BREAKING NEWS
Search

ஆமாம், 2002-ல் நடந்தது மதக்கலவரம்தான்… குஜராத்துக்கு இது புதுசில்லையே! – அதிர வைத்த மோடி

நான் பிறக்கும் முன்பே குஜராத்தில் மதக்கலவங்கள் பிறந்துவிட்டன- மோடி கிளப்பியுள்ள சர்ச்சை

அகமதாபாத்: 2002-ல் நடந்தது மதக்கலவரம்தான்… ஆனால் குஜராத்துக்கு இது புதுதில்லையே. ஆயிரக்கணக்கில் இந்த மண்ணில் நடந்திருக்கின்றனவே, என்று கூறி அதிர வைத்துள்ளார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி.

கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி 27-ந்தேதி, குஜராத் மாநிலம் கோத்ராவில், அயோத்தி கரசேவைக்குச் சென்றவர்கள் பயணித்த ரயில் பெட்டி தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில் அந்த பெட்டியில் பயணம் செய்த சாமியார்கள் உயிருடன் எரிந்து சாம்பலானார்கள்.

இதையடுத்து குஜராத்தில் பெரும் மதக் கலவரம் மூண்டது. ஆயிரக்ணக்கில் இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களது சொத்துக்கள் சூறையாடப்பட்டன. கொடூரமாக பலர் எரித்தும், சித்திரவதை செய்தும் கொல்லப்பட்டனர்.

இந்த கலவரம் தொடர்பாக மாநில உயர் போலீஸ் குழு, சி.பி.ஐ., உச்சநீதிமன்றம் நியமித்த குழு ஆகியவை விசாரித்தன. இதில், குல்பர்க் ஹவுசிங் சொசைட்டி படுகொலை உள்ளிட்ட 10 கலவர வழக்குகளை விசாரிக்க, கடந்த 2008-ம் ஆண்டு மார்ச் மாதம் உச்சநீதிமன்றம் சிறப்பு விசாரணை குழுவை (எஸ்.ஐ.டி.) அமைத்தது. இந்தக்குழு முதல்வர் மோடியிடம் விசாரணை நடத்தியது.

நரேந்திரமோடி, 2010 மார்ச் 27, 28 ஆகிய தேதிகளில் சிறப்பு புலனாய்வுக்குழு முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந்தார். அப்போது, எஸ்ஐடி அதிகாரி ஏ.கே. மல்கோத்ரா எழுப்பிய 71 கேள்விகளுக்கும், நரேந்திரமோடி விளக்கமாக பதில் அளித்தார்.

இந்த நிலையில் இம்மாதம் 14-ந்தேதி சிறப்பு புலனாய்வு குழு, விசாரணை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. அதில், கலவரத்தில் நரேந்திர மோடிக்கு தொடர்பில்லை, அவர் குற்றமற்றவர் என்று கூறப்பட்டுள்ளதாக, செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் இந்த அறிக்கையின் விவரங்கள், அதாவது மோடி அளித்த வாக்குமூலம் குறித்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த வாக்குமூலத்தில் குஜராத்தில் 2002ம் ஆண்டு நடந்தது மதக் கலவரம்தான் என்று மறைமுகமாக ஒப்புக் கொண்டுள்ளார் மோடி. மேலும் அதை நியாயப்படுத்தியும் பேசியுள்ளார். இதற்காக வரலாற்று சம்பவங்களையும் அவர் தனக்கு ஆதாரமாக குறிப்பிட்டுள்ளார்.

இதுதான் மோடியின் ஸ்டேட்மெண்ட்:

குஜராத்தில் 2002-ம் ஆண்டில் மட்டுமே மதக்கலவரம் நடக்கவில்லை. குஜராத்துக்கு மதக்கலவரம் புதிதும் அல்ல.

நான் பிறப்பதற்கு முன்பே, குஜராத்தில் பல முறை மதக்கலவரங்கள் நடைபெற்றுள்ளன. கி.பி. 1714-ம் வருடத்தில் இருந்து வரலாற்றை புரட்டிப் பார்த்தால், குஜராத்தில் ஆயிரக்கணக்கான மதக்கலவரங்கள் நடந்திருப்பது பதிவாகி இருக்கும்.

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்த உடன், எனது இல்லத்தில் உயர் போலீஸ் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னாள் துணை கமிஷனரான (புலனாய்வு) சஞ்சீவ்பட் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. ஏனெனில் நடந்தது உயர்மட்டக்குழு கூட்டம் என்பதால், ஜூனியர் அதிகாரியான சஞ்சீவ்பட் அழைக்கப்படவில்லை,” என்று கூறியுள்ளார்.

அப்படியெனில் மதக் கலவரங்கள் சகஜம்… அதை கண்டுகொள்ள வேண்டாம் என்கிறாரா மோடி என்ற கேள்வி எழுந்துள்ளது.

பாஜகவின் பிரதமர் வேட்பாளர் எனப்படும் மோடி இப்படி வாக்குமூலம் அளித்திருப்பது பெரும் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

-என்வழி செய்திகள்
6 thoughts on “ஆமாம், 2002-ல் நடந்தது மதக்கலவரம்தான்… குஜராத்துக்கு இது புதுசில்லையே! – அதிர வைத்த மோடி

 1. Ganesh Shankar

  /*அப்படியெனில் மதக் கலவரங்கள் சகஜம்… அதை கண்டுகொள்ள வேண்டாம் என்கிறாரா மோடி என்ற கேள்வி எழுந்துள்ளது.*/

  இப்படி தான் என்று எடுத்து கொள்ள வேண்டியது இல்லை.

  என்னமோ மோடி தான் வந்து மத கலவரத்தில் ஈடுபட்டார் எனவும்,அவரால் தான் மதக்கலவரம் என்பதே நடந்தது போலவும் சித்தரிதீர்களே,அவ்வாறெல்லாம் இல்லை. ஏற்குமுன்பே நடந்திருகிறது காங்கிரஸ் ஆண்ட பொழுதும் நடந்திருகிறது என்பதை வெட்ட வெளிச்சமாக ஆகி இருக்கிறார்.

 2. Simple Fan of Superstar!

  கணேஷ் சங்கர்-
  உங்கள் கருத்து தவறு நண்பரே. காங்கிரஸ் காலத்தில் நடந்தாலும் மோடி காலத்தில் நடந்தாலும் ஒரு தவறு சரியாகிவிடாது. ஏன் அரசியல் பார்த்தே எழுதுகிறீர்கள். அரசியலைத் தாண்டிய மிருகத்தனம் இது. அதனால்தான் ரஜினி ரசிகர்களின் தளமான என்வழியிலும் இந்த செய்தி வெளியாகியுள்ளது. சரியா மிஸ்டர் வினோ?

 3. K. Jayadev Das

  திரு மோடி அவர்கள் தமிழக அரசியல் வாதிகளைப் போல சூதானமாக நடந்துகொள்ளத் தெரியாதவராக இருப்பது துரதிர்ஷ்டம். தமிழ் நாட்டுக் காரன் மாதிரி பதவிக்கு வந்தோமா, மக்களை பிச்சைக் காரனாக்கி, குடிகாரனாக்கி விட்டு முப்பதாயிரம் கோடியைச் சுருட்டினோமா, பெண்டாட்டி பிள்ளைகள் எல்லோருக்கும் பதவி சொத்து செத்தோமா என்று இருக்காமல், மக்கள் நலத் திட்டங்கள், தடையற்ற மின்சாரம், குடிநீர்க்குழாய்கள் என்று செயல் படுத்துதல், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஒடுக்குதல், மது விலக்கு போன்ற வேண்டாத பயனற்ற வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார். பிழைக்கத் தெரியாத மனுஷன்.

 4. Ganesh Shankar

  Simple Fan of Superstar! –

  இங்கே நான் காங்கிரஸ் செய்தால் சரி என்றெல்லாம் சொல்ல வில்லையே.
  நீங்களாகவே பொருள் எடுத்து கொண்டால் நான் என்ன செய்வது??

  ஆனால்,ஊடகங்களில் அவர் ஒருவர் தான் மத கலவரத்திற்கு காரணம் என்றும்,இல்லாவிட்டால் மத கலவரம் என்ற ஒன்றே ஏற்படிருகது என்பது போல் சித்தரிபதர்க்கு தான் பதில்.மத கலவரம் ஏற்குமுன்பே நடந்திருகிறது.
  அவர் மட்டும் மத கலவரத்திற்கு காரணம் என்பது இல்லை.

  ஏன் மற்ற எது நடந்தாலும்,இதற்கு இது தான் கரணம் என்று பேசுபவர்கள்,இந்த கலவத்திற்கு மட்டும் ஏன் அதை எல்லாம் பேச வில்லை??

  முதலில் ஒரு ரயிலில் 60 பேர் ஒரு திட்ட மிட்ட சதியினால் எரித்து கொலை செய்யபடிருகிரார்கள்.அதை பத்திரிகை,எதிர் கட்சி உட்பட எல்லாரும் எடுத்து சொல்லாமல்,என்னமோ அவர்களுக்கு அவர்களாகவே செய்து கொண்டார்கள் என்றெல்லாம் சமாதனம் செய்து கொண்டு இருந்தார்கள்,அதன் பிறகு தான் ஒரு பகுதி மகளுக்கு கோவம் வந்து கலவரம் வெடித்தது.

  60 உயிர் போய் இருக்கிறது,திட்ட மிட்டு ரயிலில் செல்லும் போது மொத்தமாக எரித்து இருகிறார்கள்,அதெல்லாம் என்னமோ இல்லை போல் செய்தால் அது அரசியல்.

  இது தாங்க அரசியல்.நான் சொல்வெதெல்லாம் அரசியல் இல்லை.
  மேலும் இதற்காக,நான் கலவரம் நடந்ததை சரி என்றும் சொல்லவில்லை.

  இதையும் சொல்லுங்கள்,முன்பு நடந்தவற்றையும் பேசுங்கள்,யார் வேண்டாம் என்று சொல்ல போகிறார்கள்??

 5. baburaja

  மோடியை போல ஒரு கேடி நாட்டில் இருந்தால் நாட்டில் பிரச்சனைகள் வராமல் வேறு என்ன வரும்? அரசாங்கத்தை கையில் வைத்துகொண்டு எத்தனை பேரை வேண்டுமானாலும் கொல்லலாம் யாரை வேண்டுமானாலும் கொல்லலாம் என்று ஒரு சாரார் நினைக்கிறார்களோ என்னவோ? திரு. கணேசன் சொல்லும் கூற்று சரியெனில்? இலங்கையில் தமிழர்களுக்கு நடக்கும் கொடுமைகளும் பழையதுதானே! அதைப்பற்றி நாமெல்லாம் பேசவே கூடாது என்று ஏன் நாம் ஒதுங்கி இருக்ககூடாது? அடிப்பட்டவர்கள்,வேறொடு அறுத்து எறியபபட்டவர்கள், திருப்பி அடிக்கும்போது, அய்யோ! தீவிரவாதிகள் என்று அலறகூடாது, கணக்கு தீர்க்கிறார்கள் என்று அதனுல் ஒலிந்திருக்கும் உண்மையையும் புரிந்து சப்தம் போடாமலும் வெட்டி நியாயம் பேசாமலும் இருக்க வேண்டும். ஏனென்றால் அடிவாங்கினால் எல்லோருக்கும் வலிக்கும் என்ற உண்மையை ஒரு மனிதனாய் நாம் புரிந்துதானே இருக்கிறோம், நாம் அடித்தால் ஒரு நியாயம், நம்மை அடித்தால் ஒரு நியாயம் என்று நினைத்தால், தீவிரவாதிகள் புலிகளாகவும், இன்னும் பல அமைப்புகளாகவும் உருவாகிக்கொண்டுதான் இருப்பார்கள்! என்ற உண்மையையும் நாம் புரிந்து கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *