BREAKING NEWS
Search

ஒரு ‘குற்றவாளி’ இப்படிக்கூட வழக்குப் போட முடியுமா? கடவுளே கடவுளே!!

பேசாம நீதிமன்றத்தையே கலைச்சிட்டா என்ன?!

பெங்களூர்: நாளுக்கு நாள் கழுத்தை இறுக்கிவரும் சொத்துக்குவிப்பு வழக்கை, நீர்த்துப் போக வைக்க ஜெயலலிதாவும் சசிகலாவும் செய்த அத்தனை முயற்சிகளும் படுதோல்வியில் முடிந்துவிட்ட நிலையில், இந்த வழக்கை விசாரித்துவரும் நீதிபதி மல்லிகார்ஜுனய்யாவையே நீக்க வேண்டும் என்று கோரி புதிய வழக்கு தொடர்ந்துள்ளார் ஜெயலலிதா.

தம் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்து வரும் நீதிபதி மல்லிகார்ஜூனய்யாவின் நியமனமே சட்டவிரோதமானது என அந்த மனுவில் ஜெயலலிதா கூறியுள்ளது.

தன்னை விசாரிக்கும் நீதிபதியையே நீக்க குற்றவாளி கோரும் வினோதமான வழக்காக இது பார்க்கப்படுகிறது.

1991-96- ம் ஆண்டில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தார் என்பது வழக்கு. இந்த வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றத்தால் பெங்களூருவில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது.

பல்லாண்டுகால இழுத்தடிப்புகளுக்குப் பிறகு தொடர்ச்சியான முட்டுக்கட்டைகளுக்கு மத்தியில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.

குறிப்பாக வழக்கை விசாரிக்கும் நீதிபதி மல்லிகார்ஜுனய்யா, எதற்கும் அசைந்து கொடுப்பதாக இல்லை. ஜெயலலிதா கோஷ்டியின் கண்ணில் விரலை விட்டு ஆட்டி வருகிறார் என்றால் மிகையல்ல.

இதுவரை ஜெயலலிதா அண்ட் கோ தொடர்ந்து கணக்கில்லாத வழக்குகள், ஆட்சேபங்களை அவர் கண்டுகொள்ளவே இல்லை.

இந்நிலையில் பெங்களூரு நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பில் ஒரு புதிய மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக மல்லிகார்ஜூனய்யாவை நியமித்ததே சடடவிரோதம் என்று கூறப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் அறிவுறுத்தலின்படி சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டிருந்தாலும் உயர்நீதிமன்றத்தை ஆலோசித்த பிறகே நீதிபதியை நியமித்திருக்க வேண்டும் என்றும் இந்த நடைமுறை மல்லிகார்ஜூனய்யா நியமனத்தில் கடைபிடிக்கப்படவில்லை என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல் இந்த வழக்கின் அரசு வழக்கறிஞர் ஆச்சார்யாவுக்கும் எதிராக பல மனுக்களை ஜெயலலிதா தரப்பு தாக்கல் செய்து ஓய்ந்து விட்ட நிலையில் தங்கள் வழக்கில் கடும் கண்டிப்பு காட்டி வரும் மல்லிகார்ஜூனய்யாவை வெளியேற்றும் வகையிலும் அதேபோல் இழுத்தடிப்பு யுக்தியாகவும் இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

எதற்கு இப்படி தலையைச் சுற்றி மூக்கைத் தொட வேண்டும்…. நாட்டில் நீதிமன்றங்களே இருக்கக் கூடாது… அப்படியே இருந்தாலும் அதில் எவ்வளவு ஊழல், முறைகேடு, அதிகார துஷ்பிரயோகம் செய்தாலும் தங்கள் பெயரில் மட்டும் வழக்கே இருக்கக் கூடாது என்று வேண்டுமானால் ஒரு வழக்கு போடலாமே…

மானங்கெட்டவர்கள் ஊருக்குப் பெரியவர்கள் என எத்தனை அழகாக சொல்லி வைத்திருக்கிறார்கள் முன்னோர்கள்!!

-என்வழி செய்திகள்
11 thoughts on “ஒரு ‘குற்றவாளி’ இப்படிக்கூட வழக்குப் போட முடியுமா? கடவுளே கடவுளே!!

 1. குமரன்

  நீதிபதி மல்லிகார்ஜுனையாவுக்கும், அரசு வழக்கறிஞர் ஆசார்யாவுக்கும் உயிருக்குப் பாதுகாப்பு வேண்டும்.

  ஜெயாவின் இந்த மனு நிராகரிக்கப் படும், ஆனால் அதற்குப் பின்னர் நீதிபதியின் உயிருக்கும் அரசு வழக்கறிஞரின் உயிருக்கும் பெரும் அச்சுறுத்தல் உள்ளது.

 2. Rajkumar.V

  மானங்கெட்டவர்கள் ஊருக்குப் பெரியவர்கள் என எத்தனை அழகாக சொல்லி வைத்திருக்கிறார்கள் முன்னோர்கள்!!

  Engapa Ponarau Nadunilaiyalar Mr.Pavalan.Avaroda comment enna?

 3. MANNAI SENTHIL

  இதன் பிறகு தீர்ப்பு ஒன்று தேவையா என்ன ?? இதுவே தவறை ஒத்து கொண்டதற்கு சமம். தமிழனுக்கு மானம் ஒன்றும் தேவையில்லை . அம்மா வாழ்க !!

 4. venkatb

  பேசாம நீதிமன்றத்தையே கலைச்சிட்டா என்ன?!

 5. மு. செந்தில் குமார்

  மானங்கெட்டவர்கள் ஊருக்குப் பெரியவர்கள். அதானே!

 6. enkaruthu

  ரொம்ப சின்ன புள்ள தனமா இருக்கே.இவ்வளவு நாளும் இந்த நீதிபதியின் முன் ஆஜராகும்பொழுது அவரின் நியமனத்தை பற்றி ஒன்றும் தெரியாதா இவர்களுக்கு.இப்படி கேட்பதிலையே ஜெயா ஊழல் பண்ணியுள்ளார் என்றும் தி.மு.க இவர் மேல் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த வழக்கை போடவில்லை என்று தெரிய வருகிறது.spectrum வழக்குக்கு மட்டும் வேகமாக கமெண்ட் போடும் கிருஷ்ணன் அவர்கள் ஜெயலலிதாவின் இந்த வழக்குக்கு பதில் சொல்ல போகிறார். .

 7. Rajkumar.V

  Nadunilayalar Mr. pavalan nan kekakara question kelam why Answer panarathe ila. DMK, Ila Kalaigar, pathi negative news vantha vega vegama comment podaravanga elam nadunilayalar nu solikaranga. Apidi Nadunilayalara iruntha comment poda vendiyathu thana?

 8. Rajkumar.V

  PAVALAN Nadunilyalar mugamudi potu ura emathitu irukaru. Why Jaya pathuna negative news kelam avar coment podaratu illa? engada karunanidiya pathi news varum thiti comment podalam nu than irukanga. Karunanidiya thiti comment potavanenlam Nadunilaiyalara? APA dinamalar, NamathuMGR, Dinamani than Ulagathulaye nadunilai pathirikaikal.

 9. ராஜ்

  இப்போ எனக்கு 32 வயசாகுது . எனக்கு தெரிஞ்சி என் வாழ்னாலுல இந்த கேசோட தீர்ப்ப செய்தியா பார்ப்பேன்ற நம்பிக்கை இல்லை. பேசாம நீதிபதி மல்லிகார்ஜூனய்யா, ஆச்சார்யா iruvarum செய்யற வேலைய விட்டுட்டு அண்ணா அசாரே குழுவுல சேர்த்துடலாம்.. haa haa haa 🙂

 10. பாவலன்

  //இப்போ எனக்கு 32 வயசாகுது . எனக்கு தெரிஞ்சி என் வாழ்னாலுல இந்த கேசோட தீர்ப்ப செய்தியா பார்ப்பேன்ற நம்பிக்கை இல்லை. // (ராஜ்)

  தினத் தந்தியில் ‘கன்னித் தீவு’ கதை முடிவதற்குள் இந்தக் கேஸ்
  விசாரணை முடிந்து விடும் எனத் தோன்றுகிறது.

  -பாவலன்

 11. தினகர்

  ”தினத் தந்தியில் ‘கன்னித் தீவு’ கதை முடிவதற்குள் இந்தக் கேஸ்
  விசாரணை முடிந்து விடும் எனத் தோன்றுகிறது.”

  அதாவது ஜெயலலிதா, சசிகலாவின் ஆயுட்காலத்திற்குள் இந்த விசாரணை முடியாது என்கிறீர்கள். அதற்காகத்தானே அவங்களும் நாளுக்கொரு நாடகம் நடத்தி நீதித்துறையையே கேவலப்படுத்திக்கிட்டு இருக்காங்க..

  மடியில் கனம் இல்லையென்றால் எதற்கு இந்த அசிங்கமான வேலை.. தைரியமாக வழக்கை எதிர்கொண்டு நிரபராதின்னு உலகத்திற்கு தெரிவிக்க வேண்டியது தானே..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *