BREAKING NEWS
Search

ரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை!

ர்நாடகா தேர்தலை முன்னிட்டு காவிரி மேலாண்மை விவகாரத்தில் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருவது ஊரறிந்த உண்மை. ஆனால் ரஜினியின் தலையை உருட்டி, பிரஸ் மீட்டெல்லாம் நடத்தி இந்த பிரச்சனையை ரஜினியின் பக்கம் திருப்ப பார்த்தார்கள் முன்னாள் திரையுலக பிரபலங்கள். கர்நாடகா தேர்தல் முடியும் வரையிலும் வாரியம் அமைப்பது தொடர்பான வேலைகள் ஒரு அங்குலம் கூட நகரப் போவதில்லை. ஆனால் பாரதிராஜா உள்ளிட்டவர்களை எவ்வுளவு தொலைவில் தேடினாலும் இவர்கள் காண கிடைக்கவில்லை. பேட்டி, விவாதங்கள், ப்ரீஸ்மீட் என்று விளம்பரம் தேடினார்களே தவிர விடையைத் தேடவில்லை.

இவர்களின் நோக்கம் ஒன்றுதான்… அது ரஜினி எதிர்ப்பு! காவிரி பிரச்சனையெல்லாம் கிடையாது, 2009 ல் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பில் வாரியம் அமைக்க வேண்டும் என்று வந்தது, அப்போது ஆட்சியில் இருந்த தி.மு.க – காங்கிரஸ் இதைச் செய்யவில்லை . நடைப்பயணம் செய்வதும் மகனுக்கு பச்சைத்துண்டு போட்டு விவசாயப் போராளியாக மாத்தி கேலிக்கூத்து செய்பவர்களை கேள்வி கேட்க, ஒரு பிரஸ் மீட் வைக்க திரணியில்லை இவர்களுக்கு. அதிகாரத்தில் இருந்து கோட்டைவிட்ட அரசியல் தலைவர்களையும், கட்சிகளையும் விட்டுவிட்டு ரஜினியை இவர்கள் விமர்சிப்பது வேடிக்கை.

ரோட்டில் இறங்கி போராடி அடி வாங்குகிறோம், வீட்டிலிருந்தபடியே ட்வீட் போடுகிறார் என்கின்றனர். முதலில் ரஜினி ஒரு காந்தியவாதி அகிம்சை வழி போராட்டங்களை மட்டுமே ஆதரிப்பவர். ஒரு நாள் முன்னதாக வள்ளுவர் கோட்டத்தில் நடந்த உண்ணவிரதத்தில் கலந்து கொண்டாரே, வள்ளுவர் கோட்டம் ரோட்டில்தானே உள்ளது. நீங்கள் டிவி பேட்டியில் கலவரம் செய்வோம், வீரர்களைச் சிறை பிடிப்போம், ராணுவமே வந்தாலும் எதிர்ப்போம் என்று வாக்குமூலம் கொடுத்ததால் போலீசுக்கு தடியடி நடத்த அரசு உத்தரவிட்டிருக்கும், அதுதான் ப்ரோடோகால். ஏதோ அமைதிப்போராட்டம் நடத்த அனுமதி வாங்கி அங்கு வந்து போலீஸ் அநியாயம் பண்ணியது போல ரஜினி மீது பாய்கின்றனர்.

2002ல் இப்படித்தான் கூட்டமாக நெய்வேலி சென்று காவிரியை மறந்து ரஜினியை வசைபாடும் போராட்டத்தைச் செய்தனர். அன்று வென்றது ரஜினிதான், அவரின் அகிம்சை போராட்டம்தான். சேப்பாக்கத்தில் உட்கார்ந்த இடத்தில் ஒரு வார்த்தை கூட பேசாமல் சாதித்தார். அன்று மாலையே கர்நாடக முதல்வர் ரஜினிக்கு பதில் சொன்னார், மத்திய அரசு ரஜினியின் நதி நீர் இணைப்பு திட்டத்தை பற்றி நாடாளுமன்றத்தில் பேசியது. தீர்வைச் சொன்னதோடு ஓடிவிடவில்லை ரஜினி, அன்றைய பிரதமரிடம் சென்னை ஏர்போர்ட்டில் மனு கொடுத்து, தனி மனிதாக காவிரி இயக்கம் அமைத்து பல முயற்சிகளையும் செய்தார்.

இதெயெல்லாம் இவர்கள் மறக்கவில்லை, ஆனால் மறைக்கப் பார்க்கிறார்கள் என்பதே உண்மை. இப்போது இதையெல்லாம் சொல்லி அவர் ஓட்டோ விளம்பரமோ தேடப்போவதில்லை அதுதான் ரஜினி.

அரசியலில் இல்லாத ஒரு தனி மனிதன் பெரிய முயற்சிகளை காவிரிக்காக செய்தது உண்டென்றால் அது ரஜினி மட்டுமே. இது மிகைப்படுத்தப்பட்டதல்ல, இங்கு வாரியம் வேண்டும் என கூறும் அதே கட்சிகள், கர்நாடகாவில் வாரியம் வேண்டாம் என போராடுகின்றன. அதைக் கேட்க ஒருவருக்கும் திராணியில்லை. விளம்பரப் போராளிகள் நியூஸ் வேல்யூ இருக்கும் வரை பேசுவார்கள் அவ்வளவே. காவிரியை நம்பாமல் தண்ணீர் பிரச்சனைக்கு மாற்றுத் தீர்வு காணும் முயற்சிகளில் ரஜினி இறங்கி உள்ளார். அதில் வெற்றியும் காண்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

-சுப்ரமணியன்
4 thoughts on “ரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை!

 1. Ragsvan

  Sir…ungaloda ovovoru rajini article um padikum podhu goosebumps dhan…na rajini rasigan sollikaradhula romba perumaya iruku…thank u so much sir

 2. murugan

  arumaiyaana padhivu
  padhivirkku poruththamaana pugaippadam
  vaalthukkal kaavalarey

  indha kaliyughaththil
  peychchaal saadhikka mudiyaadhadhai amaidhiyum mounamum saadhikkum
  nam thalaivar saadhiththukkaattuvaar

  endrendrum thalaivarudan payanippom

 3. vimal

  I like kaala audio launch rajini sir speech,” yaar ena sonalum en pathayil naa poitu iruben”. Nathigalai inaibathe en kanavu, awesome sir, you are great

 4. yasin

  Mr. Dhanus please post pone kala release 7th June instead of release eid because of Muslim fans during of Ramadan difficult to watching movie
  please send the dhanus mobile no also
  Mr. vinodth

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *