BREAKING NEWS
Search

விவாதம் என்ற பெயரில் நடக்கும் தொலைக்காட்சி அயோக்கியத்தனங்கள்!

 தொலைக்காட்சி அயோக்கியத்தனங்கள்!

rajini-look

ண்மையில் அருவி என்ற படம் பார்க்க நேர்ந்தது. உண்மையைச் சொல்லுகிறோம், சொல்வதெல்லாம் சத்தியம் என விதவிதமான பெயர்களில் ரியாலிட்டி ஷோக்கள் நடத்துவதன் பின்னணியைப் பிரித்து மேய்ந்திருந்தார்கள். தனியார் செய்தி தொலைக்காட்சிகளில் அரங்கேறிக் கொண்டிருக்கும் அரசியல் விவாத மேடைகளின் பின்னணியும் இதற்கு சளைத்ததில்லை எனலாம்.

குறிப்பாக ரஜினியின் அரசியல் குறித்த விவாதங்கள், விதண்டாவாதங்கள், கருத்துத் திணிப்புகள் போன்றவை கடைந்தெடுத்த அயோக்கியத்தனங்கள்.

ரஜினியிடமிருந்து ஒரே ஒரு வார்த்தை அல்லது அவர் தரப்பிலிருந்து ஏதேனும் சிறு அறிக்கை வந்துவிட்டால் போதும், அதையே ஒரு மாத காலத்துக்கு பிடித்துத் தொங்குகின்றன மீடியாக்கள். அவர் பேசாத பேச்சுக்கெல்லாம் அர்த்தம் கற்பித்து, மிக மோசமான கருத்துருவாக்கத்தைச் செய்து வருகின்றன.

முன்பு போர் வரும்போது பாத்துக்கலாம், இப்போது அவரவர் வேலையைப் பார்க்கலாம் என்று அவர் சொன்னதை, யானையை தடவிப் பார்த்த பார்வையற்றவர்களைப் போல இஷ்டத்துக்கும் திரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள், கடந்த 6 மாதங்களாய்.

இப்போது மீண்டும் ரசிகர்களைச் சந்திக்க ரஜினிகாந்த் முடிவு செய்துள்ளார். ஆனால் இதை இன்னும் ஊடகங்களுக்கு அதிகாரப்பூர்வமாக சொல்லக்கூட இல்லை. ஆனால் அதற்குள், ரஜினியின் அரசியல் குறித்து மீண்டும் அதே கேள்விகள், அதே விவாதங்கள், அதே கருத்துத் தி(ணி)ரிப்புகளைச் செய்யத் தொடங்கிவிட்டன அனைத்து ஊடகங்களும். காரணம், இந்த சேனல்களுக்கு தீனி இல்லை. மக்களிடம் சொல்ல சுவாரஸ்யமான சேதி இல்லை. தங்களின் அகோரப் பசிக்கு ரஜினி என்ற யாருக்கும் தொந்தரவு தராத ஒரு மனிதரின் புகழை, பிம்பத்தை தின்னத் தொடங்கிவிட்டன.

சேனல் விவாதங்களுக்கு ஆட்களைப் பிடிக்கும்போதே, நீங்கள் இப்படிப் பேச வேண்டும்… ரஜினிக்கு எதிரான கருத்துக்களைச் சொல்ல வேண்டும் என்று மூளைச் சலவை செய்யும் அளவுக்கு சில செய்திச் சேனல்களின் யோக்கியதை உள்ளது. ரஜினிக்கு எதிரான கருத்துக்களை முன் வைக்கும் பலருக்கு கடந்த கால நிகழ்வுகள் ஒன்று கூடத் தெரியவில்லை. ஏதோ ரஜினிகாந்த் நேற்றுதான் அரசியல் பேசுவதுபோல உளறிக் கொட்டுகிறாரா்கள். அதிலும் சில பெண்கள் பேசுவதைக் கேட்கும்போது, என்னதான் கட்டுப்பாட்டுடன் இருந்தாலும், நம்மை கொலைவெறியேற்றுகிறது. காலக் கொடுமை.

எதிலும் மிகையான, கற்பனை கலந்தவற்றையே மக்களுக்குத் தருவதுதான் டிஆர்பியை தக்க வைக்கும் அல்லது உயர்த்தும் என நம்புகிறார்கள். வெளிநாடுகளில் இதெல்லாம் தொன்னூறுகளிலேயே உச்சக்குப் போய், பின்னர் ஒன்றுமில்லாமல் ஆகிவிட்டது. அதன் விளைவு, செய்திச் சேனல்கள் என்றாலே மக்கள் தெறித்து ஓடும் நிலைக்கு வந்துவிட்டனர். இன்று அந்த ‘பாப்பராஸி’யை மக்கள் வெறுக்கிறார்கள்.

இங்கே அது முழுமையான புறக்கணிப்பாக மாறும் நாள் தூரத்தில் இல்லை.  ப்ரெண்ட்ஸ் படத்தில் தன் உதவியாளர்களின் இம்சை தாங்காமல் வடிவேலு இப்படிச் சொல்வார்: “வெளில போங்கடா அயோக்கிய ராஸ்கல்ஸ்!”. இது இந்த செய்திச் சேனல் நெறியாளர்கள், விவாத பங்கேற்பாளர்களுக்கும் நன்றாகவே பொருந்துகிறது!

– வினோ
4 thoughts on “விவாதம் என்ற பெயரில் நடக்கும் தொலைக்காட்சி அயோக்கியத்தனங்கள்!

  1. S Venkatesan

    யார் பெயரை பயன்படுத்தினால் நன்றாக சம்பாரிக்க முடியும் என்று தெரியும். நல்ல கல்லா கட்டுகிறார்கள்.

  2. Ananth

    Bayam!. That’s the one and only reason. All the political parties are behind this cause if Thalaivar comes he is going to sweep the elections. We all know Rajini has been in politics for the past 20 years. He is one of the most influential person in the country. Most eligible leader for CM post. The fear of the political parties is that if he comes into politics and does well, they wont have chance for another 20 years. Let the force be with him. Good luck Thalaiva!!.
    I am waiting to see how many of these will give him Bouquet as soon as he announces his entry. There will be a huge line. Lol.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *