BREAKING NEWS
Search

தனிஈழம் அமைய வேண்டும் என்பது என் விருப்பம்… ஆனால் டெசோ மாநாட்டில் தீர்மானம் இல்லை! – கருணாநிதி

தனிஈழம் அமைய வேண்டும் என்பது என் விருப்பம்… ஆனால் டெசோ மாநாட்டில் தீர்மானம் இல்லை! – கருணாநிதி

சென்னை: தனித் தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்பது எனது விருப்பம். ஆனால் எதற்கும் ஒரு கால அவகாசம் வேண்டும், என்று கருணாநிதி கூறியுள்ளார்.

திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் டெசோ மாநாடு அறிவிக்கப்பட்ட நிலையில், மத்திய அரசு, தனி ஈழம் என்பதற்கு எதிரான நிலைப்பாட்டில் மத்திய அரசு உள்ளதாக உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது.

இந்த சூழலில் திமுக தலைவர் கருணாநிதி இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அந்தப் பேட்டி விவரம்:

டெசோ மாநாடு குறித்து?

டெசோ மாநாடு பற்றி சில கட்சிகள் தவறாக புரிந்து கொண்டுள்ளன. 12-ந்தேதி சென்னையில் நடைபெற உள்ள இந்த மாநாட்டின் நோக்கம் பற்றி ஏற்கனவே விளக்க புத்தகங்கள் எல்லோருக்கும் வழங்கப்பட்டுள்ளன.

மாநாட்டில் கலந்து கொள்ள மத்திய மந்திரி சரத்பவார், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் சரத்யாதவ், லோக்ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் ஆகியோர் சம்மதம் தெரிவித்துள்ளனர். நைஜீரிய நாட்டு மந்திரி மூசாஅகமது, ஐக்கிய நாடுகள் சபையின் சுவீடன் நாட்டு மனித உரிமை தூதர் மாலிக் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.

அமெரிக்கா, கனடா, நார்வே, ஆஸ்திரேலியா, ஜெர்மன், நியூசிலாந்து நாடுகளை சேர்ந்த தமிழ் பிரதிநிதிகளும் மாநாட்டில் பங்கேற்கிறார்கள். மாநாட்டின் பார்வையாளர்களாக இலங்கையில் உள்ள தமிழ் எம்.பி.க்கள் சம்பந்தன், சேனாதிராஜா, யோகேஸ்வரன், கஜேந்திர குமார், பொன்னம்பலம், சுமந்தன், சரவணபவன் ஆகியோர் உள்பட உலகம் முழுவதும் இருந்து தமிழ் அமைப்புகளின் பிரதி நிதிகள் கலந்து கொள்கிறார்கள்.

இலங்கையில் தமிழ் ஈழம் அமைவதை வலியுறுத்தி டெசோ மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படுமா?

இப்போது அதுபற்றி எந்த முடிவும் எடுப்பதாக உத்தேசம் இல்லை. கடுமையான போரினால் பாதிக்கப்பட்டு தற்போது எஞ்சியுள்ள தமிழர்களை பாதுகாப்பதும் அவர்கள் வாழ்வை வளப்படுத்துவதும்தான் முக்கிய குறிக்கோள். அவர்களுக்கு பலன் அளிக்கும் வகையில் மாநாட்டில் தலைவர்கள் கருத்துக்களை கேட்டு முடிவு எடுக்க திட்டமிட்டுள்ளோம்.

இந்தியாவில் விடுதலைப்புலிகள் மீதான தடை மேலும் ஒரு ஆண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது பற்றி உங்கள் கருத்து?

இந்த சமயத்தில் இது பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை. தமிழ்நாட்டில் ஆயுத கலாசாரம் உருவாகக்கூடாது என்பது என் கருத்து. அந்த அடிப்படையில் இந்திய அரசு இந்த முடிவை எடுத்து இருக்கலாம் என்று கருதுகிறேன்.

என் வாழ்நாளுக்குள் தனி ஈழம் காண்பேன் என்று கூறினீர்கள். இப்போது டெசோ மாநாட்டில் அதுபற்றி தீர்மானமே போடப்போவதில்லை என்கிறீர்களே?

அதை எப்போதும் சொல்வேன்.

தனி ஈழ ஆதரவு தீர்மானத்தை கொண்டு வரக்கூடாது என்று மத்திய அரசு நெருக்கடி கொடுத்ததா?

எந்த நெருக்கடியும் இல்லை. நீங்களாக எதையும் கற்பனை செய்து கொள்ளாதீர்கள்.

மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று உங்களை சந்தித்த போது டெசோ மாநாடு குறித்து பேசினாரா?

இல்லை. அப்படி எதுவும் பேசவில்லை.

கே.கே. நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் தனி ஈழம் பற்றி பேசினீர்கள். இப்போது டெசோ மாநாட்டில் அதுபற்றி பேசமாட்டோம் என்கிறீர்களே?

டெசோ மாநாட்டுக்கு பல தரப்பினரும் வருகிறார்கள். அவர்களின் கருத்து அறிந்து முடிவு செய்வதுதான் சரியான ஜனநாயக அணுகுமுறை.

பிரபாகரனை கொன்றுவிட்டதாகவும், விடுதலைப்புலிகளை அழித்து விட்டதாகவும் இலங்கை அரசு கூறி வரும் நிலையில் இந்தியாவில் விடுதலைப்புலிகளுக்கு தடை தேவையா?

அதைபற்றி என்னை விட மாநில அரசுதான் அதிகமாக கவலைப்பட வேண்டும். நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

போர் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவீர்களா?

போர் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதில் வேறுபட்ட கருத்து இல்லை

தனி ஈழம் அமைய வேண்டும் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்துவீர்களா?

தனி ஈழம் வேண்டும் என்பது எனது விருப்பம். ஆனால் எதற்கும் ஒரு கால அவகாசம் வேண்டும்.

மாநாட்டில் ஐ.நா. சபை நடவடிக்கை குறித்து தீர்மானம் வருமா?

அதுபற்றி எல்லாம் மாநாட்டுக்கு வருபவர்களை கலந்து பேசித்தான் முடிவு எடுப்போம்.

இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவில் தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படுகிறதே?

இங்கு அவர்களுக்கு பயிற்சி அளிக்க கூடாது என்பதே என் கருத்து. தி.மு.க.வை பொருத்தவரை இலங்கையில் ஆயுதப் போராட்டம் கூடாது என்பதே விருப்பம். அதற்கு காரணம் இலங்கை அரசிடம் ராணுவம் உள்ளது. போராளிகளை விட அவர்களுக்கு ஆயுத பலம் அதிகம். இறுதியில் அவர்கள்தான் வெற்றி பெறுவார்கள் என்று சொல்ல வந்தோம்.

காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தனி ஈழத்தில் உடன்பாடு இல்லை. ஒருங்கிணைந்த இலங்கையில் தமிழர்கள் சம உரிமையுடன் வாழ வேண்டும் என்று கூறியிருக்கிறாரே?

மாநாட்டின் நோக்கம் பற்றி என்னிடம் கலந்து பேசி விட்டு கருத்து தெரிவித்து இருக்கலாம். அவசரப்பட்டு அறிக்கை வெளியிட்டு உள்ளார். இது துரதிர்ஷ்டவசமானது.

தனி ஈழம் பற்றி தற்போது திறந்த மனதோடு இருப்பதாக எடுத்துக் கொள்ளலாமா?

தனி ஈழத்துக்காக போராட்டமோ, கிளர்ச்சிகளோ எதுவும் இப்போது இல்லை. இப்போது இருப்பதெல்லாம் அடிபட்டுக் கிடக்கின்ற இலங்கைத் தமிழர்களுடைய ரணத்தை ஆற்றுவது – அவர்களுடைய பசியைப் போக்குவது – அவர்களுடைய வாழ்வாதாரங்களை வளப்படுத்துவது என்பது தான். இப்போதுள்ள அவசரமான தேவை இதுதான்

தனி ஈழத்துக்கான வாக்கெடுப்பு பற்றி இந்த மைய கருத்து குறிப்பில் இல்லையே?

மாநாட்டில் பங்கேற்பவர்களின் கருத்துகளை அறிந்து முடிவெடுப்பதுதான் ஜனநாயகம். தனி ஈழத்துக்காக போராட்டம், கிளர்ச்சி எதுவும் இல்லை. இப்போது அவர்களுக்கு ரணத்தை ஆற்றுவதும் பசியை போக்குவதும் வாழ்வாதாரங்களை வளப்படுத்துவதுதான் தேவையானதாகும்.

டெசோ மாநாட்டுக்கு காங்கிரசை அழைப்பீர்களா?

எல்லோரையும் அழைப்போம்.

தனி ஈழம் கூடாது என்று ஏதாவது நெருக்கடி வந்ததா?

நான் எந்த நெருக்கடிக்கும் பயப்பட மாட்டேன்!

-என்வழி செய்திகள்
28 thoughts on “தனிஈழம் அமைய வேண்டும் என்பது என் விருப்பம்… ஆனால் டெசோ மாநாட்டில் தீர்மானம் இல்லை! – கருணாநிதி

 1. மிஸ்டர் பாவலன்

  //NO கமெண்ட்?// (சசி)

  புதிதாக ஒரு பெரிய கட்டிடம், பிளாசா மாதிரி, கட்டி முடிந்து
  அதை மக்கள் பார்வைக்கு விடுவது என்றால் ஒரு red tape
  கட்டி ஊரில் உள்ள பிரமுகர் தலைமையில் விழா நடத்தி
  பிரமுகர் red tape-ஐ ஒரு கத்திரியை வைத்து கட் செய்ததும்
  காமெராக்கள் சூழ உள்ளே நுழைந்து பார்த்து அதன் பின்னர்
  பிளாசா முறையாக திறக்கப்பட்டு அதில் ஷாப்புகள், திரை
  அரங்குகள், பார்க்கிங் லாட் எல்லாம் திறக்கப்பட்டு ‘ஜே,ஜே’,
  என ஆகிவிடும். பிளாசா கட்டிமுடித்த உடனே ‘என்ன ஒருத்தரையும்
  காணோம்’ எனக் கேட்பது சரியாகாது.

  தனி ஈழம், கலைஞர், அவரது அந்தர்-பல்டி இவை மூன்றும்
  சம்பந்தப் பட்டிருப்பதால் சைதாப்பேட்டை அறிஞர், பிரமுகர்,
  திரு. குமரன் அவர்கள் கருத்திற்காக நாங்கள் wait செய்து
  கொண்டிருக்கிறோம். அவர் இந்த plaza-வை red-tape வெட்டி
  திறப்பு விழா செய்ததும் இதுவும் ஒரு பெரிய thread-ஆகி விடும்.

  நன்றி.

  -== மிஸ்டர் பாவலன் ==-

 2. Kumar

  வினோ, இன்னும் எத்தன தடவை தான் இந்த கிழத்த நம்பி மோசம் போவீங்களோ தெரில……

  Again I’m emphasizing that in the act of opposing Jaya, you are so inclined towards this crooked guy….

  For the past few months there are numerous articles in Envazhi that projects Karuna as the savior of Eelam……the ‘You might also like:’ column points to n number of articles that links Karuna to Eelam….

  ஒரு பிம்பத்த உருவாக ரொம்ப try பண்ணுறீங்க என்னமோ இந்த ஆள் தான் ஈழத்துக்கு குரல் கொடுக்ற மாதிரி….

  அது எப்படி வினோ இந்த ஆளின் உண்ணாவிரத கூத்து, முத்துக்குமார் மரணத்தை கொச்சை படுத்திய விதம், ஈழத்துக்கு ஆதரவா மாணவர்கள் போராட்டம் பன்னிருவாங்கனு கல்லூரிக்கு எல்லாம் லீவ் விட்டு இப்படி எல்லா வித துரோகத்தை இழைத்த இந்த கிழத்தை நல்லவன் மாதிரி project பண்ணுறீங்க….

  There are other politicians too giving their voice for eelam, but they are not registered in Envazhi as Karuna’s statements are registered……

  இப்போ அடிச்சார் பாருங்க அந்தர் பல்டி…..இந்த பல்டி பத்தி ஒரு post நீங்க போடுலாமே? ஜெயா பத்தின நியூஸ் போட்டு கீழ நக்கலா ஒரு கமெண்ட் போடுவீங்களே atleast அப்படி ஒரு கமெண்ட் கூட போடுலாமே…..

  2 நாள் முன்னாடி கேட்ட சந்தேகம் தான் இப்பவும் இது என்வழியா இல்ல முரசொலியா….

  Again I’m not asking you to cover up Jaya, both Jaya and Karuna have screwed us till date….we need an alternate leader with good principles, in the act of opposing Jaya, envazhi is biased towards Karuna which is no good…..

  Instead please support people like Vaiko, Tamilaruvi Maniyan, Nallakannu etc…

 3. sco

  ஆக்டோபஸ் நாக்கு , கருநாகத்தின் விஷம், 1 .5 கண்ணன் தமிழின துரோகி ………….

  என் வாழ்நாளுக்குள் தனி ஈழம் காண்பேன் என்று கூறினீர்கள். இப்போது டெசோ மாநாட்டில் அதுபற்றி தீர்மானமே போடப்போவதில்லை என்கிறீர்களே?

  அதை எப்போதும் சொல்வேன்.
  ————————————
  தனி ஈழம் கூடாது என்று ஏதாவது நெருக்கடி வந்ததா?

  நான் எந்த நெருக்கடிக்கும் பயப்பட மாட்டேன்!

  ஹா ஹா
  ஹா ஹா
  ஹா ஹா

 4. மிஸ்டர் பாவலன்

  //You might also like:’ column points to n number of articles that links Karuna to Eelam….//
  (குமார்)

  இந்த பதிவுகளைப் படித்தால் தான் கலைஞரின் அந்தர் பல்டி புரியும்
  என்பதால் வினோ அந்த இணைப்புகளைக் கொடுத்தது 100 % சரி.

  //இந்த பல்டி பத்தி ஒரு post நீங்க போடுலாமே?// (குமார்)

  பேட்டியையும், கருத்தையும் தனித் தனியாக போடுவது தான்
  பத்திரிகை மரபு.

  கலைஞர் இன்னும் எத்தனை பல்டி அடிக்கறார், பார்ப்போம்! 🙂 🙂

  -== மிஸ்டர் பாவலன் ===-

 5. மிஸ்டர் பாவலன்

  கேள்வி பிறந்தது அன்று:

  //இந்த பல்டி பத்தி ஒரு post நீங்க போடுலாமே?// (குமார்)

  நல்ல பதில் கிடைத்தது இன்று:

  நண்பர் அமானுல்லா (துபாய்) கருத்து:

  நம் தானைத் தலைவருடைய பேச்சுகளை திரித்து வெளியிடுவதே தான் இந்த பத்திரிக்கைகளுக்கு பொழப்பா போச்சு. தலைவர் ஒன்றும் தனி ஈழத்துக்காக டெசோ மாநாடு நடத்தவில்லை. தனி ஈழம் கேட்பது இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்ற அடிப்படை விஷயம் கூடவா தெரியாது இந்த தேசத்தின் மூத்த அரசியல் தலைவருக்கு. அதற்காக அந்த எண்ணம் ஒன்றும் நம் தலைவர் மனதில் இருந்து முழுமையாக நீங்கவில்லை. அது ஒரு பக்கமாக இருந்து கொண்டு தான் இருக்கின்றது. திராவிட நாடு, இந்தி எதிர்ப்பு போன்ற கனவு வகைகளை சார்ந்தது தான் இந்த தனி ஈழ கனவும். டி.ஆர்.பாலு, திருமாவளவன், கவிஞர் கனிமொழி உள்ளிட்ட எம்.பி.க்கள் ஈழத்துக்கு சென்று அங்குள்ள தமிழர்களை சந்தித்து அவர்கள் நல்லபடியாக இருப்பதாக பெருமையோடு கூறினார்கள். அந்த பெருமை இன்னும் நீடிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தான் தலைவர் டெசோ மாநாடு நடத்துகிறார். ஈழத்தமிழர்களின் மீதான தலைவரின் அக்கறையினை புகழ வேண்டியது தான் ஒவ்வொரு தமிழனின் கடமை. இதுவே கழக ஆட்சியாக இருந்திருந்தால் அதற்கும் ஒரு பாராட்டு விழாவினை எடுத்து குஷ்பு, நமீதா போன்ற கலைஞானிகளின் நடனங்களை நடுவில் இணைத்து கலைஞர் டிவியில் ஒரு 5 எபிசோட் போட்டு இருக்கலாம். தமிழக மக்களின் துரதிஷ்டம் அந்த அம்மையாருக்கு ஓட்டு போட்டு அந்த காட்சிகளை காணும் பாக்கியத்தை இழந்து விட்டீர்கள்!

  -== பாவலன் கருத்து===

  கேள்வி பிறந்தது அன்று நல்ல
  பதில் கிடைத்தது இன்று

  -== மிஸ்டர் பாவலன் ===-

 6. Manoharan

  இது நடக்காவிட்டால்தான் ஆச்சரியம். இவர் டேசொவை பற்றி வாய் திறந்தபோதே அது ஒரு காமெடியாகத்தான் பார்க்கப் பட்டது. இது ரெண்டாவது காமெடி.

  தனி ஈழம் கூடாது என்று ஏதாவது நெருக்கடி வந்ததா?

  நான் எந்த நெருக்கடிக்கும் பயப்பட மாட்டேன்!பேச்சு பேச்சாகத்தான் இருக்கணும். இந்த கோட்டை தாண்டி நானும் வரமாட்டேன் நீயும் வரக்கூடாது.

  தமிழகத்தின் கைப்புள்ள கருணாநிதி.

 7. enkaruthu

  //அது எப்படி வினோ இந்த ஆளின் உண்ணாவிரத கூத்து, முத்துக்குமார் மரணத்தை கொச்சை படுத்திய விதம், ஈழத்துக்கு ஆதரவா மாணவர்கள் போராட்டம் பன்னிருவாங்கனு கல்லூரிக்கு எல்லாம் லீவ் விட்டு இப்படி எல்லா வித துரோகத்தை இழைத்த இந்த கிழத்தை நல்லவன் மாதிரி project பண்ணுறீங்க….//

  நண்பரே இந்த தளம் எங்கே கலைஞரை project பண்ணுகிறது.பேச வேண்டிய நேரத்திலையே அதாவது ஈழ போரன்றே இந்த தளமும் என்னை போன்றோர்களும் கலைஞரை உங்களை விட கேள்விகளால் துளைத்தோம்.

  ஆனால் உங்களை போன்றோர்கள் அன்று இதை பற்றி வாயையே திறக்கவில்லை.ஏனென்றால் அன்று கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்பது போல தன் இன பத்திரிகையான தினமலர்,சோ வின் துக்ளக்கை படித்து அவரால் சொல்லப்படும் தீவிரவாதியான தமிழின ஆம்பிளை பிரபாகரன் ஒழிந்தால் பரவாயில்லை என்று கம்முனு இருந்துவிட்டு இன்று ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதுபோல கலைஞர் என்றவுடன் இப்பொழுது மட்டும் உங்களை போன்ற கூட்டத்துக்கு தமிழ் உணர்வு வந்துவிட்டதா.வெளி வேஷம் போடாதீர்கள்.

  நண்பர்களே கலைஞர் செய்தது தவறுதான்.ஆனால் அதற்காக போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று சொன்ன ஜெயலலிதாவை தமிழின தலைவர் என்று சொல்ல முடியாது. ஏன் இதே ஜெயதான் விடுதலை புழி தளபதி இறந்தவுடன் கலைஞர் ஒரு இரங்கற்பா எழுதியதிற்கு ஒரு தீவிரவாத கூட்டத்தின் தளபதிக்கு இரங்கற்ப்பா எழுதிய கலைஞர் ஆட்சியை டிஸ்மிஸ் உடனே செய்யவேண்டும் என்று அன்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தார்.
  அதனால் நண்பர்கள் சிலர் ஜெயலலிதவை தாங்கி பிடுக்கும் அந்த வேலையை மட்டும் பாருங்கள்.எதோ தமிழினத்துக்கு ஆதரவாக இருப்பது போல் வேஷம் போடாதீர்கள்.உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் இதே கலைஞர் இடத்தில ஜெயலலிதா இருந்து (என்றும் அதே நிலைதான் அது வேறு)இதே போல எல்லபோருக்கு துரோகம் பன்னிருந்தால் நீங்கல்லேலாம் இதே மாதிரி இங்கே வந்து கமெண்ட் போடுவீகளா.

 8. SASI

  அங்கு :தீர்மானம் இல்லை என்ற காரணத்தால் 2 அமைச்சர் பதவி திமுகவுக்கு சிதம்பரம் ரெகமண்டு டு சோனியா ,
  இங்கு : 2 அமைச்சர் பதவி திமுகவுக்கு அதனாலதான் தீர்மானம் இல்லை
  கருணா infirm டு ஸ்டாலின் .

 9. Palaniyappan, Qatar

  ஜெயா பத்தின நியூஸ் போட்டு கீழ நக்கலா ஒரு கமெண்ட் போடுவீங்களே atleast அப்படி ஒரு கமெண்ட் கூட போடுலாமே…

 10. anbudan ravi

  உங்கள் விருப்பம் மட்டுமே என்றால் அதை ஏன் வெளியே சொல்லி வீண் விளம்பரம் தேட வேண்டும்….மன்மோகன்தான் சிக்கிக்கொண்டு சீக்கி அடிக்கிறார் என்றால் நீங்களுமா? எங்கே போனது நீங்கள் சொல்லும் சுயமரியாதை? ஓ…அதை இழந்துதான் பல வருடங்கள் ஆயிற்றே….ஈழத்தமிழர்களின் வாழ்க்கையை ஊறுகாய் போல தொட்டுக்கொண்டு விளையாடுவது அரசியல்வியாதிகளின் வழக்கமாகிவிட்டது….அவர்களை நிம்மதியாய் வாழ விடுங்கள்.

  அன்புடன் ரவி.

 11. மிஸ்டர் பாவலன்

  ///தமிழகத்தின் கைப்புள்ள கருணாநிதி./// (மனோகரன்)

  கலைஞர் பேட்டியையும், அவரது டெசோ இயக்கத்தையும் பற்றி
  தமிழருவி மணியன், நெடுமாறன் போன்றோர் கடும் விமர்சனம்
  வைத்துள்ளார்கள். அவற்றை தினமணியில் படித்தேன்.

  -=== மிஸ்டர் பாவலன் ===-

 12. குமரன்

  விரைவில் வருகின்ற அமைச்சரவை மாற்றத்தில் திமுக அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள். ஆனால் குடும்பத்தில் இருந்து வர யாரும் இல்லை. கனியின், தயாநிதியும் ராசாவும் “பாழாய்ப் போன 2G நோய்” வந்து படுத்துவிட்டார்கள்.

  இருந்தாலும் டி.கே.எஸ் இளங்கோவனை ராசாத்தி அம்மாளிடம் கணக்குக் காட்டி விடுவார் கலைஞர்!

  இப்போது எதுவானாலும் மாநாட்டுக்குக் வருவோரைக் கலந்து ஆலோசித்துதான் முடிவ்டுப்பார்! ஏனென்றால் இப்போது “பி.சிதம்பரத்தைக் கலந்து ஆலோசித்து” இப்படிச் சொல்லுகிறார். பொதுக் கூட்டத்துக்கு முன்னாலேயே “சிதம்பரம் வந்து கலந்து ஆலோசித்திருந்தால்” அப்போதே மாநாட்டுக்கு வருவோரைக் கலந்து ஆலோசிப்பது பற்றிச் சொல்லி இருப்பார். “கலந்து ஆலோசிப்பது” என்பதற்குப் பல பொருள்கள் உண்டு!

  சில பேர் வி.எஸ்.ஒ.பியையும் நீரையோ சோடாவையோ “கலந்து – ஆலோசிப்பது” பற்றி எனக்குத் தெரியாது!

 13. scot

  ஈழம் மலர வேண்டும் என்று பேசுவாராம், தீர்மானம் நிறைவேற்றி இந்திய அரசையோ, உலக நாடுகளையோ வலியுறுத்த மாட்டாராம். ஈழம் மலருவதற்கு இன்னமும் அவகாசம் தேவையாம். எப்போது? எஞ்சிய தமிழர்களையும் ராஜபக்சே கொன்று தீர்த்த பின்னரா?

  ஈழத்தமிழர்களுக்கு மீண்டும் தமது துரோக முகத்தை வெளிக்காட்டி உள்ளது கருநாகம் கருணாநிதி என்கிற அது.

  கருணாநிதியின் துரோகத்தால் கொல்லப்பட்ட இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களுக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்று கருநாகம் கருணாநிதி நினைத்தால் இனி தமது எஞ்சிய வாழ்நாளில் ஒருபோதும் ஈழம் குறித்தோ ஈழத்தமிழர்கள் குறித்தோ பேசாமல் இருப்பது ஒன்றே அவர்களுக்கு செய்யும் மிகப்பெரிய நன்மையாகும்

  இலங்கை பிரச்சனையை ‘முடித்துவிட்ட’ கருநாகம் கருணாநிதிக்கு திடீரென மலேசிய தமிழர்கள் மீது அக்கறை!

 14. மிஸ்டர் பாவலன்

  ///ஆனால் குடும்பத்தில் இருந்து வர யாரும் இல்லை. கனியின், தயாநிதியும் ராசாவும் “பாழாய்ப் போன 2G நோய்” வந்து படுத்துவிட்டார்கள்.// (குமரன்)

  ராசா எப்போது குடும்பத்தவர் ஆனார்? குமரன் விளக்கவும்!

  -=== மிஸ்டர் பாவலன் ===-

 15. Shakthi

  சரி, கருணாநிதி இப்போது என்ன தவறாக சொல்லிவிட்டார்? மத்திய அரசு சட்டவிரோதம் என்று அறிவித்த ஒரு விஷயத்தை அவர் எப்படி ஆதரிக்க முடியும்? நாம் திட்ட வேண்டியது மத்திய – மாநில அரசுகளைத்தான். ஈழத்தாய் என்று இங்குள்ள சிலர் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடும் ஜெயலலிதா ஈழத்தையும் ஆதரிக்கவில்லை, ஈழப் போராட்டத்தையும் கூட இன்னும் ஆதரிக்கவில்லை. ஈழத்தமிழர் நிலைக்கு நீலிக்கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார். அவரைக் கேட்க ஒருவரும் முயற்சிக்கவில்லையே.

 16. மிஸ்டர் பாவலன்

  //சரி, கருணாநிதி இப்போது என்ன தவறாக சொல்லிவிட்டார்? மத்திய அரசு சட்டவிரோதம் என்று அறிவித்த ஒரு விஷயத்தை அவர் எப்படி ஆதரிக்க முடியும்? // (சக்தி)

  இது போன்ற பதிலை இங்கு வழக்கமாக திமுக ஆதரவாக எழுதி வரும்
  அன்பர்களிடம் இருந்து எதிர்பார்த்தேன், நீங்கள் எழுதி உள்ளீர்கள்.

  நண்பர் அமானுல்லா கேட்டது போல் – “தனி ஈழம் கேட்பது இந்திய
  இறையாண்மைக்கு எதிரானது என்ற அடிப்படை விஷயம் கூடவா
  தெரியாது ” என்ற கேள்வியை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

  -=== மிஸ்டர் பாவலன் ===-

 17. மிஸ்டர் பாவலன்

  ///சில பேர் வி.எஸ்.ஒ.பியையும் நீரையோ சோடாவையோ “கலந்து – ஆலோசிப்பது” பற்றி எனக்குத் தெரியாது!// (குமரன்)

  குமரன் எழுதியது எனக்கு சுத்தமாகப் புரியவில்லை. பின் ‘VSOP’ பற்றி
  google search செய்ததும் தான் எனக்கு பொருள் புரிந்தது.

  நண்பர்களிடம் நான் அடிக்கடி கேள்வி – “விஸ்கி, பிராந்தி ஒரு பாட்டில்
  இத்தனை விலை என்றால் அதே அமௌன்ட்டிற்கு mixed fruit juice,
  nimbus,, tropicana juice இதெல்லாம் நிறையா பாட்டில் வாங்கி அருந்தலாமே?”
  என்று. இதற்கு இதுவரை யாரும் சரியாக பதில் கொடுக்கலை.
  நண்பர்கள் குமரன், கிருஷ்ணன், கணேஷ் ஷங்கர் இவர்களும்
  என்னைப் போல் teetotaler என நான் நம்புகிறேன்!

  -=== மிஸ்டர் பாவலன் ===-

 18. Manoharan

  /சரி, கருணாநிதி இப்போது என்ன தவறாக சொல்லிவிட்டார்?//

  அவர் என்னங்க தவறா சொன்னார் ? ஆனா எதுக்கு தனி ஈழம், டெசோ மாநாடு என்று பீலா விடனும். இவரே எதையாவது உளறுவார், பின் அதற்க்கு நேர் எதிமாறாக நடந்துவிட்டு அதற்க்கு ஒரு பீலா விடுவார். தமிழர்கள் யாரும் கருணாநிதியை செத்தாலும் நம்பமாட்டார்கள். இவர் தமிழின துரோகி என்றுதான் வருங்காலத்தில் சொல்லப்படுவார்.

  ///சட்டவிரோதம் என்று அறிவித்த ஒரு விஷயத்தை //

  2 க ஊழலும்தான் சட்டவிரோதம், குடும்பமே சேர்ந்து அதை செய்யவில்லையா.? இந்த ஆள் ஒரு தொடை நடுங்கி, பேசாமல் புடவையை கட்டிக் கொள்ள சொல்லுங்கள்.

 19. குமரன்

  தனி ஈழம் கேட்பதற்கும் இந்திய இறையாண்மைக்கும் எள்ளளவும் எல் முனையளவும் கூடத் தொடர்பு இல்லை

  இது மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது. இதை இப்போது சொக்கத் தங்கம், தியாகத் திருவிளக்கு (இவரைத் தவிர இப்போது திமுகவிலேயே 223000 பேர் இருப்பது வேறு விஷயம்) அன்னை (குஷ்பு காத்திருப்புப் பட்டியலில்) முன் நின்று செய்கிறார். அன்னையின் ஆணை இப்போது நிறைவேற்றப் படுகிறது. அதன்படி புலிகள் ஈழத்து அப்பாவித் தமிழர்கள் மட்டும் அல்ல அவர்களது மானம் மரியாதை மட்டும் அல்ல, சுதந்திரமும் நிரந்தரமாக பறிக்கப் படவேண்டும் என்பதுதான் தற்போதைய திட்டம். இதற்கு கலைஞரால் எதுவும் செய்ய முடியாத நிலைக்கு அவரே தன்னைக் கொண்டுவந்து விட்டார். ரெண்டு பொண்டாட்டிக்காரன் கதை என்று கிராமப்பக்கம் சொல்வது நினைவுக்கு வருகிறது.

  நிதானமாக எழுதவேண்டும் என்று சிலநாள் எழுதாமலும் இருந்த என்னை எப்படி உசுப்ப வேண்டும் எனபது பாவலனுக்குத் தெரிந்திருக்கிறது!

 20. enkaruthu

  //இது போன்ற பதிலை இங்கு வழக்கமாக திமுக ஆதரவாக எழுதி வரும்
  அன்பர்களிடம் இருந்து எதிர்பார்த்தேன், நீங்கள் எழுதி உள்ளீர்கள்.//

  விடுங்கள் பாவலன் இப்பொழுது கலைஞர் சொல்லியதை ஜெயலலிதா சொல்லி இருந்தால் அதற்க்கு நீங்களும் உங்களை சேர்ந்த நண்பர்களும் இதே இந்திய இறையாண்மை பற்றி பேசித்தான் பதில் தந்திருப்பீர்கள்.பாவலன் அவர்களே கலைஞர் தமிழின துரோகியாகவே(கடந்த இரண்டு வருடங்களாக உண்மையாலுமே பிறப்பால் தமிழராகிய நாங்கள் கருணாநிதியின் நடவடிக்கைகள் அது என்ன சூழ்நிலை ஆனாலும் தவறு என்றுதான் சொல்கிறோம்) வைத்துகொள்வோம் ஆனால் ஆரம்பத்தில் இருந்து என் கேள்வியே இந்த ஈழ தமிழ் போராட்டத்தை முன்னின்று நடத்திய பிரபாகரனை ஆதரித்த mgr அவர்களின் கட்சியில் குறுக்கு சந்தில் தலைவரான ஜெயலலிதா ஆரம்பகாலத்தில் இருந்து இந்த ஈழ போராட்டத்துக்கு அதரவு தந்தாரா என்பதுதான்.
  என் கேள்விகள் இதுதான்.
  1992 ஆம் வருடம் தேர்தலின் பொழுதுதான் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார்.உடனே ஜெயலலிதா கலைஞர்தான் விடுதலைபுழிகளை கொண்டு ராஜீவ் காந்தியை கொன்றுவிட்டார் என்று பிரச்சாரம் பண்ணி அந்த தேர்தலில் கொத்தாக ஜெயத்தார்.ஆட்சி அமைந்தபின்பு தனக்கு விடுதலை புலிகளால் ஆபத்து இருக்கிறது என்று சீன் காட்டி பாதுகாப்பும் வாங்கி அவர்களை தீவிரவாதிகளை போல் சித்தரித்தார்.

  பாவலன் அவர்களே இப்பொழுது கூட ஜெயலலிதா அவர்கள் cm தான். தமிழர்களுக்கு அன்று கலைஞர் அவர்கள் cm ஆகா இருந்தபொழுது செய்த தவறுகளை எல்லாம் நீக்கி உண்மையாகவே மத்திய அரசை இந்த ஈழ விஷயத்துக்கு இன்றைய முதல்வரான இவர் நிர்பந்திக்கலாமே.

  ஜெயலலிதாவுக்கு ஒன்னும் நீங்கள் சொல்வதைபோல் கலைஞர் தன மகள் கனிமொழிக்காக மத்திய அரசிடம் கெஞ்சும் நிலை போல ஜெயலலிதாவிற்கு ஒன்றும் இல்லையே.அப்போ இவர் சும்மா கில்லி போல மத்திய அரசிற்கு எதிராகவும் ஈழ தமிழ் விஷயத்துக்கு ஆதரவாகவும் நடவடக்கை இருக்க வேண்டுமே .எங்கே இருக்கிறது. கலைஞர் ஈழ தமிழ் விஷயத்திற்கு கடிதம் எழுதியதை(நானும் அன்று இந்த இன்டர்நெட் உலகத்தில் கடிதமா என்று நான் கமெண்ட் போட்டேன்) ஜெயலலிதா இந்த காலத்திலுமா கடிதம் என்று கேள்வி கேட்டார்.இன்று முதலமைச்சர் ஆனவுடன் இவர் மட்டும் என்ன செய்கிறார் அதே ஊசிப்போன கடிதத்தை தான் எழுதுகிறார்.

  என்னை பொறுத்தவரை கலைஞரை ஈழ துரோகி என்று யார் வேண்டுமானாலும் சொல்லலாம் .ஆனால் ஜெயலலிதாவை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் வெளியே தமிழர் நலன் பற்றி பேசுவது போலவும் உள்ளே ஆரிய சிந்தனையுடன் பேசும் கூட்டம் அதை சொல்வதற்கு தகுதி இல்லை.

  ஜெயலலிதா அவர்களை பற்றிய என் கேள்விக்கு சமபந்தம் சம்பந்தம் இல்லாமல் யாருக்கும் புரியாத படி பாட்டு பாடியோ,எனக்கு பல வேலை இருக்கின்ற படியால் நான் என் கமெண்டை குறைத்து கொண்டு விட்டேன் என்று (நமக்கு என்னமோ வேலை இல்லாமல் கமெண்ட் போடுவதை போலவும்)செண்டிமெண்ட் சீன் போட்டொ அப்புறம் இங்கே வரும் உங்கள் இன நண்பர்களை அவரை புகழ்கிறேன் என்ற வழியில் நெண்டி விடாமல் இதற்க்கு நேர்மையான பதிலை உங்களிடம் இருந்து எதிர்பார்கிறேன் பாவலன் அவர்களே.

  பின்குறிப்பு:தயவு செய்து ஜெயலிதாவின் ஈழ தமிழருக்கு ஆதரவாக இருந்தார் என்றால் அதை மட்டும் போடுங்கள்.உடனே கலைஞரின் புராணத்தை ஆரம்பித்துவிடாதீர்கள்.

 21. Mariappan S

  எந்தகாலத்திலும் தமிழ் மக்களுக்கு ஒன்றும் செய்ய போவதில்லை. தமிழ்மக்களின் இன உணர்வை தன் அரசியல் லாபத்துக்கு பயன் படுத்துமே தவிர உண்மையில் தமிழர்களுக்கு உதவும் எந்த நினைப்பும் இல்லாதவன். தான் தன் குடும்பம் மத்தியில் மந்திரி பதவி மாநிலத்தில் குடும்ப அரசு மட்டும்தான் நோக்கம்.

 22. SASI

  முக :

  ரொம்ப கஷ்டபட்டு பேசி இருக்கேன் …..

  ஈழத்தை மறந்து இருந்ததா எல்லாம் நினைவு படுத்தி இருக்கேன் ,

  ஏதோ என்னோட முயற்சியல பிரணாப் ஜனதிபதிய அக போறாரு ,

  ரொம்ப திட்டந்திங்க பாவலன் ,……

  நான் கொஞ்சம் வயசானவன் , இன்னக்கு ஒன்னு நெனைக்குறேன் ….

  நாளைக்கு ஒன்னு நடக்குது என்ன பண்ணுறது…

  கவலை படாதிங்க என் உயிர் இருக்கிற வரைக்கும் இல்ல இல்ல என் புள்ள,

  பேரன், கொள்ளு பேரன் எல்லாரும் பதவில தான் இருப்பாங்க அவுங்க

  காலத்துக்கும் இது போல அறிக்கை விட சொல்லுறேன் .

  ——-

  பிளாசா பில்டிங் red tape நான்தான் கட் பண்ணுனேன் ஒனுனும் அனல் பறக்கலையே……

 23. மிஸ்டர் பாவலன்

  ///பிளாசா பில்டிங் red tape நான்தான் கட் பண்ணுனேன் ஒனுனும் அனல் பறக்கலையே……// (சசி)

  Fire engine சத்தம் உங்களுக்கு கேக்கலை?? 🙂

  -== மிஸ்டர் பாவலன் ===-

 24. மிஸ்டர் பாவலன்

  //தனி ஈழம் கேட்பதற்கும் இந்திய இறையாண்மைக்கும் எள்ளளவும் எல் முனையளவும் கூடத் தொடர்பு இல்லை// (குமரன்)

  குமரன் அவர்களே.. நண்பர் அமானுல்லா எழுதியது சில நாள்கள் முன்னால்
  மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் (home ministry) வெளியிட்ட
  அறிக்கையின் அடிப்படையில் அமைந்தது. இதை தொடர்ந்து தான்
  உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கலைஞரைச் சந்தித்துப் பேசினார்.

  ‘தி ஹிந்து” செய்தி இணைப்பு: http://bit.ly/LXTlCR

  -== மிஸ்டர் பாவலன் ===-

 25. மிஸ்டர் பாவலன்

  //எனக்கு பல வேலை இருக்கின்ற படியால் நான் என் கமெண்டை குறைத்து கொண்டு விட்டேன் என்று (நமக்கு என்னமோ வேலை இல்லாமல் கமெண்ட் போடுவதை போலவும்)// (என் கருத்து)

  நண்பர் AK அவர்களே.. இங்கு கருத்துப் பதிவு செய்யும் நண்பர்களை
  வாழ்த்தி எழுதி உள்ளேனே தவிர இதுவரை தாழ்த்தி எழுதியது இல்லை.
  முக்கியமாக நீங்கள் எழுதும் கருத்துக்களைப் பலதடவை படிப்பதுண்டு
  எனவும் நான் எழுதி இருக்கிறேன். உங்களையோ, மற்ற நண்பர்களையோ,
  “வேலை இல்லாமல் கமென்ட் செய்வதாக” நான் என்றும் குறிப்பிட்டதில்லை.

  என் வழி தளம், நாளேடுகளில் (தினமணி, தினமலர் போன்றவை)
  இவற்றில் வரும் செய்திகளை விட கருத்துக்களைத் தான் நான்
  சுவாரசியமாகப் படிப்பதுண்டு. நண்பர் அமானுல்லாவின் (துபாய்)
  கருத்துக்கள் என்னை மிகவும் கவர்ந்தவை.

  எனது கருத்துக்களை (நேரமின்மை) justify செய்வதற்காக எனது பணிகளைப்
  பற்றி, வேலைப் பளுவைப் பற்றி, குறிப்பிட வேண்டிய தேவையில்லை.

  “தன் நெஞ்சறிவது பொய்யற்க பொய்த்த பின்
  தன் நெஞ்சே தன்னை சுடும்” (திருக்குறள்)

  பரிமேலழகர் உரை:

  தன் நெஞ்சு அறிவது பொய்யற்க – ஒருவன் தன் நெஞ்சு அறிவது ஒன்றனைப் பிறர் அறிந்திலர் என்று பொய்யாதொழிக,பொய்த்தபின் தன் நெஞ்சே தன்னைச் சுடும் – பொய்த்த தாயின் அதனை அறிந்த தன் நெஞ்சே அப்பாவத்திற்குக் கரியாய் நின்று, தன்னை அதன் பயனாய துன்பத்தை எய்துவிக்கும். (நெஞ்சு கரியாதல் “கண்டவர் இல்லென உலகத்துள் உணராதார் – தங்காது தகைவின்றித் தாம் செய்யும் வினைகளுள் – நெஞ்சு அறிந்த கொடியவை மறைப்பவும் மறையாவாம் – நெஞ்சத்திற் குறுகிய கரி இல்லை ஆகலின்” (கலித்.நெய்தல்.8) என்பதனானும் அறிக. பொய் மறையாமையின், அது கூறலாகாது என்பது இதனான் கூறப்பட்டது.).

  -== மிஸ்டர் பாவலன் ===-

 26. தினகர்

  “தனிஈழம் அமைய வேண்டும் என்பது என் விருப்பம்… ஆனால் டெசோ மாநாட்டில் தீர்மானம் இல்லை! – கருணாநிதி”

  தலைப்பிலேயே தெளிவான செய்தி இருக்கும் போது இங்கே குழப்பவாதிகள் ஏன் குழப்பம் விளைவிக்க பார்க்கிறார்கள். ஓ. அது தானே அவர்களின் லட்சியம்..

  டெசோ மா நாட்டில் தீர்மானம் போட்டு விட்டால் அடுத்த மாதம் தனிஈழம் அமைந்து விடும் என்ற நிலையிருந்தால், ஏன் தீர்மானம் போட மாட்டீர்கள் என்று கேட்கலாம்.

  அந்த இலக்கை அடைய நீண்ட தூர பயணம் தேவைப்படும். உலக அளவில் ராஜதந்திர நகர்வுகள் வேண்டும். டெசோ மாநாடு மூலம் தமிழர்களை திரட்டி ஆதரவு காட்டுவதும் அத்தகைய முயற்சிகளில் ஒன்றாகத்தான கருத முடியும்.

  முதலில் அங்கே இருக்கும் மக்களின் பாதுகாப்பு உறுதிசெய்ய்ப்பட வேண்டும். அவசரப்பட்டு ஏதோ ஏதோ செய்து அங்குள்ளவர்களுக்கு மேலும் பிரச்சனை ஆகக்கூடாது.. நிதானமாக செயல்படுவது தான் தீர்வுக்கு வழி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *