BREAKING NEWS
Search

பாதுகாப்பான அணு உலைதானே… அப்படியெனில் இப்படி செய்தால் என்ன?

அணு உலை பாதுகாப்பானதுதானே… அப்படியெனில் இப்படி செய்தால் என்ன?

-நன்றி: தினமணி




13 thoughts on “பாதுகாப்பான அணு உலைதானே… அப்படியெனில் இப்படி செய்தால் என்ன?

  1. JB

    அணு உலை வேண்டாம் என்று சொன்னால் தேசவிரோதிகளா?தேசத்துரோகிகளா? தேசப்பற்று இல்லாதவர்களா?

    காடுகளை ஒட்டிய கிராமங்களுக்குள் திடீரென புகுந்து ஓநாய்கள் குழந்தைகளை தூக்கிச்சென்று தங்கள் இரையாக்குவதை பலமுறை செய்தித்தாள்களில் படித்திருப்போம்.

    அவ்வாறு ஓநாய்கள் குழந்தைகளை கொன்று தின்பதை அறிந்து மனம் பதறி துடிப்போரையே கண்டிருக்கிறோம்.

    அந்த ஓநாய்களுக்காக நியாயம் கூறி பேசுவோரை கண்டிருக்கிறோமா? பாவம்பா அந்த ஓநாய்கள்,அவற்றுக்கும் வயிறு இருக்கிறது,அந்த வயிற்றுக்கும் பசி என்று ஒன்று இருக்கிறது,எனவே குழந்தைகளை தூக்கிச்செல்கின்றன என்று ஓநாய்க்கும் தர்மம் பேசுவோரை காண்பது மிகவும் அரிது.

    இந்த அணு உலை விஷயத்தில் அதனால் ஏற்படக்கூடிய பின்விளைவுகளை கொஞ்சமும் ஆராயாமல்,யோசிக்காமல்,ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து கவலைப்படாமல் தேசியம்,தேசப்பற்று,தேச ஒற்றுமை என பேசுபவர்களை காணும் போது ஓநாய்க்கும் தர்மம் பேசுபவர்களாகவே தெரிகிறார்கள்.

  2. Srini

    வினோ .. அப்துல் கலாம் அவர்களே பாதுகாப்பாக என்று கூறிய பிறகு யாரு கூற வேண்டும்.. அவர் பெயரில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா ?. அவரும் காசுக்காக விலை என்று எண்ணுகிறீர்களா??

  3. Srini

    வினோ .. அப்துல் கலாம் அவர்களே பாதுகாப்பாக என்று கூறிய பிறகு யாரு கூற வேண்டும்.. அவர் பெயரில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா ?. அவரும் காசுக்காக விலை போய் இருப்பார்கள் என்று எண்ணுகிறீர்களா??

  4. Ravindran

    முட்டாள்தனமான வாதம்.
    அணுஉலை குளிரூட்ட அவசியம் கடல் ஓரம் இருக்க வேண்டும்.
    அணுவுலை வேண்டாம் என்பதற்கு பொருத்தமான கார்ட்டூன் போடா தெரியாவிட்டால் அமைதியாக இருக்கவும்.

  5. JB

    எப்ப அறிவாளி Ravindran Kaiga Atomic Power ஸ்டேஷன் கடலுக்கு அருகிலா இருக்கு . ரொம்ப பேசுறேன்னு உளறாத….. நீர் வேணும்னு சொல்லு ஒத்துக்கிறே..கடல் தான் வேணும்னா எப்படி ….

  6. JB

    கூடங்குளம் அணுமின் திட்டத்துக்கு எதிரான போராட்டம் 1986 ஆம் ஆண்டிலேயே தொடங்கி விட்டது. இது திடீரென இப்போது தொடங்கியது அல்ல.

    1986 இல் ‘தினமணி’யில் அணுஉலையின் பாதிப்புகள் பற்றி டி.என்.கோபாலன் அவர்களின் மிக விரிவான கட்டுரை ஒன்று வெளிவந்தது. இந்தக் கட்டுரை அன்றைய காலகட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. அணுஉலை எதிர்ப் பியக்கங்களின் செயல்பாடும் இந்த விவாதங்களின் வழி தொடங்கியது. கூடங்குளம் அணுஉலையை எதிர்த்து 1987 இல் மீனவக் கிராமங்களின் தலைவர்கள் கூட்டம் திருச்செந்தூரில் நடந்தது. 1987 செப்.22 அன்று இடிந்தகரையில் கூடங்குளம் அணு உலைத் திட்டத்தை எதிர்த்து ஒரு மிகப் பெரிய பொதுக் கூட்டம் நடந்தது. 1988 இல் நெல்லையில் மிகப் பெரிய ஊர்வலம் நடத்தப்பட்டது. 1989 இல் நாகர்கோவிலில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்ட ஊர்வலம். 1989 மார்ச் 20 அன்று தூத்துக்குடியில் ஊர்வலம். இதில் ஜார்ஜ் பெர்னாண்டஸ், பாலபிரஜாதிபதி அடிகள் உட்பட பல அரசியல் கட்சியின் தலைவர்கள் கலந்து கொண்டனர். 1989 இல் ஜூனியர் விகடனில் இந்த உலையின் ஆபத்துகளை முன்வைத்து “கொல்ல வரும் கூடங்குளம்” என்ற தலைப்பில் சில கட்டுரை களை எழுதினார் எழுத்தாளர் நாகார்ஜுனன். 1988 இல் நவம்பர் 21 அன்று கூடங்குளம் அணு உலையை எதிர்த்து நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தப் பட்டது. இதே சமயம் இந்தியாவுக்கு வருகை தந்த சோவியத் ஜனாதிபதி மிகைல் கோர்பச்சேவுக்கு மும்பையிலும், தில்லியிலும் கருப்புக் கொடி காட்ட பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

    1989 மே முதல் தேதியில் “தண்ணீரைக் காப்பாற்று; உயிரைக் காப்பாற்று” என்ற கோஷத்துடன் தேசிய மீனவர்கூட்டமைப்பு தாமஸ் கோச்சேரியின் தலைமையில் கன்னியாகுமரியில் பெரும் பேரணி நடைபெற்றது. இதில் 10,000-த்திற்கும் மேற் பட்டவர்கள் பங்கு பெற்றனர். அவர்களின் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது பலர் காயமடைந்தனர். இந்த 1989 போராட்டம் பற்றிய ஆவணப் படம் இன்றும் கேரளாவிலும் கன்னியாகுமரி மாவட்டத்திலும் பிரபலமான ஒன்று. 1989 ஜூன் 13 வரை மருத்துவர் குமாரதாஸ் அவர்கள் தலைமையில் நெல்லையிலும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் அணுஉலைக்கு எதிராக வீதி நாடகங்கள் நிகழ்த்தப்பட்டன. ஜூன் 13 அன்று கூடங்குளத்தில் பொதுக் கூட்டம் நடந்தது. 1989 இல் பேச்சிப் பாறையில் உள்ள நீரை அணுஉலைக்கு எடுக்கப் போவதாகத் தகவல் பரவியதை ஒட்டி 101 தொடர் பொதுக் கூட்டங்கள் நாகர்கோவில், அதன் சுற்றுப்புற கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் நடத்தப்பட்டன. 1989 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பல கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் கூடங்குளம் அணு உலையைக் கைவிடும் கோரிக்கையை வைத்தன. பேச்சிப்பாறை அணை யில் இருந்து தண்ணீர்க் குழாய் அமைக்க எல்லைக் கற்கள் நடப்பட்டிருந்தன. அந்தக் கற்களைப் பிடுங்கி எறியும் போராட்டம் 1990 இல் நடைபெற்றது. இப்படி 25 ஆண்டுகளாக நடக்கும் இந்தப் போராட் டத்தில் பெண்களின் பங்களிப்பு எப்பொழுதுமே முதன்மையானதாக இருந்து வந்துள்ளது.

    தொடர் எதிர்ப்பின் காரணமாக மூன்று முறை அடிக்கல் நாட்டு விழா கைவிடப்பட்டது. முறையே ராஜீவ் காந்தி, ஆர். வெங்கட்ராமன், கருணாநிதி ஆகி யோர் தலைமையில் நடைபெறவிருந்த விழாக்கள் அவை. பேச்சிப்பாறை தண்ணீர் மற்றும் மீனவர்கள் கோரிக்கையை ஒன்றிணைத்துப் போராட்டம் இன்னும் வலுப்பெற்றது. தமிழகத்தின் புகழ் பெற்ற பட்டிமன்றப் பேச்சாளர்களைப் பெரும் தொகை கொடுத்து தென் தமிழகம் முழுவதும் அணு உலைக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய ஏற்பாடு செய்தது நிர்வாகம்.

    விடுதலை, தினமணியில் தொடர்ந்து அணுஉலை யின் பாதிப்புகள் பற்றிக் கட்டுரைகள் வெளி வந்தன. பிரதமர் இந்திரா காந்தி அணு உலையின் கழிவுகளைக் குற்றாலம் மலையில் புதைக்க வேண்டும் என்று ஒரு முடிவு செய்தார். அந்த சமயம் இதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பது பற்றி ஐராவதம் மகாதேவன் தினமணியில் ஒரு விரிவாக கட்டுரை எழுதினார். இதனை அடிப்படையாக வைத்து எம்.ஜி.ஆர். இந்தத் திட்டத்திற்கு ஒப்புக் கொள்ள முடியாது என்று அறிவித்தார். தமிழக கவர்னர் முன்னிலையில் மதுரையில் நடைபெற்ற ஒரு மிகப் பெரும் பொது நிகழ்வில் இசை அமைப்பாளர் இளையராஜா அணுஉலையை எதிர்த்துப் பேசினார். உடனே அவரது வீட்டிற்கு அன்றே வருமான வரித் துறையினர் ரெய்டு செய்தனர். தமிழில் பத்துக்கும் மேற்பட்ட நூல்கள் கூடங்குளம், செர்நோபில் அணு உலையின் பாதிப்புகள் என பல தலைப்புகளில் வெளிவந்தன. மருத்துவர் ரமேஷ், பிரேமா நந்தகுமார், அ.ஜ.கான், புகழேந்தி, நெடுஞ்செழியன், வி.டி. பத்மனாபன், ஞாநி, நாகார்ஜுனன், ஏ.எஸ்.பன்னீர் செல்வன், சீ. டேவிட், வெங்கடேஷ் சக்கரவர்த்தி, கார்முகில், செல்ல பாண்டியன், துறைமடங்கன், அண்டன் கோமஸ், பிரகாஷ், பாமரன், செந்தில் குமார், நீலகண்டன், குமாரசாமி, பிரபாகர், அசுரன், ஐராவதம் மகாதேவன், புருஷோத்தம், சந்தோஷ், மருத்துவர் தெய்வநாயகம், சுப. உதயகுமார் என இங்கு கடந்த 25 ஆண்டுகளாக ஒரு தொடர் செயல்பாடு கூடங்குளம் திட்டத்திற்கு எதிராகப் பலரால் முன் வைக்கப்பட்டுள்ளது. (பட்டியல் முழுமை யானதல்ல). இயக்குநர் பாலசந்தர், நடிகர் நாசர் உள்ளிட்ட ஏராளமான சினிமா நடிகர்கள் கூடங்குளத்தை எதிர்த்துக் கையொப்பம் இட்டனர்.

    ஃபிரண்ட்லைன் பத்திரிகையில் இந்தியாவின் மூத்த மார்க்சிஸ்ட் சூழலியலாளர், உலகமய எதிர்ப்பாளர் பிரபுல் பித்வாய் கடந்த 25 ஆண்டுகளாக கூடங்குளத்தைஎதிர்த்தும், அணுஉலைகளின் ஆபத்துகளை விளக்கியும் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். திரேந்திர சர்மா, நீரஜ் ஜெயின், அகர்வால், க்ளாட் அல்வாரிஸ், அசின் விநாயக், அனில் சௌத்ரி, அருந்ததி ராய், எம்.வி.என்.நாயர், சுவரத ராஜு, எம்.வி.ராமண்ணா, மூத்த மார்க்சிஸ்ட் எம்.பி.பரமேஸ்வரன் என நூற்றுக் கணக்கான எழுத்தாளர்கள், செயல்பாட்டாளர்கள் இந்தியாவில் அணுஉலைகளின் ஆபத்துகளைப் பற்றி ஏராளமான நூல்களை எழுதியுள்ளனர்.

    கடந்த 25 ஆண்டுகளாக அறிவு தளத்தில் செயல்படும்பொழுது எல்லாம் இதனை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்த அரசு மக்கள் இதில் பெரும் திரளாகப் பங்கேற்றவுடன் போராட் டத்தைக் கொச்சைப்படுத்தத் தொடங்கியது. 2500 கோடி பணம், வெளிநாட்டு சதி, கிறித்துவ தலைமை என தினமும் ஒரு புதிய கண்டுபிடிப்பை அரசும், புதிதாய் முளைக்கும் லெட்டர் பேடு அமைப்புகளும் குற்றம் சாட்டுவது இந்த நூற்றாண்டின் பெரும் நகைச்சுவையாக உள்ளது. உதயகுமாரை அமெரிக்கா தான் இந்த திட்டத்தை முடக்க இங்கு அனுப்பியது என்பது தான் நகைச்சுவையின் உச்சம். இன்று இந்தியாவில் உள்ள மிகப் பெரிய அமெரிக்க ஏஜெண்டுகளே மன்மோகனும் மாண்டேக் சிங் அலுவாலியாவும் தான் என்பது உலகறிந்த உண்மை. இவர்கள் நிறுவனத்தால் இந்த திட்டத்தை ஒரு கையெழுத்தில் முடக்கிவிடலாம். ஏன் அமெரிக்கா தலையைச் சுற்றி மூக்கைத் தொட வேண்டும். இவர்களை வைத்துக் கொண்டு உதயகுமாரைப் பற்றி பேசுவது மன்மோகனைக் கொச்சைப்படுத்துவதற்கு சமம், அவரே இதை விரும்பமாட்டார். இதே ரஷ்ய அணு உலையை வங்கத்தை விட்டு விரட்டினார் மம்தா பேனர்ஜி, அவரைப் பார்த்து 2500 கோடி பணம், வெளிநாட்டு சதி என குற்றம்சாட்ட ஏன் இந்தியாவில் எவனுக்கும் தைரியம் இல்லாமல் போனது? அதிகாரத்திற்கும் நிலத்தில் கால்பதித்து நிற்கும் எளிய விளிம்புநிலை மனிதனுக்கும் அணுகுமுறையில் எத்தனை பெரிய வித்தியாசம்.

    உதயகுமார் கடந்த 10 ஆண்டுகளாக இந்தக் கிராமங்களுக்கு எல்லாம் செல்லும் பொழுது இந்தக் கிராமத்தினர் எல்லாம் அவரை ஒரு எதிரிபோலவே பார்த்தனர். இந்தப் பகுதியின் வளர்ச்சியை முடக்க வந்தவன் என்றே நினைத்தனர். இந்த மக்கள் எங்களைப் பார்த்த பார்வையில் நானே உதயகுமாரிடம் நோட்டீஸ் விநியோகித்து விட்டுப் பத்திரமாக ஊர் திரும்பிவிடுவோமா என்று கேட்டதுண்டு. ஃபுகுஷிமாவில் நடந்த அணுஉலை வெடிப்பும் அதனை ஒட்டி இங்கு பத்திரிகைகள், நாளேடுகள், தொலைக்காட்சிகள் தொடர்ந்து வழங்கிய செய்திகள், நிகழ்ச்சிகள் தான் மக்களை விழிப்படையச் செய்துள்ளது. இந்த ஊடகங்கள் பரபரப்பாக விற்கும் சரக்கு சக்கை போடுபோடும் தானே. அதனை ஒட்டி கூடங்குளம் அணுஉலையில் நடந்த சோதனை ஓட்டம் அதில் இருந்து இரவு பகலாக வந்த ஓசையில் மக்கள் தூக்கத்தை இழந்தனர். அணுஉலை நிர்வாகம் வந்து கூடங்குளம் கிராம மக்களைத் திரட்டி தரையில் படுங்கள், இது தான் ‘ஐயோடின்’ என்று வகுப்பு எடுக்க தொடங்கி யது. மக்கள் வீதியில் திரண்டனர். அன்றுதான் அவர்கள், “அந்த ஆள கூட்டிட்டு வாங்கடா” என்று உதயகுமாரை தேடி ஆட்களை அனுப்பியது. “நீங்கள் கூறியது எல்லாம் நடக்கும் போல் உள்ளது. நாங்கள் வீதிக்கு வந்துவிட்டோம், எங்களை வழி நடத்துங்கள்” என்று உதயகுமாரைக் கேட்டுக் கொண்டனர்.

    பெரிய அணைகளுக்கு எதிரான போராட்டம், கனிமங்கள் வெட்டி எடுத்தல், சுற்றுச் சூழலுக்கு எதிரான போராட்டங்கள், மக்கள் வாழ்வாதாரங் களுக்காக நடத்தும் போராட்டம், நிலங்களை இழந்து நகர பிளாட்பாரங்களில் நிர்க்கதியாக நிற்பவர்கள், நாடு மீண்டும் பன்னாட்டு நிறுவனங்களின், ஏகாதிபத்தியங்களின் குடியேற்ற நாடாக மாறி வருவதை எதிர்த்து இரண்டாம் சுதந்திரப் போரை நடத்தி வருகிறார்கள். இவர்களில் யார் போராட்டம் நடத்தினாலும் உடன் அதனை வெளிநாட்டு சதி என்றும், இதற்குப் பின்னால் வெளிநாட்டுப் பணம் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகளை உலகமயத் திற்குப் பின் கூச்சம் இல்லாமல் சொல்ல பழகி விட்டன நம் நாட்டின் பெரு ஊடகங்கள்.

    உலகமயம் இவர்களுக்கு வழங்கும் அனுகூலங்களைப் பற்றி நாம் தான் ஆய்வு செய்து எழுத வேண்டும். எது எப்படியோ, பத்திரிகை தர்மம் வாழ்க!

  7. chenthil UK

    குளிரூட்ட கடல் ஓரம் இருக்க வேண்டும் என்று விஞ்ஞான உலகத்தில் சொல்ல படவில்லை … ரஷ்ய-வின் chernobyl கடல் ஓரத்தில் இல்லை … பார்லிமென்ட் பக்கம் தான் கங்கை நதி ஓடுகின்றதே … அதில் இருந்து தண்ணீர் எடுதுகொள்ள்ளலாம்… முட்டாள் தனமான வாதம் அல்ல… இது ஒரு தினமணி கார்ட்டூன்…

  8. Raghul

    “முட்டாள்தனமான வாதம்.
    அணுஉலை குளிரூட்ட அவசியம் கடல் ஓரம் இருக்க வேண்டும்.
    அணுவுலை வேண்டாம் என்பதற்கு பொருத்தமான கார்ட்டூன் போடா தெரியாவிட்டால் அமைதியாக இருக்கவும்.”

    தயவு செய்து தினமணி மாதிரி முட்டாள் தனத்துக்கு இனிமேல் இடம் தராதீர் .. வினோ.

  9. Rajpart

    இன்று அதிக விபத்துக்கள் தினசரி சாலையில் நடக்கின்றன. அதற்காக பஸ் ஓட்ட வேண்டாம், பைக் ஓட்ட வேண்டம், நடக்க வேண்டாம் என்றால் என்ன அர்த்தம். கல்பாக்கம் அணு உலை சிறப்பாக செயல்படுவது தெரியவில்லையா?. விபத்து நடக்கணும் என்றால் நடந்தே தீரும். அதற்காக நிலநடுக்கத்தை நிறுத்த போராட்டம் பண்ணுங்க முதலில். சாலை மற்றும் இயற்கை பேரழிவுகளால் ஏற்படும் இழப்பு அதிகம். சிவகாசி பாட்டாசு விபத்து ஆண்டிற்கு 7 முதல் 10 விபத்துக்கள் நடக்கிறது. பட்டசுவினால் என்ன பயன் நமக்கு? ஒரு நாள் கொண்ட்டாட்டம்….அதை வெடிப்பதிலும் விபத்து இருக்கிறது.இதை தடுத்து நிறுத்துங்கள்….அப்புறம் பார்க்கலாம் கூடங்குளத்தை….

  10. prabhu

    சாலை விபத்துக்களால் ஒரு ஊரு முலுவதும் அழிஞ்சு போயிடுமா

  11. chenthil UK

    சாப்பா முடியல… எப்படி வினோ ஜி இப்படி மக்கள் இத்தனை விளக்கம் கொடுத்ததும் அதே விதண்டா வாதம் தான் பண்ணுகிறார்கள் … சாலை விபத்து, மற்றும் பட்டாசு தொழிற்சாலை விபத்து நடந்தால் மறுபடியும் அங்கே வண்டி ஓடும், தொழிற்சாலை வைக்கலாம்.. மக்கள் எப்போதும் போல வாழலாம் … அணுமின்நிலையம் விபத்து ஏற்பட்டால் அந்த இடத்தில மறுபடியும் மனிதர்கள் போக பல ஆயிரம் ஆண்டுகள் ஆகலாம் … மனிதன் அங்கே வழாமலும் போகலாம் …chernobyl இன்னும் மனிதர்கள் வாழ ஏற்ற இடம் இல்லை என்பது Rajpart அவர்களுக்கு தெரியுமா தெரியாதா சும்மா சொல்லனும்னு ஏதோ சொல்லகூடாது.. அணுஉலை விபத்து ஏற்பட்டால் தான் அங்கு பரிசினை இல்லை… அணுஉலை செயல் பட ஆரம்பித்தாலே அந்த கதிர் வீச்சினால் cancer போன்ற தீர்க்க முடியாத வியாதிகள் வரும் ..இது புரிய வில்லை எனில் இதே கேள்வியை மறுபடியும் கேட்டு கொண்டே இருங்கள்…

  12. sakthi

    எல்லாரும் பொதுவா யோசிச்சா கண்டிப்பா நலம் கிடைக்கும்.ஆனா,இவ்வளவு காலம் நம் முன்னோர்கலல்லாம் கரண்ட வச்சா பொளைச்சாங்க இருக்குறத வச்சு பொளைச்சாங்க,சந்தோசமா பொளைச்சாங்க (நமக்கு தேவையானது நல்ல சுவாசக்காற்று அது போதும் பா,வேறு ஏதும் வேண்டாம் பா,நம்மல தொடர்ந்து வரும் நம் சந்ததி பவம் பா அவங்கள வாழ விடுங்கப்பா)

    “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *