BREAKING NEWS
Search

நானா… இளையராஜாவுக்கு மாற்றா.. நெவர்! – சீறிய ரஹ்மான்!

நானா… இளையராஜாவுக்கு மாற்றா.. நெவர்! – சீறிய ரஹ்மான்!

rehman_illayaraja_20090309

ளையராஜாவுக்கு மாற்று என்று யாருமில்லை. இன்னொரு முறை இப்படி ஒரு கேள்வியை என்னிடம் கேட்க வேண்டாம், என கோபமாக பதிலளித்தார் ஏஆர் ரஹ்மான்.

அமைதியானவராக, சாந்த சொரூபியாகத்தான் ஆஸ்கர் நாயகன் ரஹ்மானைப் பெரும்பாலானோர் பார்த்திருப்பார்கள். ஆனால் சமீபத்தில் அவர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்று சென்னையில் நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த மீடியாக்காரர்கள், ரஹ்மான் உள்ளே நுழைந்ததும் ஒரு கேள்வியை எழுப்பினர்.

நீங்கள்தான் அடுத்த இளையராஜா என்பதைக் கேட்கும்போது எப்படி உணர்கிறீர்கள்? என்றனர்.

AR_Rahman_With_Ilayaraja

சட்டென்று நிமிர்ந்து ரஹ்மான், “இன்னொரு முறை இப்படிச் சொல்லாதீர்கள். இளையராஜாவுக்கு மாற்றே கிடையாது. அவர் இடத்தில் யாரையும் வைக்கவும் முடியாது. இந்த மாதிரி முட்டாள்தனமான கேள்விகளை என்னிடம் கேட்டு என்னிடமிருந்து எதையாவது பதிலாகப் பெற்று விடலாம் என நினைக்காதீர்கள்,” என்றார் ஆவேசமாக.

ஆடிப் போனார்கள் சுற்றியிருந்தவர்கள். கேள்வி கேட்டவரும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டபடி அங்கிருந்து நகர்ந்தார்.

-என்வழி




2 thoughts on “நானா… இளையராஜாவுக்கு மாற்றா.. நெவர்! – சீறிய ரஹ்மான்!

  1. குமரன்

    ரஹ்மான் அமைதி, அடக்கத்தின் உறைவிடம். எப்போதும் சிரித்த முகம். இன்சொல் அல்லாது வேறெதுவும் கூறாத நற்பண்பினர்.

    அவரையும் வெறுப்பேற்றும் பத்திரிகையாளர்களை என்ன சொல்வது?

    கேள்வி என்ற பெயரில் எதை வேண்டுமென்றாலும் கேட்கலாம், கொஞ்சம் கண்டித்தால் உடனே கருத்து சுதந்திரம், பத்திரிக்கை சுதந்திரம் என்று புரட்டு வாதம் செய்வது என்று சிலருக்கு இருக்கும் போக்கை பத்திரிகையாளர்கள் மாற்றிக் கொள்ளவேண்டும்.

    ரஹ்மான் கொடுத்த பதிலடி சரியானது. ஆனால் அந்தப் பத்திரிகையாளர் இதை மனதில் வைத்துக் கொண்டு சமயம் வரும்போது ரஹ்மானைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் நிச்சயம் எழுதுவார். இதை சரியான முறையில் ஏற்கும் பக்குவம் பலருக்கு இல்லை.

  2. elango

    இவருக்கே இவ்வளவு கோபம் வருகிறது என்றால் .,.அப்பாவி விஜயகாந்திற்கு கோபம் வர கூடாதா???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *