BREAKING NEWS
Search

கடலில் இறங்கிப் போராட்டம் – விமானத்தை தாழ்வாகப் பறக்கவிட்டு மக்களை அச்சுறுத்திக் கொல்லும் இந்திய கடற்படை!

கடலில் இறங்கிப் போராட்டம் – விமானத்தை தாழ்வாகப் பறக்கவிட்டு மக்களை அச்சுறுத்திக் கொல்லும் கடற்படை!


கூடங்குளம்: இது கூடங்குளமா.. முள்ளிவாய்க்காலா என்று கேட்கும் அளவுக்கு கொடூரமாக நடந்து கொள்கின்றன மத்திய மாநில அரசுகள்.

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக முற்றுகைப் போராட்டம் நடத்திய மக்களை போலீசை விட்டு அடித்து நொறுக்கி, ஒரு குழந்தையையும், துப்பாக்கியால் சுட்டு ஒரு மீனவரையும் கொன்றது தமிழக அரசு.

ஆனாலும் போராட்டத்திலிருந்து பின் வாங்காத மக்கள், நேற்றிலிருந்து கடலில் இறங்கிப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இடிந்தகரையில் ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாக கிராம மக்கள் கடலில் நின்றபடி போராடி வருகின்றனர். இன்று 2வது நாளாக போராட்டம் நடந்து வருகிறது.

நேற்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது கடலோரக் காவல் படையின் சிறிய ரக விமானம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் அவ்வப்போது படு தாழ்வாகப் பறந்து கொண்டிருந்தது. இது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மிரட்டும் தொனியில் இருந்தது.

மத்தியப் பிரதேசத்தில் நடந்த போராட்டத்தின்போது கூட இப்படி நடந்து கொள்ளவில்லை மத்திய பாதுகாப்புப் படை. ஆனால் நேற்று நடந்ததைப் பார்த்த பொதுமக்கள், இது சிங்களப் படையினர், ஈழத் தமிழர்கள் மீது ஏவிய அடக்குமுறையை நினைவூட்டுவதாக உள்ளதாக குமுறல் வெளியிட்டனர்.

இந்த நிலையில் இந்தியக் கடலோரக் காவல் படையின் அச்சுறுத்தலால் ஒரு அப்பாவி போராட்டக்காரர் உயிரிழந்துள்ள செய்தி தற்போது வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மக்கள் பலரும் இப்போராத்தில் கலந்து கொண்ட போது சிலர் தூண்டில் பாலத்தில் நின்றபடி போராட்டத்தை பார்த்தனர். அப்போது பல முறை கடலோரக் காவல்படை விமானம் மிகத் தாழ்வாக பறந்து பெரும் சத்தத்தை ஏற்படுத்தி குழந்தைகைகளை பயமுறுத்தியது. விமானம் மிகமிக தாழ்வாக பறக்கும் போது பாலத்தில் இருந்து கைக்கு எட்டும் தூரத்தில் விமானம் இருந்ததாக மக்கள் தெரிவித்தனர்.

அந்த சமயத்தில் தான் பாலத்தில் இருந்து சகாயராஜ் என்பவர் உள்ளிட்ட 5 பேர் கீழே விழுந்துள்ளனர். அதில் சகாயராஜ் தலையில் படுகாயமடைந்தது. இதையடுத்து 5 பேரையும் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி சகாயராஜ் உயிரிழந்தார். அவருக்குத் திருமணமாகி, குழந்தைகள் உள்ளனர்.

இந்த செய்தியை கேட்ட தமிழர்கள் மிகவும் கொதித்து போயுள்ளனர். காரணம், இதுவரை 550 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிங்களக் கப்பல் படையால் கொல்லபட்ட போது பாதுகாப்புக்கு வராத இந்திய கடலோர காவல் படை , இப்போது தங்கள் வாழ்வாதாரத்திற்கு போராட்டும் மக்களை குறிவைத்து வானில் பல நூறுமுறை பறந்து செல்கிறது.

எவ்வளவு முறையிட்டும் இந்திய அரசு மக்களை காக்க இது போல விமானம் மூலம் கண்காணிக்கவில்லை . இன்று மட்டும் ஏன் இந்த விமானம் பலமுறை சுற்றிச் சுற்றி வட்டமிட்டது என்ற கேள்வியை எழுப்புகின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள்.

-என்வழி செய்திகள்
10 thoughts on “கடலில் இறங்கிப் போராட்டம் – விமானத்தை தாழ்வாகப் பறக்கவிட்டு மக்களை அச்சுறுத்திக் கொல்லும் இந்திய கடற்படை!

 1. chenthil UK

  அராஜகத்தின் உச்சம் இதுதான்… ஆட்சி அதிகாரம் ஒரே கட்சிக்கு மறுபடியும் கொடுத்தால்( காங்கிரசுக்கு) இது தான் நடக்கும். மின்சார பிரிச்சனையை தமிழகத்துக்கு கொடுத்த மத்திய அரசாங்கம் … கூடங்குளம் தவிர மற்ற மாவட்டத்தை சேர்ந்தவர்களை அவர்கள் சார்பாக பேச வைத்து விட்டனர் .. கூடங்குளம் மட்டும் வந்து விட்டால் மின்சார பிரச்சனையை தீர்த்துவிடுவார் இந்த நயவஞ்சக மத்திய மாநில அரசுகள்… தமிழகத்திலும் போராட்ட காரர்களை நக்சலிட்ஸ் ஆக்கிவிடுவார்கள் … அதன் பிறகு சொல்லுவார்கள்.. நாங்க அப்பவே சொன்னோம்ல என்று..

 2. குமரன்

  இது அக்கிரமம்

  சிங்களக் கடற்படை நம் மீனவர்களைச் சுட்டுக் கொள்ளும்போதும் சிறைபிடித்துச் செல்லும்போதும் வராத விமானங்கள் இப்படி ஒரு போராட்டத்தை நசுக்க வருவது கொஞ்சம் கூட ஏற்க முடியாதது.

  “சொக்கத் தங்கம்” “தியாகத் திருவிளக்கு” “அன்னை” சோனியா தனது முள்ளிவாய்க்கால் வெற்றிக்குப் பிறகு இதையே தனது வழக்கமாக மாற்றி விட்டார் போல இருக்கிறது.

  நம் மக்களை நமது போர் விமானமே அச்சுறுத்தும் காட்சியை நாமும் காணும் நிலைமை வந்தது நமது துரதிர்ஷ்டமே.

 3. palPalani

  சார் பிளேன பார்த்து ஓட்டுங்க! நாராயணசாமி சொன்னது நடந்துர போகுது!

 4. நான்மகன்

  ச்..சீ வெட்கம் இல்லாத ஜனநாயக அரசுகள்.
  சர்வாதிகாரம் இன்னும் பல பேரைக் கொல்ல தயங்காது. பீலா விட நாராயணசாமி இருக்கிறாரே.

 5. shanmugasundharam

  மானங்கெட்ட தினமலர் வேற என்னமோ எழுதிருக்கான்…
  (தண்ணி ல நின்னதால தான் இறந்தார். அதனால் போராட்டம் ரத்து நு.)
  பலர் அந்த மாதிரி பத்திரிக்கைகளை தானே நம்பறாங்க.(எங்க வீட்ல கூட அந்த கருமம் படிச்ச தினமலர தான் படிக்கறாங்க..)

 6. தினகர்

  ”நம் மக்களை நமது போர் விமானமே அச்சுறுத்தும் காட்சியை நாமும் காணும் நிலைமை வந்தது நமது துரதிர்ஷ்டமே”

  குமரனின் இந்த கருத்தை வழிமொழிகிறேன்.

  ஆனாலும் சோனியா ஏவி விட்டார் என்பதெல்லாம் ஓவராக தெரியவில்லையா?. எல்லா பக்கமும் உதவாக்கரை அதிகாரிகள், அமைச்சர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். உண்மையை மறைத்து, தவறான தகவல் கொடுத்து தவறான முடிவுக்கும் இவர்களே உடந்தையாகி விடுகிறார்கள்.

  மக்களின் அச்சத்தை போக்க வேண்டிய அரசு, அச்சப்பட்டு நிற்பது கண்கூடாக தெரிகிறது. அரசியல் ஆக்காமல், ஈகோ பார்க்காமல் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தால், வரலாற்றில் இடம் பெறுவார்கள்.

 7. karthik

  @ shanmugasundharam

  பாஸ்.. தினமலம் என்று சொல்லுங்கள்….

 8. Kumar

  தினகர் அண்ணே கருணாநிதி குடும்ப குடுமி சொக்க தங்கம் கைல இருக்கு…..so தாத்தா கம்முனு கீறார்…. நீங்க ஏண்ணே இப்படி…..எள்ளு தான் எண்ணைக்கு காயுது எலி புளிக்கை எதுக்குணே காயுது……

 9. குமரன்

  ///அரசியல் ஆக்காமல், ஈகோ பார்க்காமல் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தால், வரலாற்றில் இடம் பெறுவார்கள்.///

  நம் அரசியவாதிகள் எல்லாருமே வரலாற்றில் இடம் பிடித்து விட்டார்கள்!

  வரலாறு கானாதம் வகை தொகையற்ற ஊழலுக்கு,
  மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தமைக்கு
  குடும்பம் குடும்பமாக அரசியல் அதிகாரத்தைத் தமக்குள்ளே வைத்துக் கொண்டமைக்கு
  இனப் படுகொலைக்குத் துணை போனதற்கு
  ஆட்சி அதிகாரத்தை அராஜகமாகப் பயன்படுத்தி மனிதுயிர்களைத் துச்சமாகக் கையாண்டதற்கு
  சொந்தப் பழிக்காக லட்சக் கனகானவர்களைக் கொன்றமைக்கு
  சாதிப் பாகுபாடு கூடாது மதநல்லிணக்கம் வேண்டும் என்று வெளிவேஷம் போட்டு, சாதிய, மத அடிபபடையிலேயே எல்லாக் காரியத்தையும் செய்தமைக்கு ….

  இப்படி எல்லாமே தவறான காரணங்களுக்காக … வரலாற்றில் அசைக்க முடியாத இடம் பிடித்து விட்டார்கள்.

 10. குமரன்

  கூடங்குளம் ஏழை மக்கள் வன்முறையில் ஈடுபட்டார்கள் என்று கூறுபவர்களுக்கு: கீழே க்டௌக்கப்பட்டுள்ள செய்தியைப் படிக்கவும். இதில் குறிப்பிட்ட படியெல்லாம் கூடங்குளம் மக்கள் நடக்கவில்லை. தடியடி நடத்தும்போது ஓடித்தான் போனார்கள். அங்கே விமானத்தை வைத்து பயமுறுத்தும் அரசு, சென்னையில் வன்முறை செய்தவர்கள் மீது எதுவும் செய்யுமா? செய்யாது , ஏனெனில் செய்தால் உலக அளவில் ரத்தக் களரிதான், அது தவிர சென்னையில் எந்த தகராறும் இல்லாமல் அமைதியாக எல்லாவற்றையும் முடித்துக் கொள்வார்கள். பத்திரிகைகள் ஊடகங்கள் என்ற படி பலரும் வந்து விடுவார்கள் என்பதால்.

  ஏழை எளியவர் செய்தால் எதுவுமே தவறு என்ற நிலை என்றுதான் மாறுமோ?

  அமெரிக்க தூதரக அலுவலகம் மீது சரமாரியாக கற்கள் வீசப்பட்டன. தூதரக பாதுகாப்புக்கு நின்ற போலீசாரின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்ததால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

  தூதரகத்தை சுற்றி 4 நவீன வசதியுடன் கூடிய போலீஸ் பூத்துகள் இருந்தன. தாக்குதல் நடத்தியவர்கள் அவற்றை பெரிய கற்களை போட்டு தாக்கி அடித்து நொறுக்கி விட்டனர். சூரிய வெப்பத்தால் செயல்பட்ட போலீஸ்பூத் ஒன்றை தலை கீழாக தூக்கிப்போட்டனர். தூதரகத்தை சுற்றி பொருத்தப்பட்டிருந்த அனைத்து உயரக நவீன கண்காணிப்பு கேமராக்களும் அடித்து நொறுக்கப்பட்டன. தூதரகத்தின் பக்கவாட்டு வாசல் பகுதியும், முன்பக்க பகுதியும் சேதப்படுத்தப்பட்டன.

  அமெரிக்க கொடியும் தீ வைத்து எரிக்கப்பட்டது.

  அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தாக்கினார்கள். மேலும் அந்த வழியாக வந்த மாநகர பஸ்சினை தீ வைத்து கொளுத்த முற்பட்டனர். அதிர்ஷ்டவசமாக பஸ் டிரைவர் பஸ்சை வேகமாக ஓட்டி சென்றதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

  அதன் பின்னரே போலீஸ் படையினர், இணை கமிஷனர் சண்முகராஜேஸ்வரன், துணை கமிஷனர்கள் புகழேந்தி, பவானீஸ்வரி ஆகியோர் தலைமையில் திரண்டு வந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *