BREAKING NEWS
Search

அரசியல்… ரஜினி சொன்னது ஒன்று; என்டிடிவி வெளியிட்டது வேறொன்று!

அரசியல் பிரவேசம்… ரஜினி சொன்னது ஒன்று; என்டிடிவி வெளியிட்டது வேறொன்று!

Rajini_in_Goa_650

ஜினிக்கு அவப் பெயர் தேடித் தருவதில் முதலிடம் மீடியாவுக்குதான். அவர் விஷயத்தில் கடுமையான நிந்தனைக்கும் தண்டனைக்கும் உரியவர்கள் இவர்களே. ஒரு போதும் உண்மையை எழுதுவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.
அவர் சொல்வது ஒன்று.. அதை இவர்கள் திரித்து வேறொன்றாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

குசேலன் சமயத்தில் கன்னடத்தில் அவர் வருத்தம் தெரிவிப்பதாகச் சொன்னதை, வேண்டுமென்றே மன்னிப்புக் கேட்டார் என்று டிவியிலும் நாளிதழிலும் போட்டார்கள். ‘அய்யோ அவர் மன்னிப்பு என்ற வார்த்தையைப் பயன்படுத்தவில்லையே’ என்று பெங்களூரிலிருந்து செய்தியாளர் கூறியபோது, ‘இருக்கட்டும்.. மன்னிப்பு கேட்டார்’ என்றே போடுவோம் என்று உறுதியாக முடிவெடுத்தது ஒரு முதல்நிலை நாளிதழும் அவர்களின் சேனலும்!

இதோ இன்னும் ஒரு பெஸ்ட் சாம்பிள், இன்று வந்திருக்கும் என்டிடிவி இணைய தள செய்தி…

இன்று சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்று, மத்திய அரசின் விருதினைப் பெற வந்த ரஜினியை கோவாவில் பேட்டியெடுத்திருக்கிறார் என்டிடிவி நிருபர்.

அரசியல் திட்டம் என்ன என்ற அவரது கேள்விக்கு ரஜினி சொன்ன பதில்: “No politics Please.. I don’t wanna talk anything about politics here.”

இதை அந்த சேனலின் தளம் எப்படி திரித்து வெளியிட்டுள்ளது பாருங்கள்: “No never, no politics for me,” he said, when asked if he had any such plans.

இந்த க்ளிப்பிங்கை பாருங்கள்.. ரஜினி என்ன சொல்லிருக்கிறார் என்பது புரியும்.

மீடியாவின் பிழைப்பு சந்தி சிரிப்பது இப்படித்தான்.. பிழைக்கவும் ரஜினி… பழிக்கவும் ரஜினி.. மொத்தத்தில் அவர் பெயர் போதும். இஷ்டப்படி பயன்படுத்தி பணம் பார்க்கலாம் என்பதே இவர்களின் நிலை.

ரஜினியின் அரசியல் முக்கியமானதில்லை என்ற கருத்து கொண்டிருக்கும் பத்திரிகைகளும் கருத்து கந்தசாமிகளும் அவரைப் பற்றி எழுதாமல் பேசாமல் விட்டு விடலாமே. விட மாட்டார்கள். பயம்.. எங்கே இந்த மனிதர் வந்துவிடப் போகிறாரோ என்ற பயம்.. இதுவரை தமிழகத்தில் மீடியா -அரசியல்வியாதிகளிடம் மட்டுமே இருந்த அந்த பயம் இப்போது என்டிடிவி போன்ற வட இந்திய ஊடகங்களுக்கும் வந்துவிட்டது போலிருக்கிறது!

-என்வழி ஸ்பெஷல்
5 thoughts on “அரசியல்… ரஜினி சொன்னது ஒன்று; என்டிடிவி வெளியிட்டது வேறொன்று!

 1. குமரன்

  ///பயம்.. எங்கே இந்த மனிதர் வந்துவிடப் போகிறாரோ என்ற பயம்.. இதுவரை தமிழகத்தில் மீடியா -அரசியல்வியாதிகளிடம் மட்டுமே இருந்த அந்த பயம் இப்போது என்டிடிவி போன்ற வட இந்திய ஊடகங்களுக்கும் வந்துவிட்டது போலிருக்கிறது!///

  மிகச் சரி.

  ஆனால், ஒரு விஷயம் கவனத்தில் வேண்டும்.

  இந்தச் செயலுக்கு அடிப்படையாக இருப்பவர்கள் பத்திரிகையாளர்கள்தானே? அவர்கள் ஏன் விலைபோகிறார்கள்?

  அரசியல்வாதிகளின் ஊளலைப் பற்றிப் பக்கம் பக்கமாக எழுதும் இவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது?

 2. mahesh

  தலைவர் அந்த பெண் பத்திரிகையாளரிடம் மிகவும் மரியாதையாக பேசினார். பேசிவிட்டு மிகவும் மரியாதையுடன் நன்றி கூறிவிட்டு கும்மிட்டுவிட்டு சென்றார் . ஆனால் அவர்கள் பத்திரிக்கைகாரர்கள் புத்தியை காட்டிவிட்டார்கள்.

 3. Deen_uk

  கேவலம்.ஒரு காலத்தில் தலைவரை தலையில் தூக்கி வைத்து ஆடியவர்கள் இவர்கள்,சிவாஜி வெளி வந்த நேரத்தில்,.இந்தியன் சூப்பர் ஸ்டார் அமிதாப் அல்லது ரஜினி யா என கருத்து கணிப்பு நடத்தி தலைவர் தான் வென்றார் என தலைவரின் சாதனை கூறியவர்கள்.எந்திரன் பெருமை வட இந்தியா முழுதும் கூறியவர்கள்,பெஸ்ட் எண்டெர்டைனெர் ஒப் தி இயர் 2007 என்று நினைகிறேன்,அதில் ப்ரைம் மினிஸ்டர் கையில் அவார்ட் வாங்கினதை இவர்கள் சானலில் தான் பார்த்த ஞாபகம்.இவை எல்லாமே ரஜினி என்ற மூன்றெழுத்து மந்திர விளம்பரத்துக்கு என்பது இப்போது தான் புரிகிறது.

 4. kumaran

  சரியான தகவல்களை தருவதில் என்வழி சூப்பர் வழி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *