BREAKING NEWS
Search

தலையில் அடிபட்டதாலேயே இளவரசன் மரணம் – பிரேத பரிசோதனை அறிக்கை

தலையில் அடிபட்டதாலேயே இளவரசன் மரணம் – பிரேத பரிசோதனை அறிக்கை

003
தர்மபுரி: தலையில் அடிபட்டதாலேயே தர்மபுரி இளவரசன் மரணமடைந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரம் மிக்க மனிதர்கள் அத்தனை பேரின் இதயத்தையும் உலுக்கியிருக்கிறது தர்மபுரி இளவரசன் மரணம்.

இளவரசனின் பிரேதம் எதிர்ப்பு மற்றும் சந்தேகங்களுக்கிடையே பரிசோதனை செய்யப்பட்து. பிரேத பரிசோதனை அறிக்கையை அவரது பெற்றோரிடம் கொடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து நேற்று இரவு இளவரசன் தந்தை இளங்கோவிடம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க் பிரேத பரிசோதனை அறிக்கையை கொடுத்தார்.

தலையில் அடிபட்டதால் இளவரசன் மரணம்

பிரேத பரிசோதனை அறிக்கையில் இளவரசனின் உடல் திடமானதாகவே இருந்தது. இடது கை மணிக்கட்டு, உள்ளங்கைகளில் கிரீஸ் படிந்திருந்தது, கை விரல்களில் சிராய்ப்புகள் இருந்தன. இடது கை எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. கை வீங்கியிருந்தது. தலையின் முன் பகுதி மூக்குப் பகுதியில் சதை சிதைந்து இருந்தன. இரண்டு பிளாஸ்டிக் கவர்களில் மூளை கொண்டு வரப்பட்டது. அந்த மூளையில் கருங்கல் துகள்கள் ஒட்டியிருந்தன. மேலும் தலையில் பலத்த காயம் அடைந்ததால் மரணம் ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ரயில் மோதி இறந்திருந்தால் ஏற்படும் அதிகபட்ச சேதம் இளவரசன் உடலில் இல்லை. அதற்கான குறிப்பையும் மருத்துவர்கள் எழுதவில்லை.

இளவரசன் சடலத்தருகே மதுபாட்டில் இருந்ததாக ட்ராமா செய்திருந்தனர் சாதி வெறியினர். ஏற்கெனவே அடித்துக் கொல்லப்பட்டவன் எப்படி குடித்திருப்பான்… பிரேத பரிசோதனை அறிக்கையிலும் இளவரசன் உடலில் மது இருந்ததாக எந்த குறிப்பும் இல்லை.

ஆக.. இது கொலை என எல்லோருக்கும் நன்றாகத் தெரிகிறது. மெத்தப் படித்த, எல்லா அறிவும் நிறைந்த ஒரு முதல்வரின் தலைமையில் இயங்கும் அரசுக்கு மட்டும்தான் தெரியவில்லையா?

தர்மபுரி எஸ்பியிடம் திவ்யா மற்றும் தாயாரை ஒப்படைத்தது பாமக!

divya

இதற்கிடையே இளவரசன் மனைவி திவ்யாவையும் அவர் தாயாரையும் தர்மபுரி மாவட்ட எஸ்பி அஸ்ரா கார்கிடம் ஒப்படைத்தனர் பாட்டாளி மக்கள் கட்சியினர்.

திவ்யா, அவரது தாயாருக்கு பாதுகாப்பு அளிக்க மாவட்ட காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் நேற்ற (5ஆம் தேதி) உத்தரவிட்டிருந்தது.

இன்று திவ்யாவையும், அவரது தாயார் அம்சவேணியையும் பா.ம.க.வினர் தர்மபுரிக்கு அழைத்துச் சென்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்ரா கர்க்கிடம் இன்று (6ஆம் தேதி) ஒப்படைத்துள்ளனர்.

இனி திவ்யாவை பாதுகாப்பது காவல்துறையின் கடமை என்றும் கூறியுள்ளனர்.

அப்படியெனில், இளவரசன் – திவ்யா விவகாரம் தனிப்பட்டது. எங்களுக்கு இதில் சம்பந்தமே இல்லன்னு புளுகிக் கொண்டிருந்த ராமதாஸ் மற்றும் அவர் மகன் அன்புமணியின் அறிக்கைக்கு என்ன அர்த்தம். இளவரசன் கொலையில் பாமக பின்னணி குறித்து தமிழக அரசு விசாரித்தே தீர வேண்டும்.

-என்வழி செய்திகள்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *