BREAKING NEWS
Search

சோதனை தொடர்கிறது: இன்று மு.க. அழகிரியின் பண்ணை வீட்டில் நுழைந்தது சி.பி.ஐ!

சோதனை தொடர்கிறது: இன்று மு.க. அழகிரியின் பண்ணை வீட்டில் நுழைந்தது சி.பி.ஐ!

MK-Alagiriசென்னை: சொகுசுக் கார் மோசடி விவகாரத்தில் நேற்று மு.க.ஸ்டாலின் வீட்டில் ரெய்டு நடத்திய சிபிஐ அதிகாரிகள், இன்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரிக்குச் சொந்தமான பண்ணை வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர்.

சில ஆண்டுகளுக்கு முன் வெளிநாடுகளில் இருந்து விலை உயர்ந்த சொகுசு கார்கள் இறக்குமதி செய்ததில் ரூ.48 கோடி வரை வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

கார் டீலர் அலெக்ஸ், வருவாய் புலனாய்வு அதிகாரி முருகானந்தம் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் சி.பி.ஐ. தரப்பில் கூறப்பட்டது.

இதனையடுத்து சென்னையில் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் மு.க.ஸ்டாலின் வீடு உள்பட 32 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

பல கோடி மதிப்புள்ள ஹம்மர் சொகுசு காரை மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் வாங்கி இருந்தார். இதுதொடர்பாக மு.க. ஸ்டாலின் வீட்டில் அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக தெரிவித்தனர்.

இதேபோல் ஒரு விலை உயர்ந்த கார் மு.க.அழகிரி வீட்டிலும் இருப்பதாக சி.பி.ஐ. அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். எனவே ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள மு.க.அழகிரிக்கு சொந்தமான பண்ணை வீட்டிலும் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின்போது அங்கு கார்கள் எதுவும் இல்லாததால் அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.

காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க. விலகிய அடுத்த நாளிலிருந்து சி.பி.ஐ. சோதனை நடத்தி வருவது அரசியல் வட்டாரத்தில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.  மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் இந்த சோதனை பற்றி கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

ஆனாலும் சிபிஐ சுதந்திரமான அமைப்பு என்பதை நம்ப வைக்கவோ என்னமோ… திமுக பிரமுகர்கள் வீடுகளில் சோதனை தொடர்கிறது.

மு.க.அழகிரியும், நெப்போலியனும் டெல்லியில் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனை சந்தித்து பேசினார்கள். சுமார் ஒரு மணி நேரம் ரகசியமாக இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க. விலகியது தொடர்பாக தனது கவலையை மு.க.அழகிரி பகிர்ந்து கொண்டதாக காங்கிரஸ் வட்டாரத்தில் கூறப்பட்டது.

ஆனால் அடுத்த நாளே இந்த சோதனை நடந்துள்ளது குறிப்பபிடத்தக்கது.

-என்வழி செய்திகள்




One thought on “சோதனை தொடர்கிறது: இன்று மு.க. அழகிரியின் பண்ணை வீட்டில் நுழைந்தது சி.பி.ஐ!

  1. குமரன்

    அடேங்கப்பா வரி ஏய்ப்பே 48 கோடி ரூபாய் என்றால் கார் விலை எவ்வளவோ?

    ஆங், எல்லாம் உழைச்சு சம்பாரிச்ச சொத்து!

    கடினமான உழைப்பாளிங்கப்பா!
    கடினமான உழைப்பாளிங்க !!

    பத்து/ இருபது/ அம்பது ரூபா வாங்கும் சோசியந்தான் உழைக்காது சமுதாயத்தைச் சுரண்டுபவன்!!!

    என் கருத்து நலம்தானே?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *