BREAKING NEWS
Search

முரட்டுக்காளையை ‘முடிச்சாச்சு’.. அடுத்து சகலகலா வல்லவனுக்கு ‘வந்திருக்காக’!

முரட்டுக்காளையை ‘முடிச்சாச்சு’.. அடுத்து சகலகலா வல்லவனுக்கு ‘வந்திருக்காக’!

ஒருவழியாக சூப்பர் ஸ்டார் ரஜினியின் மெகா ஹிட் படமான முரட்டுக்காளையை ரீமேக் பண்ணுவதாகக் கூறி, மொக்கையாக்கிய தமிழ் சினிமாக்காரர்கள், அடுத்து கையில் எடுத்திருப்பது கமல்ஹாஸன் நடிப்பில் வந்து பட்டையைக் கிளப்பிய சகலகலா வல்லவனை!

இந்தப் படத்தை சூர்யாவை வைத்து ரீமேக் பண்ணப் போகிறார்கள்..

1982-ம் வருடம் ஏ.வி.எம். தயாரிப்பில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் கமல் நடித்து வெளிவந்த படம் சகலகலா வல்லவன். இப்படத்தில் கமல் கிராமத்துவாசி, பட்டணத்துவாசி என இரு வேடங்களில் அசத்தியிருந்தார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அம்பிகா நடித்திருந்தார்.

கதை ஒன்றும் புதிதில்லை. புரட்சித் தலைவர் எம்ஜிஆர் – சரோஜாதேவி நடித்த பெரிய இடத்துப் பெண் படத்தைத்தான் சகலகலா வல்லவனாக்கியிருந்தார்கள்.

ஆனால் படத்தின் பெரிய பலம் இசைஞானி இசை. தமிழ் சினிமாவில் எந்த மசாலா படத்துக்கும் அமைந்திராத அளவு கிறங்கடிக்கும் பாடல்கள். அம்மன் கோயில் கிழக்காலே, நேத்து ராத்திரி யம்மா, நிலா காயுது, இளமை இதோ இதோ.., கட்ட வண்டி என அத்தனை பாடல்களும் தமிழ் சினிமா உள்ளவரைக்கும் மறக்காத அளவுக்கு ஆழப் பதிந்துவிட்டன.

மசாலா சினிமாவின் உச்சமாகப் பார்க்கப்பட்ட இந்த படத்தை தற்போது ரீமேக் செய்ய முடிவெடுத்திருக்கின்றனர். இப்படத்தின் ரீமேக்கில் நடிக்க சூர்யா விருப்பம் தெரிவித்திருந்தார்.

படத்தின் ரீமேக் உரிமையைப் பெற தன் உறவினர் நிறுவனம் மூலம் ஏ.வி.எம். நிறுவனத்தை சூர்யா அணுகியிருக்கிறார். ஆனால், ஏ.வி.எம்.நிறுவனமோ இப்படத்தை தாங்களே ரீமேக் செய்ய விருப்பம் உள்ளதாகவும், அதில் சூர்யா நடித்தால் நன்றாக இருக்கும் என்றும் தெரிவித்தார்களாம்.

சூர்யாவும் ஒப்புக் கொண்டாராம்.  இதைத் தொடர்ந்து சகலகலா வல்லவன் ரீமேக் பற்றி அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டுள்ளனர் ஏவிஎம் நிறுவனத்தினர்.

விரிவான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என ஏவிஎம் நிறுவனம் அறிவித்துள்ளது.

என்ன கொடுமை இது!

-என்வழி செய்திகள்
6 thoughts on “முரட்டுக்காளையை ‘முடிச்சாச்சு’.. அடுத்து சகலகலா வல்லவனுக்கு ‘வந்திருக்காக’!

 1. devaraj

  I have to disagree with you Vino.
  If Murattukallai was done with VJ and a proper script it might have done well.
  Same with Surya remake , if the script and screenplay is modified appropriately then it might turn out to be a hit.
  cheers
  Dev.

 2. swimple fan ofsuperstar!

  வினோ, இப்படி எல்லாம் பண்ணட்டுமே அப்ப இந்த காலத்துல என்ன தலை கீழா நின்னாலும் அந்த கால உழைப்புக்கு ஈடு கொடுக்க முடியாதுன்னு தெரியும்
  இயக்குனர் சேரன் கர்ணனை திரும்ப யாராச்சும் நடிக்க முடியுமான்னு கெட சவால் ரஜினி, கமல் படங்களுக்கும் பொருந்தும்.

 3. ROBO VENKATESH

  Mr devaraj no one is born to do remake of thalaivar film. If you are fan of director son go and post these kind of message in director son website not in thalaivar website

 4. பாவலன்

  தேவராஜ் எழுதியது பாக்ஸ் ஆபீஸ் வெற்றி பற்றியது என்றால்
  அவர் சொன்னபடி அந்த இரண்டு படங்களும் 1980-களில்
  எடுக்கப்பட்டவை என்பதால், அப்படியே சீன் பை சீன் காப்பி
  அடிக்காமல் ஸ்க்ரிப்ட்டில் வேண்டிய மாற்றங்கள் செய்து
  வெளியிட்டுப் பார்க்கலாம். விஜய் வேண்டவே வேண்டாம்!

  ரோபோ வெங்கடேஷ் அவர்கள் எழுதியது, வினோவின் நீண்ட
  கட்டுரையில் உள்ளது, இதன் படி – நடிப்பு, ஸ்டைல், ஆக்க்ஷன் –
  என்று பார்த்தால் ரஜினி, கமல் செய்ததை மற்ற இந்திய நடிகர்கள்
  செய்ய முடியாது – அஜீத், அமீர் கான் உட்பட.

  ரீமேக்கிற்கு நான் எதிரானவன். அதே சமயம் காப்புரிமை
  வாங்காமல் காப்பி அடிப்பதற்குப் பதிலாக காப்புரிமை வாங்கி
  official ஆக ரீமேக் செய்து வெளியிடுவது பெட்டர் என நினைக்கிறேன்.

  சகலகலாவல்லன் பெரிய ஆர்ட் மூவி இல்லை. பக்கா கமெர்ஷியல்
  மூவி தான். ஆனால் சில்க் ஸ்மிதா, அம்பிகா இவர்கள் போல் நடிகைகளும்,
  கமல் போல் சூரியாவும் கலக்க முடியாது என்று தான் நான் நினைக்கிறேன்.

  ராஜாவின் நல்ல பாடல்கள் அந்தப் படத்தில் உள்ளன. “அம்மன் கோயில்
  கிழக்காலே” என்ற பாடல் மதுரை மீனாட்சி அம்மனை மனதில் வைத்து
  அவரே எழுதிப் பாடிய பாடல்.

  “அம்மன் கோயில் கிழக்காலே
  அன்ன வயல் மேற்காலே
  நம்ம ஊரு நடுவாலே நிக்குதடி ..அடியே ….
  நாட்டு சனம் நம்மைக் கண்டு சொக்குதடி…..

  அங்காள அம்மனுக்கு ஆடியில பொங்கல் வைச்சா
  ஆயிரம் பாட்டுக்கு அவ அடியெடுத்துக் கொடுப்பாளே!
  சிங்கார அம்மனுக்கு சித்திரையில் வடம் பிடிச்சா
  சங்கீதம் படிக்கச் சொல்லி சாரீரம் கொடுப்பாளே!”

  என்று சித்திரைத் தேர்த் திருவிழாவையும், அவருக்கு இசை அருள்
  கிடைத்ததையும் மாஸ்ட்ரோ ராஜா நன்றியுடன் பாடி இருப்பார்.

  இந்தப் பாடல்கள் எல்லாம் ரீமிக்ஸ் ஆகும் கொடுமை வேறு இருக்கிறது.
  கடவுளே! கடவுளே!

  -பாவலன்

 5. Manoharan

  முரட்டுகாளை… ரஜினியை தவிர யார் நடித்தாலும் ஓடாது. சகலகலா வல்லவன் பிற்ப்போக்குத் தனமான கதை அம்சம் கொண்டது. அன்றைய காலகட்டத்தில் ஆணாதிக்கம் கதாநாயகனின் லட்சனங்களுள் ஒன்று, அதனால் அது வெற்றி அடைந்தது. இன்றைக்கு சூர்யா மட்டுமல்ல கமலே நடித்தாலும் அது ஒரு உறுதியான ப்ளாப்தான் .

 6. பாவலன்

  ///இன்றைக்கு சூர்யா மட்டுமல்ல கமலே நடித்தாலும்
  அது ஒரு உறுதியான ப்ளாப்தான் ./// (மனோகரன்)

  சூர்யாவுக்கு என பெரிய fans இருக்கிறார்கள். இளைஞர் தலைமுறை
  பார்க்கும். இது பக்கா மசாலா மூவி என்பதால் A centre, B centre, C centre
  என எல்லா இடங்களிலும் வசூல் குவிக்க வாய்ப்பு உள்ளது. நல்ல
  டைரெக்டர், கதாநாயகி அமைந்து சில்க் ரோலை வித்யா பாலன் (!)
  மீண்டும் செய்து, இளையராஜா மீண்டும் இசை அமைத்தால் படம்
  கண்டிப்பாக நூறு நாள் ஓடும் என்று நான் நினைக்கிறேன். சகலகலா
  வல்லவன் வெற்றிப் படத்திற்கான கதை!

  -பாவலன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *