BREAKING NEWS
Search

அசைவம் சாப்பிடுபவர்கள் அயோக்கியர்களா… சிபிஎஸ்ஸி கிளப்பும் அடுத்த சர்ச்சை!

அசைவம் சாப்பிடுபவர்கள் அயோக்கியர்களா… சாதி வெறியர்கள் கையில் சிக்கியுள்ள சிபிஎஸ்ஸி கிளப்பும் சர்ச்சை

டெல்லி: மட்டன், சிக்கன் போன்ற அசைவ உணவு சாப்பிடுபவர்கள் எல்லாம் பொய் சொல்லுவார்கள், ஏமாற்றுவார்கள், செக்ஸ் குற்றங்களில் அதிகம் ஈடுபடுவார்கள் என்று 6 ம் வகுப்பு சி.பி.எஸ்.சி பாடப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

சிபிஎஸ்ஸியின் இந்த மாத ‘சர்ச்சை கோட்டா’ இது!

அசைவ உணவே பிரதானமாக உள்ள ஒரு நாட்டில், எந்த ஒரு முன்யோசனையுமின்றி, சிலரின் தீவிர சைவப் பற்று (அது சாதிப் பற்றாகவும் இருக்கலாம்!) இப்படி பொய்களை படமாக்கச் செய்திருக்கிறது.

9ம் வகுப்பு சி.பி.எஸ்.சி பாடப் புத்தகத்தில் நாடார்களைப் பற்றி கூறப்பட்டுள்ள சர்ச்சையே இன்னும் ஓய்ந்தபாடில்லை. ஆங்காங்கே போராட்டங்களும், ஆர்பாட்டங்களும் நடந்து கொண்டிருப்பது நினைவிருக்கலாம். அதற்கு முன்பு அண்ணல் அம்பேத்கரை வம்புக்கிழுத்திருந்தனர்.

இப்போது அசைவம் சாப்பிடும் ஒட்டுமொத்த பேரையும் திட்டமிட்டு அவமதித்துள்ளனர்.

6ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் ‘நியூ ஹெல்த்தி வே’ என்ற பெயரில் உள்ள பாடத்தில் ஹெல்த், ஹைஜீன், பிசியாலஜி, பாதுகாப்பு, பாலியல் கல்வி, விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவை பற்றி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதில்தான் அசைவ உணவு சாப்பிடுபவர்கள் எளிதில் ஏமாற்றுவார்கள், பொய் கூறுவார்கள், கொடுத்த வாக்கை காப்பாற்ற மாட்டார்கள், நாணயம் தவறி விடுவார்கள், கெட்ட வார்த்தை பேசுவார்கள், வன்முறையாளர்களாக இருப்பார்கள், செக்ஸ் குற்றங்களில் அதிகம் ஈடுபடுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது (நடைமுறையில் தீவிர சைவப் பிரியர்களே இத்தனை குற்றங்களிலும் ஈடுபடுகிறார்கள் என்பது, இப்படி ஒரு பாடத்தை புனைந்ததிலிருந்தே தெரிகிறது!).

மாணவப் பருவத்தில் இதுபோன்று கூறப்படும் தகவல்களால் அசைவ உணவு உண்பவர்கள் மீது தவறான கண்ணோட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதை நீக்கவேண்டும் என்று அசைவ உணவுப் பிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து கருத்து கூறியுள்ள மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பல்லம் ராஜூ இது எதிர்பாராத நிகழ்வு என்றும், குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றி கூறும் போதோ, அவர்களின் பழக்க வழக்கங்களைப் பற்றி கூறும் போதோ கவனமாக குறிப்பிட வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தார்.

ஏற்கெனவே தனியார் பள்ளிகளில், மாணவ மாணவிகள் அசைவம் கொண்டு செல்ல அறிவிக்கப்படாத தடை உள்ளது. பிராமணர்கள் நடத்தும் பெரும்பாலான பள்ளிகளில் அசைவம் உண்பது குற்றம் அல்லது அவமானம் என்பது போன்ற பிரச்சாரங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

இதனால் பள்ளி சென்று வீடு திரும்பும் குழந்தைகள் அன்றைய உணவு அசைவமாக இருந்தால் சாப்பிட மறுத்து அடம்பிடித்து வருகின்றன. இப்போது இந்தப் பிரச்சாரத்தை பாடப்புத்தக வடிவில் அரங்கேற்றியுள்ளனர்.

நாடு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சாதி வெறியை நோக்கிப் போய்க்கொண்டிருப்பதை பட்டவர்த்தனமாக உணர்த்தும் செய்திகள் இவை!

-என்வழி செய்திகள்
7 thoughts on “அசைவம் சாப்பிடுபவர்கள் அயோக்கியர்களா… சிபிஎஸ்ஸி கிளப்பும் அடுத்த சர்ச்சை!

 1. ananth

  ஆராய்ச்சி மூலமாக இது தெரிய வந்தால் ஒப்புக்கொள்ளலாம். பசுவுக்கும் புலிக்கும் வெவேறு குணங்கள் வுண்டு என்பது எல்லோருக்கும் தெரியும். பசுதோல் போர்த்திய புலிகளைத்தான் நம்ப முடிவதில்லை .

 2. தினகர்

  “நடைமுறையில் தீவிர சைவப் பிரியர்களே இத்தனை குற்றங்களிலும் ஈடுபடுகிறார்கள் என்பது, இப்படி ஒரு பாடத்தை புனைந்ததிலிருந்தே தெரிகிறது”

  நுணலும் தன் வாயால் கெடும் ன்னு சொன்னது யாரப்பா?. இதோ உதாரணம் தீவிர சைவப்பிரியர்கள்.

  6ம் வகுப்பு படிக்கும் இளம் மொட்டுகளுக்கு இந்த தீய விஷயங்களைப் பற்றி சொல்லித்தான் தீர வேண்டுமா? சின்னஞ்சிறு பிஞ்சுகளுக்கு இவ்வளவு கொடூரமான விஷயங்களை கோடிட்டு காட்டுவதிலிருந்து, தீவிர சைவப் பிரியர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று,தங்களை தாங்களே வெளிப்படுத்தி விட்டார்கள்.

 3. Kumar

  அந்த தகவல் தவறானது.அதில் மாற்றமில்லை.ஆனால் கொடுமை என்ன வென்றால் இப்போது கூறுகிறார்களே என்னமோ ஊடக வெறி ,தீவிர சாதி வெறி என்று இதோ சற்று வாரங்கள் முன்பு நடந்த தர்மபுர சாதி கலவரத்தை எதிர்த்து ஒரு வார்த்தை இவர்கள் வெளியிட்டர்களா?.இல்லை .கேட்டால் தாங்கள் சாதியை எதிர்கிரார்கலாம் .ஒரு சாதாரண மனித நேய நோக்கோடு கூட தருமபுரி சாதி கலவரத்தை தவறு என்று சொல்ல முடியவில்லை.ஒரு தவறை தவறு என்று சொல்ல துணிவில்லை.எங்கே தமிழினம் செல்கிறதோ.

 4. மிஸ்டர் பாவலன்

  புத்தகத்தின் அட்டையில் எழுதியவர் பெயர் David S. Poddar
  எனப் போட்டிருக்கிறது. ஒரு வேளை இந்தப் புத்தகத்தை
  எழுதியவர் “அய்யர்”, அல்லது, “அய்யங்கார்” ஆக இருந்தால்
  இங்கு வரும் பதிவுகள், கட்டுரைகள் எப்படி இருந்திருக்கும்?!

  -== மிஸ்டர் பாவலன் ==-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *