BREAKING NEWS
Search

சூப்பர் ஸ்டார் ரஜினி படத்தின் முதல் நாள் முதல் காட்சி காண காத்திருக்கும் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்!

சூப்பர் ஸ்டார் ரஜினி படத்தின் முதல் நாள் முதல் காட்சி காண காத்திருக்கும் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்!

rajini-rose-tailor

ரோஸ் டெய்லர்…. நியூஸிலாந்து அணியின் பிரபல கிரிக்கெட் வீரர். இவருக்கு தலைவர் ரஜினியின் லிங்கா படத்தை முதல்நாள் முதல் காட்சி பார்க்க விருப்பமாம்.

சூப்பர் ஸ்டாரின் ‘லிங்கா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிடப்பட்டது.

அதனை இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, “நிச்சயம் முதல் நாள் முதல் ஷோ பார்க்க வேண்டிய படம்” என்று குறிப்பிட்டு #thailavarrajnikanth #superstar #favorite #legend ஆகிய ஹேஷ்டேக்குகளை பதிவு செய்திருந்தார்.

தினேஷ் கார்த்திக்கின் ட்விட்டர் பக்கத்தை பின் தொடரும் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ரோஸ் டெய்லர், ‘லிங்கா’ குறித்த அந்தப் பதிவுக்கு பதில் அளித்திருந்தார். அதில், ‘உலகின் மிகச் சிறந்தவர்களில் ஒருவர்’ என நடிகர் ரஜினியை ரோஸ் டெய்லர் புகழ்ந்திருந்தார்.

ரோஸ் டெய்லருக்கு பதிலளித்த தினேஷ் கார்த்திக், “உங்களிடம் இருந்து இதைக் கேட்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. தலைவர் ரஜினிகாந்த் படத்தைப் பார்ப்பதற்கு நீங்களும் தயாராகுங்கள்,” என்று கூறியிருந்தார்.

அதற்கு ரோஸ் டெய்லர், “நிச்சயம்.. அடுத்த முறை நான் வரும்போது அழைத்துச் செல்லுங்கள்..” என்று பதிலளித்துள்ளார்.
 
-என்வழி




13 thoughts on “சூப்பர் ஸ்டார் ரஜினி படத்தின் முதல் நாள் முதல் காட்சி காண காத்திருக்கும் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்!

  1. Rajesh

    Tamilnadu , andra , Kerla , Karnataka , India , singapore , Malayashia , srilank,
    Japan , USA , UK , south africa , China – ———NOW ——–Newziland

  2. srikanth1974

    ஊரில் எல்லோரும் என்னோட சொந்தம்
    உள்ளபடி சொன்னா இது ஒன்னே என் செல்வம்

    ரொம்ப சந்தோஷமாகவும்,பெருமையாகவும் இருக்கு.

  3. kabilan.k

    நாடு கடந்து,மொழி கடந்து அனைவரையும் வசீகரிக்க தலைவர் ஒருவரால் தான் முடியும் ,…….

  4. குமரன்

    நல்லவனுக்கு எப்போதுமே ஆண்டவன் அருள் உண்டு. ஆண்டவன் அருள் இருந்தால் அனைவரும் அவரை விரும்புவர்.

    நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டிய செய்தி.

  5. Elango

    “எல்லா கோட்டையும் அழிங்க …நான் பரோட்டாவை முதலில் இருந்து சாப்பிடுகிறேன்” என்பது தான் இந்த Newzealand வீரரின் கருத்து நினைவு படுத்துகிறது 😀

  6. rajiniveriyan

    சூப்பர்… அப்போ நுசிலாந்தில் கூட நம்ம கட்சிக்கு ஓட்டு இருக்கு… 🙂

  7. குமரன்

    இந்த ஐ பி ன் லைவ் தொலைக்காட்சி பேட்டியில் ஒரு ஜப்பானியர், தலைவர் என்று சொல்வதும், பாஷா ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி என்று சொல்வதும், தான் ரஜினி ரசிகர் மன்றத்தில் இருப்பதாகவும் தமிழில் சொல்வதைக் கண்டு மகிழுங்கள்.

    https://www.facebook.com/Rajini.B.S.India?fref=photo

  8. குமரன்

    ///சூப்பர்… அப்போ நுசிலாந்தில் கூட நம்ம கட்சிக்கு ஓட்டு இருக்கு…///

    ஜப்பான்ல நம்ம ஓட்டு நெறய இருக்கு!

  9. pp

    rajini fulfill arnold wish please post the news why you are missed that news

    please create one page for our visitors

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *