BREAKING NEWS
Search

‘நோ.. பாலிடிக்ஸ் ப்ளீஸ்.. இங்கே அதைப் பேச விரும்பவில்லை’ – கோவாவில் தலைவர் ரஜினி பேட்டி

‘நோ.. பாலிடிக்ஸ் ப்ளீஸ்.. இங்கே அதைப் பேச விரும்பவில்லை’ – கோவாவில் தலைவர் ரஜினி பேட்டி

rajini-politics

பனாஜி: நோ பாலிடிக்ஸ்… அரசியல் பத்தி இங்கே பேச விரும்பவில்லை என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று பனாஜியில் பேட்டியளித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்துக்கு இந்த ஆண்டின் சிறந்த திரைப் பிரபலம் என்ற சிறப்பு விருதினை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்திய சினிமா நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதையொட்டி உருவாக்கப்பட்டுள்ள விருது இது.

இன்று கோவாவில் தொடங்கும் சர்வதேச திரைப்பட விழாவில் இந்த விருதினை அமிதாப் பச்சன் முன்னிலையில் ரஜினிக்கு வழங்குகிறது மத்திய அரசு.

இதற்காக இன்று கோவாவில் உள்ள பனாஜி விமான நிலையத்தில் வந்திறங்கினார் ரஜினி. அவருடன் மனைவி லதாவும் வந்திருந்தார். ரஜினியிடம் தனியார் தொலைக்காட்சி சேனலான என்டிடிவி அவரது அரசியல் திட்டம் குறித்து கேள்வி எழுப்பியது.

அதற்கு பதிலளித்த ரஜினி, ‘இல்லை.. அரசியல் பற்றி இங்கே எதுவும் பேச விரும்பவில்லை,” என்றார்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை சென்னையில் நடந்த லிங்கா இசை வெளியீட்டு விழாவில் “அரசியலில் இறங்க எனக்கு பயமில்லை.. ஆனால் தயக்கமிருக்கிறது. அதனால்தான் ஆண்டவன் முடிவுக்குக் காத்திருக்கிறேன்,” என்றார்.

இதைத் தொடர்ந்து தமிழக மீடியா மற்றும் கருத்து சொல்லிகள் பரபரப்பு கிளப்பி வந்தனர். பல்வேறு விவாதங்கள் அரங்கேறின.

இந்த நிலையில்தான் அரசியல் பற்றி இப்போது பேச விரும்பவில்லை என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அதே நேரம், அவரது இந்த சிறு பேட்டியை, ‘எனக்கு அரசியலே வேண்டாம், நான் ஒரு போதும் வரமாட்டேன்’ என ரஜினி கூறியதாக அந்த தொலைக்காட்சியின் இணையதளத்தில் செய்தி வெளியிட்டுள்ளனர்.

இதோ அந்தப் பேட்டியின் வீடியோ:

-என்வழி




2 thoughts on “‘நோ.. பாலிடிக்ஸ் ப்ளீஸ்.. இங்கே அதைப் பேச விரும்பவில்லை’ – கோவாவில் தலைவர் ரஜினி பேட்டி

  1. Deen_uk

    தலைவர் மிகுந்த உற்சாகத்துடனும் ஆரோக்கியமாகவும் சந்தோசமாகவும் பேசிய இந்த வீடியோ பார்க்க சந்தோசமாக இருந்தது.இந்த உற்சாகமும் ஆரோக்கியமும் தான் தலைவரிடம் எங்களது தேவை.அரசியல்,விமர்சனங்கள் என விளம்பர,பத்திரிகை வருமானத்துக்காக அவரை பாடாய் படுத்தாமல்,அவரை நிம்மதியாக இருக்க விடுங்கள் இதே சந்தோசத்துடன்.
    வீடியோ பகிர்ந்தமைக்கு நன்றி வினோ.

  2. kumaran

    தலைவர் எனக்கு தெரிந்து தவறி கூட தவறா பேசியதில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *