BREAKING NEWS
Search

மத்திய அரசின் உயர்ந்த விருது பெறும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நடிகர் சங்கம் வாழ்த்து

மத்திய அரசின் உயர்ந்த விருது பெறும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நடிகர் சங்கம் வாழ்த்து

3494827834_rajini
த்திய அரசின் விருது பெறும் சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்துக்கு, நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி, பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி:

இந்திய திரைப்பட நூற்றாண்டு விழாவையொட்டி, கோவாவில் நடைபெற இருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில், தங்களுக்கு “இந்த ஆண்டின் சிறந்த திரையுலக பிரபலம்’ என்ற விருதினை மத்திய அரசு வழங்க உள்ளதை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தோம்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அனைத்து நிர்வாகிகள் மற்றும் அனைத்து உறுப்பினர்கள் சார்பாகவும் எங்களது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
5 thoughts on “மத்திய அரசின் உயர்ந்த விருது பெறும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நடிகர் சங்கம் வாழ்த்து

 1. Deen_uk

  தலைவரை பற்றி குரைப்பவர்களுக்கு அவரது உச்ச சம்பளம் பற்றி வயிறு எரிபவர்களுக்கு,தளபதி மின்னல் என்ற நண்பர் மிக நாகரிகமாக (தலைவர் ரசிகர் னா சும்மாவா?!) thatstamilil அருமையான விளக்கம் கொடுத்து இருந்தார்.நமது வினோ எழுதிய செய்திக்கு வந்த கமெண்ட் அது.ரசித்தேன்.உங்களுக்கும் அந்த கமெண்ட் இங்கே..நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள் திரு தளபதி மின்னல் அவர்களுக்கு…

  Thalapathi Minnal Gopalakrishnan Marimuthu • 11 minutes ago
  இங்கு ஜெயிக்கும் ஒரு நடிகரை பற்றி மட்டுமே எல்லோருக்கும் தெரிகிறது. தோற்க்கும் 1000 நடிகர்களை பற்றி தெரிவதில்லை. ரஜினியின் 60 கோடிக்கு பின்னால் 40 வருட உழைப்பு இருக்கிறது. ரஜினியின் ஆரம்ப காலத்தில் ரஜினிக்கு இனையாக இருந்த ஸ்ரீகாந்த், சிவகுமார், ஜெய்சங்கர், விஜயகுமார் , பின் 80களில் சத்யராஜ்,பிரபு, கார்த்திக்,விஜயகாந்த்,சரத்குமார், இவர்கள் எல்லோரும் தமிழ் சினிமாவில் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும் ..ஏன் அமிதாப்,சிரஞ்சிவி,அனில் கபூர், ஜாக்கி ஷ்ராஃப், இவர்கள் கூட பாக்ஸ் ஆபிஸ் அந்தஸ்த்தை இழந்துவிட்டனர்…கமல் ஒருவர் மட்டுமே நிலைத்திருக்கிறார்…ரஜினி கோடியில் ஒருவர்…சொல்லப்போனால் 120 கோடி மக்களில் நடிகராக ரஜினியின் அந்தஸ்தில் இருப்பவர் ரஜினி மட்டுமே….இதை வைத்து நாம் பொதுவாக முடிவு செய்யமுடியாது…ஒரு காலத்தில் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று வர்ணிக்கப்பட்ட பிரபு தேவா, சரத்குமார், இருவரும் காணாமல் போய்விட்டனர்…வெறும் கட்டவுட், பாலாபிஷேகம் மட்டுமே ஒருவரை உச்சியில் வைக்காது, ஒருவர் 6 கோடி மக்களுக்கு பிடிக்கவேண்டும், பிடித்தால் மட்டும் போதாது, அவர்கள் பொழுது போக சினிமா வரும்போது 3 மணி நேரம் அவர்களை மகிழ்விக்க வேண்டும், இது வருடக் கணக்கில் தொடர்ச்சியாக நடக்க வேண்டும், ஒரு கட்டத்தில் இவர் நடித்த படத்துக்கு போனால் 3 மணி நேரம் சந்தோசமாக உற்ச்சாகமாக பொழுதை கழிக்கலாம் என்று மக்கள் நம்பவேண்டும், நம்பி வரும் போது ஒவ்வொரு முறையும் அவர்களை எண்டர்டெய்ன் செய்யவேண்டும், தொடர்ச்சியாக 3 படங்கள் சரியில்லை என்றால் ரஜினியே ஆனாலும் 4வது படத்துக்கு ரிசல்ட் கேட்டுத்தான் வருவார்கள்..சரியில்லை என்றால் எவனும் வரமாட்டான், ஆக ரஜினியின் வெற்றிக்கு பின்னால், அவர் தொழில் மீது அவர் வைத்திருக்கும் காதல்தான் தெரிகிறது, தன் உடலை மிக மிக கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார், தன் முகத்தில் சதை தொங்காமல் பார்த்துக் கொள்கிறார்…கதைகளை கவனமாக் தேர்ந்தெடுக்கிறார், தொடர்ச்சியாக தன் ஸ்டைல்களை செய்து பார்த்து தேர்ந்தெடுக்கிறார்,மக்கள் எதை விரும்புகிறார்கள் என்று கவனித்துக் கொண்டே இருக்கிறார், தன் படத்தின் பாடல்கள் மிக மிக நன்றாக வரும்படி தேர்ந்தெடுக்கிறார். வெற்றியை தரும் இயக்குனர்கள் படங்களை மட்டுமே தேர்ந்தெடுக்கிறார்..சொல்லப்போனால் தன் படம் சம்பத்தப்பட்ட எதையும் அவர் லேசாக எடுத்துக் கொள்வதில்லை, ..கடிவாளம் போட்ட குதிரையாய் வெற்றி மட்டுமே குறியாய் இருக்கிறார், அடுத்தவன் தன்னை நம்பி காசு போட்டால் அவனுக்கு லாபம் கிடைக்க என்ன செய்யவேண்டுமோ அதை செய்கிறார், கலைசேவை, பரிட்சார்ந்த முயற்ச்சி என்று அடுத்தவன் காசில் விளையாடுவதில்லை, அனைத்துக்கும் மேல் படம் தோல்வியடைந்தால் நேர்மையாக வாங்கிய காசை திருப்பி கொடுக்கிறார்..அதனால்தான் ரஜினியை நம்பி கோடிகளை இறக்குகிறார்கள்….இதை படிக்கும் எவரும் தங்கள் செய்யும் தொழிலில் ரஜினி அளவுக்கு அர்ப்பணிப்பாக இருங்கள்..நீங்களும் உங்கள் துறையில் ரஜினி ஆகலாம்…நீங்கள் எதை வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை நோக்கி வெறித்தனமாக உழைத்தால் மட்டுமே வெற்றி வரும், வெற்றி வந்தவுடன் இன்னும் வெறியாய் உழைக்கவேண்டும் அப்போதுதான் வெற்றி நிலைக்கும், ஏன் என்றால் வெற்றி என்பது இலக்கு அல்ல அது ஒரு பயணம்…

  நன்றி:
  தட்ஸ்தமிழ்,ஷங்கர்,மற்றும் தளபதி மின்னல்.

 2. மிஸ்டர் பாவலன்

  ///…கமல் ஒருவர் மட்டுமே நிலைத்திருக்கிறார்……///

  கமல் நிலைத்திருப்பதோடு மட்டும் அல்லாது, ரஜினியின் நலம் விரும்பி.
  ரஜினி-கமல் நட்பு ஆழமானது, அமைதியானது.. நன்றி!

  -== மிஸ்டர் பாவலன் ==-

 3. srikanth1974

  தளபதி மின்னல் அவர்களின் பதிவு மிக அற்புதம்.அவரின் பதிவை இங்கே
  நமக்குக் கொடுத்த என் அன்பு சகோதரன் deen -uk அவர்களுக்கும், நன்றி.

 4. மிஸ்டர் பாவலன்

  //கலைசேவை, பரிட்சார்ந்த முயற்ச்சி என்று அடுத்தவன் காசில் விளையாடுவதில்லை, //

  இது உலக நாயகனை மறைமுகமாக attack செய்யராப்படி இருக்கே…

  -=== மிஸ்டர் பாவலன் ===-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *