BREAKING NEWS
Search

‘சிறந்த முதல்வர் ஜெ’ என 50 சதவீதம் பேர் சொல்கிறார்களாம்! – இது என்டிடிவி கருத்துக் கணிப்பு

ஜெயலலிதா சிறந்த முதல்வர்…50 சதவீதம் பேர் வாக்கு – என்டிடிவி கருத்துக்கணிப்பு

டெல்லி: தமிழகத்தின் சிறந்த முதல்வர் ஜெயலலிதா என 50 சதவீதம் பேர் கருத்துக் கணிப்பில் வாக்களித்திருப்பதாக என்டிடிவி தெரிவித்துள்ளது.

பாராளுமன்றத்துக்கு தற்போது இடைத்தேர்தல் நடத்தப்பட்டால் ஒவ்வொரு மாநிலத்திலும் எந்தெந்த கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு, எப்படி இருக்கும் என்று என்.டி. டி.வி. தொலைக்காட்சி நிறுவனம், இஸ்போஸ் என்ற அமைப்புடன் இணைந்து கருத்து கணிப்பு நடத்தியது.

125 பாராளுமன்றத் தொகுதிகளில் உள்ளவர்களிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

கடந்த ஒரு வாரமாக இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் தினமும் என்.டி.டி.வி. தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. அதில் மத்திய பிரதேசம், சதீஷ்கர் மாநிலங்களில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரியவந்தது.


ஒடிசாவில் நடந்த கருத்து கணிப்பில் நவீன் பட்நாயக் சக்தி வாய்ந்த தலைவராக இருப்பது தெரிந்தது. நேற்று தமிழக நிலவரம் தொடர்பான கருத்து கணிப்பு வெளியிடப்பட்டது.

தமிழ்நாட்டில் சிறந்த முதல்வர் யார் என்று கருத்துக் கணிப்பில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு 50 சதவீதம் பேர் ஜெயலலிதாதான் சிறந்த முதல்வர் என்று கூறியுள்ளனர்.

கருணாநிதி மிகச்சிறந்த நிர்வாக திறமை கொண்டவர் என்று 32 சதவீதம் பேர் கூறியுள்ளனர். மு.க.ஸ்டாலினுக்கு 18 சதவீதம் பேரின் ஆதரவு கிடைத்துள்ளது.

அ.தி.மு.க. ஆட்சியின் செயல்பாடு எப்படி உள்ளது என்ற கேள்விக்கு 58 சதவீதம் சிறப்பான ஆட்சி நடப்பதாக கூறியுள்ளனர். 42 சதவீதம் பேர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழலில் தி.மு.க.வினருக்கு தொடர்பு உள்ளதா? என்ற கேள்விக்கு 59 சதவீதம் பேர் ஆமாம் தொடர்பு உள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

கூடங்குளம் அணு உலையைத் திறக்க 80 சதவீதம் பேர் ஆதரவளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அணுஉலைகள் வேண்டும் என்றும் தமிழ்நாட்டு மக்கள் தெரிவித்துள்ளதாக இந்தக் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

இந்தக் கருத்துக் கணிப்பு முடிவின் துல்லியத் தன்மை 3 சதவீதம் வரை மாறுபடும் வாய்ப்புள்ளதாக என்டிடிவி தெரிவித்துள்ளது.

-என்வழி செய்திகள்




12 thoughts on “‘சிறந்த முதல்வர் ஜெ’ என 50 சதவீதம் பேர் சொல்கிறார்களாம்! – இது என்டிடிவி கருத்துக் கணிப்பு

  1. தினகர்

    “அ.தி.மு.க. ஆட்சியின் செயல்பாடு எப்படி உள்ளது என்ற கேள்விக்கு 58 சதவீதம் சிறப்பான ஆட்சி நடப்பதாக கூறியுள்ளனர்”

    வீட்டில் இன்வெர்டர் மற்றும் கார், பைக் வைத்திருப்பவர்களாக ’செலக்ட்’ பண்ணி ‘செலக்டிவ்வாக’ கருத்துக் கணிப்பு நடத்தியிருப்பார்களோ.

    என்.டி.டி.வியின் கருத்துக்கணிப்பு ‘ கவனிக்கப்பட்ட’ கணிப்போ?

  2. Manoharan

    அதென்ன தினகர் அதிமுகவுக்கு சாதகமாக எது வந்தாலும் அது கவனிப்பா. என்னை பொறுத்தவரை ஒரு கேள்விக்கு பதில் சொல்லுமுன் இந்த ஆட்சி வந்து ஒரு வருடம் மட்டுமே ஆனதையும், ஜெவின் பல திட்டங்கள் முழுமை பெற நாட்களாகும் என்பதையும் அதைவிட போன ஆட்சியும் யோக்கியதையையும் கணக்கிட்டுத்தான் மக்கள் பதில் அளிப்பார்கள். என்னை பொறுத்தவரை ஜெவுக்கு 80 சதவிதத்துக்கு மேலும் கருணாநிதிக்கு ஒற்றை இலக்க எண்ணிலும் தான் ஆதரவு இருந்திருக்க வேண்டும். இது பாராளுமன்ற தேர்தலுக்கு முன் மாறிவிடும். தமிழின துரோகியையும், அவரின் இப்போதைய உருப்படாத ஸ்டண்டுகளையும் பார்த்து கொண்டுதானே இருக்கிறோம். அவரின் சவப்பெட்டிக்கு கடைசி ஆணி அடிக்க வேண்டி உள்ளது. அது பாராளுமன்ற தேர்தலில் அடிக்கப் படும்.

  3. குமரன்

    ///இந்தக் கருத்துக் கணிப்பு முடிவின் துல்லியத் தன்மை 3 சதவீதம் வரை மாறுபடும் வாய்ப்புள்ளதாக என்டிடிவி தெரிவித்துள்ளது.///

    அது எப்படி 3 % சதவிகிதம் மட்டுமே மாறுபடும் வாய்ப்பு என்று சொல்கிறார்கள்? அதற்கும் ஏதாவது கருத்து கணிப்பு இருக்குமோ?

    ஐந்தில் இரண்டு பழுதில்லை என்பார்கள், அப்படி, இந்தக் கேள்விகளில் மூன்றாவது, நான்காவது கேள்விகளுக்கான பதில்தான் எனது பதில்களோடு ஒத்துப் போகின்றன.

    ///ஒடிசாவில் நடந்த கருத்து கணிப்பில் நவீன் பட்நாயக் சக்தி வாய்ந்த தலைவராக இருப்பது தெரிந்தது. நேற்று தமிழக நிலவரம் தொடர்பான கருத்து கணிப்பு வெளியிடப்பட்டது.///

    ஒருவேளை தமிழ்நாட்டுக்கும் சேர்த்து, ஓடிசாவில் கருத்துக் கணிப்பு நடத்தி இருப்பார்களோ?

  4. குமரன்

    ///தமிழகத்தின் சிறந்த முதல்வர் ஜெயலலிதா என 0 சதவீதம் பேர் கருத்துக் கணிப்பில் வாக்களித்திருப்பதாக என்டிடிவி தெரிவித்துள்ளது.//

    தட்டச்சுப் பிழை 50 என்பதில் 5 விடுபட்டுவிட்டது. இத்தனை அவதூறு வழக்குகளைப் பார்த்தும் உஷாராக இல்லையே !!!!

  5. தினகர்

    ”ஜெவின் பல திட்டங்கள் முழுமை பெற நாட்களாகும் என்பதையும்”

    மனோகரன், அப்படியே ஜெ என்னென்ன திட்டங்கள் ஆரம்பித்துள்ளார் என்று சொல்லிவிடுங்களேன் ப்ளீஸ். நானும் குறித்து வைத்துக்கொள்கிறேன்:)

    நமது தளத்தில் வந்த ஒரு கட்டுரை/பேட்டியிலிருந்து தெரிந்து கொண்ட விஷயம்.: அமெரிக்காவில் இருக்கும் ஒரு தமிழ் அமைச்சர், இரண்டு தடவை அதிகாரிகளோடும், அமைச்சர்களோடும் பேசியிருக்கிறார். ஆனால் அம்மாவை பார்க்க வில்லையா என்ற கேள்விக்கு, பதில் சொல்ல முடிய்மாமல் ‘ பார்க்கலாம்’ என்று சொல்லியிருக்கிறார். அவராலே நிச்ச்யமாக சொல்ல முடியவில்லை போலிருக்கு.

    அதே வேளையில் ஆந்திரா, மஹாராஷ்ட்ரா முதலமைச்சர்களோடு, அவரது கவர்னர் சந்திப்பு நடந்திருக்கிறது.மற்ற மா நிலங்களில் முதல்வர்களை சந்தித்து அவரது கவர்னரையும் அழைத்துப் போயிருக்கிறார். நம்ம மா நிலத்தில் முதல்வரைக் கூட பார்க்க முடியவில்லை போலும்.

    தமிழ்காரர் என்பதால் நியாயமா பாத்தா, தமிழநாடு தானே முதலில் நன்மை அடைந்திருக்க வேண்டும்.. வலிய வரும் உதவியைக்கூட ஏற்றுக்கொள்ளும் மனநிலை ‘ அம்மா’ விடம் இல்லை என்று தான் எனக்கு தோன்றுகிறது.

    முக்கிய குறிப்பு : அந்த தமிழ் அமைச்சரின் மாநிலம் தான் அமெரிக்காவில் மின் உற்பத்தியின் புதிய தொழில் நுட்ப்ங்களுக்கு பெயர்பெற்றது – சோலார், சோலார் தெர்மல் என்று புத்தம் புதிய தொழில் நுட்பங்களை அவர்கள் ஆப்ரிக்கா, பிரேசில், கொரியா நாடுகளுக்கு திட்டங்களாக அமைத்துக் கொடுப்பதை செய்திகளில் பார்க்கிறேன். நம்ம ஊரில் மின் தட்டுப்பாடு இல்லையென்பதால் அவை தேவையில்லை போலிருக்கிறது. 🙂

  6. senthilbabu

    மக்கள் இந்த ஆட்சியை சிறந்த ஆட்சி என்று சொல்லியிருக்க மாட்டார்கள்.. இந்த ஆட்சியை கலைஞர் ஆட்சியுடன் ஒப்பிட்டு சொல்லியிருப்பார்கள்.. அதன் முடிவுதான் இது. அந்த ஆட்சி மிகவும் மோசமாக இருந்ததால் கொஞ்சம் மோசமான ஆட்சி better என்று நினைத்திருக்கலாம். பாவம அவர்களுக்கு வேறு option இல்லாமல் போய் விட்டது…

  7. Krishna

    “இன்னும் திமுகவுக்கு 50% ஆதரவு இருக்கிறதாம் – இது NDTV கருத்து கணிப்பு” என்ற தலைப்பு தான் சரியாக இருந்திருக்கும். இன்னமும் மக்கள் கடந்த திமுக ஆட்சியின் நில அபகரிப்பு மற்றும் ரவுடியிசம் பற்றி பயந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை. வீடு/நிலம் இல்லாமல் இருப்பது என்பது கரண்ட் இல்லாமல் இருப்பதை விட கொடுமையானது என்று மக்களுக்கு தெரியும்.

  8. தினகர்

    //தற்போது இடைத்தேர்தல் நடத்தப்பட்டால் ஒவ்வொரு மாநிலத்திலும் எந்தெந்த கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு, எப்படி இருக்கும் என்று என்.டி. டி.வி. தொலைக்காட்சி நிறுவனம், இஸ்போஸ் என்ற அமைப்புடன் இணைந்து கருத்து கணிப்பு நடத்தியது.//

    “மக்கள் இந்த ஆட்சியை சிறந்த ஆட்சி என்று சொல்லியிருக்க மாட்டார்கள்.. இந்த ஆட்சியை கலைஞர் ஆட்சியுடன் ஒப்பிட்டு சொல்லியிருப்பார்கள்”

    செந்தில் பாபு அவர்களே, கருத்துக்கணிப்பு கேள்விகள் திமுகவை விட அதிமுக நன்றாக இருக்கிறதா என்று இல்லையே!. தேர்தல் வந்தால் யார் வெற்றி பெறுவார்கள் என்பது தானே.

    அப்போ, என்ன கேள்வி என்றே புரியாமல் மக்கள் பதில் சொல்லியிருக்கிறார்கள் என்கிறீர்களா?. 🙂

    ஆனாலும், ’இந்த ஆட்சி சிறந்த ஆட்சி என்று சொல்லியிருக்க மாட்டார்கள்’ என்று நற்சான்று கொடுத்துள்ளீர்கள் . மின்வெட்டு, பஸ்கட்டண உயர்வின் மூல்ம உங்களுக்கு ஏற்பட்ட வலி புரிகிறது. 🙂

  9. தினகர்

    ”இன்னமும் மக்கள் கடந்த திமுக ஆட்சியின் நில அபகரிப்பு மற்றும் ரவுடியிசம் பற்றி பயந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை. ”

    அதிமுக ஆட்சி வந்து ஒன்றரை வருடத்தில் ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்து, திருட்டு, கொலை, கொள்ளை எல்லாம் காணாமல் போய் மக்கள் சுபிட்சமாக இருக்கிறார்கள் போலும், கரண்டும் , பஸ்கட்டணமும் மட்டும் தான் இன்னைக்கு பிரச்சனையா?. ஆனால் பத்திரிக்கைகளில் குற்ற சம்பவங்களின் எண்ணிக்கை ஏன் கூடுதலாக வருகிறது… ஓ அதெல்லாம் கருணா நிதி ஆட்சியில் நடந்தவைகளை பத்திரிக்கைகள் ரொம்ப லேட்டா வெளியிடுறாங்களோ?

  10. Manoharan

    கிருஷ்ணா சொல்வது மிகவும் சரி. இந்த ஆட்சி சரியில்லை என்று வைத்துக் கொண்டாலும், போன முறை ஆட்சி என்னும் பெயரில் நடந்த கூத்துகளும் , பயங்கரங்களும் இன்னும் மக்கள் மனதை விட்டு அகலவில்லை என்பதே உண்மை. ஜெயலலிதா ஒரு நோய் என்று யாராவது சொன்னால் கருணாநிதி ஒரு புற்று நோய் என்றுதான் சொல்லவேண்டும். நோய் வந்தாலும் பரவாயில்லை, புற்றுநோய் என்ற பேரை கேட்கக் கூட இங்கு யாரும் தயாரில்லை.

  11. குமரன்

    திமுக ஆட்சியில் பல ரவுடிகள்
    அதிமுக ஆட்சியில் ஒரே ஒரு ரவுடிதான்!
    மக்கள் பார்த்துப் பயப்பட…..

    பாஷா படப் பாடல் முதல் வரிகளுக்கான – ஒரே ஒரு சூரியன்தான் – மெட்டில் ஒரு பாடல் போடலாம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *