BREAKING NEWS
Search

அத்திவரத பரவசம்!

45ம் நாள்தான் ஆதி அத்தி வரதர் தன்னைக் காணும் வாய்ப்பை எனக்குத் தந்தார். வாழ்வில் ஒருமுறை, மிஞ்சிப் போனால் இருமுறை மட்டுமே வாய்க்கும் மிக அரிய தருணம் இது. கோடியில் ஒருவனாக கிட்டிய பாக்கியம்… காஞ்சி என்ற புண்ணிய நகரில் சில காலம் வசித்த பலனாகக் கூட இருக்கலாம்.

அத்தி வரத பெருமாளின் அந்த முகம், ஒப்பில்லாத அந்த சிரிப்பு… ‘எல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன்.. நீ கவலையில்லாமல் போ’ என்று மனதை தைரியப்படுத்தும் தெய்வீகம் அது…, பார்த்த கணத்தில் பரவசப்படுத்திய அந்த திருமேனி… நிகரற்ற அனுபவம்.

அவரைப் பற்றிய கதைகள் கிடக்கட்டும்…. அவற்றில் முரண்கள் இருக்கலாம். எல்லாவற்றையும் புன்முறுவலோடு பார்த்துக் கொண்டுதானே இருக்கிறார். அந்த முகத்தில் ஒளிர்ந்த புன்னகைக்கு ஈடிணையில்லை… பார்த்த மாத்திரத்தில், அத்தனை மாச்சரியங்கள், சிறுமைத்தனங்களை வேரறுத்த தெய்வீகப் புன்னகை அது…

அத்தி வரதர் குளத்துக்குள் செல்லும் இந்த தருணம் தவிர்க்க முடியாதது, நிஜம் அதுதான் என்கிறார்கள்… இருக்கலாம்.. ஆனால் அனைத்தையும் மீறி அவரது நீர் நித்திரை கண்களைக் குளமாக்குகிறது.

பிறவிப் பயன் தந்தாய்… நின்னைச் சரணடைந்தேன் பெருமாளே!

– வினோ




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *