BREAKING NEWS
Search

தலாஷில் ரஜினி நடிக்கவில்லை! – இயக்குநர் விளக்கம்

தலாஷில் ரஜினி நடிக்கவில்லை! – இயக்குநர் விளக்கம்

சில தினங்களுக்கு முன் பாலிவுட்டைக் கலக்கிய செய்தி, அமீர் கான் தொடங்கவிருக்கும் புதிய படம் தலாஷில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு பாடலுக்கு நடிக்கப் போகிறார் என்பதுதான்.

இதனை பல மும்பை இணையதளங்களும் உறுதியான செய்தியாகவே வெளியிட்டிருந்தன. அந்த செய்தியின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகத்தை என்வழியில் தெரிவித்திருந்தோம்.

எதிர்ப்பார்த்தது போலவே, அந்த செய்தி வெறும் பரபரப்புதான் என்பது இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தலாஷ் படத்தின் இயக்குநர் ரீமா காக்டி இதுகுறித்துக் கூறுகையில், “தலாஷ் படத்தில் ஒரு பாடலில் தோன்ற ரஜினியிடம் நாங்கள் பேசி வருவதாக வந்த செய்தியில் உண்மையில்லை. அவர் எங்களின் மதிப்புக்குரியவர்,” என்றார்.

ரஜினி தரப்பில் அவரது உதவியாளரிடம் விசாரித்த போது, “இந்த செய்தியில் எந்த உண்மையும் இல்லை. ஆரம்பத்தில் இந்த செய்தியை சாதாரணமாகவே எடுத்துக் கொண்டோம். ஆனால் இப்போது வெகு வேகமாகப் பரவுவதால் இந்த விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது,” என்றார்.

அவர் மேலும் கூறுகையில், “ரஜினி இப்போது முழுக்க முழுக்க கோச்சடையானில் கவனம் செலுத்தி வருகிறார். படத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர் ஆர்வத்துடன் பங்கேற்று  வருகிறார். ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் வேலைகள் சிறப்பாக அமைய வேண்டும் என்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்,” என்றார்.

-என்வழி செய்திகள்




3 thoughts on “தலாஷில் ரஜினி நடிக்கவில்லை! – இயக்குநர் விளக்கம்

  1. kabilan

    வினோ அண்ணா,ஒரு சின்ன திருத்தும் அண்ணா தலாஷ் ஆமிர் கான் தொடங்க இருக்கும் படம் அல்ல அண்ணா .பல மதங்களுக்கு முன்பே ற்றைளீர் எல்லாம் வந்து விட்டது.அதில் அமீர் கான் ஒரு வில்லன் வேடம் கலந்த போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்து இருக்கிறார்

  2. Kannan

    இந்த புகைப்படம் எந்திரன் கிளிமஞ்சாரோ பாடலில் வருவதைப்போல் உள்ளது..ஆனால் படத்தில் இருப்தாக தெரியவில்லையே…

  3. enkaruthu

    எனகென்னமோ இப்போ குமுதத்துக்கு வரும் அனைத்து சில்வண்டு பத்திரிகையாளரும் ரொம்ப காமெடி பீசகதான் தெரிகிறார்கள்.நான் ஏன் இதை சொல்கிறேன் என்றால் குமுதம் தலைவரை பற்றி சொல்லும் ஒவ்வொரு விசயமும் நடக்காமல் அந்த விஷயத்தை சொன்னவர்கள் ஆப்பு வாங்குரார்களே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *