BREAKING NEWS
Search

அறிவிப்புக்குப் பின் இன்னும் அதிகமான மின்வெட்டு – மக்களைத் தொடரும் துன்பம்!

அறிவிப்புக்குப் பின் இன்னும் அதிகமான மின்வெட்டு – மக்களைத் தொடரும் துன்பம்!

சென்னை: சென்னையிலும் புறநகர்களிலும் 2 மணி நேர மின்வெட்டு, மாநிலத்தின் பிற பகுதிகளில் 4 மணி நேரம் மின்வெட்டு என்று மின்வாரியம் அறிவித்து அது நேற்று முதல் நடைமுறைக்கு வந்ததாக கூறப்பட்டாலும் தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து பல மணி நேரம் மின்தடை நீடித்ததால் மக்கள் கடும் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர்.

குறிப்பாக மாணவர்களும் முதியோரும் பெரும் அவதிக்குள்ளாகிவிட்டனர்.

புதிய மின்தடை திட்டத்தை நேற்று முதல் மின்வாரியம் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அமல்படுத்தியதாக அறிவித்தது. அதன்படி இதுவரை ஒரு மணி நேர மின்வெட்டை சந்தித்து வந்த சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் 2 மணி நேரமாக மின்வெட்டு உயர்த்தப்பட்டது. மேலும் பல பகுதிகளில் அறிவிக்கப்படாமல் 1 மணி முதல் 2 மணி வரை பழுதுபார்ப்பு என்ற பெயரில் மின்சாரத்தை துண்டித்தனர்.

ஆக சென்னை மாநகரின் பல பகுதிகள், குறிப்பாக புறநகர்களில் 4 மணிநேரம் மின் வெட்டப்பட்டது.

மாநிலத்தின் பிற பகுதிகளில் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த 10 மணி நேர மின்வெட்டு என்பது 4 மணி நேரமாக குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இங்குதான் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மின்வெட்டின் அளவு தொடர்ந்து அப்படியேதான் இருப்பதாக மக்கள் கொந்தளிப்புடன் கூறியுள்ளனர்.

உதாரணத்திற்கு நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் கோடி மாவட்டங்களின் நகரப் பகுதிகளில் தொடர்நது 8 மணி நேரத்துக்கும் அதிகமாக மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது. அதேசமயம் கிராமப்புறங்களில் இதை விட கூடுதலான மின்வெட்டை அமல்படுத்துவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதே நிலைதான் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் காணப்படுகிறது. சில இடங்களில் மட்டுமே நான்கு மணி நேர மின்வெட்டு அமலாகியுள்ளதாம். பெரும்பாலான இடங்களில் 5 மணி நேரம், 6 மணி நேரம் என்றுதான் உள்ளதாம். பெரும்பாலான இடங்களில் 8 மணி நேரமே தொடர்கிறதாம்.

மதுரையில் மட்டும் இதுவரை 8 மணி நேரமாக இருந்த மின்வெட்டு 5 மணி நேரமாக குறைந்துள்ளதாம். அதாவது மின்வாரியம் சொன்ன 4 மணி நேர மின்வெட்டாக அது இன்னும் குறைக்கப்படவில்லை.

ஏன் இந்தக் குழப்பம் என்று மின்வாரியத் தரப்பி்ல விசாரித்தபோது, பல ஊர்களில் லோக்கல் ஆளுங்கட்சிப் பிரமுகர்களின் தலையீடு காரணமாக, முறையாக மின் விநியோகத்தை வழங்க முடியவில்லை. மின்வெட்டையும் சரியாக அமல்படுத்தவில்லை என்றனர் அதிகாரிகள்.

பல மின் அலுவலகங்களுக்கு உத்தரவும் முறைப்படி சென்று சேரவில்லையாம். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மின்விநியோக அலுவலகங்களுக்கு இதுதொடர்பான உத்தரவு கயத்தாரிலிருந்து வர வேண்டுமாம். ஆனால் இன்னும் இந்த உத்தரவு அங்கிருந்து போகவில்லையாம். இனால் தொடர்ந்து பழைய மின்வெட்டே நீடிக்கிறதாம்.

இதற்கிடையே, மின்வெட்டை முறையாக சரியாக அமல்படுத்துகின்றனரா, விதிமீறல் நடக்கிறதா என்பதைக் கண்காணிக்க 32 மாவட்டங்களுக்கும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளனவாம். இதில், மின் மண்டல தலைமை பொறியாளர்கள் தலைமையில், செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர்கள் ஆகியோர் இடம் பெற்றுள்ளதாக தெரியவிந்துள்ளது.

முதல்வரே நேரடியாக ஆலோசனை நடத்தி பல கட்ட ஆய்வுக்குப் பின்னர்தான் திருத்தப்பட்ட மின்வெட்டை மின்வாரியம் அறிவித்தது. அதை உடனடியாக அமல்படுத்தாமல் இப்படியா குழப்புவது. இது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல உள்ளது என்று தமிழக மக்கள் குமுறுகிறார்கள்.

-என்வழி செய்திகள்




7 thoughts on “அறிவிப்புக்குப் பின் இன்னும் அதிகமான மின்வெட்டு – மக்களைத் தொடரும் துன்பம்!

  1. R.Ramarajan-Madurai

    In Madurai also having more than 8 hours of power cut.
    This clearly indicates Jayalalitha’s inability in administration. She have no knowledge . Past 9 months no improvement , no welfare plan in TN . She must openly accept his foolishness and resign his post. How she tell with in 3months powercut issue will solved?

  2. மதுரைக்காரன்

    மதுரைல இன்னும் எட்டு மணி நேரம் தான் பவர் கட் ஆகுது. நீங்கள் கூறி உள்ளபடி ஐந்து மணி நேரமாக குறைக்கப்படவில்லை. நான் கூறுவது மதுரை சிம்மக்கல் ஏரியா

  3. R.Ramarajan-Madurai

    Neenglum vellalam Oru kodi question
    ஏரியால கரண்ட் எப்ப வரும்.? A.எனக்கு தெரியாது B.உனக்கு தெரியாது C.TNebக்கு தெரியாது D.யாருக்கும் தெரியாது. NVOK

  4. SHAIKDAWOOD

    நாலு மணி நேரந்தான் பவர்கட்டு என எல்லா பத்திரிக்கைகளும் பொய் சொல்லி அம்மா வின் அரசை அசிங்கபடு த்திவிட்டர்கள்.இப்ப எங்க திருச்சி யில் 28 -2 -12 அம்மா மேல சத்தியமா 7 மணிநேர பவர்கட் . அம்மாவுக்கு
    இது தெரிஞ்சா எல்லா பத்திரிக்கைகள் மேல கேஸ் போடும் .சங்கர் சொல்லுறார் எல்லாம் நன்மைக்கே .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *