BREAKING NEWS
Search

நரேந்திர மோடி என்னைச் சந்தித்ததில் அரசியல் இல்லை… நான்தான் தேநீர் விருந்துக்கு அழைத்தேன் – ரஜினி

நரேந்திர மோடி என்னைச் சந்தித்ததில் அரசியல் இல்லை… நான்தான் தேநீர் விருந்துக்கு அழைத்தேன்! – ரஜினி

rajini-modi meet

சென்னை: நரேந்திர மோடி என்னைச் சந்தித்ததில் அரசியல் இல்லை… நான்தான் தேநீர் விருந்துக்கு அழைத்தேன்! – ரஜினி

சென்னை: நரேந்திர மோடியும் நானும் பரஸ்பர நலம் விரும்பிகள். அவர் என்னைச் சந்தித்ததில் எந்த அரசியலும் இல்லை, என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இன்று மாலை ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்தில் அவரைச் சந்தித்துப் பேசினார் நரேந்திர மோடி.

இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்றும், நண்பர் ரஜினிக்கு புத்தாண்டு வாழ்த்துச் சொல்லவே அவரைச் சந்தித்தேன் என்றும் மோடி கூறியிருந்தார்.

ரஜினி விளக்கம்

பின்னர் இதுகுறித்துப் பேசிய ரஜினி, “நரேந்திர மோடியும் நானும் பரஸ்பர நலம் விரும்பிகள். நான் மருத்துவமனையில் உடல் நலமில்லாமல் இருந்த போதே என்னைப் பார்க்க வந்தவர் மோடி. அவரை நான்தான் என் வீட்டுக்கு தேநீர் விருந்துக்காக அழைத்திருந்தேன்.

மோடி சிறந்த தலைவர். நிர்வாகியும் ஆவார். அவர் நினைப்பது வெற்றியடைய வாழ்த்துகள்,” என்றார்.

-என்வழி ஸ்பெஷல்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *