநர். இவர் வேறு யாருமல்ல, ராஜபக்சேவின் சொந்த தங்கை மகன்!!

இந்த ஒரு தொடர்பு மட்டுமல்ல… இலங்கை அரசுக்கு பல பொருளாதார உதவிகளைச் செய்து வருகிறது லைகா நிறுவனம். இன்றுவரை பத்திரிகையாளர்களோ, தமிழ் ஆதரவாளர்களோ, ஏன் ஐநா பிரதிநிதிகளோ கூட அனுமதிக்கப்படாத, போர்க்களப் பகுதிகளுக்குள், இலங்கை ராணுவத்தின் ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்களில் போய் பார்த்து, உதவிப் பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ள ஒரே நிறுவனம் ஞானம் பவுண்டேஷன். அது இந்த லைகா நிறுவனத்தின் ஒரு அமைப்புதான். சுபாஷ்கரண் அல்லிராஜாவின் அம்மா பெயர்தான் ஞானம்.

Rajapakse-Vijay
கடந்த ஆண்டு இலங்கையில் நடந்த காமன்வெல்த் வர்த்தக மாநாட்டுக்கு கோல்டன் ஸ்பான்சராக செயல்பட்டு, இலங்கை அரசுக்கு பல கோடிகளைக் கொடுத்ததும் லைகா நிறுவனம்தான்.

இப்படி பல வகையிலும் ராஜபக்சேயுடன் பின்னிப் பிணைந்துள்ள லைகா நிறுவனம் கத்தி படத்தை எடுப்பது தெரிந்ததும் தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

ஆனால் இந்த எதிர்ப்பலையைச் சமாளிக்க தீவிரமாக வேலை பார்த்துள்ளனர் நடிகர் விஜய், இயக்குநர் ஏஆர் முருகதாஸ் உள்ளிட்டோர்.

தமிழகத்தில் இலங்கைப் பிரச்சினைக்காக குரல் கொடுக்கும் அத்தனை தலைவர்களையும் ரகசியமாக சந்தித்துப் பேசி, அவர்களைச் சமாதானப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக முருகதாஸ் இந்த வேலையை கச்சிதமாக செய்து வருகிறார். லைகாவுக்காக படம் பண்ணும் வாய்ப்பையும் பெற்றுத் தருகிறார். இந்தப் படத்துக்காக அவருக்கு ரூ 20 கோடி வரை கைமாறியிருக்கிறது. இதே அளவு தொகையை விஜய்யும் பெற்றுள்ளார்.

முருகதாஸ் நேரில் போய் பேசி, லைகா தரும் பல விசேஷ சலுகைகளைப் பற்றி விளக்கமாகக் கூறியதும், இதுவரை எதிர்த்து வந்த பலரும், தமிழர் தயாரிக்கும் படம்தானே இது என்று ஜகா வாங்க ஆரம்பித்துள்ளனர்.

சமீபத்தில் இயக்குநர் சங்கத் தலைவர் விக்ரமனிடம் இதுகுறித்து கேட்டபோது, “கத்தி படத்தைத் தயாரிக்கும் கருணா மூர்த்தி, சுபாஷ்கரன் இருவருமே தமிழர்கள்தான். இலங்கை தமிழர்கள். அய்ங்கரன் கருணாமூர்த்தி பற்றி எல்லாருக்குமே தெரியும். அவர்தான் முதன்முதலில் ஓவர்சீஸ் மார்க்கெட்டில் தமிழ்ப் படங்களைக் கொண்டு போனவர். அவரது கூட்டாளியான சுபாஷ்கரனும் தமிழர்தான்,” என்றார். அடேங்கப்பா.. எப்படிப்பட்ட அரிய கண்டுபிடிப்பு!!

ராஜபக்சே – லைகா கூட்டணி பற்றியெல்லாம் அவர் பேசவே மறுத்துவிட்டார்.

ஏற்கெனவே இலங்கைத் தமிழர் பிரச்சினையை கொச்சைப்படுத்தும் வகையில் வெளியான இனம் படத்துக்கும் விக்ரமன் உள்ளிட்ட இயக்குநர் சங்கத்தினர் பெரும் ஆதரவு தெரிவித்திருந்தது நினைவிருக்கலாம்.

இதில் பலரையும் அதிர வைத்திருப்பது, இயக்குநர் சீமான் இந்த லைகா நிறுவனத்துக்கு ஆதரவாகப் பேசுவதையும், இதே நிறுவனத்துக்காக படம் செய்ய ஒப்புக் கொண்டிருப்பதும்தான்.

இதுபற்றிக் கேட்டால், ‘பிரபாகரன்தான், லைகா நம்ம கம்பெனி.. நீ தாராளமாக அவங்களுக்குப் படம் பண்ணு… தமிழருக்குப் பண்ணாம யாருக்குப் பண்ணப் போறீங்க?” என்றெல்லாம் கூறியதாக பச்சையாகப் புளுக ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக சீமான் இப்படி தன்னிடம் கூறியதாக கத்தி எதிர்ப்பாளர்களிடம் சொல்லி வருகிறார் முருகதாஸ். இதைக் கேள்விப்பட்டபோது சீமான் மீதிருந்து மிச்ச மீதி மரியாதையும் போய்விட்டது. ச்சீ.. இப்படியெல்லாம் சொல்ல வாய் கூசவில்லையா?

விட்டால், லைகா நிறுவனத்துக்கு பிஆர்ஓ வேலை செய்தார் பிரபாகரன் என்று கூட நா கூசாமல் சொல்வார்கள் போலிருக்கிறது தமிழ் சினிமாக்காரர்கள்.

kathi-lyca-proof

ராஜபக்சே மருமகன் ஹிமல் லலீந்திர ஹிட்டிராச்சி (வலது ஓரம் – கையில் தட்டோடு நிற்பவர்)

இதெல்லாம் ஒரு பிழைப்பா… லைகாவுக்கும் ராஜபக்சேவுக்கும் தொடர்பில்லை என்பது கைப்பிடி சோற்றில் ஒரு குன்றையே மறைக்கப் பார்க்கும் செயல். அதை வெட்கமே இல்லாமல் பணத்துக்காக செய்து கொண்டிருக்கிறது ஒரு சினிமா கும்பல். அப்படியெனில் இத்தனை நாளும் ஈழப் போராட்டம் என்ற பெயரில் பெரிய நாடகத்தை அல்லவா நடத்தி வந்திருக்கிறார்கள்?

தமிழுணர்வு, முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்ட தமிழர்களின் மீது இம்மியளவுக்காவது அனுதாபம் இருந்தால், இந்த கத்தி, புலிப்பார்வை போன்ற ஈனத்தனமான படங்களை கைவிட்டோம் என்று அறிவிக்கட்டுமே தமிழ் சினிமாக்காரர்கள். ம்ஹூம்.. ஒருபோதும் செய்ய மாட்டார்கள். இவர்கள் கடைந்தெடுத்த கபட நாடக வேடதாரிகள்.. அதுவும் விஜய், முருகதாஸ், சீமான் போன்றவர்கள் எதற்கும் துணிந்த வியாபாரிகள்!

அவர்களின் ஈழ அரசியல் வியாபார முகங்கள் இன்னும் வெளிச்சத்துக்கு வந்தது சமீபத்தில் சென்னையில் இலங்கைத் தூதரகத்துக்கு முன் நடந்த ஒரு கேவலமான போராட்டத்தில். இந்தப் போராட்டமே கத்தி படத்தைக் காப்பாற்ற நடந்ததுதான். அதில் பங்கேற்றவர்களைப் பாருங்கள்.. ஊருக்கு முன் வந்து நின்றவர்கள் முருகதாஸ், விஜய், சீமான் போன்ற லைகா அடிமைகள்தான்!

இலங்கையில் லைகாகாரர்கள் என்னவாவது செய்துவிட்டுப் போகட்டும். ஆனால் ‘இலங்கைக்கு எதிரான பொருளாதாரத் தடை வேண்டும்.. தமிழ் இனப்படுகொலைக்கு சர்வதேச குற்றவாளி கூண்டில் ராஜபக்சே நிறுத்தப்பட வேண்டும்.. தமிழருக்கு நியாயம் கிடைக்க வேண்டும்’ என தமிழக முதல்வரால் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கும் ஒரு மாநிலத்தில், பின்வாசல் வழியாக நுழைய முயலும் இனப்படுகொலையாளன் ராஜபக்சேவுக்கு சாமரம் வீசும் சினிமாக்காரர்களை எதனால் அடித்து விரட்டுவது?

-விதுரன்

என்வழி ஸ்பெஷல்
14 thoughts on “இனப்படுகொலையாளன் ராஜபக்சேவுக்கு சாமரம் வீசும் சினிமாக்காரர்களை எதனால் அடித்து விரட்டுவது?

 1. Ganapathi

  Excellent. We (Tamilians) against the Vijay, seeman & katthi movie.

  Vazga Tamil, Velga Tamil Ezlam.

 2. Kumar

  அட போப்பா நீ வேற காமெடி பண்ணிக்கிட்டு.எப்போது இந்த சீமான் கட்சி ஆரம்பித்தாரோ அப்போதே நான் சொன்னேன் இதெல்லாம் பக்க மொள்ளமாரித்தனம் செய்வதற்காக என்று.

  இதுல சில பேரு என்னவோ இந்தியாவில் இருக்கிற மதிய அரசாங்கம் தான் ஏமாற்றுகிறது என்று கோருவார்கள்.உண்மை என்னவெனில் தமிழ்நாட்டில் தமிழ் வளர்கிறேன் என்று கூறி கொண்டு உள்ளவர்கள் தான் இலங்கை தமிழர் பிரச்னையில் கபட நாடகம் ஆடுகிறார்கள்.இனிமேல் எல்லாம் நம்புவதற்கு தமிழ்நாட்டில் ஒருத்தன் கிடையாது.அவன் அவன் போய் சொந்த வாழ்கையை பாருங்கப்பா.

 3. bahrainbaba

  இந்த சீமான் அப்டிதாங்க.. தமிழர்களின் உணர்வுகளை வைத்து அரசியல் செய்யும் கேவலமான சுயநலவாதி..சீமானின் உண்மையான கேவல முகத்தை படம் பிடித்ததுபோல் ஒரு கட்டுரை வெளியிட்டால் மகிழ்ச்சி..

  தலைவர் மேல இருக்கிற பொறாமைக்கு தீனி போடா இவனுங்க ஆ.. வூனா தமிழரன்ற ஆயுதத்த கையில எடுப்பானுங்க..

 4. vengatesan

  ஏன் தல ஏன்?

  விஜய் திரைப்படம் என்றாலே பல தடைகளை தாண்டித்தான் திரைக்கு வரும். ஆனால் கத்தி தகராறு சாதரணமானதாக தெரியவில்லை. மேலும் கத்தி திரைப்படம் நன்றாக உருவாகி வருகிறது. கத்தி பர்ஸ்ட் லுக் ரிலீசாகி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை பன்மடங்கு உயர்த்தியுள்ளது. கத்தி தீபாவளி அன்று திரைக்கு வந்தால் துப்பாக்கி விட அதிகம் வசூலிக்கும் என்பது உறுதி.

  கள்ளதுப்பாக்கி படக்குழு தலைப்பு பிரச்சனைக்காக துப்பாக்கி படம் திரையை தொட தயாராகி இருந்தபொழுது கேஸ் போட்டார்கள். துப்பாக்கி ஒரு வருடமாக தயாராகி வந்தபொழுதெல்லாம் தெரியாமல் ரிலீஸ் சமயத்தில் தான் அவர்களுக்கு தலைப்பு தெரிந்தது போலும். இதையாவது ஏற்றுகொள்ளலாம். ஆனால் தலைவா படத்திற்கு சம்பந்தமே இல்லாமல் திரை அரங்குகளில் வெடிகுண்டு வைத்து விடுவார்கள் என்று சொல்லி ரிலீஸ் செய்யாமல் தடுத்ததும் மீண்டும் 10 தினங்களுக்கு பிறகு வெளிவந்ததும் இதற்கு பின்னணியில் யார் இருந்தது என்பதும் அனைவரும் அறிந்ததே. சூழ்நிலைகள் காரணமாக படம் தமிழகத்தில் சரியாக போகவில்லை என்றாலும் வெளிமாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் நல்ல வசூலை ஈட்டியது.

  கத்தி திரைப்படத்தை தடை செய்ய இந்த முறை காரணமாக கூறப்படுவது படத்தயாரிப்பாளர் லைகா அதிபர். அவர் ராஜபக்க்ஷேவின் உறவினர் என்று கூறுகின்றனர். லைகா அதிபர் அதை மறுத்து சில தினங்களுக்கு முன்பாக எழுத்து மூலமாக அறிக்கையும் விட்டுவிட்டார். இயக்குனர் முருகதாஸ் மற்றும் நடிகர் விஜய் இருவருமே தமிழர்களுக்கு எதிராக எப்பொழுதும் போகமாட்டோம் என்று கூரியுள்ளர்னர். இளையதளபதி விஜய் நாகபட்டினத்தில் ரசிகர்களுடன் தனியாக பிரமாண்ட உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியுள்ளார். அப்படி இருக்கும்பொழுது அவர்கள் இலங்கைக்கு ஆதரவாக செல்ல மாட்டார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. மேலும் லைகா ப்ரொடக்சன் தமிழர்களுக்கு நிறைய நல்லது செய்துள்ளதும் ஏற்கனவே 3 தமிழ் படங்களை தயாரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது,

  இப்படியிருக்க கத்தி திரைப்படத்தை மட்டும் தடை செய்ய வலியுறுத்துவதற்கு காரணம் என்னவென்று ஆராய்ந்தால் விஜய் வளர்ச்சிதான் காரணம் என்று சம்பத்தப்பட்டவர்கள் கூறுகின்றார்கள். விஜய் 40 வயதிலேயே சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை பெற்றுவிட்டார். 6 முதல் 60 வயதுவரை அவருக்கு ரசிகர்கள் உண்டு. இதை பிடிக்காத சிலர் விஜய் பெயரை கெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பிரச்சனை பெரியளவில் போவதற்கு பின்னணியில் இருப்பது நடிகர் அஜித் ரசிகர்கள் தான் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பல இடங்களில் போஸ்டர் அடிப்பது, நாளிதழில் விஜய் பத்தி தவறாக செய்தி போடுவது என்று நிறைய பணம் இதற்காக செலவிடபடுகிறது. இதற்கு அஜித் ரசிகர் மன்றங்களில் இருந்து பணம் பட்டுவாடா செய்யபடுவது கூடுதல் அதிர்ச்சி. விஜயை வீழ்த்தினால் மட்டுமே தனது ஆசை நடிகர் முதல் இடத்திற்கு வரமுடியும் என்பதால் இப்படி நடப்பதாக கூறபடுகிறது.

  (அஜித் ரசிகர் மன்றங்கள் செயல்படவில்லை என்று நினைப்பவர்களுக்கு ஒரு குறிப்பு. இன்று வரை அது செயல்பட்டு கொண்டுதான் இருகின்றது. மன்றங்கள் கலைப்பதாக அறிக்கை விட்டுவிட்டு பின்னர் அதை செயல்படுத்தி கொண்டுதான் இருகின்றார். அஜித் படங்களுக்கு மன்றங்கள் மூலமாக பேனர் வைக்கபடுவதை நீங்களே பார்த்திருப்பீர்கள்.)

  வன்முறை, கொள்ளையடிப்பதை மையமாக வைத்து படம் நடிக்காமல் விஜய், சூர்யா மாதிரி மக்கள் ரசித்து பார்க்கும் அளவுக்கு படம் குடுத்தால் நீங்களும் அவரை போல முன்னேறலாம் தல.

  வாழு வாழ விடு என்று சொல்லிவிட்டு இப்படி கோழை போல் பின்னே இருந்து தாக்குவதுதான் வீரமா?கத்திக்கு எதிர்ப்பு தெரிவிப்பதா, கூடாதா என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை, அதனைத் தயாரித்தவருக்கு இலங்கை அரசுடன் தொடர்பு இருந்தால் கண்டிப்பாக படத்தை எதிர்ப்போம் என்று சொல்லியிருக்கும் விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் ஈழப் படுகொலைக்குப் பிறகு இலங்கை சென்று ராஜபக்சேயுடன் கைகுலுக்கியவர்தான், விருந்துண்டவர்தான்.

  இலங்கைக்கு எதிராகப் பாராளுமன்றத்தில் தீமானம் நிறைவேற்றக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்த சுஷ்மா சுவராஜுக்கும், பிஜேபிக்கும் ஆதரவாகக் கூட்டணி அமைத்துப் பிரச்சாரம் செய்தவர்தான் வைகோ. இதற்காகவெல்லாம் அவர்களை யாரும் ஒதுக்கவோ, அவர்களின் ஈழ உணர்வை கொச்சைப்படுத்தவோ செய்யவில்லை. அப்படியிருக்க கத்திக்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பது, தடை செய்ய கோருவது முறையற்றது.

  எந்த ஒரு காரணத்தை முன்னிட்டும் ஒரு படைப்பைத் தடை செய்யக் கூடாது எனும் போது, தயாரித்தவருக்கு இலங்கை அதிபரின் உறவினர்களுடன் தொழில்ரீதியான நட்பு இருக்கலாம் என்ற காரணத்தை முன்னிறுத்தி, கத்தியை எதிர்ப்பதும் தடை செய்ய வலியுறுத்துவதும் நேர்மையான நடவடிக்கை கிடையாது.

  கமல்ஹாசன் சண்டியர் என்ற பெயரில் படம் எடுத்த போது, அது குறிப்பிட்ட சாதியினரின் திமிரைக் காட்டுகிறது என்று போராட்டம் நடத்தி, பெயரை மாற்ற வைத்தார் கிருஷ்ணசாமி. ஆனால் இன்று அதே சண்டியர் பெயரில் ஒரு படம் வெளியாகியிருக்கிறது. கிருஷ்ணசாமி எங்கு போனார்? போராட்டம் என்னானது? பாபா படத்தின் பெட்டியைக் கடத்தியதால் எதைச் சாதித்தனர் பாமகவினர்? மும்பை எக்ஸ்பிரஸின் போஸ்டரைக் கிழித்ததால் தமிழை வளர்த்துவிட்டார்களா விடுதலை சிறுத்தைகள்?

  திரைப்படங்களுக்கு எதிராக அரசியல் கட்சிகளும், சாதி சங்கங்களும், இந்திய, தமிழ் தேசியவாதிகளும் இதுவரை மேற்கொண்ட போராட்டங்களில் பெரும்பாலானவை அர்த்தமற்றவை. படம் சம்பந்தப்பட்டவர்களுக்கு மன உளைச்சலையும், பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தியதற்கு மேலாக இவர்களின் போராட்டத்தால் ஒரு பயனும் விளைந்ததில்லை. கத்திக்கு எதிரான இவர்களின் கர்ஜனையும் அப்படியானதே. இலங்கைக்கு நெருக்கடி கொடுக்கும் வேறு விஷயங்கள் உள்ளன. அதில் தங்களின் நேரத்தையும், உழைப்பையும் செலுத்தாமல் ஒரு திரைப்படத்தை எதிர்ப்பதில் தங்களின் ஆற்றலை வீணடிப்பது வெற்று விளம்பரத்துக்காக என்றே எதிர்காலம் பதிவு செய்யும்.

 5. vengatesan

  விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கி வரும் கத்தி படத்தை எதிர்ப்பது என்பதில் சில அமைப்புகள் உறுதியாக இருக்கின்றன. படம் சம்பந்தப்பட்டவர்கள் எதிர்ப்பாளர்களைச் சந்தித்து விளக்கிய பின்பும் நிலைமை சீரடையவில்லை.

  கத்தி படத்தை ஐங்கரன், லைகா புரொடக்ஷன் இணைந்து தயாரிக்கின்றன. இதில் லைகா புரொடக்ஷனின் நிறுவனர் சுபாஸ்கரண் அல்லிராஜா, இலங்கை அதிபர் ராஜபக்சேயின் நெருங்கிய உறவினர்களுடன் தொழில்முறை கூட்டு வைத்துள்ளார் என்பதுதான் குற்றச்சாட்டு. அது குறித்து ஈழத் தமிழர்கள் நடத்தும் இணையத்தளங்கள் ஆதாரத்துடன் கட்டுரை வெளியிட, தமிழகத்தில் கத்திக்கு எதிர்ப்பு உருவாகியது. கத்தி விஜய் படம் என்பதால் எதிர்ப்பு தீவிரமடைந்தது. அதற்குக் காரணம் உண்டு.

  நடிகை அசின், திரையுலகின் எதிர்ப்பை மீறி இலங்கை சென்றதுடன், இலங்கை அரசின் தூதுவர் போலவே செயல்பட்டார். அது தமிழர்களின் மனத்தில் கசப்பை உருவாக்கியது. அவரைத் தமிழ்ப் படங்களில் நடிக்க அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டது. அசினுக்கு யாரும் வாய்ப்பு தர தயங்கிய நிலையில் விஜய்யின் காவல்காரன் படத்தில் அசின் ஒப்பந்தம் செய்யப்பட்டார். விஜய் நினைத்திருந்தால் அசினை தவிர்த்து சர்ச்சையிலிருந்து விலகியிருக்க முடியும். ஆனால் எதிர்ப்பை மீறி அசின் விஜய்யின் நாயகியானார். இப்போது சர்ச்சைக்குள்ளான லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் கத்தி படத்தில் நடித்து வருகிறார். அதனால் இது திட்டமிட்ட செயல்தானோ என இயல்பாகவே சந்தேகம் வர வாய்ப்பு உள்ளது.

  ஆனால் இவையெல்லாம் ஒரு படத்தைத் தடை செய்யவும், அதனை எதிர்க்கவும் காரணமாகிவிடுமா? இலங்கையுடன் தொழில்முறை உறவு வைத்திருக்கும் எத்தனையோ வர்த்தக நிறுவனங்கள் தமிழகத்தில் உள்ளன. எத்தனையோ பேர் இலங்கையுடன் வர்த்தகம் செய்து வருகின்றனர். அவர்களையெல்லாம் விடுத்து கத்தியை மட்டும், அதனைத் தயாரித்தவர் இலங்கை அதிபரின் உறவினர்களுக்கு நெருக்கமானவர் எனக் கட்டம் கட்டுவது சரியான நடவடிக்கைதானா?
  கத்திக்கு எதிர்ப்பு தெரிவிப்பதா, கூடாதா என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை, அதனைத் தயாரித்தவருக்கு இலங்கை அரசுடன் தொடர்பு இருந்தால் கண்டிப்பாக படத்தை எதிர்ப்போம் என்று சொல்லியிருக்கும் விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் ஈழப் படுகொலைக்குப் பிறகு இலங்கை சென்று ராஜபக்சேயுடன் கைகுலுக்கியவர்தான், விருந்துண்டவர்தான்.

  இலங்கைக்கு எதிராகப் பாராளுமன்றத்தில் தீமானம் நிறைவேற்றக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்த சுஷ்மா சுவராஜுக்கும், பிஜேபிக்கும் ஆதரவாகக் கூட்டணி அமைத்துப் பிரச்சாரம் செய்தவர்தான் வைகோ. இதற்காகவெல்லாம் அவர்களை யாரும் ஒதுக்கவோ, அவர்களின் ஈழ உணர்வை கொச்சைப்படுத்தவோ செய்யவில்லை. அப்படியிருக்க கத்திக்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பது, தடை செய்ய கோருவது முறையற்றது.

  எந்த ஒரு காரணத்தை முன்னிட்டும் ஒரு படைப்பைத் தடை செய்யக் கூடாது எனும் போது, தயாரித்தவருக்கு இலங்கை அதிபரின் உறவினர்களுடன் தொழில்ரீதியான நட்பு இருக்கலாம் என்ற காரணத்தை முன்னிறுத்தி, கத்தியை எதிர்ப்பதும் தடை செய்ய வலியுறுத்துவதும் நேர்மையான நடவடிக்கை கிடையாது.

  கமல்ஹாசன் சண்டியர் என்ற பெயரில் படம் எடுத்த போது, அது குறிப்பிட்ட சாதியினரின் திமிரைக் காட்டுகிறது என்று போராட்டம் நடத்தி, பெயரை மாற்ற வைத்தார் கிருஷ்ணசாமி. ஆனால் இன்று அதே சண்டியர் பெயரில் ஒரு படம் வெளியாகியிருக்கிறது. கிருஷ்ணசாமி எங்கு போனார்? போராட்டம் என்னானது? பாபா படத்தின் பெட்டியைக் கடத்தியதால் எதைச் சாதித்தனர் பாமகவினர்? மும்பை எக்ஸ்பிரஸின் போஸ்டரைக் கிழித்ததால் தமிழை வளர்த்துவிட்டார்களா விடுதலை சிறுத்தைகள்?

  திரைப்படங்களுக்கு எதிராக அரசியல் கட்சிகளும், சாதி சங்கங்களும், இந்திய, தமிழ் தேசியவாதிகளும் இதுவரை மேற்கொண்ட போராட்டங்களில் பெரும்பாலானவை அர்த்தமற்றவை. படம் சம்பந்தப்பட்டவர்களுக்கு மன உளைச்சலையும், பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தியதற்கு மேலாக இவர்களின் போராட்டத்தால் ஒரு பயனும் விளைந்ததில்லை. கத்திக்கு எதிரான இவர்களின் கர்ஜனையும் அப்படியானதே. இலங்கைக்கு நெருக்கடி கொடுக்கும் வேறு விஷயங்கள் உள்ளன. அதில் தங்களின் நேரத்தையும், உழைப்பையும் செலுத்தாமல் ஒரு திரைப்படத்தை எதிர்ப்பதில் தங்களின் ஆற்றலை வீணடிப்பது வெற்று விளம்பரத்துக்காக என்றே எதிர்காலம் பதிவு செய்யும்.

 6. Karthik

  ஒரு படத்தை எதிர்ப்பதலோ அல்லது ஆதரிப்பதாலோ ஒருவரை தலைவராக ஏற்க முடியாது. சீமான் தன்னை பொறுத்தவரை கத்தி படம் தமிழருக்கு எதிரான கருத்தை கொண்டிருந்தால் எதிர்போம் இல்லை எதிர்க்க மாட்டோம் என்று சொல்லி இருக்கிறார். இதில் தவறு இருபதாக தெரியவில்லையே.

 7. மிஸ்டர் பாவலன்

  //கத்திக்கு எதிரான இவர்களின் கர்ஜனையும் அப்படியானதே.
  இலங்கைக்கு நெருக்கடி கொடுக்கும் வேறு விஷயங்கள் உள்ளன. //

  வெங்கடேசன் கருத்து சரி தான்!
  உதாரணமாக மாறனின் Spice-Jet நிறுவனம் இலங்கையுடன்
  வர்த்தக உத்தரவு வைத்துக் கொண்டு தினசரி விமானங்களை இயக்கி
  வருகிறது. ஆனால் கலைஞர் பல நாடக வசனங்களையும், கனிமொழி
  MP பதவி ராஜினாமா போன்ர நாடகங்களையும், TESO என்ற அமைப்பின்
  சார்பாக மீட்டிங்குகளும், போராட்டங்களும் நடத்தி வருகின்றார்கள்.

  விஜயின் கத்தி படத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவதாக
  மிரட்டுபவர்கள் Spice Jet விமானம் செல்வது பற்றி ஏன் குரல்
  கொடுப்பதில்லை? இது நடுநிலையாளர்கள் கேள்வி.

  -மிஸ்டர் பாவலன்

 8. Ilichavayan

  இலங்கை தமிழருக்காக விஜய் உண்ணாவிரதம் — நாடகம் போடுறதுக்கு சினிமா காரனுக்கு சொல்லியா குடுக்கணும்

  இவன் மொதல்ல ரஜினி தான் என் தலைவர்னு சொன்னான் அப்புறம் ரெண்டு படம் ஓடுனதும் எம் ஜி ஆர் தான் என் தலைவர்னு சொல்றான் .

  கத்தி படத்துல ரஜினி மட்டும் நடிச்சிருந்தா இந்த ஈழ வியாபரிக எல்லாம் சேர்ந்து அவர பாடா படுத்தி இருப்பானுங்க

  ஆக மொத்தம் இளிச்சவாயன் நம்ம மக்கள் தான்..

 9. s.vasanthan

  ஒரு படத்தை தடை செய்வது என்பது அரசாங்கம் எடுக்க வேண்டிய முடிவு ,ஆள் ஆளுக்கு சொல்வதையெல்லாம் செய்யகூடாது ,மற்றப்படி LYCA நிறுவனத்திற்கும் ராஜபக்ச குடும்பத்திற்கும் தொழில் உறவு இருப்பது 100 விகிதம் உண்மை யாரும் மறுக்க வேண்டாம் .இந்த உண்மையை தெரிந்து கொண்ட சீமான் போன்றவர்கள் ரகசியமாக பணத்தை கறந்து விட்டார்கள் ,(அது அரசியல்வாதிகளின் வேலை )ஆனால் நடிகர்களுக்கும் இயக்குனர்களுக்கும் மனசாட்சி வேண்டும் ,பணத்திற்காக யார் தயாரித்தாலும் நடிக்காதிங்க !மற்றது ஒரு அன்பர் ,40 வயதில் விஜய் சூப்பர் ஸ்டார் அந்தஸ்து பெற்று விட்டதாக எழுதியுள்ளார் ,அது மிகவும் தவறு ,உண்மையில் அவரின் படங்களை விட சூர்யா ,சிவகர்த்திகேயன் ,அஜித் படங்கள் நன்றாக ஓடுகிறது ,அவர்கள் தியட்டருக்கு பணம் கொடுத்து ஓட்டுவதில்லை,அதற்காக இவர்கள் சூப்பர் ஸ்டார் ஆக முடியுமா ?

 10. சுதந்திரன்

  பாவலன் அவர்களே, SpiceJet நிறுவனம் பற்றி கருத்து சொல்லி உள்ளீர்கள். நம் அரசாங்கமே இலங்கையுடன் நட்புறவு பூண்டுள்ளதே, அதற்கு இவர்கள் என்ன சொல்ல போகிறார்கள்?

  — சுதந்திரன்

 11. Deen_uk

  சீமான் அவர்கள் மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தேன்..தமிழனுக்கு சரியான ஒரு மாற்று சக்தி கிடைத்துள்ளது என்று சந்தோசமாக இருந்தது(தலைவர் கடைசி வரை அரசியல் வர மாட்டார்.)..சீமானின் ஈழ தமிழர் ஆதரவு பேச்சு,தமிழ் நாட்டின் அரசியல் பிரச்னைகள்,அதற்கான தீர்வு என அவரது ஒவ்வொரு வீடியோக்களையும் தேடி தேடி அவரது பேச்சை கேட்டு வந்தேன்.உண்மையில் அவரது பேச்சை கேட்டு தான் எனக்கு தமிழ் உணர்வு மேலும் அதிகரித்தது என சொல்லலாம்.இங்கு லண்டனில் ஈழ தமிழர் போராட்டங்களில் நானும் கலந்து கொண்டுள்ளேன்..சீமானின் ஒவ்வொரு பேச்சும் என்னை புல்லரிக்க வைத்தது உண்மை.அவரது பேச்சின் ரசிகனாக மாறிப்போனதும் உண்மை..ஆனால் இப்போது இவரது உண்மை முகம் தெரிந்தவுடன் சத்தியமாக மனது கஷ்டமாக உள்ளது.இதை சீமானிடம் எதிர் பார்க்கவில்லை.இவரும் ஒரு சராசரி அரசியல் வியாபாரி என்பதை நிரூபித்து விட்டார்..ஏதோ மக்கள் கத்தி படத்தின் காட்சிகளை எதிர்ப்பது போல பேட்டி தருகிறார்.லைகா தயாரிப்பு நிறுவனம் பற்றி பேசுவது இல்லை.அனைவரும் லைகாவுக்கு எதிராக போராடுவது தெரிந்தும் அது பற்றி பேசுவது இல்லை..கலைஞர் அவர்கள் எப்படி நாலு மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து போரை நிறுத்தி விட்டேன் என்று சொல்லி உலக தமிழர் மதிப்பை இழந்தாரோ,அதே போல ஒரே நாளில் சீமான் அவரது மதிப்பை உலக தமிழர் மத்தியில் இழந்து விட்டார்…தமிழனுக்கு விடிவு காலமே கிடையாது போலும்…யாரை நம்புவது என்றே தெரியவில்லை.

 12. Anniyan

  ஈழப் பிரட்சினையில் கருணாநிதியும், தி.மு.க.வும் போட்ட நாடகத்தை விடவா சீமானும், விஜய்யும், முருகதாசும் போடா போகிறார்கள்.?

 13. Yuvaraj

  In the movie 7thSense murugadoss narrated that bodhidharman is a tamilian…when dubbed into telugu he narrated that bodhidharman is a telungian…ivanunga panathukaaga ethavenalum pannuunvaanga paa ithellam ivanungalaku jujubee…

 14. linga

  சீமான் மாதிரி கேவலமான பிறவிய எங்கும் பார்க்க முடியாது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *