BREAKING NEWS
Search

எந்த மேடையாக இருந்தாலும் தன் ரசிகனை முன்னிலைப்படுத்தும் தலைவர் ரஜினி!

எல்லாப் பெருமையும் ரசிகனுக்கே!

thalaivar-wish

ன் படங்களின் வெளியீட்டை திருவிழாவாக மாற்றுவது என் ரசிகர்கள்தான், என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

மும்பையில் நேற்று நடந்த 2.0 முதல் தோற்ற வெளியீட்டுக்குப் பிறகு, செய்தியாளர்கள் மற்றும் திரைத் துறையினரின் கேள்விகள் சிலவற்றுக்கு ரஜினி பதிலளித்தார்.

அவரிடம் உங்கள் திரைப்படங்கள் வெளியாகும் நாள் மட்டும் எப்படி தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு போல மாறிவிடுகிறது? என்று கேட்டனர்.

அதற்கு பதிலளித்த ரஜினி, “அதற்குக் காரணம் எனது ரசிகர்கள்தான். அவர்கள்தான் என் ஒவ்வொரு பட வெளியீட்டையும் மிகப் பெரிய திருவிழா போல மாற்றுகிறார்கள்,” என்றார்.

மற்றொரு கேள்விக்கு பதிலளித்த ரஜினி, “2.0 அதில் பணிபுரிந்தவர்களுக்கு மட்டுமல்ல, இந்திய சினிமாவையே தலை நிமிர வைக்கும். இந்திய சினிமாவின் பெருமையாக நிற்கும். இதுவரை ஹாலிவுட் படங்களுக்கு இணையாக இந்தியாவில் படங்கள் எடுக்கப்பட்டதில்லை. ஆனால் 2.0 ஹாலிவுட் படங்களுக்கு இணையாக நிச்சயம் திகழும்,” என்றார்.

உங்கள் வயதில் உங்களைப் போன்ற சூப்பர் ஸ்டார் அந்தஸ்துடன் திகழக் கூடிய பாலிவுட் நடிகர் யார் என்று சொல்ல முடியுமா? என்று கேட்டதற்கு நோ கமெண்ட்ஸ் என்றார் ரஜினி.

முன்னதாக விழா நடந்த அரங்கம் முன்பு ஏராளமான ரசிகர்கள் திரண்டு நின்று ரஜினிக்கு வரவேற்பு அளித்தனர். அதனை கையசைத்தும், கும்பிட்டும் ஏற்றுக் கொண்டார் ரஜினி.

-என்வழி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *