BREAKING NEWS
Search

ஏன்… வட இந்திய மக்கள் தமிழ் கற்றுக் கொள்ளலாமே!

ஏன்… வட இந்திய மக்கள் தமிழ் கற்றுக் கொள்ளலாமே!

மீபத்தில் சென்னைக்கு வந்த பிரஸ் கவுன்சில் தலைவர் நீதிபதி (ஓய்வு) மார்கண்டே கட்ஜு, முதல்வர் ஜெயலலிதாவை கோட்டையில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது முதல்வரிடம் நீதிபதி முன்வைத்த விஷயம், தமிழ் மக்களுக்கு இந்தி தெரியவில்லையே என்பதுதான்!

தமிழர்கள் இந்தி கற்காமல் போனதால் பெரிய கஷ்டத்தைச் சந்தித்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

தமிழ்நாடு தவிர பிற தென் மாநில மக்கள் ஓரளவு இந்தி கற்றுக் கொண்டதால், வட இந்திய மக்களுடன் அவர்களால் நன்கு உரையாட முடிவதாகவும், தமிழர்கள் மட்டும்தான் இந்தி தெரியாமல் கஷ்டப்படுவதாகவும் கூறியுள்ளார். எனவே தமிழர்கள் அனைவரும் இந்தியைக் கட்டாயம் படிக்க வேண்டும் எனும் நிலையை முதல்வர் ஜெயலலிதா உருவாக்க வேண்டும் என்று அந்த மகாகனம் பொருந்திய நீதிபதி கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்கு நல்ல தெளிவான இந்தியில் பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, “தமிழர்கள் 1960 வரை நன்றாக இந்தி கற்றதாகவும், அதன் பிறகுதான் கற்காமல் போகும் நிலை ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். இந்தியை கட்டாயமாக படிக்கச் சொன்னால் எதிர்ப்பு வந்துவிடுகிறதே, என்ன செய்ய..” என்றும் அவர் வருத்தப்பட்டுள்ளார்.

உடனே, “உண்மைதான். மக்களாட்சியில் எதையும் திணிக்க முடியாது. ஆனால் அவசியத்தை உணர வைக்கலாம். உங்களால் முடியும். அதேநேரம், வட இந்தியர்கள் தமிழர்கள் மீது இந்தியைத் திணிப்பதாகக் கூறப்படுவது தவறு..” என்றார் கட்ஜு.

ஜெயலலிதாவுடன் பேசி முடித்த பிறகு வெளியில் வந்த அந்த நீதிபதி, முதல்வருக்கு நன்றாக இந்தி தெரிந்திருப்பது தனக்கு மகிழ்ச்சி தருவதாகக் கூறினார். முதல்வரிடம் தான் வைத்த கோரிக்கையையும் அதற்கு முதல்வர் சாதகமாக பதில் சொன்னதையும் கூறி முகமெல்லாம் சிரிப்புடன் சென்றார்.

உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்று, இப்போது நாட்டின் முக்கிய அமைப்பான பிரஸ் கவுன்சில் தலைவராக இருப்பவர் இந்த மார்க்கண்டேய கட்ஜூ. நீதிபதிகள் விருப்பு வெறுப்பு, பிராந்திய உணர்வு, மொழி வெறி இல்லாத நியாயவான்களாக இருக்க வேண்டும். அதனால்தான் அவர்களுக்கு கடவுளுக்கு நிகரான மரியாதை. ஆனால் இப்படி இந்தி வெறிபிடித்த ஒரு மனிதன், இத்தனை ஆண்டுகாலம் நாட்டின் உயர்ந்த நீதி அமைப்பில் அமர்ந்துகொண்டு எந்த லட்சணத்தில் நீதிபரிபாலனம் செய்திருப்பார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறதல்லவா…

அது ஒருபக்கம் இருக்கட்டும்…

இந்தி தெரியாமல் போனதால் என்ன குடிமுழுகிவிட்டது தமிழனுக்கு? தமிழரின் உழைப்போ, அறிவோ மங்கிப் போய்விடவில்லையே… தமிழனின் திறமையை புரிந்திருப்பதால்தானே, இங்கே தேடி வந்து வேலை பார்க்க கூப்பிடுகிறார்கள் வட இந்திய நிறுவனங்கள்? தமிழன் தேடிப் போய் வேலை கேட்டால் ‘இந்தி கற்றுக் கொண்டு வா’ என ஆணையிடலாம்… நீங்களாக தேடி வரும்போது, தமிழைக் கற்றுக் கொண்டல்லவா வரவேண்டும்?

நாட்டின் ஒரு பகுதியாக உள்ள தமிழ்நாட்டு மக்களுக்கு இந்தி தெரியவில்லையே என இத்தனை கவலைப்படுகிறீர்களே… சரி, தமிழனுக்கு இந்தி கற்பதில் நாட்டமில்லை. அக்கறையில்லை. தமிழர் மீது அக்கறை உள்ள நீங்கள் தமிழைக் கற்றுக் கொள்ளுங்களேன்… நாமெல்லாம் கூடிக் குலாவி தினமும் மணிக்கணக்கில் பேசிக் கொண்டே இருக்கலாமே! 11 கோடி மக்களின் மொழியை ஏன் நீங்கள் கற்க மறுக்கிறீர்கள்?

ஒரு மொழியை அதிகாரப்பூர்வமாகக் கொல்வது எப்படி என்பதை முன்பு ராஜாஜியை வைத்து செய்து பார்த்தது டெல்லி. இப்போது மீண்டும் ராஜாஜியின் குலம் அரியணையில் இருப்பதால், அவரை வைத்தே தமிழைக் கருவறுக்க முயற்சிக்கின்றனர். சொல்வதற்கில்லை… கட்ஜுவின் முயற்சி பலித்து, விரைவில் அனைத்துப் பள்ளிகளிலும் அறிவிக்கப்படாத உத்தரவாக இந்தி கட்டாயமாக்கப்படலாம். ஏற்கேனவே தனியார் பள்ளிகளில் இந்தி ஒரு கட்டாயப் பாடம்… தமிழ் தாய் வாழ்த்துக்கு பதில் சமஸ்கிருதத்தில் ஏதோ ஒரு ‘ஸ்தோத்ரம்’ என்றாகிவிட்டது!

இந்தி வெறியர்களே… தமிழர்கள் தங்கள் தாய்மொழியை வைத்தும், பிடித்த மொழியைக் கற்றுக் கொண்டும் தங்களுக்கான வாய்ப்புகளைப் பார்த்துக் கொள்வார்கள். இந்தியைக் கற்றுக் கொள்ளச் சொல்லி நீங்கள் எந்த வேடத்திலும் இங்கே வரவேண்டாம்.

இன்னொரு அவமானத்தையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். அது பெற்றோர் மனதைப் பீடித்து வரும் நோய். இப்போதெல்லாம் ‘இந்தி படிக்காததால் எல்லாம் போச்சு’ என பிதற்றுவது ஒரு பாணி. உடனே கருணாநிதியை இழுப்பார்கள்… அவர் பேரன்கள் இந்தி படித்தார்களே என்று. அவர்கள் எந்தக் கருமத்தையாவது படித்துவிட்டுப் போகட்டும். உனக்கு புத்தியில்லையா… சொந்தமாக யோசிக்கத் தெரியாதா?

தமிழனுக்கான எத்தனை வாய்ப்புகள் வடக்கில் வாசல் திறந்து காத்திருக்கின்றன? ரொம்ப ரொம்ப குறைவுதான். ஆனால் இன்று பலரும் வேலை தேடி ஓடி வருவது தமிழகத்துக்குதான். கடித்துக் குதறியாவது தமிழைப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். நியாயமாக கட்ஜுகள் அறிவுரை சொல்லவேண்டியது பீகார், உபி, வங்காளி, சம்பல் வாசிகள் என வட இந்திய மக்களுக்குதான். தமிழைக் கற்றுக் கொண்டு போய் பிழைத்துக் கொள்ளுங்கள்… என்று அவர்களுக்குத்தான் சொல்லி அனுப்ப வேண்டும்!

தமிழை மத்தியில் ஆட்சி மொழியாக்குவோம் என மத்திய மாநில அரசியல்வாதிகள் அவ்வப்போது (பொய்யாய்) வாக்குறுதிகள் தருவது வழக்கம். இந்த வாக்குறுதிக்கும் வாய்க்கரிசி போடுவது மத்திய அரசின் திட்டம். அதுதான் ஜெயலலிதாவுக்கும் இஷ்டம் போலிருக்கிறது!

குறிப்பு: இந்த சந்திப்பு முழுவதும் இந்தியிலேயே முதல்வர் தன்னுடன் பேசியது மகிழ்ச்சியாக இருந்ததாக நீதிபதி கட்ஜு தெரிவித்துள்ளார். முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆங்கிலம் தெரியும்.. கட்ஜுக்கும் மிக நன்றாகவே தெரியும்… அப்புறம் எதற்காக இந்தி? இதுதான் தமிழ்நாட்டு மக்களின் மனநிலைக்கு சிறந்த உதாரணம்.  அடுத்தவனை திருப்திப்படுத்துவதில் காட்டும் அக்கறையில் இம்மியளவு கூட சொந்த மக்கள் நலனில் காட்ட மாட்டார்கள் என்பது எத்தனை சரியானது!  கட்ஜு தன்னுடைய தாய்மொழியில் பேசுவதில் அத்தனை பிடிவாதம் காட்டுகிறார். நமது முதல்வரோ, கட்ஜுக்கு இணையாக இந்தி பேசுவதில் நிபுணத்துவம் காட்டியுள்ளார்… தமிழ் அதிகாரப்பூர்வமாகவே சாகும் போலிருக்கிறதே!

-விதுரன்
51 thoughts on “ஏன்… வட இந்திய மக்கள் தமிழ் கற்றுக் கொள்ளலாமே!

 1. தினகர்

  மானாட மயிலாட நிகழ்ச்சியால் என்ன பயன் என்று தெரியாவிட்டாலும், ஒரு வாரம் முழுவதும் அனைவரும் முழுமையாக தமிழில் பேசி அசத்தி விட்டார்கள்.

  நமீதா குறிப்பெழுதி வைத்துக்கொண்டு , சிற்சில தவறுகளுடன் பேசினாலும் அது மழலைத் தமிழாக நன்றாகவே இருந்தது. நடனமாடிய சின்னப்பசங்களும் நமீதா அளவுக்கு கஷ்டப்பட்டது தான் கொஞ்சம் வருத்தமாக இருந்தது.

  அட, குஷ்பு இவ்வளவு நல்லா தமிழ் பேசுவாங்களான்னு பயங்கர ஆச்சரியம். மேடைப்பேச்சாளருக்கான தகுதி நல்லாவே இருக்கு. எழுதப்படிக்க கற்றுக்கொண்டுள்ளார்களா என்று கேட்க வேண்டும். இருக்கலாம்.. கணவர் சுந்தர் கோவைக்காரர் தானே..குசும்புத்தனமாகவே சொல்லிக் கொடுத்திருக்கலாம்.:)

  நமீதா, குஷ்பு எல்லாம் தமிழ் கத்துகிட்டாங்கன்னா, மத்தவங்க் கத்துக்கிறதில் எந்த பிரச்சனையோ, கஷ்டமோ இல்லை தானே..

 2. மிஸ்டர் பாவலன்

  ///ஜெயலலிதாவுடன் பேசி முடித்த பிறகு
  வெளியில் வந்த அந்த நீதிபதி, முதல்வருக்கு
  நன்றாக இந்தி தெரிந்திருப்பது தனக்கு மகிழ்ச்சி
  தருவதாகக் கூறினார். முதல்வரிடம் தான் வைத்த
  கோரிக்கையையும் அதற்கு முதல்வர் சாதகமாக
  பதில் சொன்னதையும் கூறி முகமெல்லாம்
  சிரிப்புடன் சென்றார்.///

  CBSE பள்ளிகள் அனைத்திலும் ஹிந்தி சொல்லித் தரப்
  படுகிறது. தளபதி ஸ்டாலின் நடத்தும் பள்ளியிலும்
  ஹிந்தி இருக்கிறது. கலைஞரின் பேரப் பிள்ளைகள்,
  மகள் கனிமொழி, மருமகன்கள் KD பிரதர்ஸ், டாக்டர்
  ராமதாஸ், அவர் மகன் அன்புமணி ஹிந்தி அறிந்தவர்கள்.
  கேரளா, ஆந்திரா, கர்நாடகா பள்ளிகளில் ஹிந்தி உண்டு.
  மூன்றாவது மொழியாக ஹிந்தி படிப்பது நல்லது.
  இதனால் யாருக்கும் பாஸ், பெயில் நிர்ணயிக்கப்படுவது
  இல்லை. அதிகம் படிக்காத நானே தமிழ், ஆங்கிலம்,
  மலையாளம், ஹிந்தி, சமஸ்கிருதம் என ஐந்து மொழிகள்
  அறிந்து வைத்திருக்கும் போது சிறுபிள்ளைகள் Basic
  Hindi படிப்பது மிக மிக நல்லது. இந்தியா முழுவதும்
  எங்கு travel செய்தாலும் அவ்விடே ஹிந்தி தெரிந்தால்
  நல்லது. புரட்சித் தலைவி ஹிந்தி நன்றாக பேசுவது
  அனைவருக்கும் தெரிந்ததே. ஹிலாரி கிளின்டனிடம்
  அவர் கான்வென்ட் ஆங்கிலத்தில் பேசினார். புரட்சி
  தலைவி பல மொழிகள் அறிந்த, பல திறமைகள் கொண்ட
  பேரறிஞர். பெரிய ஆற்றல், வல்லமை படைத்தவர்.
  அவர் தமிழக மக்கள் பயன்படும் வகையில் நல்ல ஒரு
  முடிவு எடுப்பார்.

  -=== மிஸ்டர் பாவலன் ===-

 3. Natesan

  பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
  தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்
  இறவாத புகழுடைய புதுநூல்கள்
  தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்
  மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
  சொல்வதிலோர் மகிமை இல்லை
  திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
  அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்!

 4. Ravi

  Most of the people working on buildings, in kitchens, security of corporates now are from North India. They learn Tamil and speak. (Though we have a tough time interacting with them, many of my friends try speaking in Hindi only with them to spoil their Tamil learning habit).

  If there is a need, we should learn Hindi. But more than 90% of Tamils dont need to learn Hindi and they can always learn when there is a need. Leaving that one subject out gives more room for learnng other subjects like Maths and Science better.

  I guess JJ used this chance to showcase her Hindi skills so that there is no issue in her becoming the PM in future 😉

 5. மிஸ்டர் பாவலன்

  ///I guess JJ used this chance to showcase her Hindi skills
  so that there is no issue in her becoming the PM in future ;-)////

  ஹா.. ஹா.. ஹா.. நன்று சொன்னீர் நண்பரே!

  -== மிஸ்டர் பாவலன் ===-

 6. umarfarook

  ஹிந்தியை கற்றுகொண்டால் தமிழ் அழிந்துவிடும் என்று யார் சொன்னது? ஹிந்தியும் ஒரு மொழிதானே? அதை கற்றுகொள்வதில் என்ன தவறு? என்னை மாதிரி வெளிநாட்டில் வேளை பார்க்கும் அனைவருக்கும் இந்தி தெரியும் ஆனால் அவர்கள் எக்காரணம் கொண்டும் தமிழர்களிடம் இந்தியில் பேசுவது இல்லையே…( நாங்கள் இங்கு வந்த புதிதில் இந்தி தெரியாமல் பட்ட பாடு ஒரு படமே எடுக்கலாம்) இந்தியை எதிர்க்கும் நீங்கள் ஆங்கில மொழியை எதிர்கின்றீர்களா? ஆதரிக்கின்றீர்களா? ஒன்றுக்கு மேற்பட்ட மொழியை தெரிந்து வைத்திருப்பதில் என்ன தவறை கண்டீர்கள் அன்பரே?நம் தமிழ் நாட்டைவிட்டு வேறு மாநிலங்களுக்கு செல்ல வேண்டுமானால் தமிழை தவிற வேறு மொழி அவசியம் தானே அன்பரே? அது உங்களுக்கு தெரியாதா என்ன?

 7. மிஸ்டர் பாவலன்

  //முதல்வர் “..இந்தியை கட்டாயமாக படிக்கச் சொன்னால் எதிர்ப்பு வந்துவிடுகிறதே, என்ன செய்ய..” என்றும் அவர் வருத்தப்பட்டுள்ளார்.///

  நண்பர்களே.. மாண்புமிகு முதல்வர் ஒரு பெரிய அரசியல் ஞானி.
  தமிழக அரசியல்வாதிகளை நன்கு அறிந்து வைத்திருப்பவர்.
  ஹிந்தியை மூன்றாவது மொழியாக்கினால் எதிர்ப்பு வந்து தனக்கு
  ஓட்டு வங்கி குறைந்து விடும் என அவர் நன்கு அறிவார். கட்ஜூ
  முதல்வரை சந்தித்த செய்தியால் முதல்வரின் ஹிந்தி அறிவு நமக்கு
  புலனாகி உள்ளது. மற்றபடி இது பற்றி எந்த அறிவிப்பையும் முதல்வரிடம்
  இருந்து எதிர்பார்க்க வேண்டாம்.

  -=== மிஸ்டர் பாவலன் ===-

 8. கிருஷ்ணன்

  எல்லாம் தமிழ் நாட்டுல ஒக்காந்து சொல்லலாம். இங்க ஹைதராபாத் வந்து பாருங்க. தெலுகு மக்கள் கூட ஹிந்தில தான் பேசுராங்க. இங்க இங்கிலீஷ் குட வேலைக்கு ஆகாது. சும்மா தமிழ் தமிழ் இன்னு சொல்லியே எதனை காலம் தான் மொக்க போட போரிங்களோ. இன்னொரு மொழி கத்துக்க சோம்பேறி தனம். அப்போ எதுக்கு இங்கிலீஷ் கத்துகுரிங்க. தமிழ் மட்டும் வேலைக்கு ஆகாது தெரிஞ்சு தானே. போங்கப்பா புள்ள குட்டிங்களுக்கு எக்ஸ்ட்ரா ரெண்டு மொழிய கத்துகுடுன்கப்பா… அவங்கலாவது நல்லபடிய இருக்கட்டும்.

 9. மிஸ்டர் பாவலன்

  ///போங்கப்பா புள்ள குட்டிங்களுக்கு எக்ஸ்ட்ரா ரெண்டு மொழிய கத்துகுடுன்கப்பா… அவங்கலாவது நல்லபடிய இருக்கட்டும்.////

  ஹிந்தி எதிர்ப்பு என்று சொல்லியே ஆட்சியை அமைத்தது
  தி.மு.க. இது தமிழகம் முழுவதும் நன்கு அறியும். நான்
  முதல் தடவை டில்லி சென்று வந்த போது ஹிந்தி தெரியாமல்
  மிகவும் கஷ்டப்பட்டேன். (இதே போல் கேரளா சென்ற போது
  மலையாளம் படிக்கத் தெரியாமல் கஷ்டப்பட்டேன்.)

  சமச்சீர் கல்வியில் ஹிந்தியை மூன்றாவது பாடமாக
  கொண்டு வருவதற்கு மாண்புமிக முதல்வர் ஜெயலலிதா
  ஒரு நாளும் முயற்ச்சிக்க மாட்டார். ஏன் என்றால் வெறுமனே
  பேசப்பட்டாலே தி.மு.க. பெரும் எதிர்ப்பை காண்பித்து
  இதனால் ஆட்சியை இழக்க அம்மா கட்சி chance கொடுக்காது.

  “பள்ளிகளில் சொல்லித் தருவார்கள்” என நம்பி இருக்காமல் நாமே
  டியூஷன், கிளாஸ் என தனியாக அமைத்து ஹிந்தியை பிள்ளைகளுக்கு நன்கு கற்றுக் கொடுப்பது நல்லது. (நானே புஸ்தகம், சி.டி, டி.வி. துணையில்
  ஹிந்தி, மலையாளம் கற்றுக் கொண்டேன். பள்ளியில் சமஸ்கிருதம்
  படித்தேன். தமிழை தனியாகப் படித்தேன்.)

  நமது சூப்பர் ஸ்டார் & உலக நாயகன் அருமையாக ஹிந்தி பேசுவார்கள்.

  -=== மிஸ்டர் பாவலன்===

 10. r.v.saravanan

  கட்ஜு தன்னுடைய தாய்மொழியில் பேசுவதில் அத்தனை பிடிவாதம் காட்டுகிறார். நமது முதல்வரோ, கட்ஜுக்கு இணையாக இந்தி பேசுவதில் நிபுணத்துவம் காட்டியுள்ளார்…

  தமிழ் எங்கே ?

 11. Ganesh Shankar

  ஹிந்தியை கற்றுக்கொள்ளுங்கள் என்று சொன்னால்,உடனே அவர்கள் தமிழ் எதிர்பாளர்களா??

  என்ன முட்டாள் தனமான பேச்சு.

  நன்மைக்க சில விடயத்தை செய்வதில் தவறில்லை.
  ஹிந்தி என்பது ஒரு மொழி,அதை கற்றிகொல்வதல் நாம் இந்தியா முழுக்க எங்கு வேண்டுமானாலும் சுலபமாக உரையாடி சென்று வர முடியும்.

  இப்போது ஒரு சுற்றுலாவுக்காக வேறு ஒரு நாட்டுக்கு செல்கிறோம் என்று வைத்து கொள்ளுங்கள்,அவர்கள் மொழி நமக்கு தெரிந்திருந்தால் எவ்வளவு நன்மை நமக்கு.அதை போல தான் இதுவும்.

  ஏன் ஆந்திரா மக்களுக்கு,தெலுகு தாய் மொழி,ஹிந்தியும் தெரிந்திருகிறது.
  ஹிந்தியினால் என்ன தெலுகு அழிந்து விட்டதா??
  கன்னடம் ஹிந்தியினால் அழிந்திவிட்டதா,இல்லையே.

  சும்மா,இவ்வாறு தமிழ் மட்டும்,தமிழ் மட்டும் என்று பேசுபவர்களால்,இன்று தமிழ் கூட நன்றான நிலைமையில் இல்லை.
  தமிழை வெறும் பேசுவதற்கும்,அதனை வைத்து வேறு எதையாவது எதிர்ப்பதும் தான் தமிழின் மீது பற்று வைத்திருப்பவன் போல் காட்டுபவர்கள் இன்று வரை செய்து வந்திருகிறார்கள்.

  தமிழின் இனிமை புரிந்து வைத்திருபவர்கள்,மற்ற மொழியை கற்று கொள்ள கூடாது என்று என்றும் சொல்ல மாட்டார்கள்.
  ஏன் என்றால், தமிழின் இனிமையை பரப்ப மற்ற மொழிகளையும் கற்று கொண்டு,அதை வைத்து மற்ற மொழியினற்கும் தமிழை நன்றாக சொல்லி கொடுக்க முயற்சி செய்வார்கள்.அது தான் தமிழை வளர்க,பரப்ப நன்மை பயக்கும்.
  நாம் பிற மொழியை மதித்தால்,உலகமும் நம் மொழியை மதிக்கும்.

 12. M Senthil

  I like this lines

  இதுதான் தமிழ்நாட்டு மக்களின் மனநிலைக்கு சிறந்த உதாரணம். அடுத்தவனை திருப்திப்படுத்துவதில் காட்டும் அக்கறையில் இம்மியளவு கூட சொந்த மக்கள் நலனில் காட்ட மாட்டார்கள் என்பது எத்தனை சரியானது! கட்ஜு தன்னுடைய தாய்மொழியில் பேசுவதில் அத்தனை பிடிவாதம் காட்டுகிறார். நமது முதல்வரோ, கட்ஜுக்கு இணையாக இந்தி பேசுவதில் நிபுணத்துவம் காட்டியுள்ளார்… தமிழ் அதிகாரப்பூர்வமாகவே சாகும் போலிருக்கிறதே!

 13. James

  //நாம் பிற மொழியை மதித்தால்,உலகமும் நம் மொழியை மதிக்கும்.//

  -ஒரு மசுரும் புடுங்காது உலகம். அவனவனுக்கு அவனவன் மொழி பெருசு. வந்துட்டான் குடுமி பெருமையை தூக்கிக்கிட்டு. வடிகட்டின முட்டாள்.

  உனக்குப் பிடிச்சா நீ போய் படி அத்தோட நிறுத்திக்க உங்க ஊத்த புராணத்தை. இந்தியா பூரா நத்திப் பிழைக்குற கூட்டத்துக்கு தமிழ் கூட தேவையில்லைதான். உங்களைப் போன்றவர்கள் இந்திக்கு சேவகம் செய்யுங்க. செத்த மொழிக்கு அலங்காரம் பண்ணி பிலாக்கணம் பாடுங்க.
  எங்களுக்கு தேவைன்னா பார்த்துக்கறோம். கூடுதலா எந்த மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை நான்தான் தீர்மானிக்க வேண்டும். உன்னைப் போன்ற அடிவருடிகள் அல்ல.

 14. James

  தமிழ் தமிழ் என்று உயிரைக் கொடுத்து எங்கள் முன்னோர் போராடியதால்தான் உன்னைப் போன்ற நாதாரியெல்லாம் கண்டபடி பேசுதுங்க. உன்னையெல்லாம் பார்த்த இடத்தில் உதைக்கணும்.

  தமிழ் எங்கள் மொழி, அதனால்தான் நாங்கள் துடிக்கிறோம். உனக்கும் தமிழுக்கும் என்ன சம்பந்தம்.

  உன் தலைவன் சுப்பிரமணியசாமி. குலதெய்வம் போயஸ் தோட்டத்து ஆத்தா. அவன்தானேடா நீயி. இடத்தைக் காலிபண்ணு. பரதேசி. முட்டாள்தனமாம்ல முட்டாள்தனம்!

 15. மிஸ்டர் பாவலன்

  ///சும்மா,இவ்வாறு தமிழ் மட்டும்,தமிழ் மட்டும்
  என்று பேசுபவர்களால்,இன்று தமிழ் கூட நன்றான
  நிலைமையில் இல்லை.////

  கலைஞர் தமிழ் மொழியை ஒரு அரசியல் ஆயுதமாக
  கையாளுவதால் அவர் வழி நடப்பவர்கள் ஹிந்தியைத்
  தமிழுக்கு எதிரியாக நோக்குகிறார்கள். தமிழகத்தில்
  நடந்த ‘ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தால்’ மாணவர்களுக்கு
  ஒரு ஆண்டு படிப்பு வீணானது. பள்ளி, கல்லூரிகளை விட்டு
  ஸ்ட்ரைக்குக்கு ரெடியாக மாணவர்களும் உள்ள தயார்
  நிலையில் ஏதாவது ஒரு சிறிய அறிவிப்பு “ஹிந்தியும்
  பள்ளிகளில் சொல்லிக் கொடுக்கப்படும்” என வருமா என்ற
  ஏக்கத்துடன் தி.மு.க., பா.ம.க,, ம.தி.மு.க., கழகத் தொண்டர்கள்
  எல்லாம் ரெடியாக இருக்கிறார்கள். அறிவிப்பு வர ௦.00001 %
  வரக் கூட சாத்தியம் இல்லை என்றாலும் அப்படி வந்தால்
  தமிழகத்தில் சட்ட, ஒழுங்கை பேணுவது மிகவும் கடினம்
  ஆகி விடும். அதனால் நண்பர்களே – ஹிந்தி ஆர்வம் இருந்தால்
  அதை private ஆகக் கற்றுக் கொள்ளுங்கள், அல்லது CBSE
  பள்ளிகளில் (ஸ்டாலின் நடத்தும் பள்ளியும் உட்பட) சேருங்கள்.
  சமச்சீர் கல்வியில் ஹிந்தி என்ற பேச்சுக்கே இடம் இல்லை!!

  -=== மிஸ்டர் பாவலன் ===-

 16. வெங்கடேஷ்

  இவர் தமிழினத்துக்கு எதிரான பெண்மணி. தமிழ் இவர் தாய்மொழியல்ல. இவரது கூட்டம் தமிழை அழிக்கும் சதியையே பிரதான நோக்கமாகக் கொண்டது. தமிழ் ஆட்சிமொழியாக உள்ள கோட்டையில் வந்து ஒரு ஜட்ஜ் அத்தனை பிடிவாதமாக தமிழ் பேசுகிறான். இந்தப் பெண்மணி அவனுக்கு சமமாக இந்தி பேசுவதில் அக்கறையாக இருந்துள்ளார். மொழி வீழ்ந்தால், மானமும் உயிரும் போனதாக நினைப்பது தமிழன் மனப்பான்மை.

 17. R.Ramarajan-Madurai

  Hindi padikalam for out state,
  in TN tamil la tham pesanum.
  Mr.Pavalan i like your comedy sense when you say about jaya. Good joke.
  J for p.m ………….??
  TN ippa nasama ponathu pathatha.. Athu Total india va

 18. மிஸ்டர் பாவலன்

  //TN ippa nasama ponathu pathatha.. Athu Total india va /// (ராமராஜன்-மதுரை)

  யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்

 19. Ganesh Shankar

  ஹிந்தியை கட்டாயம் ஆகுவது என்பது சத்தியமும் இல்லை,அவசியமும் இல்லை.
  எனினும் விருப்பம் உள்ளவர்கள் படிக்க தடை இருக்க கூடாது.விருப்பம் இருந்து படிப்பவர்கள்,படிக்க கூடாது என்று கூறினால் ஏற்றுகொள்ள கூடியது இல்லை.
  /*சமச்சீர் கல்வியில் ஹிந்தி என்ற பேச்சுக்கே இடம் இல்லை!!*/
  கண்டிப்பாக ஏற்று கொள்ளவேண்டியதே.இதற்கு மாற்று கருத்து இல்லை.

 20. dhana

  நமக்கு முப்பது வருடம் முன்பு அவசியமும் இருந்தது, இப்பொழுது முக்கால்வாசி பேருக்கு ஆங்கிலம் தெரிகிறது, ஹிந்தி அவசியமும் இல்லை,
  கூகுள் translator இருக்கு அவசியமும் இருந்தால் இதை பயன்படுத்தலாம் ,
  இன்னும் பத்து வருடங்களில் மொழி ஒரு பிரச்சனையாக இருக்காது,
  உலகம் முழுவதும் ஒரு மொழி ஆங்கிலமாக இருக்கும்.

 21. தினகர்

  இந்தி தெரியவில்லை என்பதால் தமிழர்கள் என்னமோ வேலை இல்லாமல் திண்டாடுவது போல் வைக்கப்படும் வாதம் சரியானது அல்ல.

  எந்த மாநிலத்திலும் இந்தி மொழி தெரியாததால், வேலையில் பிரச்சனை வருவது இல்லை.. அலுவலகத்தில் எல்லோரும் ஆங்கிலத்தில் தான் பேசுகிறார்கள்.அதே போல் கட்டிட வேலை உள்ளிட்ட’ உடல்வலு’ சம்மந்தப்பட்ட் வேலைக்கும் தமிழர்கள் என்றால் முன்னுரிமை உண்டு. அங்கே கட்டிட கான்ட்ராக்டர் வேலை வாங்கும் அளவுக்காவது தமிழ் கற்று கொள்கிறார்.உங்களிடம் திறமை இருக்கும் போது இந்தி மொழி ஒரு பிரச்சனையே இல்லை

  அதற்காக உள்ளூர் மொழி தெரிந்து கொள்ள வேண்டாம் என்று சொல்லவில்லை. எந்த ஊரில் இருக்கிறோமோ அந்த ஊருக்குரிய மொழியை தெரிந்து கொண்டு உள்ளூர் மக்களுடம் ஐக்கியமாவது தான் சரியானது. அதே சமயத்தில் அவங்க மொழியை தெரிந்து கொள்வதால் நம்மை அவர்களில் ஒருவராக ஏற்றுக்கொள்வார்கள் என்பதெல்லாம் ரொம்ப ஓவர். வேறுபாடுகள் கடைசிவரைக்கும் இருக்கத்தான் செய்யும். அடுத்த தலைமுறை குழந்தைகள் ஒரளவு ஏற்றுக்கொள்ளப்படுவார்கள்.

  ஒருவகையில் இந்தி தெரியாததால் தான் நம் மக்கள் வட மாநிலங்களுக்கு செல்வதற்கு பதில் ஐரோப்பா, அமெரிக்கா என்று சென்று விட்டார்கள். அதே சமயத்தில், மும்பை, டெல்லி உள்ளிட்ட பெரிய நகரங்களில் தமிழர்கள் ஆதிக்கம் இருப்பதையும் மறுக்க முடியாது.

 22. Balaji

  people those who talks against hindi, never says get rid of english…… as if english is the sister of tamil,,,they dont mind people learing english….but only when it comes to hindi, they r opposing……

 23. மிஸ்டர் பாவலன்

  பாலாஜி:

  தமிழ், தமிழ் என பேசுபவர்கள் ஒரு தமிழ் மீடியம் ஸ்கூல்
  சமச்சீர் கல்வியை வைத்து எடுக்கலாமே! ஸ்டாலின் ஏன்
  CBSE English Medium school சென்னையில் நடத்த வேண்டும்?
  கழகக் கண்மணிகள் இதை சிந்தித்துப் பார்க்க வேண்டும் 🙂

  -=== மிஸ்டர் பாவலன் ===

 24. கடலூர் சித்தன்.ஆர்

  ‘ஆங்கிலம் தாய்மொழியாக கொண்டவர்களை விட,வேறு மொழியை தாய்மொழியாக கொண்ட- ஆங்கிலம் பேசுவோர்களின் எண்ணிக்கை உலகில் மிக அதிகமாகி உள்ளது; ஆங்கிலேயரின் வாழ்க்கைதரம் குறையவில்லை. தமிழகத்தில்,அதே நிலை தமிழ் மொழிக்கும் உருவாகியுள்ளது. ஆனால் தமிழரின் வாழ்க்கைத் தரம் பரிதாபமாக உள்ளது; பிற மொழிகளை தாய்மொழியாக கொண்ட, தமிழகத்தில் வாழும் மக்களின் வளர்ச்சி பிரம்மாண்டமாக உள்ளது. இந்நிலை இந்திய ஒருமைப்பாட்டுக்கு/நமக்கு நல்லதல்ல. ஆகவே திறமையான தமிழ் வழிகாட்டிகள் தமிழகத்திற்கு உடனடியாகத் தேவை.”

  தமிழர்கள் நம்முடன் வாழும் அணைத்து மொழி பேசுபவர்களையும் நல்லபடியாக தான் பார்க்கிறோம். இல்லாவிடில் 234 எம்.எல்.ஏ. மற்றும் மந்திரிகளில் 20% அண்டைமாநில மொழியை பேசுபவர்கள் சென்ற முறை பதவி வகித்திருக்க முடியுமா? அண்டைமாநிலங்களி ல் நம்மால் இப்படி நினைத்து பார்க்க முடியுமா? “யாதும் ஊரே யாவரும் கேளீர்”- என்று வாழ்ந்த தமிழர்கள் தமிழகத்தில் மைனாரிட்டி தகுதியில் வரும் நாள் துலைவில் இல்லை.

  தமிழன் நெல்லுக்காக இரைத்த நீர் எத்தனை சதவிகிதம் தமிழனை சேர்க்கிறது என்று கேட்ட ஒரே தலைவன் மருத்துவர் ராமதாஸ் மட்டுமே?? என்ன செய்வது – ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்று புரிய மறுக்கிறார்களே??? கணக்கெடுக்க தயாரா திராவிடம் பேசுவோர்??? சிந்திக்க வேண்டிய கால கட்டத்தில் உள்ளோம். வாழ்க வாடிய பயிரைக் கண்டு மனம் வாடிய, வள்ளலார் பிறந்த தமிழ் நாடு.

  காக்கைக்கு தன் குஞ்சு பொன்குஞ்சு “- நம் வீட்டுக்குழந்தையை விட பக்கத்துக்கு குழந்தை அழகாக இருந்தால், பக்கத்து வீட்டு குழந்தையையா கொஞ்சுகிறோம்?

  முதல் தலை முறை பட்டதாரிகள் அதிகம் கொண்ட பெரிய மாநிலம் தமிழகம். தமிழன் முன்னேறுவது சிலருக்கு பொறுக்கவில்லை/ பிடிக்கவில்லை. உதவி செய்வதாக நினைத்து கெடுத்து விடாதீர்கள் – அது தமிழருக்கு நன்மை பயக்காது.காரணம் கற்றறிந்தோர் அறிவர்.
  தமிழா ! நடந்ததை மற. நடப்பதை நினை. இனஉணர்வு கொள்!

  ஹி..ஹி..ஹி.. தமிழாவது கத்திரிக்காவாவது ? ராஜா காது! கழுதை காது!!- ரொம்ப நல்லாயிருக்கு இல்லே???

 25. கடலூர் சித்தன்.ஆர்

  “தமிழ் அதிகாரப்பூர்வமாகவே சாகும் போலிருக்கிறதே!”-M Senthil

  “தன்மதிப்பு தெரியாமல் வாழ்கிறான் தமிழன்: குமரி அனந்தன்”

  ஹி.. ஹி..ஹி- “அண்டை மாநில மொழி பேசும், தமிழ்நாட்டில் வாழும்
  மக்கள் தமிழ் கற்ற பின் தான் தமிழகம் வந்தார்களா”???

  “தமிழ் நாட்டில் பிழைக்கும்/உழைக்கும்/ஆளும் மார்வாரி/ வட இந்திய மக்கள்/ அண்டை மாநில மக்கள்- தமிழ் கற்ற பின் தான் தமிழகம் வந்தார்களா??? ஹி.. ஹி..ஹி இப்பவே நம்மை நாமே ஆள அடித்துக் கொண்டுள்ளோம்??? மீதி இருப்பவர்களையும் அனுப்பிவிட்டால் கிழிஞ்சுடும் சோழ/பாண்டிய புரங்கள் ???-

 26. தினகர்

  ….but only when it comes to hindi, they r opposing……

  brother, English has given job opportunities for Tamilians all over the world. but by learning Hindi, you can’t get any job except going around India tourism with better communication with local people. By not knowing Hindi, no eligible Tamilians have lost jobs any where in India, English is the official language in all organizations all over India..

 27. karthik

  @கிருஷ்ணன் , @Balaji
  //அப்போ எதுக்கு இங்கிலீஷ் கத்துகுரிங்க. தமிழ் மட்டும் வேலைக்கு ஆகாது தெரிஞ்சு தானே…
  //people those who talks against hindi, never says get rid of இங்கிலீஷ்

  ஆங்கிலம் கற்பதனால் நம் தாய் மொழி அழியாத?
  அழியாது…ஏன் என்றால்
  – ஆங்கிலத்தை நம் மீது யாரும் திணிக்க முடியாது.
  – தமிழும் ஆங்கிலமும் முற்றிலம் மாறுபட்ட சந்தைகளை உடையது.
  – குழப்பம் இன்றி எல்ல மாநிலத்திலும் அவர்களது தாய் மொழியாய் பயன்படுத்தலாம். தேசிய நீரோட்டத்தில் இணைய ஆங்கிலத்தை பயன்படுத்தலாம்.
  – ஒருகாலத்தில் ஆங்கிலம் நாம் தாய் மொழியாய் திண்கின்றது என்று நாம் நினைத்து ஆங்கிலத்தை தூக்கி எறிந்தால் நாம்மை யாரும் கேட்டாக மாட்டார்கள். அனால் ஹிந்தியை ஏற்று கொண்டு பின்பு தூக்கி எறிய முடியாது. ஏன் என்றல், நம்மை ஆள்பவர்கள் பெரும்பாலோர் ( MP ) ஹிந்தியை தாய் மொழியாக கொண்டவர்கள். அவர்களின் தாய் மொழி பற்றால், நம்மை அவ்வாறு செய்ய விடமற்றர்கள்!

 28. karthik

  வினோ சார்…

  இரண்டு வருடங்களுக்கு முன்பு.. உங்களின் இதே கோபத்துடன் நான் ஒரு சிறு கட்டுரை எழுதி உள்ளேன்.. இது சம்பந்த பட்ட எல்லா அயங்களுகும் விடை எழுதி உள்ளேன்.. நான் அதை உங்களுக்கு எப்படி அனுப்ப வேண்டும் ?
  _____________________
  envazhi@gmail.com -க்கு மின்னஞ்சல் செய்யுங்கள் கார்த்திக்.
  -வினோ

 29. Balaji

  ///தினகர் says:
  brother, English has given job opportunities for Tamilians all over the world. but by learning Hindi, you can’t get any job except going around India tourism with better communication with local people. By not knowing Hindi, no eligible Tamilians have lost jobs any where in India, English is the official language in all organizations all over India..////

  Friend,

  I am working in Kenya….. here, other than the government companies most of the companies are owned by indians….. the first day when i landed here, my boss said,,, u start speaking hindi….. cos 80% of ur customers r indian here…. if u speak in english they will treat u as if u r also a local african guy….. if u start talking in hindi, then only they will feel comfortable and listen to you…… this is the situation in kenya, which is almost similar in most of the countries….may be IT field is exception……

  when u can encourage the other country’s language english as it helps getting job opportunities everywhere, why not learn hindi…. learning hindi opens a door to interact with everybody in india…… since u learnt english, did u forget tamil…. u r using english wherever its necessary only….. similarly why dont u learn hindi and use it wherever its required….. pls dont tell that hindi is required only for tourist purpose…… hindi may not be a mandatory to get job in IT fields….. but most of the other fields require that….. and to grow further up in the ladder, hindi is the vital tool if u r working in other region of india….. most of the malayalis, telugu, kanataka guys speak hindi….. but that dint create any problem to their language….. even all marathis know hindi….. but they prefer to speak marathi among themselves….but if they hv to speak to others they can speak very well in hindi…… same is the case with bengalis, punjabis, biharis, gujaratis, odisha…..

  and finally,,,,, be it english, hindi, french, chinese or any language….. they r mere language….. not knowledge….. knowledge is the most important…. language can help u express ur knowledge in a better way….. but which language u r using depends on the audience to whom u r speaking…… so learning other language is not a crime……

 30. கடலூர் சித்தன்.ஆர்

  “தமிழ் பேச, எழதத் தெரிந்த பாலர்கள் இங்கு அதிகம். ஹிந்தி கற்றுக்கொள்ள விரும்பும் யாவரும், பிரைவேட் ஆக அல்லது
  cbsc மூலமாக கற்றுக்கொள்ளவும். நாங்கள் யாரையும் தடுக்கவில்லை.

  ஏனெனில்
  “”””தமிழர்கள் நம்முடன் வாழும் அணைத்து மொழி பேசுபவர்களையும் நல்லபடியாக தான் பார்க்கிறோம். இல்லாவிடில் 234 எம்.எல்.ஏ. மற்றும் மந்திரிகளில் 20% அண்டைமாநில மொழியை பேசுபவர்கள் சென்ற முறை பதவி வகித்திருக்க முடியுமா? அண்டைமாநிலங்களி ல் நம்மால் இப்படி நினைத்து பார்க்க முடியுமா? “யாதும் ஊரே யாவரும் கேளீர்”- என்று வாழ்ந்த தமிழர்கள் தமிழகத்தில் மைனாரிட்டி தகுதியில் வரும் நாள் துலைவில் இல்லை.””””

 31. karthik

  @Balaji

  //but which language u r using depends on the audience to whom u r speaking…… so learning other language is not a கிரிம்

  You are right friend.. learning other language is not a crime. In Kenya, Hindi may be used by more number of Indians. Take the case of South Africa. Most Indians there speak Tamil. Is the North Indians in S.A are trying to learn Tamil ? Try to understand that majority ( North Indians ) are trying to enforce their language on the minorities ( Tamil, Kannada, Telugu etc ). If Hindi is required for your business, you are most welcome to master Hindi. But don’t ask ( force ) everyone in Tamil Nadu to learn Hindi.. not all our job / business requires Hindi.

 32. மிஸ்டர் பாவலன்

  //If Hindi is required for your business, you are most welcome to master Hindi.
  But don’t ask ( force ) everyone in Tamil Nadu to learn Hindi..
  not all our job / business requires Hindi.///

  I fully agree with you. The more languages we know, better persons we become.
  A culture of adaptability develops. When I was first listening to Bach’s works
  (Church cantatas, Matthaus Passion, Johannes Passion etc.) language became
  a barrier as they are composed in Deutsche (German). So, I voluntarily learned
  Deutsche to better understand them. This has helped me in real life also.
  When I meet German scholars from abroad, I converse them in Deutsche only.
  Hindi is a very easy language compared to Deutsche, French etc. Our kids can
  learn it in their school days or holidays easily. In my case, I learned Hindi after a
  bitter experience in New Delhi. I picked it in a few months soon after studying.

  -Mr. Pavalan

 33. Balaji

  when u can accept a foreign language english being taught in our schools,,,,, y not accept our own countrys language hindi…… when u say “asking people to learn hindi” as the sign of majority hindi speaking people forcing the minority tamil people…. then wat will u say for english….. dont u feel english also forced into our country….. why r u not telling that “we will teach only in tamil”….why r u not telling that “those who wanna learn english go and learn in private”….. why all the schools are teaching english…(inclusive of govt schools) what made u to make english as a mandatory in schools???? even in tamil medium schools also one has to study english compulsorily…..

  my point is, எந்த காரணங்களுக்காக ஆங்கிலத்தை ஏற்று கொண்டீர்களோ, அதே காரனத்திற்காக ஹிந்தியும் ஏற்றுக்கொள்ளுங்கள்…..

 34. மிஸ்டர் பாவலன்

  ///எந்த காரணங்களுக்காக ஆங்கிலத்தை ஏற்று கொண்டீர்களோ, அதே காரனத்திற்காக ஹிந்தியும் ஏற்றுக்கொள்ளுங்கள்…..////

  அ.தி.மு.க. ஆட்சியில் நீடிப்பது உங்களுக்கு பிடிக்கலை போல இருக்கு 🙂 🙂

  -=== மிஸ்டர் பாவலன் ===-

 35. தினகர்

  “this is the situation in kenya, which is almost similar in most of the countries ”

  May be Kenya is an exception . No where in the world, Hindi is a ruling language But Tamil has the proud of ruling language in Singapore and Malaysia.

  And there is no harm in learning a language of the place where you live but it is not mandatory. Did you ever thought of going to Kenya during your school days. If you know for sure, you are going to Uttarpradesh, Bihar for job, when you are in school, you can learn the language.

  Learning Hindi is not difficult , if you are interested but it is not necessary to be part of school curriculum.

  English has definitely much more reach worldwide than Hindi and can not compare the benefits of knowing both the language. We all learn English for mere selfish reason of Job opportunities In that sense it was very right decision by Tamil Nadu Government.

  And no body is stopping anyone from learning other languages. You are most welcome to learn Hindi, Telugu, Kannada, Marathi outside school system. If you are so much interested why not learn from outside sources. Why need to penalize the all the children for few people’s interest?

 36. karthik

  @Balaji
  //எந்த காரணங்களுக்காக ஆங்கிலத்தை ஏற்று கொண்டீர்களோ, அதே காரனத்திற்காக ஹிந்தியும் ஏற்றுக்கொள்ளுங்கள்…..

  எப்படி சார் ? ஆங்கலம் கற்றுகொண்டதால் தான் எனக்கு மென்பொருள் கட்டமைப்பு வல்லுநர் வேலை கிடைத்தது. ஹிந்தியால் எனது பணிக்கு சல்லிக்காசு லாபம் இல்லை… அப்புறம் எப்படி அதே காரணத்திற்காக ஹிந்தியை கற்க முடியும் ?

 37. karthik

  @Balaji
  //why all the schools are teaching english…(inclusive of govt schools) what made u to make english as a mandatory in schools???? even in tamil medium schools also one has to study english compulsorily…..

  Yes. English is accepted in Tamil country. It is not a matter of pride. It is a sad truth. But, aren’t north Indian’s learn English in Hindi medium schools ? They do. Then why can’t you communicate them with English ?

 38. karthik

  @Balaji
  Have you heard the story about Albert Einstein ? He made two holes – one smaller and one bigger in his door. Bigger hole for the mother cat and the small hole for the kitten. But he failed to realize the kitten can also pass through the bigger hole which is made for the mother cat. Like that.. when Tamil people are learning English, and when Hindi people are also learning English- for their job, for communicating with the outer world, why can’t they communicate through English among each other ?

  And please, don’t say Hindi is national language and English is foreign. Both of them are foreigner to Tamil.

 39. karthik

  @மிஸ்டர் பாவலன்

  Excellent sir.. learn other languages whenever required.I hope the humiliation you have faced is not because of you didn’t know Hindi at that time. But, if you have learned Hindi, to avoid humiliation then it is not acceptable.

 40. karthik

  @மிஸ்டர் பாவலன்
  //அ.தி.மு.க. ஆட்சியில் நீடிப்பது உங்களுக்கு பிடிக்கலை போல இருக்கு

  அந்த பயம் இருக்கட்டும் 🙂 🙂

 41. மிஸ்டர் பாவலன்

  ///But, if you have learned Hindi, to avoid humiliation then it is not acceptable.///

  Necessity is the mother of invention. I moved to North India for my PG
  studies and I had to learn Hindi for survival. Adjusting to North Indian food
  was also difficult. As requested by many people here, I avoid personal details.

  -== Mr. Pavalan ===

 42. karthik

  @ மிஸ்டர் பாவலன்

  //I moved to North India for my pg studies

  Then, it is need… You have not learned Hindi because someone humiliated you for not knowing Hindi. I was in north for almost 2.5 years for my job. When I landed there, I was very exited to learn a new language. Even, I had a book with me and I learned to the letters of Hindi. With the help of north Indian room mate.. I was trying to learn few sentences in Hindi daily. At that time when someone is asking if you know Hindi.. I used to reply them.. “Mae Hindi seek raha hu”. But soon I was able to realize that most Hindi speaking people feel, being an Indian I “must” know Hindi and not knowing Hindi is a crime. Immediately I stopped learning Hindi. From then.. though I can able to read and write Hindi. and can to speak some Hindi.. I am proud to say I DON’T KNOW Hindi. Now I am trying to forget whatever Hindi I know.

 43. karthik

  @Balaji

  //I am working in Kenya….. here, other than the government companies most of the companies are owned by indians….. the first day when i landed here, my boss said,,, u start speaking hindi….. cos 80% of ur customers r indian here….

  Thank God.. You didn’t went to Korea. Else you would have said 100% of your customers are Korean and all people in Tamil Nadu should learn Korean.

 44. muarli

  @ கார்த்திக்

  நான் சீனாவில் வேலை செய்கிறேன். நான் சைனீஸ் தெரியாமல் இங்கு மிகவும் கஷ்டபடுகிறேன். ஆகவே சைநீசை தமிழ் நாட்டில் அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டும்.

 45. deepak

  @ கார்த்திக்

  ஆமா.. நான் ரைசியாவில் வசிக்கிறேன்.. ரசியன் தெரியாமல் மிகவும் கஷ்டபடுகிறேன். ஆகவே ரசிய மொழியை தமிழ் நாட்டில் அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டும்.

 46. மிஸ்டர் பாவலன்

  ///But soon I was able to realize that most Hindi speaking people feel,
  being an Indian I “must” know Hindi and not knowing Hindi is a crime. ////

  This is true! Throughout my stay in North India (as student), most of my friends
  talked to me in Hindi only. They told me they can’t talk in English like me, so
  requested me to reply in English/Hindi. Also, some of those who knew English,
  talked to me in English & behaved well. Some faculty taught classes in Hindi only.
  Strange thing is – some of the “adopted Tamils” made my life miserable
  there – making fun of my Hindi pronunciation etc. The Hindi of these “adopted
  Tamils” was not anything great, but loaded with lots of gaalis. Even today,
  I feel they acted worse than Hindi fanatics.

  -=== Mr. Pavalan ===-

 47. Anand

  இந்தியர்கள் அனைவரும் அரபி படிக்க வேண்டும்.:-)

 48. மிஸ்டர் பாவலன்

  அரபிக்கடல் தாண்டியும் தமிழ் முழங்கிய ஆனந்த் அவர்களே:

  ///இந்தியர்கள் அனைவரும் அரபி படிக்க வேண்டும்.:-)///

  நீங்க Gulf-நாடு ஒண்ணுல வேலை பார்க்கறீங்க போல இருக்கு.

  -== மிஸ்டர் பாவலன் ===-

 49. மிஸ்டர் பாவலன்

  //ஹிந்தி என்பது ஒரு மொழி,அதை கற்றிகொல்வதல் நாம் இந்தியா முழுக்க எங்கு வேண்டுமானாலும் சுலபமாக உரையாடி சென்று வர முடியும்.//

  கணேஷ் ஷங்கர் சொன்னது சரி.

  இலக்கண சுத்தமான ஹிந்தி பேசணும் என்கிற கட்டாயம் இல்லை.

  பேச்சு வழக்கு ஹிந்தி அறிந்திருப்பது மிக்க நல்லது.

  நண்பர் குறிப்பிட்டது போல் எனக்கு தெலுங்கு, கன்னடம் தெரியாமல்
  போனாலும் ஹிந்தி தெரிந்தால் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில்
  மிக வசதியாக உள்ளது. எனக்கு மலையாளம் தெரியும் என்பதால்
  கேரளத்தில் பிரச்சினை இல்லை. வெளிநாட்டு பயணங்களில்
  ஆங்கிலம் தெரிந்தால் போதும் என்றாலும் ஐரோப்பிய நாடுகளில்
  பிரெஞ்சு, ஜெர்மானிய மொழிகள் தெரிந்தால் நல்லது. எனக்கு
  பிரெஞ்சு தெரியாது என்றாலும் அடிப்படை ஜெர்மானிய மொழி அறிவேன்.

  ‘தமிழ், தமிழ்’ என முழங்கினாலும் பிற மொழிகள் அறிந்திருப்பதால்
  நமக்கு நன்மையே. தமிழ், English, Deutsch, மலையாளம், ஹிந்தி,
  சமஸ்கிருதம் என்ற ஆறு மொழிகள் மட்டும் நான் அறிந்தவை.
  (ஜார்ஜ் ஹார்ட் போன்ற அறிஞர்கள் பத்து, பன்னிரண்டு மொழிகள்
  சரளமாக அறிவார்கள்!)

  -== பாவலன் ==-

 50. கெளசிக் பிரபு

  வணக்கம்! நண்பர்களே…….
  இந்தியா என்றாலே “இந்தி மொழி” என்பார்கள் வெளிநாட்டவர்கள்…….தமிழ் என்றால் “ஈழம்” என்பார்கள் சிலருக்கு அதுவும் தெரியாது…….நான் தற்போது ஆர்மெனியவில் வசித்து வருகிறேன். ஒரு நாள் வெளியே உழாவியபோது ஆர்மேனியவர் ஒருவர் என்னிடம் வந்து பேசினார் ; அவரது அங்கிலப்பேச்சு சொளிவாக இல்லை; அவருக்கு இந்தியப் படங்கள் என்றால் மிகவும் விருப்பமாம். நான் அவரிடம் தமிழ்நாபட்டிலிருந்து வருகிறேன் என்றேன். அவர் ஆர்மேனியத்தில் ஒலிபெயர்க்கப்பட்ட சில தமிழ் படங்களையும் பார்த்துள்ளார். அவர் என்னிடம் வணக்கம், அம்மா,அப்பா என்று சில தமிழ் வார்த்தைகளை ஒலித்துக்காட்டினார். எனக்கு அவர் பேசியது மகிழ்ச்சியைத் தந்தது. பிறகு இந்தி தெரியுமா? என்றார் தெரியாது; தாய்மொழி தமிழ் என்றேன்…. அதந்பிந் அவர் “Tamil it is an part of one of dialects of Hindi as Sanskrit(தமிழ் என்பது சமசுகிருதத்தைப் போல் ஒரு விதமான இந்தி மொழியின் வழக்குகளில் ஒன்று என்றார்)”. நான் “தமிழ் என்பது “ஆர்மேனியம்” “உரசியம்” போல் வெவ்வேறு மொழி” என்றேன். அவரோ “இல்லை! இல்லை! “உக்கிரேனியம்” “உரசியம்” போல் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது”. இவ்வாரு வாதங்கள் மேலும் தொடர இறுதி வரை அவர் இவை வெவ்வேறு மொழிகள் என்று ஒப்புக்கொள்ளவில்லை… ஆர்மேனிய மொழியும் அழமாக தெரியாததால் மேலும் பேசமுடியவில்லை.
  நான் ஒரு வேலையாக தில்லி சென்றிருந்தேன். பேருந்தில் பயனித்த போது நடத்துனர் சிட்டுகளை வழங்கிவந்தார் நான் “One Hazrat Nizamuddin Railway station from Mothilal college” என்றேன் அவர் கண்டுகொள்ளவில்லை; பின்னர் அருகில் எனக்காக ஒருவர் நடத்துனரிடம் இந்தியில் சொன்னார் இருந்தும் கண்டிகொள்ளவில்லை. நானே அருகில் உள்ளவர் சொல்லியபடி சொன்னவுடன் சீட்டு தந்தார். நான் விரைவாக அங்கிருந்து வேலை முடிந்தவுடன் துரும்பிவிட்டேன். இப்படிப்பட்ட இடத்தில் வேலை பார்க்கச் சென்றாலோ குடிபெயர்ந்த்ஆலோ நம் நிலமை என்னாகும். ஆனால் இதுவே தமிழ்நாட்டில் ஒரு இந்திக்காரர் ஏறிவிட்டால் போதும் ; நாம் உடனே இந்தி தெரிந்தோர் எவரேனும் உள்ளாரா என்று தேடுவோம்.
  வட இந்தியாவுக்கு போக நேரிட்டால் தேவயான அளவிற்கு இந்தி தெரிந்தால் போதும். நாம் அனைவரும் இந்தி தெரிந்து கொள்வதில் எப்பயனும் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *