BREAKING NEWS
Search

நடிகர் சங்கத் தலைமை பதவிகள்: அவ்வப்போது எட்டிப் பார்க்கும் மன நோயாளிகள்!

‘தமிழனா இருந்தா போதும்… என்ன அநியாயமும் பண்ணலாமா?’

bharathiraja

டிகர் சங்கம் என்பதும் அதற்கான தேர்தல் என்பதும் தமிழகமோ அதன் பிரதிநிதித்துவமோ அல்ல. ஆனால் அதை முன்நிறுத்தி உணர்ச்சிவசப்பட்டு கண்டபடி உளறும் போக்கு தேர்ந்த கலைஞனிலிருந்து, கத்துக்குட்டி நடிகன் வரை தொடர்கிறது.

வெறும் 3500-க்கும் குறைவான கலைஞர்களைக் கொண்ட நடிகர் சங்கத் தேர்தலை, ஏதோ 10 கோடிக்கும் மேற்பட்ட தமிழருக்குமான (புலம் பெயர்ந்தவர்களையும் சேர்த்துத்தான்) வாழ்வாதார பிரச்சினையாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் கோடம்பாக்க (கபடநாடக) வேஷதாரிகள்.

நடிகர் சங்கம் என்ற ஒரு அமைப்பு இல்லாவிட்டால் தமிழகம் என்ன இருளில் மூழ்கி காணாமல் போய்விடுமா என்ன?

அந்த சங்கத்தையும் அதன் நிலத்தையும் பயன்படுத்தி பெரும் மோசடி நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதை முன்நிறுத்தியே இப்படியொரு பெரும்போட்டி நடக்கிறது. அந்த உண்மையைக் கூட புரிந்து கொள்ளாமல், அல்லது புரிந்தும் பூசி மெழுகியபடி மூத்த கலைஞர்கள் தமிழ், தமிழன் என்ற பெயரில் ஒரு சூழ்ச்சி வலையை எப்போதும் விரித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

தமிழன் என்ற அடையாளத்தில் அயோக்கியன் கூட ஓகே… ஆனால் நல்லவன் வேறு எந்த அடையாளத்திலும் வந்துவிடக் கூடாது என்பது எந்த வகை மனோபாவம் என்று தெரியவில்லை.

vishal-sarath

இரு தினங்களுக்கு முன் வெளியான பாரதிராஜா, சேரன், சீமான்களின் அறிக்கைகளைப் பாருங்கள். இவர்களின் ‘மன நோய்’ ஒருபோதும் மாறப்போவதே இல்லை. இந்த மூவரும் பேச்சுகள், அறிக்கைகள் அனைத்துமே ஒரே சாயல் கொண்டவை.

“இது வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு. உங்களை வரவேற்கிறோம், உபசரிக்கிறோம். ஒருவருக்கொருவர் சகோதரத்தோடு கலாச்சார வேறுபாடின்றி இருக்கிறோம். நீங்கள் தொழில் செய்யலாம். சமுதாய கடமையாற்றலாம். எந்த துறையாக இருந்தாலும் தலைமை பதவிகளுக்கு மட்டும் தமிழன் தான் வரவேண்டும். மண்ணின் மைந்தன் வரவேண்டும் என்கிற தார்மீகம் உங்களுக்குப் புரியாததல்ல.

ஆகையால், தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கப் பொறுப்பிற்கு போட்டியிடும் நடிகர்கள், தமிழ்நாடு திரைப்பட நடிகர்கள் சங்கம் எனப் பெயர் மாற்றம் செய்து தமிழர்களின் தன்மானத்தையும், உரிமையையும் காப்பாற்ற முன்வருமாறு வேண்டுகிறேன்,” என்று பாரதிராஜா கூறியுள்ளார். சீமானும் சேரனும் இதையே வேறு வார்த்தைகளில் சொல்லியிருக்கிறார்கள்.

பாரதிராஜாவை எடுத்துக் கொள்ளுங்கள்.. இவர் சம்பாதிக்க சூப்பர் ஸ்டார் அல்லது வேறு நடிகர்கள் வேண்டும்.

இவர் சம்பாதிக்க தமிழச்சியல்லாத, அழகழகான ரதியும், ராதாவும், அமலாவும்.. ஏன் குஷ்புவும் வேண்டும்.

சிங்களப் பெண்ணை நாயகியாக வைத்து சம்பாதிக்கலாம், மலையாளப் பெண்களை மட்டும் சேரன் நாயகியாக்கிக் கொள்ளலாம்…

ஆனால் நடிகர் சங்கத்தில் விஷால் மட்டும் வரக் கூடாது. விஷாலுக்கு தலைவராகவும் துணைத் தலைவர்களாவும் நிற்கும் நடிகர்கள் யார்.. வேற்றுக் கிரகவாசிகளா? இங்கேயே பிறந்து படித்து வளர்ந்து தமிழ்ப் படங்கள் தயாரித்து, நடித்தவர்தானே விஷால்?

இதில் ஆறுதல் என்ன தெரியுமா… இவர்களின் இந்த அறிக்கைகளும் பேச்சுக்களும் கடும் எதிர்ப்புக்குள்ளாகியுள்ளன. இவர்கள் வேண்டுவது தமிழன் என்ற அடையாளமா… அந்த அடையாளத்தை வைத்து நடக்கும் மோசடிகளா? தமிழன் என்ன மோசடி செய்தாலும், அயோக்கியத்தனம் செய்தாலும் பரவாயில்லையா என்ற புதிய கேள்விக்கு வித்திட்டுள்ளன. !

என்வழி
10 thoughts on “நடிகர் சங்கத் தலைமை பதவிகள்: அவ்வப்போது எட்டிப் பார்க்கும் மன நோயாளிகள்!

 1. kumaran

  feild அவுட் ஆனவன் , அரசியல் அனாதைகள் தொல்லை தாங்கமுடியல (சீமான்)

 2. jegan N

  கண்டவங்ககிட்டயும் வாங்கி கட்டிக்க கூடாதுனு தான் ரஜினி அமைதியா இருந்தார், கமல் ஃபேன்ஸ் ஓட்டுனாங்க..
  இப்ப லபோ திபோனு குதிக்கிறாங்க…

 3. SKS

  இப்ப மட்டும் இல்ல தலைவர மிஞ்ச ஒருத்தரும் கிடையாது ஓகே

 4. சேகர்

  இவன் ஒரு காலி பெருங்காய டப்பா. இந்த 3 பேருமே சந்தர்ப்ப வியாதிகள்.
  மக்கள் மிக தெளிவாக உள்ளார். இனி நம் தமிழ் மக்களை தமிழ், தமிழன் என்று ஏமாற்ற முடியாது,.
  வாழ்க சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள்.

 5. குமரன்

  ///தமிழன் என்ற அடையாளத்தில் அயோக்கியன் கூட ஓகே… ஆனால் நல்லவன் வேறு எந்த அடையாளத்திலும் வந்துவிடக் கூடாது ///

  இதுதான் தமிழகத்தின் தாரக மந்திரம் … கடந்த பல பத்தாண்டுகளாக ….. இதற்குப் பெயர் பகுத்தறிவு…… தமிழ் உணர்வு …… இனமானம் ….. சுயமரியாதை ….. சமயத்துக்கு ஏற்ற சொல்லைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்காக அந்த தமிழன் என்ற சொல்லுக்கு அவரவர் வசதிக்கு ஏற்றபடி பொருளும் கொடுத்துக் கொள்ளலாம்.

 6. dhanasanjayan

  சுப்பர் ஸ்டாரின் பேச்சி தெளிவான வார்த்தை .ஒரு நடிகர்…. எதாவது சொல்லணுமே என்று உளறிவிட்டு இருந்தார் . ( தலைவருக்கு இல்லாத இந்திய பாபநாசம். சாரி பாசம் )

 7. S VENKATESAN, NIGERIA

  பத்திரிக்கை மற்றும் தமிழ் உணர்வாளர்களுக்கு:

  இந்திய நடிகர் சங்கம் என்று தலைவர் சொல்லி இருந்தால்?
  பாலசந்தர் மறைவுக்கு தலைவர் மட்டும் வராமல் இருந்து இருந்தால்?
  போத்திஸ் விளம்பரம் நடித்து டிரஸ்ட்க்கு குடுத்து விட்டேன் என்று பொய் ஆதாரம் வெளியிட்டு அதை மறுக்கவும் செய்யாமல் சும்மா இருந்தால்?
  – என்ன செய்து இருப்பீர்களோ அதை கமலுக்கு செய்யாதது ஏன்?
  என்னடா உங்க நேர்மை ???

  அந்த விளம்பரத்தின் முக்கிய கருத்து: அன்பு, பாரம்பரியம், அபிமானம் விலை 10 கோடி.

 8. srikanth1974

  திரு.குமரன் சார் அவர்களின் கருத்தையும்,
  திரு.வெங்கடேசன் அவர்களின் கருத்தையும்,
  வரவேற்கிறேன்.

 9. மிஸ்டர் பாவலன்

  வெங்கடேசன் மறைமுகமாக உலக நாயகனை போட்டு தாக்குவது
  போல் உள்ளது.. KB அவர்கள் மீது உலக நாயகன் மிக்க மரியாதை
  வைத்திருந்தார்.. KB நடித்த கடைசி படம் – உலக நாயகனின்
  “உத்தம வில்லன்” என்பதை பணிவோடு தெரிவிக்கிறேன்.. நன்றி!

  -== மிஸ்டர் பாவலன் ==-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *